Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply

சிவாஜி ரெயிலர்

எனக்கு V.I.P சீட்..

உலகளாவிய விளம்பர உரிமையை வாங்கியுள்ளேன்.... :lol:

100 % வியாபாரி :P

அது வேற இரும் டங்குட்ட போட்டு கொடுகிறேன்

:P

அது வேற இரும் டங்குட்ட போட்டு கொடுகிறேன்

:P

யாரவர் :P

யாரவர் :P

அவரை தெறியாதோ அவர் தான் :lol::lol:

Edited by Jamuna

சிவாஜி ரெயிலரப்பார்க்க படம் எப்பிடி இருக்குமென்றால்

கத்தரிக்காய்(பாட்ஷா) புசணிக்காய் (மன்னன்) பருப்பு (படையப்பா) இல்லாம் போட்ட ஒரு சாம்பாராக இருக்கும்

சிவாஜி ரெயிலரப்பார்க்க படம் எப்பிடி இருக்குமென்றால்

கத்தரிக்காய்(பாட்ஷா) புசணிக்காய் (மன்னன்) பருப்பு (படையப்பா) இல்லாம் போட்ட ஒரு சாம்பாராக இருக்கும்

அண்ணா பப்படம்,ஊருகாய்,தயிரும் இருந்தா குலைத்துவிட்டு சாப்பிட நல்லா இருக்கும்

:P

  • தொடங்கியவர்

யாரவர் :P

அதுதானே யாரவர்?

அவரை தெறியாதோ அவர் தான் :lol::lol:

ஓ சோமாலியா புலனாயா? :lol:

'சிவாஜி' 15-ம் தேதி ரிலீஸாகிறது. 'சிவாஜி'யை ஏ.வி.எம். தயாரித்துள்ளது. சந்தேகமில்லாமல் பிரமாண்டமான படம். கோடிகளை கொட்டியிருக்கிறது ஏ.வி.எம். காரணம், நம்பிக்கை! ரஜினி, ஷங்கர், ஏர்.ஆர். ரஹ்மான் காம்பினேஷனில் எவ்வளவு பணம் கொட்டினாலும் லாபம் பார்க்க முடியும். பிறகு, புகழ்! ஜெமினியின் 'சந்திரலேகா' அளவுக்கு பெயர் செல்லும் பிரமாண்டம் ஏ.வி.எம்.முக்கு தேவை. 'சிவாஜி' அதற்கும் கியாரண்டி!

ரஜினிக்கோ இந்தியாவில் எந்த நடிகரும் வாங்காத சம்பளம் கிடைத்திருக்கிறது. ஷங்கருக்கும் அப்படியே!

'சிவாஜி' சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புகழும், நிச்சயம். சரி, பாலபிஷேகம் செய்யும் ரசிகர்களுக்கு? செலவு மட்டும்தான்.

தென்காசி ரஜினி ரசிகர்களுக்கு செலவு இன்னும் அதிகம். பொதுவாக ரஜினியின் பிறந்த நாளான டிச. 12 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசலிப்பார்கள். (பொண்டாட்டி தாலியை அடகு வைத்தாவது!) தென்காசி ரசிகர்கள் இதிலும் அட்வான்ஸ். ரஜினி பட ரிலீஸ் அன்று அதாவது ஜுன் 15 பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் பிறக்கும் அவ்வளவு பேருக்கும் மோதிரம் அணிவித்தால் கிழிந்து விடும். அதனால் தங்க மோதிர ஆஃபர் தென்காசி அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு மட்டும்!

சரி, உங்களுக்கு என்ன சந்தேகம்? மோதிரம் பரிசளிப்பவர்கள் எத்தனைபேரின் குழந்தைகள் தங்க மோதிரம் போட்டிருக்கிறார்கள் என்றா? அட, அதையெல்லாம் பார்த்தால் ஐம்பது அறுபது கோடியில் படம் எடுக்க முடியுமா?

:lol::lol::lol::lol::o

சண்TV சிவாஜி பட பாடல்

ஓ சோமாலியா புலனாயா? :lol:

:lol: :P

அண்ணா பப்படம்,ஊருகாய்,தயிரும் இருந்தா குலைத்து :விட்டு :lol: சாப்பிட நல்லா இருக்கும்

:P

ஜம்மு பேசாமல் உமது பெயரை ஜிம்மி என்று மாற்றிவிடும். :P :P

ஜம்மு பேசாமல் உமது பெயரை ஜிம்மி என்று மாற்றிவிடும். :P :P

எண்கணிதபடி ஜம்மு தானாம யாழுக்கு பொருத்தமாம் அப்ப தான் பெரிய ஆள் ஆகலாம் சில பேரை கிழிகலாம் என்று ஜோசியர் சொன்னவர்

:P

அடிக்கடி முருங்கை மரத்தைப்பற்றி கதைச்சு முந்தானை முடிச்சை ஞாபகப் படுத்துறீங்கள்.

சினிமா என்னும் குப்பையை தெரிஞ்சோ தெரியாமலோ நாம் கூட்டித்தான் ஆகவேண்டும்.

எம்டன் என்பது தமிழில் பேச்சு வழக்கிலுள்ள சொல். அதன் அர்த்தம் ஏமாற்றுப் பேர்வழி என்பதே. ஆனால் எம்டன் மகன் திரைப்படப் பெயருக்கும் எம்டன் எனும் ஜேர்மன் கப்பலின் பெயருக்கும் எப்படிச் சம்பந்தம் வரும் என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா?? :lol::icon_idea:

எமுடன் என்பது காரண பெயர்.

அதாவது இராண்டாம் உலகப் போரின் போது இந்த நீர்முழுகி கப்பல் இந்திய பெருங்கடலில் கண்ணாமூச்சி ஆட்டங்களின் மூலம் பல தாக்குதல்களை நடத்தியதால். ஏமாற்றுபவர்களை இப்படி அழைப்பது வழக்கமாக ஆகிவிட்டது.

கொசுரு. இது கப்பலின் பெயரா?அல்லது மாலுமியின் பெயரா? தெரிந்தவர்கள் கூறவும்.

ஓஓ இதுக்காகத்தான் எல்லாரும் முருங்கை மரத்தில் ஏறுறங்களா? :D

சிவாஜி படத்துக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கிவிட்டது. சென்னையில் டிக்கெட் விற்பனையில் மாபெரும் சாதனையும் நிகழ்த்தப்பட்டுவிட்டது.

சென்னையில் மொத்தம் 17 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது. இன்று நடந்த முன் பதிவில் இந்த 17 தியேட்டர்களிலும் ரூ. 1.70 கோடிக்கு டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாம்.

இதற்கிடையே சிவாஜி பட ரிலீஸையொட்டி சொந்த ஊரான பெங்களூரில் ரஜினி குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

கர்நாடகத்திலிருந்து வெளியாகும் பிரபல நாளிதழான விஜய் கர்நாடகா சார்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் மகேஷ் தேவிஷெட்டி நூலை எழுதியுள்ளார்.

ரஜினியின் சிறு வயது சம்பவங்கள் முதல் லேட்டஸ்ட் நிகழ்ச்சி வரை இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் நெருங்கிய நண்பர்களான கர்நாடகத்தைச் சேர்ந்த ராஜ் பகதூர், ரகுநந்தன், துவாரகீஷ் ஆகியோரின் பேட்டிகளும் இதில் உள்ளன.

ரஜினிக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள நட்பு, ரஜினியின் குணாதிசியங்கள் உள்ளிட்டவற்றை மகேஷ் நூலில் விவரித்துள்ளார்.

மொத்தம் 132 பக்கங்களைக் கொண்டதாக இந்த நூல் உள்ளது. பெங்களூர் தியேட்டர்களில் ரஜினி எப்படி படம் பார்க்க வருவார், அப்போது அவர் செய்யும் குறும்புகள், மாறு வேடத்தில் நண்பர்களுடன் பெங்களூர் நகரைச் சுற்றி வருவது உள்ளிட்டவை சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளன.

இந்த நூல் கன்னடம் தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசமா போச்சு

இந்த நூல் கன்னடம் தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம

இன்று இரவே சிவாஜி...

ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ

சிவாஜி படத்தின் முதல் காட்சி நாளை அதிகாலை 3 மணிக்கு திரையிடப்படுகிறதாம். ரசிகர்களுக்காக இன்று இரவு 9 மணிக்கு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில், பெரும் எதிர்பார்ப்பு சிவாஜிக்கு ஏற்பட்டுள்ளது (அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளது).

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் ெகாண்டுள்ள சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி படு விறுவிறுப்பாக போய்க் ெகாண்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ. 1.70 கோடியை வசூல் செய்து முன்பதவில் சாதனை படைத்துள்ளது சிவாஜி.

எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் அதிக அளவிலான தியேட்டர்களில் திரையிடப்படும் படம் என்ற பெருமையும் சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகர்களில் மட்டும் 24 தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது. நாளை காலை முதலே படம் திரையிடப்படவுள்ளது. முதல் நாளின் முதல் காட்சி அதிகாலை 3 மணிக்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நாளை அதிகாலை 3 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறதாம். இதுகுறித்து தியேட்டர் மேலாளர் முனி கண்ணையா கூறுகையில், ரசிகர்களின் விருப்பத்திற்கு மதிப்பு ெகாடுத்தே அதிகாலையில் முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ேளாம்.

ஆனால் சில தியேட்டர்களில் இன்று இரவு 9.45 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய கூட படத்தைத் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.

சிவாஜி படத்தையொட்டி அப்படத்தைத் திரையிடும் தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. பல தியேட்டர் உரிமையாளர்கள், தங்களது ஊழியர்ளுக்கு புத்தாடைகள் கொடுத்து அசத்தியுள்ளனராம்.

ரசிகர்கள், தியேட்டர்காரர்கள் தவிர திரையுலகினரும் கூட சிவாஜியைப் பார்க்க படு ஆர்வமாக உள்ளனராம். எல்லோருக்கும் முன்பு சிவாஜியைப் பார்த்து படம் குறித்து மதிப்பிட அவர்கள் ஆர்வமாக உள்ளனராம்.

அதிகாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காட்சிகளுக்கு பெரும்பாலும் திரையுலகினரே வருவார்கள் என்று கூறப்படுகிறது. அததற்கு அடுத்த காட்சி 7.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

இந்த நிலையில், சிவாஜியைப் பார்க்க ரசிகர்கள் அவசரப்படுவதால், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு சென்னை நகர் மற்றும் புறநகர்களில் உள்ள தியேட்டர்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி இது.

சிவாஜியில் ரஜினி போட்டுள்ள மொட்டை கெட்டப் ரசிகர்களைக் கவர்ந்து விடவே, பல ரசிகர்களும் முடியைத் தானம் செய்து மொட்டை பார்ட்டிகளாக மாறியுள்ளனர். அதே கெட்டப்பில் படம் பார்க்கவும் ஆயத்தமாக உள்ளனராம்.

அமெரிக்காவில்....

சிவாஜி மூலம் தமிழ் சினிமாவுக்கு புதுப் பெருமை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் பிரபல தியேட்டர் வளாகத்தில் ஒன்று ஐமேக்ஸ் தியேட்டர். இந்த தியேட்டர் வளாகத்தில் இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியானதில்லையாம். முதல் முறையாக தற்போது சிவாஜி இங்கு திரையிடப்படுகிறது.

இண்டியானாபோலிஸில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் சிவாஜி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கலிபோர்னியா, புளோரிடா, டெக்ஸாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலிருந்து இண்டியானாபோலீஸுக்கு ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ரசிகர்களின் ஆர்வத்தால் ஐமேக்ஸ் தியேட்டரில் அனைத்து டிக்கெட்டுகளும் சட்டுப்புட்டென்று விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

கிராபிட்டி பிக்சர்ஸ் நிறுவனம்தான் சிவாஜியை இங்கு வெளியிட்டுள்ளது. இதுதவிர செயின்ட் லூயிஸ், புளூமிங்டன், மில்வாக்கி, மாடிசன் ஆகிய இடங்ளிலும் இதே நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

கேரளாவில் புதிய சாதனை

இதற்கிடையே, கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளதாம்.

இதுவரை ஒரு தமிழ்ப் படம் இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட்டதில்லையாம். இதுகுறித்து சிவாஜியின் கேரள திரையிடும் உரிமையைப் பெற்றுள்ள ஜானி சாகரிகா (இவர் கேரளாவின் முன்னணி கேசட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்) கூறுகையில், கேரளாவில் சிவாஜி புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படம்தான் கேரளாவில் அதிக தியேட்டர்களில் (60) திரையிடப்பட்டது. இதுதான் மலையாளத் திரையுலகின் வரலாறு. ஆனால் இதை சிவாஜி இப்போது முறியடித்து விட்டது.

மலபார் பகுதியில் மட்டும் 31 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. இதுவும் கூட ஒரு புதிய சாதனைதான் என்றார்.

பாலக்காட்டில் முதல் காட்சியை அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். இது ரசிகர்களுக்கான காட்சி அல்ல, பொதுமக்களுக்கான காட்சியாம்.

டிக்கெட் விற்பனையும் கூட அங்கு பெரும் சாதனை படைத்து வருகிறதாம். வழக்கமாக மலையாளப் படங்களுக்கு 75 ரூபாய் வரை கட்டணம் இருக்குமாம். ஆனால் முதல் சில வாரங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதால் சிவாஜிக்கான டிக்கெட் கட்டணமும் குண்டக்க மண்டக்க எகிறியுள்ளதாம்.

இப்படத்தை ஜானி ரூ. 3.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளாரம். இதை முதல் சில வாரங்களிலேயே மொத்தமாக அள்ளிக் குவித்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜானி.

இவர் பெயரிலேயே ரஜினி படம் இருக்கேய்யா!

பட்டயைக் கிளப்புங்கப்பா

-thatstamil-

Edited by Kuddithambi

சிவாஜி-சாதனைச் சிதறல்கள்

சிவாஜி படம் நாளொரு சாதனையும், பொழுதொரு சரித்திரமும் படைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த சாதனை மலையிலிருந்து சில சிதறல்கள் ..

சிவாஜியின் மொத்த பட்ஜெட் ரூ. 85 கோடியாம் (ஏவி.எம். நிறுவனே இதை அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது). நாட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இதுதான் என்கிறார்கள்.

சென்னை நகர விநியோக உரிமையைப் பெற்றுள்ள அபிராமி ராமநாதன், ரூ. 6.75 கோடி விலை கொடுத்து சிவாஜியை வாங்கியுள்ளார். ஒரு நகரத்திற்கு மட்டும் ஒரு படத்திற்கு அதிக விலை கொடுக்கப்பட்டது சிவாஜிக்கு மட்டும்தானாம்.

சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலும் சாதனைதான். முதல் நாளிலேயே சென்னை நகரில் மட்டும் ரூ. 1.70 கோடியை வசூலித்துள்ளது சிவாஜி. இது வெறும் 17 தியேட்டர்களுக்கான டிக்கெட் முன்பதிவுதான். இதுவும் இந்திய அளவில் புதிய சாதனையாம்.

சிவாஜியின் இந்த சாதனைகள் குறித்து அபிராமி ராமநாதன் கூறுகையில்,

இந்திய சினிமா வரலாற்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் இந்த அளவுக்கு வசூலானது இதுவே முதல் முறையாகும். வேறு எந்தப் படத்திற்கும் இந்த அளவுக்கு வசூலானதில்லை. இதை மிகப் பெரிய அதிசயம் என்று கூடச் சொல்லலாம்.

இந்த சாதனையில் எந்த அரசியலும் இல்லை. ரசிகர்களுக்கு ரஜினி எப்போதுமே எவர்கிரீன் தலைவர். அவரது படத்தை முதல் நாளிலேயே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வமே இந்த சாதனைக்குக் காரணம்.

டிக்கெட் முன்பதிவின்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து கொண்டு, டிக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டதற்காக ரஜினி ரசிகர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

சினிமாவைப் பொருத்தவரை சென்னை நகர விநியோக பகுதிகள் அசோக் நகரிலிருந்து திருவொற்றியூர் வரை வருகிறது. ஆனால் சென்னை நகரின் முக்கியப் பகுதிகளான பெரம்பூர், அடையார் போன்றவை சென்னை நகர எல்லைக்குள் இல்லை.

சென்னை நகரில் 17 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. தெலுங்குப் பதிப்பு காசினோ தியேட்டரில் திரையிடப்படுகிறது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் புதிய படங்களை ஆறு அல்லது 7 தியேட்டர்களில் திரையிடுவார்கள்.

ஆனால் சிவாஜி இதில் விதி விலக்கு என்பதால், அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு படம், ஒரு நகரில் அதிகபட்ச தியேட்டர்களில் வெளியிடப்படுவதும் இதுவே முதல் முறை. மக்கள் வசதிக்காகவே அதிக தியேட்டர்களில் திரையிடுகிறோம்.

படத்தின் சிட்டி உரிமைக்காக நான் அதிக தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. என்னால் முடிந்த தொகையை, நியாயமான தொகையத்தான் நான் கொடுத்துள்ளேன்.

சென்னை நகரில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் வசித்து வருகின்றனர். அதில் 30 லட்சம் பேர் வந்து பார்த்தால் கூட அது பெரும் லாபம்தான். இது எனது சாதாரண கணக்கு என்றார் ராமநாதன்.

'அபிராமி' கணக்கு தப்பினாலும் சிவாஜி கணக்கு தப்பாது சார்!

-thatstamil-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகப்பெரிய அளவிலான புதிய செயற்கையான பிரச்சாரச் சுனாமியாக சிவாஜி திரைப்படம் தமிழகத்தையும் இந்தியாவையும் ஆட்டிப் படைக்கலாம், ஆனால் ஈழத்தமிழர்களாகிய நம்மை இது என்ன செய்யப்போகிறது?

- தாயகத்தில் மிக உச்சநிலையிலுள்ள அடுத்தகட்ட வெடிப்பு பற்றிய ஆவலுடன் இருக்கும் ஈழத்தமிழனுக்கு இந்தச் சிவாஜி சினிமாவிலுள்ள 'கிளைமாக்ஸ்' என்ன கிளுகிப்பைத் தரப்போகிறது?

- தமிழ்த்திரை வரலாற்றை ஆய்வாகப்பதிவு செய்த தியடோர் பாஸ்கரன் அவர்கள் கூறுகிறார், ''உலகின் சிறந்த திரைப்படங்கள் பல, மிகவும் எளிய உபகரணங்களை வைத்து உருவாக்கப்பட்டவை'' என்று. இது திரைக்கலை இரசனை சார்ந்த பார்வை.

- 'என்ன பணி செய்து எவ்வளவெல்லாம் சம்பாதித்தாலும் நமக்கென்று சுவறுவது நமது கையாலே எடுத்து நம் வாயிலிடப்படும் அந்த நான்கு இட்லிகள் மட்டும்தானே!' எனவாக மிக உணர்ச்சியுடன் வாழ்வின் யதார்த்தத்தைச் சொன்னார் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள்.

- அண்ணாந்து வாயைப்பிளக்கப் பார்ப்பதால் பூமியில் பதிந்துள்ள நமது கால்கள் பற்றிய நினைவை இழக்க நேரிடலாம். இது எமது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிவிடலாம்? வெறும் பொழுதுபோக்கிகளாக வாழத்தலைப்பட்டவர்களல்ல ஈழத்தமிழர்கள்.

- படம் வெளிவரமுன்னரே அதைப் பார்க்காமலே அதீதமான கருத்துகள் எப்படி வெளிவர முடியும்? ஏன்? யாரது நலனுக்காக வெளிவருகின்றன? முன்னர் ஒருகாலத்தில் குஞ்சுமோன் என்ற ஒருவர் மிகமிகப் பிரமாண்டங்களைத் தந்ததாக எழுதினார்கள் இப்ப அவர் என்ன செய்கிறார்?

- கூட்டத்தில் கூடி நின்று கொட்டமடிக்கும் நிலையில் ஈழத்திலும், புலம்பெயர்வாழ்விலுமாக சிதறிவாழும் ஈழத்தமிழர்கள் இருக்க மாட்டார்கள். எமக்கு வாழ்வின் அர்த்தமும் சுமையும் தெரியும்.

'சிவாஜி திரைப்படத்தைப் புறக்கணியுங்கள்!"

-தாயகத்திலிருந்து அரங்கன்-

'தேவன் வரப் போகின்றார், 'தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்ற தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக, 'இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது" என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ்நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும், உலகின் தமிழ் இணையத்தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகிவிட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக, தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்த் ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா, மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக்கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்பட மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான, மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது 'கன்னட பாதுகாப்பு இயக்கம்" என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த 'காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் 'கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வெளிவந்த 'சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் 'இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் 'கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் 'சிவாஜி" திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப்பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

'நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது"

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் இரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

'கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும்" என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

அன்று தனது 'பாபா" திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் 'அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! - இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, 'இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம்" என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அமிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதேவேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான்.

தமிழ்ப் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

இந்திய - சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சினைகளின் போதும் நிதி சேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், குறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் 'அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது". ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிக ரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக்கூடும்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்த் தேசியத்திற்கு முன்னின்று உதவினார். இன்று ரஜனி என்கின்ற நடிகர் சுயநலத்திற்காக தமிழ்த்தாயை உதைக்கின்றார்.

புலம்பெயர்ந்த உறவுகளே! உங்களின் சிவாஜிப் படப் புறக்கணிப்பு நீங்கள் எடுத்து வைக்கின்ற முதல் அடியாக இருக்கட்டும். அதுவே நீங்கள் கொடுக்கின்ற முதல் இடியாகவும் இருக்கட்டும். இந்த இடி பேரிடியாக எதிர்காலத்தில் மாறட்டும். இன்று இங்கே அல்லல்பட்டு அகதிகளாக ஓடித்திரிகின்ற எமது உறவுகளுக்கு உங்களின் இந்த நடவடிக்கை தேவனின் உண்மையான வருகையாக அமையட்டும்.

http://www.tamilnaatham.com/

கோடம்பாக்கத்தின் இமயம் என்றால் அது 'சிவாஜி' படமாகதான் இருக்கும். படம் சம்பந்தப்பட்ட ஆச்சர்யங்கள் அடுக்கடுக்காக வந்துகொண்டிருக்கும் நிலையில் 'சிவாஜி'யின் ஒரு நாள் வசூலை கேட்டால் மலைப்பாக இருக்கிறது.

சென்னை விநியோக உரிமையை அபிராமிராமநாதனும் ஜீவி பிலிம்ஸும் இணைந்து வாங்கியுள்ளனர். இதுவரை சென்னை நகரில் அதிகபட்சமாக ஒரு படம் 6 திரையரங்குகளில் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில் முதன்முறையாக 'சிவாஜி' 17 திரையரங்குகளில் வெளியாகிறது.

நாளைமுதல் 'சிவாஜி'யின் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது. இதற்காக கடந்த 10-ம் தேதிமுதல் முன்பதிவுகள் ஆரம்பமானது. முன்பதிவு ஆரம்பித்த முதல் நாளில் மட்டும் 1 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்று சாதனை படைத்துள்ளது 'சிவாஜி.'

இதுகுறித்து அபிராமிராமநாதன் நிருபர்களிடம் கூறியபோது:- "திரையுலகில் இதுவரை விற்கப்பட்ட படங்களின் விலையைவிட 4 மடங்கு அதிகம் விலை கொடுத்து வாங்கி இருக்கிறோம். இந்த பணம் திரும்ப வருமா? என்று சிலர் கேட்கிறார்கள். எங்களின் ஒரே கணக்கு சென்னை நகரில் ஓட்டுரிமை உள்ளவர்கள் மொத்தம் 60 லட்சம் பேர். சிறுவர் - சிறுமிகளையும் சேர்த்து படம் பார்ப்பவர்கள் ஒரு கோடி பேர்.

இவர்களில் 30 லட்சம் பேர் படம் பார்த்தால் போதும். லாபம்தான். ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் வீதம் 4 காட்சிகளுக்கு ஒரு நாளில் 60 ஆயிரம் பேர் படம் பார்க்க போகிறார்கள். 'இன்டர்நெட்' மூலமும் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு டிக்கெட் முன்பதிவு ஆகியிருக்கிறது.

17 தியேட்டர்களிலும் இந்த படம் திரையிடப்பட்டதன் காரணமே 'சிவாஜி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை சென்னை நகரத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் நடந்துபோய் சிரமம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான். ஒவ்வொரு ஏரியாவிலும் சென்னை நகரம் முழுவதும் ஏதாவது ஒரு திரையரங்கில் இந்த படம் திரையிடப்படுகிறது.

இப்படி எல்லா இடங்களிலும் டிக்கெட்டுகள் சிரமம் இல்லாமல் கிடைப்பதால் திருட்டு விசிடி ஒழியும். திரையரங்கங்களில் படம் பார்க்க முடிந்தால் யாரும் சி.டி.யில் படம் பார்க்க மாட்டார்கள். இதேபோல் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனையும் ஒழியும்"என்றார்.

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைப்பில் 'சிவாஜி' படம் பற்றிய செய்தியினை இடவேண்டாம் என்று யாழ் நிற்வாகம் அறிவித்துள்ளதினைப் பார்க்கவில்லையா?.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=314239

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.