Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 13 பேர் பலி

Featured Replies

ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி தாக்குதல் – பலர் காயம்

spain.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூவர் வீதியில் விழுந்து கிடைப்பதையும் சிலர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயுதமேந்திய நபர் ஓருவர் துப்பாக்கியுடன் உணவு விடுதியொன்றிற்குள் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர் என ஸ்பெயின் காவல்துறையினர் தெரிவித்துள்ள அதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

உள்ளுர் புகையிர நிலையங்களை உடனடியாக மூடிவிடுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். கார்மோதிய இடத்தில் பொதுமக்கள் உணவுவிடுதிகள் போன்றவற்றிற்குள் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிய சத்தமொன்று கேட்டது நாங்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி ஓடினோம் பலர் காயமடைந்துள்ளனர் என நினைக்கிறேன் படுபயங்கரமான நிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ba-3.jpgba1-1024x687.jpgba2-1024x576.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பார்சிலோனா: லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதல்

 

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

BBC

அந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "அந்த வேன் நிற்கும் முன்பாக, பொதுமக்களை குறி வைத்தே வந்தது" என்று தெரிவித்தனர்.

பார்சிலோனாவில் இருந்து வெளிவரும் எல் பாய்ஸ் நாளிதழ், "டஜன் கணக்கான மக்கள் மீது மோதிய பிறகு, அந்த வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்" என கூறியுள்ளது.

இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன.

மேலும், ஒன்று அல்லது இரண்டு ஆயுததாரிகள் அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் சென்று ஒளிந்துள்ளதாகவும் அவை கூறியுள்ளன.

அந்த பகுதியில் பணியாற்றி வரும் ஸ்டீவன் டர்னர் பிபிசியிடம் கூறுகையில், "ராஸ் ரம்ப்ளாஸில் மக்கள் மீது வேன் மோதியதை அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர்" என்று கூறியுள்ளார்.

"நானும் மூன்று அல்லது நான்கு பேர் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்தேன். சம்பவ பகுதியில் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் உள்ளனர்" என அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-40968368

  • தொடங்கியவர்

பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 13 பேர் பலி

 

பார்சிலேனா: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 2 பேர் பலியாயினர். இது பயங்கரவாதிகள் தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் 13 பேர்பலியாகியுள்ளனர.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பார்சிலோனாவும் ஒன்று இங்குள்ள லாஸ் ராம்பலாஸ் என்ற முக்கிய சுற்றுலா தளம் உள்ளது. பொதுமக்கள் பெருமளவு கூறியிருந்தனர். அப்போது வேன் ஒன்று திடீரென கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 13 பேர் பலியானதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ரெஸ்டாரண்ட் ஒன்றிற்குள் இரு நபர்கள் ஆயுதங்களுடன் புகுந்ததால் இது பயங்கரவாத தாக்குதல் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

தாக்குதலையடுத்து பக்கத்து நகரமான காட்டலோன்யா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1835912

  • தொடங்கியவர்

பார்சிலோனா சுற்றுலா பகுதியில் வேன் மோதி 13 பேர் பலி

 

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

EPAபடத்தின் காப்புரிமைEPA

அந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "அந்த வேன் நிற்கும் முன்பாக, பொதுமக்களை குறி வைத்தே வந்தது" என்று தெரிவித்தனர்.

பார்சிலோனாவில் இருந்து வெளிவரும் எல் பாய்ஸ் நாளிதழ், "டஜன் கணக்கான மக்கள் மீது மோதிய பிறகு, அந்த வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்" என கூறியுள்ளது.

BBC

இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன.

மேலும், ஒன்று அல்லது இரண்டு ஆயுததாரிகள் அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் சென்று ஒளிந்துள்ளதாகவும் அவை கூறியுள்ளன.

அந்த பகுதியில் பணியாற்றி வரும் ஸ்டீவன் டர்னர் பிபிசியிடம் கூறுகையில், "ராஸ் ரம்ப்ளாஸில் மக்கள் மீது வேன் மோதியதை அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர்" என்று கூறியுள்ளார்.

AFPபடத்தின் காப்புரிமைAFP Image captionசம்பவ பகுதியில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்

"நானும் மூன்று அல்லது நான்கு பேர் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்தேன். சம்பவ பகுதியில் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் உள்ளனர்" என அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-40968368

Driss Oubakir

Police released this photo of a man alleged to have rented the van

http://www.bbc.com/news/world-europe-40965581

  • தொடங்கியவர்

ஸ்பெயினில் தீவிரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 50 பேர் படுகாயம்

 

 

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேனால் மோதி தாக்குதல் மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

20915840_10207988875394442_89286697_n.jp

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் முக்கிய சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ். 

4354D46200000578-4800282-image-a-36_1502

இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், அந்நாட்டு மக்களும் குவிந்திருப்பது வழக்கம்.

20916028_10207988874274414_263669578_n.j

மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. 

20891633_10207988874634423_1751480167_n.

கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

20915710_10207988874314415_441467577_n.j

தாக்குதலை மேற்கொண்ட வேனின் சாரதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

4354FF6600000578-4800282-image-a-27_1502

 

கைதுசெய்யப்பட்ட நபர் 1989 ஆண்டு மொரோக்கோவில் பிறந்துள்ளதாகவும் குறித்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடற்கரையில் பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை தரவேற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, லாஸ் ராம்பலாஸ் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்கள் எவரும் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என்று பெலிஸார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/23270

  • கருத்துக்கள உறவுகள்

IsIs   தாக்குதலுக்கு உரிமை கோரி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

IsIs   தாக்குதலுக்கு உரிமை கோரி உள்ளது.

எவர் உரிமை கோரினாலும் உரிய பிரச்சனைக்கு மேற்குலகம் தீர்வுகாணப்போவதில்லை.
மாறக சிரியாவிலோ அல்லது லிபியா ஈராக் போன்ற நாடுகளில் மேலதிக போன்ஸ் ஆக இன்னும் பல குண்டுகளை ஆகாயத்திலிருந்து வீசுவார்கள்.

  • தொடங்கியவர்

பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதல்: சந்தேக நபர்கள் ஐந்துபேர் சுட்டுக்கொலை

 

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிகொண்ட வேன் தாக்குதல் சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

இதனிடையே அந்நாட்டின் கேம்ப்ரில்ஸ் நகரில் இதே போன்று நடக்கவிருந்த இரண்டாவது வேன் மோதல் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இம் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேரை கொன்றுவிட்டதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது. ஒரு சோதனைச் சாவடியில் போலீசார் மீது ஏற்றிவிட்டுச் செல்ல முயன்றது அந்த வேன் என்றும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வெடிகுண்டு பெல்டுகளை அணிந்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கேம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது வேன் தாக்குதல் முயற்சியை முறியடித்தபின் அந்த வாகனத்தைப் பரிசோதிக்கும் போலீசார்.படத்தின் காப்புரிமைEPA Image captionகேம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது வேன் தாக்குதல் முயற்சியை முறியடித்தபின் அந்த வாகனத்தைப் பரிசோதிக்கும் போலீசார்.

பார்சிலோனாவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள அல்கனார் நகரில் புதன்கிழமை ஒரு வீடு வெடித்துச் சிதறியதை இந்தத் தீவிரவாதத் தாக்குதலோடு தொடர்புப்படுத்துகிறது காவல்துறை. இச்சம்பவத்தில் ஒரு நபர் இறந்தார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

வெடித்து நாசமான அந்த வீட்டில் ஏராளமான புரோபேன் வாயுக் குடுவைகள் இருந்ததாகவும், தாக்குதலுக்கான வெடிகுண்டு தயாரிக்க இவை இருப்பு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறை தலைவர் ஜோசஃப் லியுஸ் ட்ரப்பெரோ கூறியுள்ளார்.

அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் இத் தாக்குதல் சம்பவங்களை ஜிகாதித் தாக்குதல் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பார்சிலோனா கேம்ப்ரில்ஸ் நகரைக் காட்டும் வரைபடம்.

பார்சிலோனாவின் புகழ்பெற்ற லாஸ் ரம்ப்லாஸ் என்ற சுற்றுலாப் பகுதியில் பாதசாரிகள் மீது நேற்று ஒரு வேன் பாய்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100 பேர் காயமடைந்தனர். அந்த வேனின் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய அந்த வாகனம் பார்சிலோனா நகரில் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்கிறது ஸ்பெயின் நாட்டின் தேசிய ஊடகமான ஸ்பானிஷ் ரேடியோ டெலிவிஷன் கார்ப்பரேஷன் (RTVE). ட்ரிஸ் ஒவ்பக்கீர் என்பவரது ஆதாரங்களை வைத்து வேன் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று கூறும் போலீஸ் அவரது புகைப்படத்தை வெளியிடப்பட்டுள்ளது.

பார்சிலோனா தாக்குதலுக்குக் காரணமான வேனை வாடகைக்கு எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணத்தில் உள்ள ட்ரிஸ் ஒவ்பக்கீர் என்பவரது புகைப்படம்.படத்தின் காப்புரிமைSPANISH NATIONAL POLICE Image captionபார்சிலோனா தாக்குதலுக்குக் காரணமான வேனை வாடகைக்கு எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணத்தில் உள்ள ட்ரிஸ் ஒவ்பக்கீர் என்பவரது புகைப்படம்.

 

http://www.bbc.com/tamil/global-40971497

  • தொடங்கியவர்

ஸ்பெயினில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள்
==============================
கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் நடந்த இரு பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஸ்பெயினின் வடகிழக்குப் பகுதியில் பெரும் போலிஸ் தேடுதல் வேட்டை நடக்கிறது.

பர்சிலோனாவின் பிரபலமான லாஸ் ரம்பலஸ் தெருவில் வான் ஒன்று பாதசாரிகள் மீது மோதச் செய்யப்பட்டதில் பதின் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

சில மணிநேரத்தின் பின்னர் சுற்றுலா தலமான கம்பிரில்ஸில் மற்றுமொரு தாக்குதல் நடந்துள்ளது. ஐந்து பேர் தமது வாகனத்தை தெருவில் சென்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தாக்குதலாளிகள் தற்கொலை அங்கி அணிந்திருந்ததாக நம்பப்பட்டது. அது போலி என்று இப்போது கூறப்படுகின்றது. ஸ்பெயின் போலிஸாரால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புதனன்று அல்கனாரில் குண்டு ஒன்று வெடித்தது. ஆட்கள் அங்கு குண்டு தயாரித்துக்கொண்டிருந்ததாக போலிஸார் நம்புகின்றனர்.

தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக இன்று அங்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மரியனோ ரஜோய் மற்றும் மன்னர் ஃபிலிப் ஆகியோர் தலைமையில் அது நடைபெற்றது. நாங்கள் அஞ்சமாட்டோம் என்று அதன் பிறகு கூட்டத்தினர் கோஷமெழுப்பினார்கள்.

பார்சிலோனா தாக்குதலில் ஐந்து பேர் சம்பந்தப்பட்டதாக போலிஸார் கூறுகின்றனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

 

BBC

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

ஸ்பெயினில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள்

ஹாய் ஐரோப்பா! உனக்கு பயங்கரவாதிகள் யாரென்று இப்போவாவது தெரிகின்றதா???? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.