Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை? – குழப்பத்தில் வடக்கு அரசியல்!!

Featured Replies

குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை? – குழப்பத்தில் வடக்கு அரசியல்!!

 
குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை? – குழப்பத்தில் வடக்கு அரசியல்!!
 

வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது கட்சியைச் சேர்ந்த பா.டெனீஸ்வரனைப் பதவி நீக்கி, கட்சியைச் சேர்ந்த விந்தன் கனகரத்தினத்தை நியமிக்க வேண்டும் என்று ரெலோ கட்சி வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரையை நிராகரித்த வடக்கு முதலமைச்சர் ரெலோ கட்சியைச் சேர்ந்த ஞா.குணசீலனை வடக்கு சுகாதார அமைச்சராக நியமித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சைத் தன் வசம் எடுத்துக் கொண்டார்.

சுகாதார அமைச்சராகச் செயற்படுவதற்கான தகுதியின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும், கட்சி நலனைக் காட்டிலும் ஆட்சி நலன் முக்கியமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்று ரெலோ கட்சியின் செயலாளருக்குக் கடிதம் மூலம் விளக்கமளித்திருந்தார்.

கட்சி ஒருவரைப் பரிந்துரைத்திருந்த நிலையில் வேறொருவரை அமைச்சராக நியமித்தமை தொடர்பில் ரெலோ கட்சிக்குள் பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது என்று தெரியவருகின்றது.

அதேவேளை, கட்சியின் தீர்மானத்தை மதிக்காது ஞானசீலன் குணசீலன் செயற்பட்டுள்ளமை தொடர்பிலும் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி ஆராய்ந்து வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://newuthayan.com/story/22405.html

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேரை வைச்சுக்கொண்டு ஒரு கட்சி அதுக்கு அமைச்சர் பதவிக்கு அடிபாடு......என்ன தான் இருந்தாலும் அவையைனிட ஜனநாயக பண்பை மதிக்க வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

பொபி - தாஸ் காலத்தில இருந்து உது தான் இவை தமிழீழ மக்களுக்கு செய்யும் சன நாய் அகம்.  இதுகளை சிங்களவனட்ட ஓடவிட்டு ஒட்டவிட்டு மிச்சம் வைச்சதன் விளைவு...................................... ஒட்டுக்குழுக்களை வைச்சுக் கொண்டு வடக்குக் கிழக்கு தமிழ் மக்களால் தமக்கான விமோசன அரசியலை செய்ய முடியாது. அது 1986/87 களிலேயே  தெரிந்து போன விடயம்.

சித்தர் - மகேஸ்வரன்.. பெருமாள் - டக்கிளஸ்... பெருமாள் - சுரேஸ்.. மோகன் - மாணிக்கம்.. இதுங்க தங்களுக்க ஒற்றுமையா இருந்த காலம் குறைவு.. சிங்களவனோடு.. ஹிந்தியனோடு ஒட்டி இருந்த காலம் அதிகம். ஆனால் வரிகளில் கேட்டது தமிழ் மக்களுக்கு தமிழீழம்... இடையில் மக்களை கேட்காமலே அதையும் கைவிட்டாச்சு.

இதுங்க எல்லாம் உருப்படியா சிந்திக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திய தேசிய தலைவரும் புலிகளும் அவர்களிடம் இருந்த ஆயுதமும்.. இப்ப இல்லை என்பது தான் மக்களுக்கு உள்ள பெரிய பிரச்சனையே..?! tw_blush::rolleyes:

1 hour ago, நவீனன் said:

அதேவேளை, கட்சியின் தீர்மானத்தை மதிக்காது ஞானசீலன் குணசீலன் செயற்பட்டுள்ளமை தொடர்பிலும் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி ஆராய்ந்து வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீகாந்தாவின் சட்டப்புலமை முதல்தடவையாக தூசு தட்டப்படுகிறது.
அதுவும் தமிழினத்தின் குழிபறிப்புக்காக.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Rajesh said:

ஸ்ரீகாந்தாவின் சட்டப்புலமை முதல்தடவையாக தூசு தட்டப்படுகிறது.
அதுவும் தமிழினத்தின் குழிபறிப்புக்காக.

 

உவர்.. டக்கிளஸ் - மகேஸ்வரிட அண்ணன். அவா.. யாழ்ப்பாணத்தில பிடிச்சுக் கொடுத்திட்டு... அனுராதபுரத்தில் எடுத்து விடுவா..  இவர் வவுனியாவில் பிடிச்சுக் கொடுத்திட்டு.. கொழும்பில் எடுத்துவிடுவார்.

இதுதான் இவைட புலமை. வேற ஒரு கருமாந்தரமும் அந்தப் புலமையால் நடந்ததாகத் தெரியவில்லை.. தமிழ் மக்களுக்கு. :rolleyes:tw_angry:

  • தொடங்கியவர்

குணசீலனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்குத் தயாராகும் ரெலோ

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை உறுப்பினர் குணசீலனுக்கு எதிராக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை நிச்சயமாக முன்னெடுக்கப்படும் எனவும் தங்கத்துரை, குட்டிமணி, சிறீசபாரத்தினம் போன்ற தியாகிகளினால் வளர்த்தெடுக்கப்பட்ட ரெலோவில், அரசியல் கட்டாக்காலிகளுக்கு நிச்சயமாக இடமில்லை எனவும் ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு ரெலோ விந்தனின் பெயரைப் பரிந்துரை செய்திருக்க அந்த இடத்திற்கு ரெலோவின் குணசீலன் அமைச்சராகப் பதவியேற்றிருக்கின்றமை குறித்து ரெலோவின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தாவிடம் இன்று கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது கட்சியின் முடிவை மீறிய நடவடிக்கை. முதல்வர் அழைத்தார் என்பதற்காக ஓடிச்சென்று கபடத்தனமாக கையேந்திப் பதவியைப் பெற முடியாது. கட்சியின் தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு தான் செயற்பட்டிருக்க வேண்டும்.

நிச்சயமாக இந்தச் செயற்பாடு தொடர்பில் அவருக்கு எதிராகக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்பதனை செயலாளர் நாயகம் என்ற முறையில் நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

இது தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை, சிறீ சபாரத்தினம் போன்ற பெருந்தலைவர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கட்சி. இதில் அரசியல் கட்டாக்காலிகளுக்கு அறவே இடமில்லை. அதனை நான் தெளிவாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

டெனிஸ்வரனுக்கு ஓர் நீதி, குணசீலனுக்கு இன்னொரு நீதியாக அமைய முடியாது.

ரெலோ சார்பில் முன்னர் அமைச்சுப் பதவியினை வகித்த பா.டெனீஸ்வரன் மாகாண சபை உறுப்பினர் சிலருடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்டார் என்ற காரணத்திற்காகவும் பின்னர் முதலமைச்சர் இரண்டாம் முறை நியமித்த விசாரணைக்குழு முன் தோன்ற மறுத்தமை காரணமாகவும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

இந்த ஒழுங்கு நடவடிக்கையின் நிமிர்த்தம் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கவும் முதலமைச்சரைக் கோரியது.

முதலமைச்சரும் கட்சியின் ஆலோசனையினைப் பெற்றே நீக்கினார். ஆனால், தற்போது புதிய அமைச்சர் நியமன விடயத்தில் அவ்வாறான ஒழுங்கு பேணப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை நாம் அமைச்சுப் பதவியினை விட்டு நீக்க முதலமைச்சரைக் கோரியதுடன், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியும் உள்ளோம்.

இந்த இடத்தில் டெனீஸ்வரனுக்கு ஓர் நீதியையும் மற்றையவரான குணசீலனுக்கு இன்னொரு நீதியையும் வழங்க முடியாது.

ஏற்கனவே, குணசீலன் மீது எமது கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் வன்னியிலுள்ள சில மாகாண சபை உறுப்பினர்களும் பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த-2013 ஆம் ஆண்டு ரெலோ அதன் கட்சி உறுப்புரிமை படிவத்தினை வழங்கிய போது அதனை நிரப்புவதற்கு குணசீலன் மறுத்திருந்தார். அதற்கான காரணமாக, வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டவுடன் தன்னை அமைச்சராக கட்சி நியமிக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் ரெலோ சார்பில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகிய குணசீலன் அம் மாவட்டத்திலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் முன்னாள் மன்னார் நகர சபை உறுப்பினர் குமரேஸ் என்பவரையே தனது அரசியல் சகாவாக இணைத்துச் செயற்பட்டார்.

குணசீலன் தற்போதும் ஓர் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் போலவே மன்னாரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். குணசீலன் ரெலோ கட்சியையும் ரெலோ உறுப்பினர்களையும் கண்டு கொள்வதே கிடையாது.

2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் தமிழர் வாக்குகளே யார் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கப் போகின்றது என்பது எதிர்வு கூறப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மக்கள் மகிந்தவிற்கு வாக்களிக்க மாட்டர் என்பதை மகிந்த தரப்பு முற்கூட்டியே உணர்ந்திருந்தது.

எனவே வட மாகாணத்திலுள்ள கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் எவரையேனும் பயன்படுத்தி மைத்திரிக்குச் செல்லும் வாக்கினைத் தடுப்பதற்கு மகிந்தவின் சகாக்கள் பணத்துடன் வடக்கிற்குப் படையெடுத்திருந்தனர்.

இவர்கள் வடக்கில் கூட்டமைப்பின் குணசீலன் உள்ளிட்ட நான்கு மாகாண சபை உறுப்பினர்களை அணுகினர். அணுகியவர்கள், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினராகிய நீங்கள் பகிரங்கமாகப் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மகிந்தவிற்கோ மைத்திரிக்கோ தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது எனக் கோர வேண்டும்.

அப்படிக்கோரும் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான உங்கள் கட்சியாலும் உங்களாலும் மகிந்தவிற்கு வடக்கில் அளிக்கப்படுகின்ற வாக்குகளைத் தடுக்க முடியாது. ஆனாலும், மைத்திரியை ஆதரித்து நிற்கும் உங்களாலும் உங்கள் கட்சியாலும் மைத்திரிக்கு விழும் வாக்கினைத் தடுக்க முடியும்.

எனவே மகிந்தவுக்கோ,மைத்திரிக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என நீங்கள் பத்திரிகையாளர் மாநாடு நடாத்திப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மாநாடு நடாத்தியவுடன் உங்கள் நால்வருக்கும் தலா 50 லட்சம் விகிதம் இரண்டு கோடி வழங்குவோம். மகிந்த ஜனாதிபதியாகியவுடன் மிகுதி இரண்டு கோடி ரூபா வழங்குவோம் எனப் பேரம் பேசினர். இதை மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் முற்றாக நிராகரித்தனர்.

ஆனால் குணசீலன் மட்டுமே வவுனியாவில் பகிரங்கமாகப் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மைத்திரிக்கும், மகிந்தவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனக் கோரியிருந்தார்.

இவ்விடயம் தேர்தல் காலத்தில் ஊடகங்களிலும், கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த ஒரு முக்கியமான விடயமாகும். நிலைமை இவ்வாறிருக்க நாம் எப்படி இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கும்? என்பதையும் எமது கட்சி உறுப்பினர்கள் கேள்வியாக உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றார்கள்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்தமை தொடர்பில் குணசீலன் ஏற்கனவே சிக்கலில் மாட்டியிருந்தார்.

ரூபா பத்து லட்சத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது என்ற பெயரில் துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம், மடிக் கணினி பேன்றவற்றைக் கொள்வனவு செய்த குணசீலன் அவற்றினைத் தன்னுடைய உறவினர்களினதும் அவரது தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றியோரினதும் பெயர்களில் 'உதவித் திட்டம்'எனப் பயனாளிகளைத் தெரிவு செய்து பின்பு அவற்றை அவர்களுக்கு வழங்கி வழங்கியவற்றை மீளச் சேகரித்து மன்னாரிலுள்ள தன்னுடைய உறவினரொருவரின் சைக்கிள் கடையிலும், ஏனைய கடைகளிலும் விற்ற போது பாதிக்கப்பட்டவர்கள் சம்பவத்தினை வெளிப்படுத்தினர்.

பின்னர், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வடமாகாணத் திணைக்களமும், மாகாணக் கணக்காய்வுத் திணைக்களமும் நேரடியாகக் களத்தில் இறங்கி விற்கப்பட்ட அவ்வளவு பொருட்களையும் பறிமுதல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கும் மேலாக குணசீலன் வைத்தியராக இருந்த போது முன்னைய வடமாகாணச் சுகாதாரப் பணிப்பாளர் திருமதி- யூட் ரஜனியினால் குற்றமிழைத்தமைக்காகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறப்பட்ட குற்றங்கள், துஸ்பிரயோகங்களுக்காகவே குணசீலனின் பெயரை ரெலோ அமைச்சுப் பதவிக்காக ஆராயவில்லை.

இவ்வாறு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனே இவரை நிராகரித்திருந்த நிலையில் ஏனைய ரெலோ உறுப்பினர்களும் சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள குணசீலனுக்கு எதிராக நடவடிக்கைக்குத் தயாராகியுள்ளனர் என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/156300

அமைச்சுப் பதவி வழங்காதது ஏன்?; ரெலோவுக்கு வடக்கு முதல்வர் பதில்

வடமாகாண அமைச்சரவையில்  தமிழீழ விடுதலை இயக்கத்தால் (ரெலோ) அமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்த மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துக்கு அந்த அமைச்சுப் பொறுப்பை வழங்க முடியாதிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.


இது தொடர்பாக வடமாகாண ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிக்கும் ரெலோவின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவுக்கு நேற்று  செவ்வாய்க்கிழமை கடிதமொன்றையும் முதலமைச்சர்   அனுப்பி வைத்துள்ளார்.


அக்கடிதத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தையும் முதல்வர் இணைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்;


தங்கள் 21.08.2017 ஆம் திகதிய கடிதம் கிடைத்தது. ஏற்கனவே டெனீஸ்வரனை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டேன்.


புதிய அமைச்சரவையின் பெயரில் விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாமைக்கு வருந்துகின்றேன். காரணங்களை அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அக்கடிதத்தின் பிரதி இத்துடன் இணைத்துள்ளேன்.


எனினும், விந்தன் கனகரத்தினம் எமக்கு  மிகவும் வேண்டிய ஒருவர். அவரின் சேவை எமக்கு  கட்டாயமாக வேண்டும். அந்த வகையில் அவரை என் அமைச்சுடன் சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அழைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


அதேவேளை விந்தன் கனகரத்தினத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாவது;


அண்மையில் வந்து என்னைச் சந்தித்து சுகாதார அமைச்சினை எடுத்து நடத்த உங்களுக்குப் போதிய அனுபவ ஞானம் உண்டு என்று தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினீர்கள். அதை நான் மெச்சுகின்றேன்.

எனினும், பலருடனும் கலந்தாலோசித்த பின்னர் சுகாதார அமைச்சிற்குப் பொருத்தமானவர் தொழில் ரீதியாக உரிய தகைமைகள் உடையவரே என்ற முடிவுக்கு வந்து வைத்திய கலாநிதி குணசீலனை  தேர்ந்தெடுத்துள்ளேன்.

அவரும்  மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும்  முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதாக நான் ஏற்கனவே உறுதி அளித்திருந்தேன். முன்னரே சிவநேசனுக்கு  அமைச்சுப் பதவி கொடுக்க இருப்பதாக உங்களுக்கு அறிவித்திருந்தேன்.


இந்த விடயத்தில் உங்கள் கட்சியின் சிபார்சை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். எனினும், போக்குவரத்து என் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை உரியவாறு தொழிற்திறனுடன் நடத்த என்னோடு இணைந்து கடமையாற்றக்கூடிய மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தேவைப்படுகின்றார்.

உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் எமது  அமைச்சுடன் சேர்ந்து இது சம்பந்தமாக நெருங்கிக் கடமையாற்ற உங்களை அழைக்கின்றேன். உங்கள் கட்சிக்கோ உங்களுக்கோ அமைச்சர் நியமன விடயத்தில் மனவருத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் துளி கூட இருக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

http://www.thinakkural.lk/article.php?local/gshia3xbkg5615da647c549d24295raxlnde572c2c5edc4f5bef039cxlqhk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.