Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்த பிரித்தானிய படையினருக்கு எதிராக தமிழ்ப் பெண் முறைப்பாடு! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்த பிரித்தானிய படையினருக்கு எதிராக தமிழ்ப் பெண் முறைப்பாடு! 
[Monday 2017-08-14 09:00]
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கிய  பிரித்தானியாவின் RUC படைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணொருவர் அயர்லாந்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  எனினும் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கிய பிரித்தானியாவின் RUC படைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணொருவர் அயர்லாந்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

   

1986 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விசேட அதிரடிப் படையினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானிய RUC படையினர், இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமையினால் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=188280&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்மாதிரி. இப்படி பாதிக்கப்பட்டுள்ள மக்கள்.. சொறீலங்கா படைகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் நிதியும் அளித்து தமிழ் மக்களைப் படுகொலை செய்ய நேரடியாவும் மறைமுகமாகவும் உதவிய நாடுகள் எல்லாவற்றிலும்.. மற்றும் சர்வதேச நீதி அமைப்புக்களிலும்... நீதி கேட்டு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

ஹிந்திய அரசு.. மற்றும் படைகளுக்கு எதிராகவும்.. அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வழக்குகளை சர்வதேச அரங்கில் பதிவு செய்ய வேண்டும். 

வழக்குகள் பற்றிய குறிப்புகளை சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து அவை உலக மக்களை எட்டும் செய்தியாக வேண்டும். சமூக வலைகளையும் இதற்குப் பயன்படுத்த வேண்டும்.

அப்போதுதான்.. இந்த சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு உதவியோரின் உண்மை முகத்தை உலகம் அறியும். உலக மக்களின் மனச்சாட்சியை அது தட்டிக்கேட்கும்.

அப்படி தட்டிக் கேட்டதால் தான்.. சில தேசங்களை மேற்குலகம் விரும்பாத போதும்.. விடுதலை செய்ய வேண்டி வந்தது.. சுதந்திர தேசங்களாக. !!!

எமக்குள்ளே எம் வலிகளை போட்டுப் புதைச்சது காணும். மறப்போம் மன்னிப்போம் பேர்வழிகள் தங்கள் சுயபோக சுகபோகங்களை அனுபவிக்க விட்டதும் காணும்.

எனி நாம் எமக்கான நீதிக்காக நாமே முயல்வோம். 

அண்மையில்.. டொனி பிளேயருக்கு எதிராகவும்.. ஒரு ஈராக்கிய படை அதிகாரி வழக்குத் தொடுத்திருந்தார்.. பிரித்தானிய நீதிமன்றில். அந்த வழக்கு பிரித்தானிய சட்டத்தால் விசாரிப்பட முடியாது என்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும்.. டொனி பிளேயரின் அடாத்தான போர் தன அணுகுமுறையை அது மக்கள் முன் மீண்டும் கேள்விக்குரியதாக்கியது. 

ஆகவே வழக்கு வெல்லுமா தோற்குமா என்பதல்ல.. முக்கியம். வழக்கு உலக மக்களின் மனக்கதவுகளை மனச்சாட்சியை தட்டினாலே போதும். பல அநீதிகளுக்கு நீதி தேட வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு எழும். ஒரு அழுத்தமும் இல்லையேல்.. அரச பயங்கரவாதிகள்.. பெரும் மகிழ்ச்சியில்.. தொடர்ந்தும் பயங்கரவாதத்தை செய்வதை தொடர்வர் துணிவோடு. :rolleyes:

அண்மையில்.. தம்மை சந்தித்திக் கொண்ட சம்பந்தரோடு.. மகிந்த..

தனக்கு எதிராக புலம்பெயர் மக்கள் தொடுத்த வழக்குகள் பற்றி தான் மகிந்த சம்பந்தரோடு அதிகம் புலம்பியிருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகவே எமது மக்கள் முன்னெடுக்கும் சர்வதேசச் செயற்பாடுகள் எமக்கு அநீதி இழைத்தவர்களுக்கு அழுத்தங்களை நெருக்கடிகளை கொடுக்கிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பி இருந்தாலும்.. தப்பிக்க வைக்கப்பட்டிருந்தாலும்.. நிம்மதியாக இல்லை இந்த உலகில். அதுவே அவர்களுக்கு வழக்கப்பட்ட ஒரு தண்டனையும் கூட. 

எனவே எம் மக்கள் வெற்றி கிடைக்கவில்லை என்று.. ஓய்ந்து விடாது தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். அதுதான் வெற்றிக்கான முதல் வேலை. சோர்ந்து விழுவது.. தோல்விக்கான பாதையையே வகுக்கும். எம்மில் சிலர் எமது மக்கள் சோர்ந்து விழனும் என்று செயற்பட்டாலும்.. அவர்களைப் புறக்கணித்துக் கொண்டு மக்கள் செயற்படுவது அவசியம்.. நீதி கிட்ட வேண்டும் என்றால். நீதியும் போராடித்தான் பெற வேண்டிய உலமாக இது மாறியுள்ளது. 

Edited by nedukkalapoovan

சொறிலங்காவின் கொலைவெறி கொண்ட சிங்களப் படையினருக்கு  பயிற்சிகள் கொடுத்தால் அவர்கள் இன்னும் சிறப்பாக கொலைதான் செய்வார்கள். கொலைகாரர்களை கைது செய்து சிறைகளில் அடைக்கவேண்டிய பொறுப்பு பயிற்சி வழங்கியவர்களுக்கு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.