Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாகரனைத் தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Featured Replies

தலைவர் பிரபாகரனைத் தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.

இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும் நிலை ஏற்பட்டது. சம்பவம் வடமராட்சி கொற்றாவத்தை என்ற இடத்தில்நிகழ்ந்தது.

பொலிஸாரின் நடமாடும் சேவையிலேயேஇந்தச் சம்பவமும் இடம்பெற்றது.

வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சேவை இரண்டு தினங்கள் இடம்பெற்றது. அதன் முதல் நாளான நேற்று முன்தினம் ஆரம்ப விழா இடம்பெற்றது.

நிகழ்வில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வில் அவர் அங்கு உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப்பற்றியும் அதன் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளைப் பற்றியும் வசைபாடினார்.

அவருடைய பேச்சை அடுத்து நடமாடும் சேவையில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் கொந்தளித்ததுடன் பேச்சு மேடையில் இருந்து உடனடியாக அவரை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

நீண்ட நேரத்தின் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸார் இணைந்து மக்களைச் சமாதானப்படுத்தினர்.

நீண்ட நேரத்தின் பின்னர் நிலமை சுமுகமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/23972.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தனுக்கு பயங்கரவாதியாக தெரிபவர் ,மற்றவனுக்கு சுதந்திரவீரனாக தெரிவார் ....இந்த சம்பவம் ந்ல்ல ஒரு எடுத்துக்காட்டு 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரவர்க்கங்களின் அடக்குமுறைக்கு.. அடிமைப்படுத்தலுக்கு எதிராகப் போராடிய யாருமே.. அதிகாரவர்க்கங்களால்.. போற்றப்பட்டதில்லை.. பயங்கரவாதி... தீவிரவாதி ஆக்கப்பட்டதே.. யதார்த்தம். அடிமைத்தனத்தின் அடக்குமுறையின் வலி தெரிந்த மக்களுக்கு மட்டும் தான் தமக்காகப் போராடியவர்களின் நியாயமும்.. நீதியும் தெரியும். தமிழ் மக்களின் முன் பிரபாகரன் என்ற தனிமனிதனும் அவரின் மக்கள் அமைப்பும் இன்றும் உள்ளங்களில் புனிதப்பட்டு இருக்க.. அதுதான் முக்கிய காரணம். 

அதனால் தான் அவர் தேசிய தலைவராக இருக்கிறார் தமிழ் மக்களுக்குள். தமிழ் மக்கள் எங்கிருந்தாலும்.. இந்த எண்ணம் அவர்களுக்குள் உள்ளது. அதை எவரும் தடுக்க முடியாது... மாற்றவும் முடியாது.. மாற்ற முயற்சிப்பது அவர்களின் அறியாமை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை யாராலும் எந்த சந்தர்ப்பத்திலும் மூடி மறைக்கவோ திரிவு படுத்தவோ முடியாது 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

சம்பவம் வடமராட்சி கொற்றாவத்தை என்ற இடத்தில் நிகழ்ந்தது. பொலிஸாரின் நடமாடும் சேவையிலேயேஇந்தச் சம்பவமும் இடம்பெற்றது.

வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சேவை இரண்டு தினங்கள் இடம்பெற்றது. அதன் முதல் நாளான நேற்று முன்தினம் ஆரம்ப விழா இடம்பெற்றது.

நிகழ்வில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வில் அவர் அங்கு உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளைப் பற்றியும் வசை பாடினார்.

அவருடைய பேச்சை அடுத்து நடமாடும் சேவையில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் கொந்தளித்ததுடன் பேச்சு மேடையில் இருந்து உடனடியாக அவரை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

நீண்ட நேரத்தின் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸார் இணைந்து மக்களைச் சமாதானப்படுத்தினர்.

அதனையடுத்து நீண்ட நேரத்தின் பின்னர் நிலமை சுமுகமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

http://www.tamilwin.com/community/01/156829?ref=rightsidebar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.