Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலியை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பௌத்த துறவி

Featured Replies

நிர்வாணப்படுத்தி, தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த முன்னாள் பௌத்த பிக்கு ஒருவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பன்னிப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வரும் 34 வயதான ஹேனேகம ரத்னசிறி தேரர் என்ற கொடித்துவக்கு ஆராச்சிகே சாரங்க என்ற நபருக்கு இந்த தண்டனை விதித்து நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இந்த நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி தனது காதலியான இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த தோன சுனேத்ரா பிரியதர்ஷனி என்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, நாச்சிமலை நீர்தேக்கத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றவாளி துறவறம் பூண்டிருந்த நபர். துறவறத்தை கைவிட்டு 5 ஆண்டுகளாக பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காதலை முறித்து விட்டு கொரியாவுக்கு தப்பிச் சென்று இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை வந்த அவர் காதலை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, யுவதியை திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார்.

திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி யுவதியை கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் மறுநாள் யுவதியின் சடலத்தை இங்கிரிய நாச்சிமலை நீர்தேக்கத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ள்னர்.

இந்த சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நடந்துள்ளது என நீதிபதி கூறியுள்ளார்

http://www.tamilwin.com/community/01/154779

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமடைதல் எண்டதை பிழையா விளங்கிப் போட்டுத்தப்பா இந்த காதல் பிக்கர்.

இந்த சாமியார் பிழைப்பு நல்லா இருக்குதே... 

நம்ம முனிவரும், ஆஸ்ரமத்தில் இருந்து 'தவ வாழ்வு' வாழ்ந்து மீண்டு 'தனி ஒருவனா' இருக்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கருக்கு.. பிகரா.. புத்தா.. அதுசரி.. புத்தரே கல்யாணம் கட்டிக்கிட்டி அனுபவிட்டுத்தானே அரச மரத்துக்கு அடியில குந்தினவர். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நம்ம முனிவரும், ஆஸ்ரமத்தில் இருந்து 'தவ வாழ்வு' வாழ்ந்து மீண்டு 'தனி ஒருவனா' இருக்கிறார்.

ஹாஹா ஆசை  யாரை விட்டது  இதில் பிக்கு என்ன ஐயன் என்ன பாதர் என்ன  மொலவி என்ன   எல்லாம்  அவனுக்கே வெளிச்சம் 

6 hours ago, nedukkalapoovan said:

பிக்கருக்கு.. பிகரா.. புத்தா.. அதுசரி.. புத்தரே கல்யாணம் கட்டிக்கிட்டி அனுபவிட்டுத்தானே அரச மரத்துக்கு அடியில குந்தினவர். :rolleyes:

ரைட்டு   பல வருடம் காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பின்னர் விவாகரத்து வேண்டி பிரிந்து போவதில்லையா இந்த புத்தரும் பிடிக்கல போல் விலகி சென்று விட்டார் 

விலகுனாலும் அவர் ஒர் இனத்துக்கு தெய்வமாக  இருக்கிறார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.