Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் தேவை உறுதியான தலைமை

Featured Replies

ஈழத் தமிழரின் தேவை உறுதியான தலைமை

 
ஈழத் தமிழரின் தேவை  உறுதியான தலைமை
 

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ஈழத்­த­மி­ழர்­கள், தமது தலை­வர் என்று எவ­ரை­யா­வது குறிப்­பிட்­டால் அது விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ர­னையே குறிப்பதாக அமைந் திருந்தது. அந்த அள­வுக்கு ஒட்­டு­ மொத்­தத் தமி­ழர்­க­ளா­லும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­ட­தொரு தலை­வ­ராக அவர் காணப்­பட்­டார்.

தமி­ழர் பிரச்­சினை தொடர்­பாக இடம்­பெற்ற அனைத்­துப் பேச்­சுக்­க­ளி­லும் பிர­பா­க­ர­னால் நிய­மிக்­கப்­பட்­ட­ வர்­களே பங்­கு­பற்­றி­னார்­கள். புலி­க­ளின் தலை­மைக்கு அந்த அள­வுக்கு அன்று மதிப்பு வழங்­கப்­பட்­டது.

பிர­பா­க­ரன் தமது இள­வ­ய­தி­லேயே புலி­கள் இயக்­கத்­தின் தலை­மைப் பொறுப்பை ஏற்­றுக் கொண்­ட­வர். மிக நீண்ட கால­மாக வேறு எவ­ரா­லும் அசைக்க முடி­யாத நிலை­யில் அந்­தப் பத­வி­யில் அமர்ந்­தி­ருந்­த­வர். அவ­ரது நேர்­மை­யும் கொள்­கைப் பற்றுறு­தி­யும், இனத்­தின் மீது கொண்ட வாஞ்­சை­யும் உல­கத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராக அவரை அடை­யா­ளம் காட்­டின.

தமி­ழர்­க­ளது
தலை­மைத்­து­வத்­துக்கு
உதா­ர­ணம் பிர­பா­க­ரன்

பிர­பா­க­ர­னுக்­குப் பிறகு உறு­தி­யா­ன­தொரு தலைமை ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு வாய்க்­க­வில்லை என்­பதை ஒப்­புக் கொண்­டே­யா­க­ வேண்­டும். உல­கத் தலை­வர்­க­ளின் வர­லாற்றை நாம் புரட்­டிப் பார்த்­தால் அவர்­கள் தமது திற­மை­யா­லும் உழைப்­பா­லும் தலை­மைப் பத­வியை எட்­டிப் பி­டித்­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர்.

ஓர் இனத்­தின் தலை­மைத்­து­வம் என்­பது வெறு­மனே அர­சி­யலை மட்­டும் மைய­மா­கக் கொண்­ட­தல்ல. ஆனால் கால­மாற்­றத்­தின் கார­ண­மாக அர­சி­யல் தலை­வர்­களே மக்­கள் தலை­வர்­க­ளாக மாறி­யுள்­ள­னர்.
இந்த வகை­யில் தான் வடக்கு மற்­றும் கிழக்­கு­மா­கா­ணங்­க­ ளில் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளின் தலை­வ­ராக இரா.சம்­பந்­தன் விளங்­கு­கின்­றார்.

இலங்­கைத் தமி­ழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய நான்கு கட்­சி­களின் இணைப்பில் உரு­வாக்­கப்­பட்­ட­து­தான் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு. கூட்­ட­மைப் பின் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­தன் தமி­ழர் தலை­வ­ரா­கக் கரு­தப்­ப­டு­கின்­றார்.

தற்­போது ஒரு பிரி­வி­னர் சம்­பந்­த­னின் தலை­மைக்கு எதி­ரா­கக் குரல் கொடுத்து வரு­கின்­ற­னர். சம்­பந்­தன் ஒரு பல­வீ­ன­மான தலை­வ­ரா­கவே இவர்­க­ளால் சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றார். இதே­வேளை கூட்­ட­மைப்­பில் உள்ள ஒரு சில­ரும் சம்­பந்­த­னைத் தரக் குறை­வாக விமர்­சித்து வரு­கின்­ற­னர். இத்­த­கை­ய­வர்­கள் இன்­ன­மும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக் கொண்­டி­ருப்­பது நியாயமான தல்ல.

அண்­மைய நாள்­க­ளா­கவே ஈழத்­த­மி­ழர்­கள் மத்­தி­யில் மாற்­றுத் தலைமை என்ற பேச்சு அடி­பட்டு வரு­கின்­றது. ஆனால் அதற்­குத் தகு­தி­யான ஒரு­வர் இன்­ன­மும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் ஏதோ­வொரு வேகத்­தில் ஒரு சிலர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் பக்­கம் தமது சுட்­டு­வி­ரலை நீட்­டு­ கின்­ற­னர்.

தற்­போ­தைய சூழ்­நி­லை­ யில் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டிய தகுதி விக்­னேஸ்­வ­ர­னுக்கு உண்டா? என்­பதை நினைத்­துப் பார்ப்­ப­தற்கு இவர்­கள் மறந்து விட்­ட­னர். தற்­போது தமி­ழர்­கள் இருக்­கின்ற சூழ்­நி­லை­யில் இள­மை­யும், நல்ல உடல் நல­மும் அனைவ­ரை­யும், அணைத் துச் செல்­லக்­கூ­டிய மனப்­பாங்­கும் உள்ள ஒரு­வரே தேவைப் ப­டு­கின்­றார்.

தலைக்­கு­னிவை
ஏற்­ப­டுத்­தும்
வடமாகாண சபை­யின்
செயற்­பா­டு­கள்

தற்­போது வடக்கு மாகா­ண­ச­பை­யில் இடம்­பெற்று வரு­கின்ற சம்­ப­வங்­கள் தமி­ழர்­க­ளுக்­குத் தலைக்­கு­னிவை ஏற்­ப­டுத்­தக் கூடி­யவை. கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் முத­ல­மைச்­சர் பத­வி­யில் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை அமர்த்­தி­யது முத­லா­வது தவறு.

அவ­ரைக் கட்­டுப்­ப­டுத்­தாது தன்­னி்ச்­சை­யா­கச் செயற்­ப­டு­வ­தற்கு அனு­ம­தித்­தமை இரண்­டா­வது தவறு. மாகா­ண­ச­பை­யில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்ட போது உட­ன­டி­யாக அதில் தலை­யி­டாது ஒதுங்கி நின்­றமை மூன்­றா­வது தவறு. இதன் பின்­னர் வடக்கு முத­ல­மைச்­சர் தமது எண்­ணம் போன்று செயற்­பட அனு­ம­தித்­தமை நான்­கா­வது தவறு.

உட­ன­டி­யா­கத் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளைக் கிடப்­பில் போட்­டு­விட்டு அமை­தி­யாக இருப்­பது ஐந்­தா­வது தவறு. இவ்­வாறு தவ­று­களை அடுக்­கிக் கொண்டே போக­லாம்.

தந்தை செல்வா போன்ற தன்­ன­ல­மற்ற தலை­வர்­க­ளைக் காண்­பது அரிது. அவர், தாம் சார்ந்த இனத்­துக்­கா­கவே வாழ்ந்­தார். சொத்­துக்­கள் யாவற்­றை­யும் இழந்­தார். ஈழத்­த­மி­ழர்­கள் உள்­ள­வரை செல்­வா­வின் நாமம் வாழும்.

பொழு­து­போக்க
அர­சி­யலில் ஈடு­ப­டு­வது
போன்ற போக்­கில்
ஒரு சிலர்

ஒரு சிலர் பொழு­தைப் போக்­கு­வ­தற்­கா­கவே அர­சி­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். தம்­மைத் தலை­வர்­க­ளாக உரு­வாக்­கிக் கொள்­வ­தற்­கும் இவர்­கள் துடிக்­கின்­ற­னர்.

மக்­கள் மத்­தி­யில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி அதில் இலா­பம் சம்­பா­திப்­ப­து­தான் இவர்­க­ளின் நோக்­க­மா­கும். இவர்­கள் தம்மை மன­தில் கொண்­டு­தான் மாற்­றுத் தலைமை தொடர்­பா­க­வும் கதைக்­கின்­ற­னர்.

ஆனால் மக்­கள் இவர்­கள் தொடர்­பாக நன்கு அறிந்து கொண்­ட­தால் இவர்­க­ளது எண்­ணம் ஒரு போதுமே நிறை­வே­றப் போ­வ­தில்லை.

தலை­வர்­க­ளாக மதிக்­கப்­பட்­ட­வர்­கள் ஏதோ ஒரு வகை­யில் தியா­கம் செய்­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­வார்­கள். ஒரு­வ­ரது தியா­கம்­தான் அவ­ரது தலை­மைத்­து­வப் பண்­பு­களை வெளிக்­காட்டி நிற்­கின்­றது. இவர்­க­ளில் சிலர் தாம் சார்ந்த மக்­க­ளுக்­கா­கத் தமது உயி­ரையே தியா­கம் செய்­தி­ருக்­கின்­ற­னர்.

இனத்­துக்­காக உழைக்­கும் தலை­வர்­கள் தான் இன்று ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­கும் தேவைப்­ப­டு­கின்­ற­னர். அவர்­களை இன்­னல்­க­ளி­லி­ருந்து மீட்­டெ­ டுக்­கத்­தக்க உறு­தி­யான தலை­மை­தான் இன்­றைய தேவை­யா­கும்.

http://newuthayan.com/story/24296.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

ஈழத் தமிழரின் தேவை உறுதியான தலைமை

 
ஈழத் தமிழரின் தேவை  உறுதியான தலைமை
 
கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் முத­ல­மைச்­சர் பத­வி­யில் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை அமர்த்­தி­யது முத­லா­வது தவறு.
 
 

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அவர்கள் மறைந்தபின் இதே உதயன் தனது தலையங்கத்தில்  சி.வி.விக்­னேஸ்­வ­ரன் போன்ற தன்­ன­ல­மற்ற தலை­வரைக் காண்­பது அரிது என்று புலம்பத்தான் போகிறது. :(

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அவர்கள் மறைந்தபின் இதே உதயன் தனது தலையங்கத்தில்  சி.வி.விக்­னேஸ்­வ­ரன் போன்ற தன்­ன­ல­மற்ற தலை­வரைக் காண்­பது அரிது என்று புலம்பத்தான் போகிறது. :(

உதயன் ஓனர், சம்பந்தரை பற்றி அருமையா, பெருமையா எமுதி... துண்டைப் போட்டு பாராளுமன்று சீட் பிடித்தவர்.

சம்பந்தர்... விக்கியை கொண்டு வந்த போது, ஆகா, ஓகோ என்பதும்,

விக்கியர், விக்கினம் தந்து சம்பந்தரை நெளிய வைப்பதால்... இப்படி எழுதுவதும் எதிர்பார்க்கக் கூடியது தான். 

அடுத்த தேர்தல் சீட்டுக்குத்தான். tw_angry:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தால் நல்ல தலமை தாயக்த்தில் இருந்து வர வாய்ப்பிலலை.புலத்தில் தான் தேட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

போற போக்கைப் பாத்தால் நல்ல தலமை தாயக்த்தில் இருந்து வர வாய்ப்பிலலை.புலத்தில் தான் தேட வேண்டும்.

கண்ணைக் காக்கும் இமையை, கண்கள் காண்பதில்லை. சற்றுத் தூரத்தில் இருக்கும் பொருளைத்தான் கண்டுகொள்கிறது. இதுதான் இயற்கையின் விதி.:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.