Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

டிக்கெட் கிடைக்கவில்லை `சிவாஜி' படம் பார்க்க முடியாததால் கல்லூரி மாணவிகள் கண்ணீர்

என்னா கொடுமை சார் இது.............

:unsure:

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பாருங்கள் யாழ்கள ரஜனியின் பாயும் சிங்க... பிரியர்களே :unsure:

http://tamilvideo.info/view_video.php?view...44d9b9fed0ff954

Edited by tamillinux

அனைத்து யாழ் சிவாஜி புறகணிப்பு உள்ளங்களுக்கும் என் வணக்கம்................

அடுத்த முயற்சியாக யாழில் ரஜனி மன்றம் ஆரம்பிக்க இருகிறோம்...........அதில் வசம்பண்ணா தலைவராக பொறுப்பேற்பார்...............பரணி அண்ணா உப தலைவராக பொறுபேற்பார்..........

மற்றைய உள்ளங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.............

வரட்டா................

:P

Edited by Jamuna

என்ன யமுனா யார் அந்த பரணீ நான் இல்லைதானே

ஏன்யா தேவையில்லாமல் என்னை சேர்க்கிறீங்க

அண்ணனிற்கு மன்றம் ஆரம்பியுங்க என்னையே கொடுக்கிறன். கண்ட கண்ட ..... க்கெல்லாம் என்னை சேர்க்காதீங்க

பிறகு இடி இல்லை எரிமலைதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து யாழ் சிவாஜி புறகணிப்பு உள்ளங்களுக்கும் என் வணக்கம்................

அடுத்த முயற்சியாக யாழில் ரஜனி மன்றம் ஆரம்பிக்க இருகிறோம்...........அதில் வசம்பண்ணா தலைவராக பொறுப்பேற்பார்...............பரணி அண்ணா உப தலைவராக பொறுபேற்பார்..........

மற்றைய உள்ளங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.............

வரட்டா................

:P

வசம்பு சூப்பர் பொருத்தம் எப்படி இப்படி எல்லாம் அறிவு பூர்வமாக ஆட்களை தேர்வு செய்கிறீர்கள், உங்கள் திறமைகு ஒரு சபாஷ். :):D:lol:

விவேக் ; "அடப்பாவிங்களா..உங்க புறக்கணிப்புக்கு ஒரு அளவே இல்லையாடா..

ஓடக்கூடாது ஓடக்கூடாதுன்னு இங்கேயே 100 நாள் ஓட்டிடுவீங்க கோலே இருக்கேடா..."

ஜமுனா ;" கண்ணு காக்காதான் கூட்டம் கூட்டமாக் கத்தும் சிங்கம் சிங்கிளாத்தான் கத்தும்..."

விவேக் ;"அட உங்க விசுவாத்துக்கு ஒரு அளவே இல்லையாடா..ஜம்மு கத்துறதுக்கும் சிவாஜி100 நாள்

ஓடுறதுக்கும் என்னடா சம்பந்தம்.."

ஜமுனா ;"கண்ணு..நான் நம்மாளு காக்கா மாதிரி....... கலர சொன்னேன்.. என் படத்தை பார்க்க சிங்கமா வரும் காக்காதான் வரும் காக்கா சிங்கிளாவா வரும்.. கூட்டமாத்தான் வரும்.."

நானும் பார்த்தேன் சிவாஜி...மொட்டை ரஜனி தலையில் விரல்காளால் டக் டக் என்று தட்டுவது எனக்கு பிடித்திருந்தது

"கண்ணா............!!! பன்னி தான் கூட்டமா வரும் டைகர்(ஜம்மு) எப்பவும் சிங்கிளா தான் வரும்!!! சும்மா அதிருதில்லலல..........CooL"

அவருக்கு டபிள் போகத்தான் ஆசை. ஆனால் ஒருதரும் நம்பி ஏறினம் இல்லை, இப்ப அது தான் பிரச்சனை.

Edited by yarlravi

வெற்றிகரமாக 333வது கருத்தை எட்டியிருக்கும் (எனது இந்த எழுத்தையும் சேர்த்துத்தான்) சிவாஜி.

வாழ்த்துக்கள்

வெற்றிகரமா 333 கருத்து வந்திச்சா...........அதற்காகா எல்லாரும் ஒரு ஓ போடுங்கோ..........பரணி அண்ணா...................அண்ணணுக்கு இதயத்தில வைத்திருகிறோம் நிஜத்திலையும் வைக்கலாம்.....................யாழ் மக்களுக்காக இங்கே ரஜனிக்கு வைப்போம்.......... :P

வசம்பு சூப்பர் பொருத்தம் எப்படி இப்படி எல்லாம் அறிவு பூர்வமாக ஆட்களை தேர்வு செய்கிறீர்கள், உங்கள் திறமைகு ஒரு சபாஷ். :D:D:D

சித்து.............வசம்பண்ணாவை பற்றி தெறியல போல இருக்கு. :P ............வசம்பண்ணா சேர்த்த கூட்டம் இல்லை அன்பால தானா சேர்ந்த கூட்டம் பாருங்கோ :) .............சரி சரி விளங்குது இங்கையும் உங்களுக்கு கல்லாவில போட்டு தரலாம் வந்து இணையுங்கோ.......... :lol:

ஜமுனா ;"கண்ணு..நான் நம்மாளு காக்கா மாதிரி....... கலர சொன்னேன்.. என் படத்தை பார்க்க சிங்கமா வரும் காக்காதான் வரும் காக்கா சிங்கிளாவா வரும்.. கூட்டமாத்தான் வரும்.."

மாமோய் நம்மளையும் விவேக்கோட சேர்ந்து நடிக்க வைத்ததிற்கு மிக்க நன்றி :P ..............காக்கா கூட்டமா தான் வரும் காக்கா சாப்பாடு கிடைத்தாலும் எல்லாரையும் கூப்பிட்டு தானாம் சாப்பிடுமாம........நாம அப்படியா!!!!!! ;)

Edited by Jamuna

அவருக்கு டபிள் போகத்தான் ஆசை. ஆனால் ஒருதரும் நம்பி ஏறினம் இல்லை, இப்ப அது தான் பிரச்சனை.

ரவி அண்ணா உங்க ஊரில...........டபிள்ஸ் போகலாம் பாருங்கோ இங்கே டபுள்ஸ் போக முடியாது...........பொலிஸ்மாமா பிடிச்சுடுவார்..............இந்த டபிள்சை தவிர எனக்கு வேற டபிள்ஸ் தெறியாது பாருங்கோ........

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பாருங்கள். இதில் முதலாவதா வரும் நிகழச்சி(சந்தோஸ்) சில யாழ் கள அங்கத்தவர்கள் போல இருக்கு :)

குறிப்பு: கள மேற்பார்வையாளர்கள் இதை நீக்கினால் நீங்களும் இந்த முகத்துக்கு கீழே சேர்க்கபடுவீர்கள் :P

http://tamilvideo.info/view_video.php?view...ea15d152add0729

Edited by tamillinux

சாதனையில் ஒரு வேதனை

- 04.07.2007

முதுகில் கத்தியும் முகத்தில் சிரிப்புமாக இருப்பது எத்தனை முரணான வேதனை! அப்படியொரு அவஸ்தையில் இருக்கிறது அந்த பிரபல மூன்றெழுத்து நிறுவனம்.

இந்நிறுவனம் தயாரித்த மூன்றெழுத்து படம் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது. நிறுவனத்துக்கு இருபத்தைந்து கோடிகள் அளவுக்கு லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், வெளியில் சொல்ல முடியாத அவஸ்தையில் இருக்கிறார்கள் இந்நிறுவனத்தார்.

அண்ணன் தம்பி பிரச்சனையில் இந்நிறுவனம் தயாரித்த படங்களில் பாதியை (அதுவும் தான் கேட்கும் படங்களை) தரவேண்டும் என கேட்டு வாங்கியுள்ளார் தம்பி. இது தவிர அண்ணனுக்கு வேறுபல பிரச்சனைகள், பண தேவைகள். இதையெல்லாம் பிரமாண்ட இயக்குனர் தீர்த்து வைப்பார் என நினைத்துதான் அவரை வைத்து படம் தயாரித்தனர்.

ஆனால் அவரோ, பிரமாண்டப்படுத்துகிறேன் என்று எலிக்கு யானை தீனி போட்டு பட்ஜெட்டை எகிற வைத்தார். ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை கொண்ட இரண்டெழுத்து கவிஞருக்கு வெளியில் முப்பதாயிரம் மட்டுமே ஒரு பாடலுக்கு கொடுக்கின்றனர். பிரம்மாண்டம் கவிஞருக்கு மூன்று லட்சம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதேபோல் ஹீரோவின் அம்மாவாக இரண்டு மூன்று சீன்களில் மட்டுமே தலைகாட்டிய நடிகைக்கு கொடுத்திருப்பது நாற்பது லட்சங்கள். தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய முன்னாள் இயக்குனர் ஒருவருக்கும் இதேபோல் எக்கச்சக்க சம்பளம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் டிஸைனர் ஒருவரே. பிரமாண்டம் அவரை தவிர்த்து தன்னைப் போலவே பிரமாண்டமான நிறுவனம் ஒன்றை ஒப்பந்தம் செய்தார். இவர்களின் ஹைடெக் டிஸைன் உச்ச நடிகரின் ரசிகர்களை சென்றடையவில்லை. மேலும், டிஸைன்கள் தயாரானாலும இயக்குனர் ஓ.கே. சொன்ன பிறகே அது பிரஸ்ஸுக்கு போனது. இதுவும் இந்நிறுவனத்துக்கு எரிச்சலை கொடுத்தது.

இதனால் பட டிஸைனரை அழைத்து, பேசிய பணம் ஐந்து லட்சத்தை செட்டில் செய்து, உங்கள் சேவை இத்துடன் போதும் என அனுப்பி வைத்தனர். பிறகு, தங்களது ஆஸ்தான டிஸைனரை புதிதாக சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தனர். படரிலீஸ் தொடங்கி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து போஸ்டர்களும் இந்நிறுவனத்தின் ஆஸ்தான டிஸைனரின் கைவண்ணம்தான்!

பி,சி சென்டர்களில் படத்தின் க்ராஃப் கணிசமாக இறங்கத் தொடங்கியுள்ளது. பல விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டமடையும் நிலையில் உள்ளனர். அப்படி ஏதேனும் நடந்தால், நஷ்டஈடு கேட்டு அவர்கள் தயாரிப்பாளர்களைதான் நெருக்குவார்கள். இதுவும் அந்நிறுவனத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வெளியே ஆர்ப்பட்டம் ஆயிரமிருந்தாலும் உண்மை ரொம்ப கசப்பானது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதனையில் ஒரு வேதனை

- 04.07.2007

முதுகில் கத்தியும் முகத்தில் சிரிப்புமாக இருப்பது எத்தனை முரணான வேதனை! அப்படியொரு அவஸ்தையில் இருக்கிறது அந்த பிரபல மூன்றெழுத்து நிறுவனம்.

இந்நிறுவனம் தயாரித்த மூன்றெழுத்து படம் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது. நிறுவனத்துக்கு இருபத்தைந்து கோடிகள் அளவுக்கு லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், வெளியில் சொல்ல முடியாத அவஸ்தையில் இருக்கிறார்கள் இந்நிறுவனத்தார்.

அண்ணன் தம்பி பிரச்சனையில் இந்நிறுவனம் தயாரித்த படங்களில் பாதியை (அதுவும் தான் கேட்கும் படங்களை) தரவேண்டும் என கேட்டு வாங்கியுள்ளார் தம்பி. இது தவிர அண்ணனுக்கு வேறுபல பிரச்சனைகள், பண தேவைகள். இதையெல்லாம் பிரமாண்ட இயக்குனர் தீர்த்து வைப்பார் என நினைத்துதான் அவரை வைத்து படம் தயாரித்தனர்.

ஆனால் அவரோ, பிரமாண்டப்படுத்துகிறேன் என்று எலிக்கு யானை தீனி போட்டு பட்ஜெட்டை எகிற வைத்தார். ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை கொண்ட இரண்டெழுத்து கவிஞருக்கு வெளியில் முப்பதாயிரம் மட்டுமே ஒரு பாடலுக்கு கொடுக்கின்றனர். பிரம்மாண்டம் கவிஞருக்கு மூன்று லட்சம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதேபோல் ஹீரோவின் அம்மாவாக இரண்டு மூன்று சீன்களில் மட்டுமே தலைகாட்டிய நடிகைக்கு கொடுத்திருப்பது நாற்பது லட்சங்கள். தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய முன்னாள் இயக்குனர் ஒருவருக்கும் இதேபோல் எக்கச்சக்க சம்பளம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் டிஸைனர் ஒருவரே. பிரமாண்டம் அவரை தவிர்த்து தன்னைப் போலவே பிரமாண்டமான நிறுவனம் ஒன்றை ஒப்பந்தம் செய்தார். இவர்களின் ஹைடெக் டிஸைன் உச்ச நடிகரின் ரசிகர்களை சென்றடையவில்லை. மேலும், டிஸைன்கள் தயாரானாலும இயக்குனர் ஓ.கே. சொன்ன பிறகே அது பிரஸ்ஸுக்கு போனது. இதுவும் இந்நிறுவனத்துக்கு எரிச்சலை கொடுத்தது.

இதனால் பட டிஸைனரை அழைத்து, பேசிய பணம் ஐந்து லட்சத்தை செட்டில் செய்து, உங்கள் சேவை இத்துடன் போதும் என அனுப்பி வைத்தனர். பிறகு, தங்களது ஆஸ்தான டிஸைனரை புதிதாக சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தனர். படரிலீஸ் தொடங்கி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து போஸ்டர்களும் இந்நிறுவனத்தின் ஆஸ்தான டிஸைனரின் கைவண்ணம்தான்!

பி,சி சென்டர்களில் படத்தின் க்ராஃப் கணிசமாக இறங்கத் தொடங்கியுள்ளது. பல விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டமடையும் நிலையில் உள்ளனர். அப்படி ஏதேனும் நடந்தால், நஷ்டஈடு கேட்டு அவர்கள் தயாரிப்பாளர்களைதான் நெருக்குவார்கள். இதுவும் அந்நிறுவனத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வெளியே ஆர்ப்பட்டம் ஆயிரமிருந்தாலும் உண்மை ரொம்ப கசப்பானது!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!!

நாவல் நன்றாக இருந்தது நன்றி!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜியால், நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல் அஜீத், திரிஷா நடித்த கிரீடம் படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு விட்டதாம். சிவாஜி படம் தமிழகத்தின் அத்தனை முன்னணி தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், பல படங்களைத் திரையிட தியேட்டர் கிடைக்காமல் அத்தனையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான படங்கள் ஜூலை கடைசி வாரத்திற்கு மேல்தான் திரையிடப்படவுள்ளன.

அஜீத்தின் கிரீடம் படம் ஜூலை 12ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஜூலை கடைசி வாரத்திற்குப் படம் தள்ளிப் போயுள்ளதாம். நல்ல தியேட்டர் கிடைக்காததால்தான் படத்தை தள்ளி வைக்கும் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாலாஜியும், ஆட்லேப்ஸ் நிறுவனமும் வந்தனராம். தமிழகம் முழுவதும் சிவாஜி 450 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டுள்ளது. சிவாஜி இப்படி சக்கை போடு போட்டு வருவதால் அஜீத்தின் கிரீடம், விக்ரமின் பீமா உள்பட 20 படங்கள் வரை ரிலீஸ் ஆக முடியாமல் தேங்கிக் கிடக்கின்றனவாம். பல தியேட்டர் காம்ப்ளக்ஸ்களில் சிவாஜி 50 நாட்களைத் தாண்டிய பின்னர்தான் கூடுதல் தியேட்டர்களிலிருந்து படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனராம் தியேட்டர் உரிமையாளர்கள். சென்னையில் சிவாஜியைத் திரையிட்டுள்ள மல்ட்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், போட்ட பணத்தை திரும்ப எடுத்த பிறகுதான் கிரீடம் உள்பட மற்ற படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியும் என்று கூறி விட்டார்களாம்.

அபிராமி மெகா மால் வளாகத்தில் உள்ள நான்கு தியேட்டர்களிலும் சிவாஜிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. மாயாஜாலில் உள்ள 6 திரைகளிலும் சிவாஜிதான். தினசரி 20 காட்சிகளை அவர்கள் ஓட்டிக் கொண்டுள்ளனர். வாரக் கடைசி நாட்களில் 26 காட்சிகளாம். கிரீடம் படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாம். இன்னும் 2 நாட்களில் படம் சென்சார் ஆகி விடும். விக்ரமின் பீமாதான் கிரீடத்திற்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பீமா, ஆகஸ்ட் 15ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறதாம்சிங்கப்பூர், அமெரிக்காவில்கோலிவுட் 'கலை விழா' தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் பிரமாண்ட கலை விழாவை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடம் கட்ட தேவையான நிதி இந்த விழா மூலம் வசூலிக்கப்படவுள்ளது. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பிரமாண்ட கலை விழா நடத்தப்பட்டது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க அந்த கலை விழா நடந்தது. அந்த கலைவிழாவில் சூப்ரபர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் உள்பட அத்தனை பேரும் கலந்து கொண்டனர். அந்தக் கலைவிழாவில் ரூ. 6 கோடி வசூல் ஆனது. அந்த பணத்தைக் கொண்டு நீண்ட காலமாக சங்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த கடனை அடைத்தார் விஜயகாந்த். ஒரு வழியாக கடன் தொல்லையிலிருந்து மீண்டது நடிகர் சங்கம். தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும்,

கேப்டன் பாணியில் பிரமாண்ட கலைவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த கலைவிழாவில் வசூலாகும் நிதியைக் கொண்டு, நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்ட வணிக வளாகத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து சரத்குமாரும், துணைத் தலைவர் ராதாரவியும் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக, தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் பங்குபெறும் தமிழ் சினிமா-75 ஆண்டுகள் என்ற கலைநிகழ்ச்சி சிங்கப்பூரில் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ராதிகாவின் ராடான் நிறுவனம் செய்து வருகிறது. வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல், பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் இது நடைபெறும் என்று சரத்தும், ராதாரவியும் தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது. மற்ற முன்னணி ஸ்டார்களையும் கலந்து கொள்ள வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுதவிர மலையாளம் மற்றும் தெலுங்கு நடிகர், நடிகைகளையும் இந்த விழாவில் பங்கேற்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

Edited by raja.m

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு, தெற்கு பேதம் காலம் காலமாக இந்தியாவில் இருந்து வரும் விஷயம்தான். அரசியலும், சினிமாவும்தான் இரண்டுபட்டு நிற்கும் இந்திய கலாசாரத்தை இணைக்கும் விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பெரிய வெற்றிகளை குவிப்பது புதிதல்ல. ஐம்பதுகளிலேயே ஏவிஎம், ஜெமினி போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டன. ஸ்ரீதர், தேவர், ஹேமமாலினி, கமலஹாசன், ஸ்ரீதேவி, கே. பாலசந்தர், மணி ரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற தமிழ் சினிமா கலைஞர்கள் இந்தியில் புகழ் பெற்றது மொழிமாற்றப் படங்களினால்தான். 25 வருடங்களுக்கு முன்னர் பாலிவுட்டின் கவனம் சப்பர் ஸ்டார் பக்கம் திரும்பியதற்கு காரணம் கட அந்தா கானுன், ஜான் ஜானி ஜனார்த்தனன் என மொழிமாற்றப்படங்கள்தான்.

ச ;ப்பர் ஸ்டாரின் இந்திப் படங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும். பாலிவுட்டுக்கு ஏற்ற கதைகளில் நடித்தாலே ஒழிய தன்னுடைய தமிழ்ப்படங்களை அப்படியே மொழிமாற்றம் செய்ததில்லை. ஹம் போன்ற இந்திப்படங்களை க;ட்டத்தோடு கட்டமாக வரும் பாத்திரங்களாக இருந்தாலும் ஆர்வத்தோடு நடித்து பாலிவுட்டை பிரமிக்க வைத்தவர்.

சிவாஜியின் சமீபத்திய வெற்றி, திரும்பவும் ரஜினியை இந்தியாவின் ச ;ப்பர் ஸ்டாராக்கியிருக்கிறது. அதுவும் சப் டைட்டில் எதுவுமில்லாமல் ஒரு தமிழ்ப்படத்தை வட இந்தியர்கள் ரசிக்க ஆரம்பித்திருப்பதை பிரமிப்போடு பார்க்கிறது பாலிவுட். சிவாஜி, வடக்கு தெற்கு பிரிவையெல்லாம் உடைத்து எறிந்துவிட்டதாக மீடியாவில் விவாதங்கள் ஆரம்பமாகிவிட்டன.

http://www.ibnlive.com/videos/43791/.html

கேரளாவில் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி. 86 தியேட்டர்களில் வெளியாகி தற்போது 60 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சிவாஜி, பல மலையாள படங்களின் சாதனைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது.

ஆந்திராவில் சிவாஜியின் வெற்றி, சட்டசபையில் விவாதப் பொருளாகிவிட்டது. கர்நாடகாவின் பெங்கள ;ர், மைச ;ர் போன்ற பகுதிகளில் தியேட்டர்களில் ரசிகர்களின் க ;ட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மகாராஷ்டிராவில் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படம், மும்பை தவிர்த்த மற்ற இடங்களிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ச ;ப்பர் ஸ்டாரின் சொந்த ஊரான கோலாப்ப ;ர், ரத்னகிரி, சோலாப்ப ;ர், நாக்ப ;ர் போன்ற பகுதிகளில் இரண்டு வாரங்களை தாண்டியும் ஒரு தமிழ்ப் படம் ஓடிக்கொண்டிருப்பது பெரிய சாதனைதான். குஜராத், பீகார் என வட இந்தியாவில் முக்கியமான மாநிலங்களிலும் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்டால் இன்னும் பல நகரங்களிலும் சிவாஜிக்கு வரவேற்பு இருக்கும் என்று தெரிகிறது.

முதல்முறையாக மொழி பேதத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு வட இந்தியர்கள் தமிழ்ப்படத்தை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில், தமிழ்ப் படங்களுக்கு வட இந்தியாவில் பெரிய மார்க்கெட் இருக்கும் என்று டெல்லி மீடியாக்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன. சிவாஜியின் வழி, தமிழ் சினிமாவுக்கு புது வழிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்படங்களின் வழமையான வெளியீடுகளில் கொஞ்சம் வேறுபட்டதாய் உலக வலம் வரும் சிவாஜி யாழிலும் பல பக்கக் கருத்துக் குவியலுடன் பயணிக்கிறது. இந்த வேளையில், பல்வேறு முரணான கருத்துகளும் வெளிப்படவே செய்கின்றன. இதிலொன்றுதான் கீழே இணைக்கப்டும் தகவல். இதைச் சொன்னவர் தமிழகச் சினிமாவில் முக்கிய பாத்திரம் வகிக்குமம் நடிகர் நாசர்.

யாழில் கருத்து மழை பொழியும் நாம், இந்தச் சினிமாத்துறையை வாழ்வாதாரமாகவுடைய ஏனையோரது எண்ணங்களையும் அறிய ஆவலாககவே இருப்போம்.

------

ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

ஆஸ்கர், கேன்ஸ் விருதுகள் நமக்கு கிடைக்கவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ஆஸ்கர் விருது என்பது ஓர் அமெரிக்கக் குறியீடு; அது அமெரிக்கப் படங்களுக்கானது. நாம் எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். "அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை "அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

- நன்றி: தினமணி

http://www.dinamani.com/Cinema/CineItems.a...7Ls&Topic=0

- தனி நிறுவனமாக ஒன்றுமட்டும் இருந்துகொண்டு ஒரு படத்தை மட்டும் வெளியிட்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு வேறு படங்கள் வெளிவரவிடாது தடுத்தவாறு திரை ஆக்கிரமிப்புச் செய்வதென்பது இந்த உலகமமயமாக்கல் சூழலின் யதார்த்தம் போலும்! இது பெருநிறுவனங்களை மட்டும் வாழவைக்கும் உத்தி மட்டும்தான்.

- ஒரு பந்தையத்தை ஆரம்பித்தால் போட்டியிடுபவர்கள் இருக்க வேண்டும். போட்டியிட விரும்புபவர்களை இணைக்க வேண்டும், இதைப் புறந்தள்ளியவாறு பந்தையத்திடலில் ஒருவர் மட்டும் ஈடுபட்டால்..... இதைக் காண உக்காந்திருப்போர் நெளியாமல் என்னதான் செய்ய முடியும்? ம்.... -பெருமூச்சு பொதுவானதுதான்!

  • தொடங்கியவர்

உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

திருவனந்தபுரம், ஜுலை. 5-

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் 15-ந் தேதி வெளியான `சிவாஜி' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 650 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இப்படம் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இப்படம் வசூல் சாதனை செய்துள்ளது. `சிவாஜி' படம் மகராஷ்டிராவில் 18 தியேட்டர்களில் நேரடி தமிழ்ப்படமாகவே திரையிடப்பட்டது.

தற்போது இந்தியில் `ஜ×ம் பராபர் ஜ×ம்' என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் நேரடி தமிழ்ப்படமாக திரையிடப்பட்ட சிவாஜிக்கு இப்போதும் இருக்கும் வரவேற்பை பார்த்து வினியோகஸ்தர்களே வியப்படைந்துள்ளனர்.

மேலும் பல மாநிலங்களில் சிவாஜியின் வசூல் வேட்டை தொடர்வதால் புதிய படங்களை திரையிட வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படம் ஆந்திராவில் மட்டும் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டுல்லாது வெளிநாடுகளிலும் `சிவாஜி' படம் வசூலை குவித்துள்ளது. அமெரிக்காவில் ரூ.4.5 கோடி, இங்கிலாந்தில் ரூ.2.75 கோடி, மலேசியாவில் ரூ.7.8 கோடி என வசூலை அள்ளியது `சிவாஜி' படம். சிங்கப்பூரில் எந்தவொரு தமிழ்ப்படமும் இதுவரை காணாத வசூலை கண்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகமெங்கும் திரையிடப்பட்ட `சிவாஜி' படம் 3 வாரங்களில் மட்டும் ரூ.95 கோடியை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.

  • தொடங்கியவர்

டெல்லியைக் கலக்கும் சிவாஜி

சிவாஜி படம் உலகெங்கும் வசூல் மழையில் நனைந்து கொண்டுள்ளது. பல புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது. உலகம் பூராவும் அமர்க்களப்படுத்தி வரும் சிவாஜி, இப்போது தலைநகர் டெல்லியிலும் புதிய சாதனையை படைத்து விட்டது.

டெல்லியில், 2 மல்ட்டிபிளக்ஸ் வளாகத்திலும், கர்கோவனில் ஒரு தியேட்டரிலும்தான் முதலில் சிவாஜி திரையிடப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் கூட்டம் கட்டி ஏறியதால், அசந்து போய் இப்போது கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். தற்போது மொத்தம் 12 தியேட்டர்களில் சிவாஜி கலக்கலாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

இதுவரை தலைநகர் டெல்லியில் இத்தனை தியேட்டர்களில் எந்தப் படமும் திரையிடப்பட்டதில்லை என்பதால் சிவாஜி மூலம் தமிழ் சினிமா புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுகுறித்து பிவிஆர் சினிமா என்ற மல்ட்பிளக்ஸ் வளாகத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஷாலு சபர்வால் கூறுகையில், சிவாஜி படத்துக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துல்ளது. இதனால் கூடுதல் திரையரங்குகளில் படத்தை திரையிட்டுள்ளோம்.

படம் அருமையாக உள்ளது. நான் படத்தைப் பார்த்தேன். எனக்கு படம் மிகவும் பிடித்து விட்டது என்றார் சபர்வால்.

மொழிப் பாகுபாடு இல்லாமல் பல்வேறு மொழி பேசுவோரும் சிவாஜியைப் பார்க்க கூடுகிறார்களாம். இதுவரை எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லியின் ஆர்.கே.புரம், சத்தர்பூர் ஆகிய பகுதகளிலும் சிவாஜியின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதால் அந்தக் காட்சிகளைப் பார்க்கவும் டெல்லி ரசிகர்கள் ஆர்வமாக வருகின்றனர்.

டெல்லியில் கிட்டத்தட்ட 11 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அனேகமாக அனைவருமே சிவாஜியைப் பார்த்து முடித்திருப்பார்கள் என்று டெல்லி தமிழ் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

விடுப்பு : Viduppu.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்படங்களின் வழமையான வெளியீடுகளில் கொஞ்சம் வேறுபட்டதாய் உலக வலம் வரும் சிவாஜி யாழிலும் பல பக்கக் கருத்துக் குவியலுடன் பயணிக்கிறது. இந்த வேளையில், பல்வேறு முரணான கருத்துகளும் வெளிப்படவே செய்கின்றன. இதிலொன்றுதான் கீழே இணைக்கப்டும் தகவல். இதைச் சொன்னவர் தமிழகச் சினிமாவில் முக்கிய பாத்திரம் வகிக்குமம் நடிகர் நாசர்.

யாழில் கருத்து மழை பொழியும் நாம், இந்தச் சினிமாத்துறையை வாழ்வாதாரமாகவுடைய ஏனையோரது எண்ணங்களையும் அறிய ஆவலாககவே இருப்போம்.

------

ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

ஆஸ்கர், கேன்ஸ் விருதுகள் நமக்கு கிடைக்கவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ஆஸ்கர் விருது என்பது ஓர் அமெரிக்கக் குறியீடு; அது அமெரிக்கப் படங்களுக்கானது. நாம் எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். "அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை "அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

- நன்றி: தினமணி

http://www.dinamani.com/Cinema/CineItems.a...7Ls&Topic=0

- தனி நிறுவனமாக ஒன்றுமட்டும் இருந்துகொண்டு ஒரு படத்தை மட்டும் வெளியிட்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு வேறு படங்கள் வெளிவரவிடாது தடுத்தவாறு திரை ஆக்கிரமிப்புச் செய்வதென்பது இந்த உலகமமயமாக்கல் சூழலின் யதார்த்தம் போலும்! இது பெருநிறுவனங்களை மட்டும் வாழவைக்கும் உத்தி மட்டும்தான்.

- ஒரு பந்தையத்தை ஆரம்பித்தால் போட்டியிடுபவர்கள் இருக்க வேண்டும். போட்டியிட விரும்புபவர்களை இணைக்க வேண்டும், இதைப் புறந்தள்ளியவாறு பந்தையத்திடலில் ஒருவர் மட்டும் ஈடுபட்டால்..... இதைக் காண உக்காந்திருப்போர் நெளியாமல் என்னதான் செய்ய முடியும்? ம்.... -பெருமூச்சு பொதுவானதுதான்!

சிவாஜியை ரசித்த மொரீஷியஸ் அதிபர்

சென்னைக்கு வந்துள்ள மொரீஷியஸ் அதிபர் அனீருத் ஜெகன்னாத் சிவாஜி படத்தைப் பார்த்து ரசித்தார்.

மொரீஷியஸ் அதிபர் ஜெகன்னாத் தனது குடும்பத்துடன் தமிழகத்திற்கு வந்துள்ளார். கோவையில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் கொடைக்கானல் சென்று ஒரு வாரம் தங்கி ஓய்வெடுத்தார்.

கொடைக்கானல் ஓய்வை முடித்துக் கொண்டு சென்னைக்கு தனது மனைவி சரோஜினி மற்றும் இரு மகள்களுடன் வந்தார் ஜெகன்னாத். வந்தவர் சிவாஜி படம் குறித்துக் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து படத்தைப் பார்க்க பிரியப்பட்டுள்ளார்.

அதைக் கேள்விப்பட்ட அபிராமி மெகாமால் அதிபர் ராமநாதன், தனது திரையரங்க வளாகத்திலேயே சிவாஜியைப் பார்க்க ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து ஜெகன்னாத் தனது மனைவி, மகள்களுடன் அங்கு வந்தார். அவரை ராமநாதனும், அவரது மனைவியும், அபிராமி மெகாமால் இயக்குநருமான நல்லம்மை ராமநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மொரீஷியஸ் அதிபரின் குடும்பம் சிவாஜியை ரசித்துப் பார்த்தது. பின்னர் படம் குறித்து ஜெகன்னாத் கூறுகையில், ரஜினிகாந்த்தின் ஸ்டைல்கள் என்னைக் கவர்ந்து விட்டன. படம் முழுவதையும் அனுபவித்து ரசித்தோம்.

உண்மையிலேயே ரஜினிகாந்த் ஒரு உலக சூப்பர் ஸ்டார். அவரது ஸ்டைல் மற்றும் வசன உச்சரிப்பு அத்தனை பேரையும் நிச்சயம் கவர்ந்திழுப்பதாக உள்ளது. சிவாஜி படம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது என்றாராம் ஜெகன்னாத்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவீடு மற்றும் மதிப்பீடு என்பவை நீட்டலளவை, கனவளவு, நிறை, பெறுமதி இவ்வாறாக அளவிடப்படுவது வழமைதான்.

சினிமாவை அதுவும் தரமான நல்ல சினிமா என்ற தெரிவிற்கு எந்த அளவுகொண்டு் மதிப்பிடுவதென்பதுவே இங்குள்ள கேள்வி?

இதில் தெளிவுற்று இருந்தால் சிவாஜி இவவ்வளவு பக்கம் தாண்டியிருக்காது!

இந்தியச் சினிமா இரசிகர்கள் தொடர்பாக எழுத்தாளரும் பொலீசு அதிகாரியுமான திலகவதி அவர்களது கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்-திலகவதி

ஜூலை 05, 2007 RSS

பழனி: சினிமா மோகத்தால், சீரழியும் இளைஞர்கள், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, படம் பார்க்க கால் கடுக்க தியேட்டர்கள் முன்பு காத்துக் கிடப்பது ஆகியவற்றை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் நேரத்தை செலவிட வேண்டும் கூடுதல் டிஜிபி திலகவதி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு திலகவதி பேசுகையில், சினிமாவும், டி.வி.யும் சேர்ந்து இன்றைய சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றது. இதன் மூலம் எந்த ஆங்கில ஆதிக்கம் வேண்டாமென்று நாம் சொன்னோமோ அது மீண்டும் நமது நாட்டில் வந்து விட வாய்ப்புள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள், சினிமா மோகம் கொண்டு அலைகின்றனர். எந்த சினிமா ரிலீஸ் ஆனாலும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு மாலை இடுவதும், பாலாபிஷேகம் செய்வதும், படத்தைக் காண டிக்கெட்டுக்காக கால் கடுக்க வரிசையில் நிற்பதுமாக சீரழிந்து வருகிறார்கள்.

திரைப்படங்கள் கவர்ச்சியைக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன. இதில் பெரும்பாலான இளைஞர்கள் நேரத்தை வீண் செய்வதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

திரைப்படங்கள் மூலம் வன்முறை, கொலை, கொள்ளை தான் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

குடும்ப நல ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, அநியாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, இளைஞர்கள் பகத்சிங், சேகுவாரா போன்ற தியாகிகளைப் போன்று, உண்மைக்காக போராட வேண்டும் என்றார் திலகவதி.

மூலம்: http://thatstamil.oneindia.in/news/2007/07...ilagavathy.html

யாழில் கொட்டப்படும் 'கருத்துகளை' காணுறும்போது யாழ் மட்டுறுத்துனர்களின் பணி மேலும் விரிவாக்கமடைய வேண்டுமென்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவீடு மற்றும் மதிப்பீடு என்பவை நீட்டலளவை, கனவளவு, நிறை, பெறுமதி இவ்வாறாக அளவிடப்படுவது வழமைதான்.

சினிமாவை அதுவும் தரமான நல்ல சினிமா என்ற தெரிவிற்கு எந்த அளவுகொண்டு் மதிப்பிடுவதென்பதுவே இங்குள்ள கேள்வி?

இதில் தெளிவுற்று இருந்தால் சிவாஜி இவவ்வளவு பக்கம் தாண்டியிருக்காது!

இந்தியச் சினிமா இரசிகர்கள் தொடர்பாக எழுத்தாளரும் பொலீசு அதிகாரியுமான திலகவதி அவர்களது கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்-திலகவதி

ஜூலை 05, 2007 RSS

பழனி: சினிமா மோகத்தால், சீரழியும் இளைஞர்கள், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, படம் பார்க்க கால் கடுக்க தியேட்டர்கள் முன்பு காத்துக் கிடப்பது ஆகியவற்றை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் நேரத்தை செலவிட வேண்டும் கூடுதல் டிஜிபி திலகவதி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு திலகவதி பேசுகையில், சினிமாவும், டி.வி.யும் சேர்ந்து இன்றைய சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றது. இதன் மூலம் எந்த ஆங்கில ஆதிக்கம் வேண்டாமென்று நாம் சொன்னோமோ அது மீண்டும் நமது நாட்டில் வந்து விட வாய்ப்புள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள், சினிமா மோகம் கொண்டு அலைகின்றனர். எந்த சினிமா ரிலீஸ் ஆனாலும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு மாலை இடுவதும், பாலாபிஷேகம் செய்வதும், படத்தைக் காண டிக்கெட்டுக்காக கால் கடுக்க வரிசையில் நிற்பதுமாக சீரழிந்து வருகிறார்கள்.

திரைப்படங்கள் கவர்ச்சியைக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன. இதில் பெரும்பாலான இளைஞர்கள் நேரத்தை வீண் செய்வதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

திரைப்படங்கள் மூலம் வன்முறை, கொலை, கொள்ளை தான் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

குடும்ப நல ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, அநியாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, இளைஞர்கள் பகத்சிங், சேகுவாரா போன்ற தியாகிகளைப் போன்று, உண்மைக்காக போராட வேண்டும் என்றார் திலகவதி.

மூலம்: http://thatstamil.oneindia.in/news/2007/07...ilagavathy.html

யாழில் கொட்டப்படும் 'கருத்துகளை' காணுறும்போது யாழ் மட்டுறுத்துனர்களின் பணி மேலும் விரிவாக்கமடைய வேண்டுமென்றே தோன்றுகிறது.

சும்மா அதிருதில்லலல..........CooL

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா.? படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டு களுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.டிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும் அரசு விலக்கு அளித்து விடும்.

நூறு ரூபாய் தந்து படம் பார்க்கச் சென்ற என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு சிவாஜி படம் தரும் செய்தி: கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்பது தான். இந்த ஒருவரிச் செய்தியைப் பிரமாண்டமான காட்சிகளில் தந்துள்ளது தான் இயக்குநர் ஷங்கரின் உழைப்பு. அவரோடு சேர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், வசன கர்த்தா எழுத்தாளர் சுஜாதா என ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள அந்தப் பிரமாண்ட சினிமாவில் கதை என்று எதுவும் இல்லை; ஆனால் சமூகத்திற்கான செய்தி இருப்பதாக பத்திரிகைகளும் படம் பார்த்த நடுத்தர வர்க்க மனிதர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் பொதுப்புத்தி

பொதுமக்களின் சராசரி மனநிலையுடன் ஒத்துப் போகும் ஒருவரிச் செய்தியைச் சினிமாவாக ஆக்க வேண்டும் என்றால் அதைக் கதையாக ஆக்க வேண்டும். அவ்வளவுதான். தமிழ்ச் சினிமாவிற்குள் செயல்படும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் ஒருவரிச் செய்திகளைக் கதையாக ஆக்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. அவர்களுக்குச் சிரமமாக இருப்பதெல்லாம் அந்தச் செய்தியைச் சொல்லப்போகும் கதாநாயக நடிகன் யார் என்பதும், அவனுக்கேற்ப கதைப்பின்னல்களையும் காட்சிகளையும் படப்பிடிப்பையும் எவ்வாறு அமைப்பது; எவ்வாறு படம் பிடித்துக் காட்டுவது என்பது மட்டும் தான் சிரமமான காரியங்கள். தமிழ் சினிமாவிற்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்குநரின் முக்கியமான வேலை எந்தச் செய்தியை எந்த நடிகன் வழியாகச் சொல்வது என்பதைத் தீர்மானிப்பது மட்டுமாகத் தான் இருக்கிறது. பெரும்பாலும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக் களையே படத்தின் செய்தியாக ஆக்கிக் காட்டுவதைத் திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்ப்பட இயக்குநர்கள். உண்மையான காதல் எல்லா நிலையிலும் வெற்றி பெறும் என்ற பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கை தான் தமிழில் எடுக்கப்படும் தொண்ணூறு சதவீதப் படங்களின் ஒரு வரிச் சொல்லாடல் அல்லது செய்தி. அதிலிருந்து மாறுபடுகிறவர்கள், அநீதிகளை அழிக்க நாயகன் ஒருவன் வருவான் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தருவது பெரும்பாலும் வெற்றிப்படச் சூத்திரமாக இருக்கிறது.

பொது வெளியில் கேள்விகளற்று நம்பப்படும் இத்தகைய நம்பிக்கையின் மாற்று வடிவங்களையே படத்தின் செய்திகளாக உருவாக்கிப் படம் எடுக்கும் இயக்குநர்கள், சொல்லப்படும் செய்தியின் பொருத்தப்பாட்டைப் பற்றி எப்பொழுதும் அக்கறை கொள்வதில்லை. அதனால் தான் தமிழில் வரும் வெற்றிப்படங்கள் தமிழர் வாழ்விலிருந்து விலகியே நிற்கின்றன. வாழ்க்கை சார்ந்த- சமூக இருப்பின் சூழல் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் போக்கில் அதன் பொருத்தப்பாடு சார்ந்த கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாமல் மரபான கருத்துக்களைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு கதை சொல்லும் உத்தியில் படம் எடுக்கும்போது திரைப்படம் அதன் அடிப்படை வரையறையான கலை அல்லது ஊடகம் என்பதிலிருந்து விலகித் ‘தொழில்’ என்ற வட்டத்திற்குள் நுழைந்து விடுகிறது.

தமிழின் வெற்றிகரமான இயக்குநர்களின் அடையாளம் என்பது அவர்கள் எந்தக் கதாநாயகர்களைக் கொண்டு ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைப் புதிய வடிவில் சொல்கிறார்கள் என்பதில் தான் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாச் செய்திகளையும் எல்லாக் கதாநாயகர்களும் சொல்லிவிட முடியாது என்ற தௌ¤வு தான் இயக்குநர்களை இங்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாயகன் வழியாகச் சொல்லும் செய்தி மனித உறவுகளின் புதிர்களில் அதிகம் பேசப்படாத ஒன்றாகவோ, ஏற்கெனவே இருந்த நம்பிக்கை மீது புதிய பரிமாணத்தில் கேள்விகளை முன் வைப்பதாகவோ இருப்பதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்று வெற்றிகரமான இயக்குநர்கள் விரும்புவதே இல்லை. அதற்காக தமிழ் வாழ்வின் வரலாற்றையோ, இருப்பின் பிரச்சினைகளையோ , சந்திக்கும் நெருக்கடிகளில் மனிதர்கள் எடுக்கும் முடிவின் காரணங்களையோ ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என அவர்கள் நினைப்பதும் இல்லை. அப்படி நினைக்காத வரை அவர்களிடமிருந்து தமிழின் வாழ்வைப் பேசும் கலைப் படைப்பான ஒரு சினிமா வரப்போவதுமில்லை.

ஷங்கரின் நகலெடுப்புகள்

இயக்குநர் ஷங்கர் தமிழின் வெற்றிகரமான இயக்குநராக தொடர்வது கூட பொதுப் புத்திசார்ந்த ஒரு வரிக் கதையை விரிவான பரப்பிற்குள் பின்னிக் காட்டுகிறார் என்பதால் மட்டும் தான். ஒரு சாதாரணக் குடும்பத்து மனிதனின் நியாயமான கேள்வி என்பதில் தொடங்கும் அவரது படங்கள், அந்த மனிதனை சுலபமாகத் தேச எல்லைக்குள் இறக்கி விட்டுப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதாகக் காட்டுகின்றன. முதல் படத்தில் (ஜெண்டில்மேன்) இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாகத் தகுதியும் திறமையும் மதிக்கப் படவில்லை; அதனால் தான் இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னதில் தொடங்கி, கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்று சொல்லும் சிவாஜி வரை இந்திய சமூகம் முன்னேறாமல் இருப்பதற்கான தடைகள் எவை என்பதைப் பற்றி விதம் விதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.

இந்தியனில் லஞ்சம் தான் தடை என்றார்; முதல்வனில் அதிகார வெறியும் அதைத் தக்க வைக்க எல்லாக் குறுக்கு வழிகளையும் பின் பற்றும் கட்சி அரசியலும் தான் காரணம் என்றார். அதையே கொஞ்சம் மாற்றி அந்நியனில் தனிமனிதர்களின் பொறுப்பின்மையும், ஒதுங்கி நிற்கும் மனநிலையும், காரணம் என்றார். ஒவ்வொரு படத்திலும் தடைகள் என வெவ்வேறு சீர்கேடு கள் சுட்டிக் காட்டப்பட்டாலும் அதைத் தீர்ப்பதற்கான வழியாக அவர் காட்டுவது ஒன்றே ஒன்றைத் தான். புத்திசாலித்தனமும் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து அடித்து நொறுக்கும் தனிமனிதனும் தான் அவரது தீர்வுப் பிம்பம். இந்த பிம்பம் நடைமுறை வாழ்க்கையில் காண இயலாத அசகாய சூரத்தனம் நிரம்பிய நாயகப் பிம்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கொடியவர்களை அழிக்க அவதாரம் எடுக்கும் நாயகர்களாக- தனிமனித வன்முறையில் முழுமையும் நம்பிக்கை கொண்ட இளைஞர்களைக் கதாபாத்திரங்களாக்கி , அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற நாயக நடிகர்களை நடிக்க வைப்பதன் மூலம் பார்வையாளனுக்குப் படம் பார்க்கும் போது ஒரு கனவுலகத்தைக் காட்டுவதில் தான் ஷங்கரின் வெற்றிக்கான சூத்திரம் இருந்து வந்துள்ளது.

அந்தக் கனவுலகம் யதார்த்த வாழ்க்கையில் உண்டாக்கக் கூடியதா? என்ற கேள்வி எழும்ப விடாமல் தடுக்கும் விதமாக நம்பகத்தகுந்த காட்சி அமைப்புகளும், பாடல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளையும் கலந்து தருவதிலும் ஷங்கர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். இந்த உத்திகள் ஷங்கரின் எல்லாப் படங்களிலும் இருந்தவைதான். ரஜினி நடித்துள்ள சிவாஜியிலும் அதே உத்திகள்; அதே நாயக பிம்ப உருவாக்கம்; அதே கதாநாயக நடிகையின் உடல் கவர்ச்சி எனத் தொடர்ந்துள்ளது. மொத்தத்தில் சிவாஜி புதிய படம் அல்ல; ஷங்கரின் முந்திய படங்களின் நகல் தான். அரைத்த மாவை திரும்ப அரைக்கும் வேலைக்கு இத்தனை கோடிகளும், இவ்வளவு காலமும், இவ்வளவு விளம்பரங்களும் எதற்கு என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இந்தக் கேள்வியோடு கறுப்புப் பணத்திற்கெதிரான இந்த படம் எத்தனை கோடி வெள்ளைப் பணத்தைக் கறுப்புப் பணமாக மாற்றப் போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ளலாம்.

சிவாஜி/ ரஜினியின் இரட்டை வேடம்

‘அரசாங்கத்திற்கு வரிகட்டாமல், தனிநபரிடம் சேரும் பணமே கறுப்புப் பணம்’ என ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நான் படித்தவன் இல்லை; எனக்கு இதுவெல்லாம் தெரியாது என்றெல்லாம் சொல்லி சட்டத்தின் பிடியிலிருந்து சாமான்யன் ஒருவன் தப்பித்து விட முடியாது. சம்பளம் மூலமாகவோ வியாபாரத்தின் வழியாகவோ தன்னிடம் சேரும் ஒவ்வொரு ரூபாயையும் ஒவ்வொரு தனிமனிதர்களும் கணக்கில் காட்டாமல் செலவழிக்கும் நிலையில் கறுப்புப் பணப் புழக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.அந்த வகையில் சிவாஜி படம் பார்க்க நான் தந்த நூறு ரூபாயில் ஐம்பது ரூபாய் கறுப்புப் பணமாக மாறி விடத்தான் போகிறது. ஆக சிவாஜி படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கறுப்புப் பணப் புழக்கத்திற்கு உதவியவர்களாக ஆகப் போகிறார்கள். ஆனால் சிவாஜி கறுப்புப் பணம் பற்றி வேறு விதமாகப் பேசுகிறது.

அரசதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்,அவர்களோடு கூட்டு வைத்திருக்கும் தாதாக்களும், அடியாட் களும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தைக் கறுப்புப் பணப் பொருளா தாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையின் மேல் ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, அந்தக் கறுப்புப் பணத்தையும் அதைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழும் கூட்டத்தையும் ஒழித்துக் கட்டி விட்டால் இந்தியா வல்லரசு நாடாக ஆகி விடும் எனச் சொல்கிறது சிவாஜி. அதைச் செய்து முடிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து மென்பொருள் பொறி யாளன் வடிவில் வருபவன் தான் சிவாஜி. சிவாஜியாக வந்து சூரத்தனத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்குப் போய்த் திரும்பவும் எம்.ஜி.ஆர் ( ஆர். என்பது ராமச்சந்திரனைக் குறிக்கும் ஆர் அல்ல; ரவிச்சந்திரனைக் குறிக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும் ) எனப் போலிப் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் தங்கி விடும் ஒரு என்.ஆர்.ஐ.யின் கதை இது.

சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையை உருவாக்கி, பல்கலைக்கழகம், தொழிற்சாலையென மக்களுக்குப் பயன்படும் நிறுவனங் களைத் தொடங்க அமெரிக்காவிலிருந்து வந்தவன் சிவாஜி. வந்தவன், இவற்றுக்குத் தடையாக இருக்கும் அரசதிகாரத்தையும் அதன் கூட்டணியையும் எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் கொண்ட பெண்ணைத் தேடித் திருமணம் செய்து கொள் வதையும் முக்கியமான வேலையாக வைத்துக் கொள்கிறான். சமூகத் தடைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமான வெளிப் பாட்டைக் காட்டும் சிவாஜி, மனைவியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நகைச்சுவை பாணியைக் கடைப்பிடிப்பானா என்ற கேள்வியை எல்லாம் பார்வையாளர்கள் எழுப்பிக் கொள்ளக் கூடாது. அப்படியான கதாபாத்திரத்தை உருவாக்குவது இயக்குநரின் விருப்பம் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தின் இரட்டை நடிப்புக்கு வாய்ப்பை உண்டாக்கும் நோக்கமும் கொண்டது என்று பதிலை உருவாக்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

கோயிலுக்குப் போகும்போது மட்டும் பாவாடை, தாவணியில் வரும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டுப் பெண்ணோடு (ஸ்ரேயா என்னும் தமிழ் பேசத் தெரியாத நடிகை) நாயகன் ஆட்டம் போடும் இடங்கள் தமிழ்நாட்டின் தர்மபுரியோ, தச்சபட்டியோ அல்ல என்பதைக் கவனித்து விட்டு இன்னொரு கேள்வியையும் கேட்கக் கூடாது. ஆஸ்திரேலியா, ஸ்பெயின், எகிப்து எனப் பல நாடுகளின் பின்னணியில் தமிழ்ப் பண்பாட்டுக்குச் சற்றுப் பொருந்தாத ஆடைகளுடனும், ஒப்பனைகளுடனும் குதியாட்டம் போடும் நாயகனுக்குத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தோடு கூடிய பெண் எதற்கு என்று கேள்வி கேட்பதையும் தவிர்த்து விட வேண்டும்.

இவையெல்லாம் ஷங்கர் தனது படங்களில் கடைப்பிடிக்கும் உத்தி என்பதாக எடுத்து கொள்ள வேண்டும். அந்த உத்திகள் எதற்காகப் பயன்படுகிறது என்ற கேள்வியை வேண்டுமானால் மனதிற்குள் கேட்டுப் பதில்களைத் தேடிக் கொள்ளலாம். ஷங்கர் இயக்கும் படங்களில் கனவையும் நடப்பையும் கலந்து ஒருவித நம்பகத்தன்மையை உண்டாக்கும் காட்சிகள் இந்த நாயகிகள் வரும் காட்சிகள். நாயகனின் வன்முறையான இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அவனைக் காதலிப்பதும், கனவில் சஞ்சரிப்பதும் மட்டும் தான் அவர்கள் வேலை. நாயகிகள் மட்டும் அல்ல; நாயகிகளைத் தன்னோடு இணைத்துப் பொய்க்கனவுகள் காணும் பார்வையாளத் தமிழ் இளைஞனும், அந்த நாயகியின் இடத்தைத் தன்னுடைய இடமாகப் பாவித்துக் கொள்ளும் பார்வையாளத் தமிழ்ப் பெண்களும் கூட அந்தக் கனவுலகில் சஞ்சரிக்கும்படி தூண்டப்படுகின்றனர் என்ற பதிலை நமக்குள் சொல்லிக் கொள்ளலாம்.

ஷங்கரின் அரசியல் தளமும் உள்நோக்கங்களும்

தாராளமயப் பொருளாதாரத்தின் விளைவாக நடந்துள்ள மாற்றத்தால் இந்திய இளைஞர்கள் அமெரிக்க போன்ற நாடுகளில் ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். (கல்யாண வயதிற்கு முன்னால் ஓர் மென்பொருள் பொறியாளன் அமெரிக்காவில் 200 கோடியெல்லாம் சம்பாதிக்க முடியாது என்று தர்க்கம் சார்ந்த கேள்வி யையும் கேட்கக் கூடாது) அதை இந்தியாவில் நியாயமான முதலீடாக ஆக்கிச் சமூக மாற்றத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள அரசமைப்பின் நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளும் அதற்குத் தடைகளாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டைப் படம் முக்கியமான கருத்தாக வைக்கிறது. தாராளமயப்பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டபின்னும் பழைய அனுமதி நடவடிக்கைகள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வாதம் பெரும் முதலாளிகளின் வாதம் தான்.

இந்த வாதத்தில் உண்மைகள் இல்லாமல் போய்விடவில்லை.தனியார் மயத்தை ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக அதை நம்பாமல் பின்வாங்கும் சறுக்கல்கள் இன்றைய ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கிறது. அதை விமரிசனம் செய்யும் உரிமை படைப்பாளிகளுக்கு உண்டு. மாற்று வதற்கான வழிமுறைகள் என்ன என்று அடையாளம் காட்டும் வேலை யையும் , அரசியல் சிந்தனை சார்ந்த கருத்தியலையும் ஒரு படைப்பாளி முன் வைக்கலாம். அந்த முன் வைப்பு அவரது நிலைப்பாடு சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் விவாதிக்கத் தக்கதுதான். குரு படத்தில் மணிரத்னம் அதைத் தான் செய்திருந்தார். மணிரத்னம் முன் வைத்த அந்தக் கருத்து இந்திய மக்களின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற போதிலும் கலைஞனின் நம்பிக்கை என்ற நிலையில் விவாதிக்கத் தக்கது. அப்படியான முன் மொழிதலை ஷங்கர் எப்பொழுதும் செய்ததே இல்லை; அப்படிச் செய்யாமல் தனிமனித சாகசத்தை எல்லாப் படங்களிலும் தீர்வாகக் காட்டுவதனால் தான் ஷங்கரின் படங்களைக் கனவுகளின் உற்பத்திச் சாலை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

‘இந்தியாவிற்கு ஜனநாயகம் எல்லாம் ஒத்து வராது; நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் தேசப்பற்று கொண்ட சர்வாதிகார ஆட்சி தான் ஏற்றது’ என்பது பொதுப் புத்தி சார்ந்த ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையைத் தான் தனது படங்களின் அடிப்படைக் கருத்தாக வைத்துக் கொண்டு படம் எடுப்பவர் ஷங்கர். இந்தக் கருத்தை முன் வைத்து விட்டு, தடையாக இருக்கும் சக்திகள் எவையென அடையாளப்படுத்திக் காட்டி, அவற்றைத் தனது அசகாய சூரத் தனத்தால் கதாநாயகன் நொறுக்கித் தள்ளித் தனது இலட்சியத்தை அடைந்தான் எனத் தொடர்ந்து படம் எடுத்துக் கனவுகளாக விற்றுக் கொண்டு இருப்பவர். அந்த வியாபாரத்திற்கு ஒவ்வொரு படத்திலும் அவர் மாற்றும் சரக்கு நாயகர்களும் , நாயகிகளும் மட்டும் தான்.

‘‘கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும்; அதற்குத் தனது சாகசத்தின் மீதும் புத்தி சாலித்தனத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட சிவாஜி போன்றவர்கள் தேவை ’’ என்ற செய்தியைச் சொல்ல ரஜினிகாந்த் என்ற வேகமாக ஓடும் குதிரை மீது, ஷங்கர் என்கிற பயிற்சியாளரை நம்பி ஏ.வி.எம். என்ற தயாரிப்பு நிறுவனம் கட்டிய பணம் ஐம்பதிலிருந்து அறுபது கோடிகள் வரை இருக்கலாம் எனப் பத்திரிகைகள் சொல்கின்றன. இம்மூவருமே ஒரு வகையில் பிரபலமான பிம்பங்கள் தான். இவர்களை வைத்து இந்தச் செய்தியைச் சொன்னாலும் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஷங்கருக்கு எழுந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் சொல்லும் செய்தி பழையது. நாடகத்திலும் திரையுலகத்திலும் ‘கிளிஷே’ என்று அழைக்கப்படும் வகையான நகலெடுப்பு அது . இந்தச் சந்தேகத்தால் தான் ஷங்கர் தனது பழைய சரக்கின் ஊடாக புதுவகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துள்ளார். அப்படிச் சேர்த்துள்ள புதுவகை வாசனைப் பொருட்களாவது புதுமையானதா என்றால் அதுவும் கூட இல்லை.

பட்டிமன்றப் புகழில் வளம் வந்த சாலமன் பாப்பையாவையும் அவரது கூட்டாளி ராஜாவையும் மசாலாவில் சேர்க்கப்பட்ட சரக்குத் துகள்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் முறையே இந்தப் படத்தின் நாயகியின் பக்கத்து வீட்டுக்காரராகவும் நாயகியின் அப்பாவாகவும் நடிக்க வைக்கப் பட்டதின் நோக்கம் என்ன? பட்டிமன்றப் பிரபலம் வெற்றிக்கு உதவக்கூடும் என்பதைத் தாண்டி இன்னொரு நோக்கம் இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. படத்தில் கறுப்பு நிற மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளு வதோடு கறுப்பு நிறப் பெண்களைக் கேலிக் குரியவர் களாகக் காட்டுவதைத் திசை திருப்பும் உத்தியாகக் கூட இருக்கலாம்.கறுப்பு நிறத்தை வைத்து வெற்றி பெற்ற ஊடகப் புகழ் பிம்பமான பாப்பையாவைக் கொண்டே கறுப்பு நிறப் பெண்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் போது யார் கேள்வி எழுப்பப் போகிறார்கள்? விவரம் தெரிந்த சாலமன் பாப்பையாவே பிரமாண்ட சினிமா வுக்குள் தலையைக் கொடுத்து விட்டால் அப்பாவியாகத் தான் இருக்க முடியும் போலும்.

அதே போல் இந்தப் படம் சேரி மனிதர்களாகக் காட்டப்படும் அடியாட்கள் பற்றிய பார்வையிலும், பன்னாட்டுப் பணத்தை கள்ளத் தனமாகக் கடத்து வதில் முஸ்லீம்கள் கைதேர்ந்தவர்கள் எனக் காட்டும் போதும் உள்நோக்கத் தோடு செயல்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். சேரியில் வாழும் உடல் வலிமை கொண்டவர்கள் எப்பொழுதும் அடியாட்களாக இருக்க மட்டுமே லாயக்கானவர்கள். அவர்களுக்குத் தேவை பணம். நோக்கத்தையோ விளைவு களையோ பற்றிக் கவலைப் படாமல் பணத்திற்காக மட்டுமே மாறி விடக்கூடிய மனம் படைத்தவர்கள் நகரத்துச் சேரி மனிதர்கள் என்கிறது இந்தப் படம். ஆனால் இன்றுள்ள சேரி மனிதர்களின் அரசியல் பாத்திரம் அத்தகைய பரிமாணத்தைத் தாண்டி தனி அடையாளத்தோடு அணி திரண்டு கொண்டிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் நிகழ்கால அரசியல் பார்வை இயக்குநருக்கும் வசனகர்த்தாவுக்கும் இல்லாமல் போனது உண்மையா.? அல்லது இருட்டடிப்பா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

ஒரு பழைய நினைவு

கறுப்புப் பணப் புழக்கத்திலேயே உயிர் வாழும் பல தொழில்கள் இந்தியாவில் இருக்கிறது என்றாலும் இந்தியசினிமா தான் தொண்ணூறு சதவீதம் கறுப்புப் பணத்தில் இயங்கி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் தொழில.¢ கறுப்புப் பணப் புழக்கத்தில் மட்டும் அல்ல, தனிமனித வாழ்வு சார்ந்த அறவியல், ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் விதிமீறல் களை மட்டுமே தங்களின் அடிப்படை நியதிகளாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர் களின் கூடாரம் தமிழ் சினிமா உலகம். இதை அதற்குள் ஏதாவது ஒரு வேலை காரணமாக நுழைந்து விட்டுத் திரும்பும் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். பால், வயது, நிறம், மதம், சாதி, பொருளாதாரம் என வேறுபாடுகள் காட்ட வாய்ப்புள்ள நிலைகளில் அதைத் தள்ளி வைத்து விட்டு மனிதர்களை மனிதர்களாக நடத்துவதற்கான பொது நியதிகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதை ஏராளமான உதவி இயக்குநர்களின், துணை நடிகைகளின், தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் கதைகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதுதான் இந்தத் தமிழ் சமூகத்திற்குத் தேவையான கருத்தை- சமூக மேம்பாட்டுச் செய்தியைச் சொல்லும் ஊடகமாகவும் கலையாகவும் நம்பப்படுகிறது என்பதும் நகைமுரண்தான்.

சினிமா என்னும் தொழிற்சாலை எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதை அறிய விரும்பினால் சுஜாதா எழுதிய கனவுத் தொழிற்சாலை நாவலை நீங்கள் படிக்க வேண்டும்.ஆம் சிவாஜி படத்திற்கு வசனம் எழுதியுள்ள சுஜாதாதான் அந்த நாவலையும் எழுதியவர்.இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே சினிமாவை தொழிற்சாலை எனச் சரியாகக் கணித்து பாராட்டுக் களையும் பெற்றவர். நாவலாசிரியர்சுஜாதா அப்பொழுது பாராட்டப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.கலையாகவும், ஊடகமாகவும் இருக்க வேண்டிய சினிமா, கனவுகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக ஆகி விட்டதே என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது; கோபம் இருந்தது; அதன் வழியாக ஒரு சமூகப் பொறுப்புள்ள மனிதனாகவும் எழுத்தாளனாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. அப்படியான அடையாளம் அனைத் தையும் தொலைத்து விட்டு அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான அடிப் படைக் கச்சாப் பொருளை உற்பத்தி செய்து தரும் நோய்க் கிருமிகளுடன் அவரும் ஐக்கியமாகி வி¢ட நேர்ந்து விட்டதுதான் தமிழ் சினிமாவின் முரண் வளர்ச்சி போலும்.

25-06-07

http://ramasamywritings.blogspot.com/2007/...og-post_26.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி

ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் தொடரும் விஷமத்தனம்

- தேவிபாரதி

லோகத்தில் எப்பொழுதெல்லாம் அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஷங்கரின் கடவுள் அவதாரமெடுக்கிறார். அதர்மத்தை அதர்மத்தால் முறியடித்துத் தர்மத்தை நிலைநாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார். அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம் போன்ற நாயகர்களின் வடிவில் முந்தைய யுகங்களில் மனிதனுக்குரிய குணாம்சங்களோடு அவதரித்த ஷங்கரின் கடவுள் இப்பொழுது நேரடியாகக் கீழே வந்து தன்னுடைய ரசிகர்களுக்கு 'விஸ்வரூபதரிசனம்' தந்திருக்கிறார். முந்தைய யுகங்களின் அதர்மக்காரியங்களுக்கும் 'சிவாஜி' யுகத்தின் அதர்மக்காரியங்களுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அதர்மத்தைத் தூண்டும் இந்த யுகத்தின் அசுரர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை நீட்டும் சாதாரண அரசு ஊழியர்களோ பெட்டிக் கடைக்காரர்களோ தெருச் சுற்றிகளோ அல்லர். கல்வி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து வரம்பே இல்லாமல் கொள்ளையடிக்கும் பகாசுரன். அவனுடைய சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்று கொண்டிருக்கிறது அரசாங்கம். காசிமேட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிசேஷன் என்னும் அந்த அசுரனை அழிக்க, சாஃப்ட்வேர் இன்ஜினியரின் ரூபத்தில் அமெரிக்காவிலிருந்து டாலர் மூட்டைகளுடன் வந்திறங்குகிறார் கடவுள்.

அவனைச் சும்மா போகிறபோக்கில் வதம் செய்துவிட முடியுமா? அதற்காகத்தான் ரஜினி தேவைப்படுகிறார். ஏ.வி.எம். என்னும் பெருமுதலாளியின் முதலீடு தேவைப்படுகிறது ஷங்கருக்கு. ரஜினி ஏற்கனவே தமிழக விளிம்பு நிலை மனிதர்களின் கடவுள். அவரை எல்லோருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான 'திருப்பணி'களை ஊடகங்களின் துணையோடு மேற்கொண்டது ஏ.வி.எம். நிறுவனம். சி.என்.என். ஐ.பி.என்., டைம்ஸ்நௌ, என்.டி.டி.வி. போன்ற ஆங்கிலச் செய்தி சானல்களின் உபயத்தால் ரஜினி இப்பொழுது இந்திய நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற

செத்த கழுதையை சிங்கம் சாப்பிடுமா?

இரையை ‘ஃப்ரெஷ்’ ஆக அடித்துச் சாப்பிடு-வதுதான் சிங்கங்களுக்குப் பிடிக்கும். காலில் அடிபட்டு, நோய்வாய்ப்பட்டுப் பட்டினி கிடக்கும் சிங்கம், வேறு வழியில்லாமல் செத்த

கழுதையைச் சாப்பிடக்கூடும். ‘சிவாஜி’ படத்தில் ஒரு வசனம்... ‘பன்னிங்கதான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளாதான் வரும்!’ என்கிறார் ரஜினி. உண்மையில், சிங்கம் கூட்ட-மாகத்தான் வாழும்; கூட்டமாகத்தான் சென்று வேட்டை-யாடும். A Pride of Lions என்கிறோம். சிறுத்தைதான் சிங்கிளா வரும்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பழிவாங்கினாரா ரஜினி?

‘ஸ்டைல்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் கான்வென்ட் குழந்தையாகட்டும், காம்பஸ் இன்டர்வியூக்கு காத்திருக்கும் மாடர்ன் கேர்ள் ஆகட்டும்-& ‘ரஜினி’ என்று பளிச்சென்று பதில் சொல்வார்கள். ‘சிவாஜி’ படத்தில் ரஜினி செய்யும் ஸ்டைல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்ப... அதில் தற்போது தமிழகமே மயங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில், ‘சிவாஜி’யில் ரஜினி செய்த ஸ்டைல்கள் மொத்தமும் கிராஃபிக்ஸ்தான்’ என்று பீட்டர் என்பவர் ஜெயா டி.வி&யில் பேட்டி கொடுக்க... பிரச்னை ‘அதிருதில்ல’ ரேஞ்சுக்கு பற்றிக் கொண்டிருக்கிறது.

பேட்டி கொடுத்த பீட்டர்தான் ‘சிவாஜி’ படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலைகளைச் செய்தவர். இவர் இப்படி பேட்டி கொடுத்ததால் பிரசாத் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த அவர் வேலையிலிருந்து இப்போது விலக்கப் பட்டிருக்கிறார்.

பீட்டர் வேலைக்கு உலைவைத்தது ரஜினியின் கோபம் தான் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்புப் கிளம்பியிருக்கிறது.

இதுபற்றி கோலிவுட்டில் விசா ரித்தபோது பீட்டர் விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள் சிலர் நம்மிடம், ‘‘ ‘சிவாஜி’ படம் ரீலீஸ§க்குத் தயாரானபோதே அந்தப் படத்தை வர்த்தக ரீதியா சக்சஸ் செய்ய, படத்தைப் பற்றிய விஷயங்களை படத்துல வேலை செஞ்சவங்களே பேசற மாதிரி மீடியாவுக்காக பல நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டது. அந்த வகையில் ஒரு சில மீடியாக் கள் தாங்களாகவே ‘சிவாஜி’ டெக்னீ ஷியன்களை அழைத்து புரோக்ராம் செய்தார்கள். அப்படித்தான் ஜெயா டி.வி&யில் ஒலிபரப்பாகி வரும் ‘ஸ்டார்ஸ் உங்களுடன்’ நிகழ்ச்சிக்காக ‘சிவாஜி’&யின் டெக்னீ ஷியன்களை அழைச்சு நிகழ்ச்சி நடத்தினாங்க. அதுல படத்தோட கிராஃபிக்ஸை வடிவமைச்ச பீட்டர், படத்தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குநர் தோட்டா தரணி போன்றோர் பங்கெடுத்துக்கிட்டாங்க. இவங்க மூணு பேரும் படத்துல தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. அப்பதான் பீட்டரும் கிராஃபிக்ஸ்தான் படத்துக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்துச்சுன்னு கொஞ்சம் அழுத்தமா சொல்லி தன் தரப்பைப் பேசினாரு. இதுதான் ரஜினிக்கு எரிச்சலை ஏற்படுத்திடுச்சுன்னு சொல்றாங்க.

‘எல்லா வகையிலும் ரஜினி ஸ்டைல் பண்ணிட்டார். அவரோட ஸ்டைலில் மாஸ்டர் பீஸ் எதுன்னா சிகரெட்டை வாயில் தூக்கிப் போடறதும், கறுப்புக் கண்ணாடியைக் சுழட்டியபடியே முகத்துக்குக் கொண்டு போறதும்தான். இது முழுக்க முழுக்க ரஜினி தன்னிச்சையா செஞ்சது. இதுக்கு இணையாவும், அதை விட நாவல்ட்டியாவும் ரஜினிக்கு ஒரு ஸ்டைல் வேணும்னு ரஜினி, இயக்குநர் ஷங்கர்னு முக்கியமானவங்க முடிவெடுத்ததுதான் படத்துல ரஜினி காயின் போடறதும், பபுள்கம்மை வாயில் போடுவதும். இது ரெண்டுமே முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ்ல பண்ணினது’ங்கறதுதான் பீட்டர் பேசுன விஷயத்தோட சாராம்சம்.

பீட்டரோட பேட்டியைப் பார்த்துட்டு கொதிச்சுப் போன ரஜினியோட நட்பு வட்டாரம் விஷயத்தை அவரோட கவனத்துக்கு கொண்டு போயிருக்கு. ‘என்ன இப்படியெல்லாம் பேசறாரு.இதுவரைக்கும் சினிமாவுல நான் செஞ்ச ஸ்டைல் எல்லாமே கிராஃபிக்ஸ்தாங்கற மாதிரியான அர்த்தம் வந்துடுச்சே’ன்னு நண்பர்களிடம் வருத்தப்பட்ட ரஜினி, உடனே பிரசாத் நிர்வாகத்துக்கு போன் போட்டு தன் மன வருத்தத்தைச் சொல்லியிருக்காரு. அதன் விளைவு தான் பீட்டரை பிரசாத் நிர்வாகம் வேலையை விட்டுத் தூக்கிடுச்சு. ‘எதுக்கு வேலையை விட்டு போகச் சொல் றீங்கன்’னு பீட்டரும் கேட்கலை. கிராஃபிக்ஸ்ல அவரு திறமைசாலி. இந்த இடம் இல்லைன்னா வேற இடம்னு போயிட்டார்.

அவர் சார்பா சினிமா வட்டாரத் துல ஒரு அமைதிப்புரட்சியே நடந்துக்கிட்டிருக்கு. யதார்த்தத்தை சொன்னதுக்காக ஒருத்தனுக்கு தண்டனை கொடுக்கறது சரியாங்கற கேள்வி கோடம்பாக்கத்துல ஒலிக்கத் துவங்கியிருக்கு’’ என்றார்கள்.

இது தொடர்பாக பீட்டரிடம் பேச முயன்றோம். ‘‘அவரு யாருகிட் டயும் பேசற சூழ்நிலையில இல்லை’’ என்று அவரது நண்பர்கள் சொன்னார்கள். பீட்டருடன் ஜெயா டி.வி. நிகழ்ச்சி யில் பங்கு பெற்ற ‘சிவாஜி’ படத்தின் படத்தொகுப்பாளர் ஆண்டனியிடம் பேசினோம். ‘‘படத்துல நானும் பீட்டரும் ஒண்ணாத்தான் வேலை பார்த் தோம். கிராஃபிக்ஸ் சம்பந்தப்பட்ட வேலைகளை ரொம்ப சின்ஸியரா செய்தாரு. அதைப் பத்தி டி.வி&யில பேசுனதுக்காக அவரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னு சொல்றாங்க. இதுல எவ்வளவு தூரம் உண்மையிருக்குன்னு தெரியலை. ஆனா ரெண்டு நாளா பீட்டரைப்பத்திதான் எல்லோரும் பேசிக் கிட்டிருக்காங்க’’ என்றார்.

பிரசாத் ஸ்டூடியோ தரப்பை அறிய அவர்களையும் தொடர்பு கொண்டோம். நிர்வாகப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் பேசினார். ‘‘ ‘சிவாஜி’ படத்துக்காக எங்க ஸ்டூடியோவின் மிகப் பெரிய கிராஃபிக்ஸ் டீம் கடுமையா உழைச்சுது. அந்த உழைப்பின் பலன் படத்தோட வெற்றியில தெரியுது. அந்த டீமில் இருந்த ஒருவர்தான் பீட்டர். இப்போ அவர் எங்ககிட்ட வேலை செய்யலை. எந்தக் காரணத்துக்காக அவர் வெளியேற்றப்பட்டார்ங்கறதைச் சொல்லும் அதிகாரம் எனக்கில்லை. அதைச் சொல்லும் அதிகாரம் படைச்ச வங்க ஊர்ல இல்லை. ரஜினிசார் போன் பண்ணித்தான் பீட்டரை வேலையை விட்டுத் தூக்கினோம்ங்கறது அப்பட்டமான பொய். அடுத்து பீட்டரோட பேட்டியைப் பார்த்து அவர் கோபமடைஞ்சார்ங்கறதும் நம்பும் படியா இல்லை’’ என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

ரஜினியின் தரப்பை அறிய அவரது நட்பு வட்டாரத்தில் பேசினோம். ‘‘பிரபலம் என்றாலே பிராப்ளம்தான் சார். ரஜினிசாரைச் சுத்தி விதவிதமான வதந்திகள், விவகாரங்கள்னு கிளம்பிக் கிட்டே இருக்கு. அதுல எல்லாம் எவ்வளவு உண்மையிருக்குன்னு யாரும் பார்க்கறதில்லை. சினிமாவுல லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை பயன் படுத்துறது அவருக்கு பிடித்தமான விஷயம். அந்த டெக்னாலஜிகளைப் பயன்படுத்தித்தான் அவரைப் படத்துல சிவப்பாவும், ஃபிரஷ்ஷாவும் காட்டியிருந்தாங்க. படத்துல ரஜினியை எப்படி சிவப்பாக்கினோம்னு படத்தோட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் வெளிப்படையாவே பேசுனாரு. படத்துல வேலை செஞ்ச எல்லோரும் பேசிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா பீட்டர் மட்டும் அப்படிப் பேசியதால் பழிவாங்கப் பட்டார்னு சொல்றதை எங்களால ஏத்துக்க முடியாது’’ என்றார்கள்.

நன்றி விகடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.