Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

 


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுமிடத்து, அது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரேனும் வௌிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பின், அது தொடர்பில் தெரியப்படுத்தும் பட்சத்தில் தூதரகங்கள் ஊடாக தேடிப்பார்க்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது.

நல்லாட்சி அரசாங்கக்காலத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட எவரும் காணாமற்போனதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/09/காணாமல்-ஆக்கப்பட்டவர்க-3/

1 hour ago, நவீனன் said:

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

 


 

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுமிடத்து, அது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முப்படைத் தளபதிதியான தனக்கு  தெரியாத 'மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்' இடங்கள் எவை என்று உறவுகளை தொலைத்து விட்டு அலையும் மக்களுக்கு தெரியுமா என கேக்கின்றார்.  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து இருக்கும் என இவருக்கு நன்கு தெரியும். அவலப்படும் மக்களுக்கும் அவர்களுக்காக கவலைப்படுவதாக் நடிக்கும் சர்வதேசத்துக்கும் முனால் நல்லா நாடகம் ஆடுகின்றார்.

  • தொடங்கியவர்
மட்டக்களப்பில் 6,000 பேர் மாயம்
 

image_5d7f95abb4.jpg

“மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும், சுமார் 6,000 பேர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான விவரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்” என்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் செயற்பாட்டாளர் எஸ். அரியமலர் தெரிவித்தார். 

காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) சந்திப்பொன்று இடம்பெற்றது.  

இந்தச் சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போதே,மேற்படி விவரங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததாக, அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பு தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், “அசாதாரண சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் போகச் செய்தல், மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி, ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மட்டக்களப்பில்-6-000-பேர்-மாயம்/73-203376

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுமிடத்து, அது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரேனும் வௌிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பின், அது தொடர்பில் தெரியப்படுத்தும் பட்சத்தில் தூதரகங்கள் ஊடாக தேடிப்பார்க்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது.

இந்தா நாங்கள் வந்தவுடனை பிரச்சனையெல்லாம் தூசாய் பறந்திடும் எண்டு சொன்னவங்கள்!!!!! இப்ப கேக்கிற கேள்வியை பார்.:(

  • தொடங்கியவர்

காணா­மற்­போனோர் பிரச்­சி­னைக்கு குறு­கிய காலத்­திற்குள் மனி­தா­பி­மான ரீதியில் தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுப்பேன்

06-e97fce523546ee9567bf6c45052041ebfd7f8a4f.jpg

 

உற­வி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி உறுதி; துரித நட­வ­டிக்கை  எடுக்­கு­மாறு காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்­களின் பிர­தி­நி­திகள் வலியுறுத்தல்
(நமது நிருபர்)

காணா­மற்­போனோர் பிரச்­சி­னைக்கு குறு­கிய காலத்­திற்குள் முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் மனி­தா­பி­மான ரீதியில் தீர்­வைக்­காண நட­வ­டிக்கை எடுப்பேன். காணா­மற்­போ­னோர்கள் எங்­கேனும் தடுத்­து­வைக்

­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஆதாரம் இருந்தால் அது­கு­றித்து விசா­ரணை நடத்தி அவர்­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுப்பேன். ஆனால்

அவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்கு சந்­தர்ப்­பங்கள் இல்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

காணா­மற்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கு விசேட செய­லகம் அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதனை அமைத்து தேடல் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு உண்­மையைக் கண்­ட­றிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார்.

காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்­களின் பிர­தி­நி­தி­களை ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்து பேசி­யி­ருந்தார். வடக்கு, கிழக்கில் மாவட்­டந்­தோறும் நான்கு பிர­தி­நி­திகள் வீதம் அழைக்­கப்­பட்டு இந்தக் கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது. கலந்­து­ரை­யா­டலில் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்ரின் பெர்­னாண்டோ, நல்­லி­ணக்க அமைச்சின் செய­லாளர் வே.சிவ­ஞா­ன­சோதி ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

சந்­திப்பில் கலந்­து­கொண்ட காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்­க­ளிடம் கருத்­துக்­களை கேட்­ட­றிந்த ஜனா­தி­பதி இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­ப­தற்­கான யோச­னை­க­ளையும் தெரி­விக்­கு­மாறு கேட்­டி­ருந்தார். காணா­மற்­போன தமது உற­வு­களை மீட்டுத் தர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் உண்­மையைக் கண்­ட­றிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் உட­ன­டி­யாக நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்டும் எனவும் காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்கள் கோரிக்கை விடுத்­தனர்.

எமது உற­வு­களை நாம் படைத்­த­ரப்­பி­ன­ரி­டமே ஒப்­ப­டைத்தோம். ஆனால் தற்­போது அவர்கள் காணா­மற்­போ­யுள்­ளனர். எனவே அவர்­களை மீட்­டுத்­தர வேண்டும் என்றும் காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்­களின் பிர­தி­நி­திகள் கண்­ணீர்­மல்க ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யுள்­ளனர்.

காணா­மற்­போ­ன­வர்கள் ஏதா­வது முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்­கான ஆதா­ரங்கள் இருந்தால் அதனைத் தரும்­ப­டியும் உட­ன­டி­யாக அவர்­களை விடு­விக்க ஏற்­பாடு செய்­யப்­படும் என்றும் தெரி­வித்த ஜனா­தி­பதி அவ்­வாறு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்கள் இல்லை என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு உயர்­மட்டக் கூட்­டத்தில் ஆராய்ந்­த­தா­கவும் காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்கள் யாழ்ப்­பா­ணத்தில் வைத்து தன்­னிடம் கைய­ளித்த ஆவ­ணங்­களை அவர்­க­ளிடம் கொடுத்து விசா­ரணை மேற்­கொண்­ட­தா­கவும் ஆனால் முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்கள் இல்லை என பாது­காப்புத் தரப்­பினர் தன்­னிடம் கூறி­ய­தா­கவும் ஜனா­தி­பதி இங்கு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

காணா­மற்­போ­ன­வர்­களில் யாராது சிறைச்­சா­லை­களில் இருந்தால் அது­கு­றித்து ஆராய்ந்து பார்க்க முடியும். வேண்­டு­மானால் சிறைச்­சா­லை­களில் உள்­ள­வர்­க­ளது பெயர் விப­ரங்­களை வெ ளியி­டு­மாறு உத்­த­ர­வி­டவும் தயா­ராக உள்ளேன் என்றும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

இங்கு கருத்துத் தெரி­வித்த காணா­மற்­போ­னோ­ரது உற­வி­னர்­களின் பிர­தி­நி­திகள் காணா­மற்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான விசேட செய­ல­கத்தை அமைக்கும் விட­யத்தில் கால­தா­மதம் காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. இந்த விட­யத்தை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என்று கோரி­யுள்­ளனர்.

இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி விசேட செய­ல­கத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­மூலம் விசா­ர­ணை­யினை முன்­னெ­டுப்­ப­துடன் தேடு­தலை மேற்­கொண்டு உண்­மையைக் கண்­ட­றிந்து தேவை­யான செயற்­றிட்­டங்­களை மேற்­கொள்வோம். படை­யி­ன­ரிடம் உற­வி­னர்­களே கைய­ளித்­த­மைக்­கான சான்­றுகள் இருந்தால் அது­கு­றித்தும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளலாம். தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நான் நிறை­வேற்றி வரு­கின்றேன். எனது ஆட்சிக் காலத்தில் எவ­ருமே காணா­மற்­போ­க­வில்லை. முன்­னைய ஆட்சிக் காலத்தில் ஊட­கத்­து­றை­யினர் பலர் காணா­மற்­போ­யினர். ஆனால் தற்­போது அந்த நிலை மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

காணா­மற்­போனோர் குறித்து ஆராயும் செய­ல­கத்­திற்­கான அதி­கா­ரிகள் நடு­நி­லை­யா­ன­வர்­க­ளா­கவும் பொறுப்­புக்­கூறும் தன்மை உடை­ய­வர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட வேண்டும். அர­சியல் அமைப்பு சபையே இந்த நிய­ம­னங்­களை வழங்கும். நாம் ஆட்­சி­ய­மைத்த பின்னர் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. காணா­மற்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான செய­ல­கமும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. காணா­மற்­போனோர் விட­யத்தில் மனி­தா­பி­மா­னத்­துடன் நியா­ய­மான தீர்வைப் பெற்றுத்தர நான் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் விடயம் தொடர்பில் தீர்வுகாண்பதற்கு உங்களது யோசனைகளை தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் முதலில் உண்மையைக் கண்டறிய வேண்டும். காணாமற்போனோர் விவகாரத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளவர்களின் விடயங்கள் குறித்தும் உடல்நிலை பாதிப்புத் தொடர்பிலும் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டியுள்ளது. எனவே இந்த விடயம் குறித்து குறுகிய காலத்திற்குள் முன்னுரிமையின் அடிப்படையில் மனிதாபிமான ரீதியில் தீர்வைக்காண நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-07

 

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு தூரம் அவர்களை கூப்பிட்டு   அந்த மக்களை முட்டாள்களாக்கிற வேலை.  எவ்வளவு எதிர்பார்ப்போட கஸ்ரப்பட்டு போயிருப்பினம். உதுகளுக்கு அது விளங்கினாத்தானே.

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் அரச தலைவருடனான சந்திப்பில் ஏமாற்றம்

உறவினர்கள் தெரிவிப்பு

 

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­கா­ரம் தொடர்­பாக அரச தலை­வ­ரு­ட­னான சந்­திப்­பில் எமக்­குத் திருப்தி­யான பதிலை அவர் தர­வில்லை. இந்­தச் சந்­திப்­பும் ஏமாற்­றத்­து­டன் முடிந்­தது. இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் அரச தலை­வ­ரு­டன் நேற்று முன்­தி­னம் சந்­தித்­த­னர். இது தொடர்­பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஊட­கங்­க­ளுக்கு நேற்­றுக் கருத்­துத் தெரி­விக்­கும் போதே அவர்­கள் இத­னைத் தெரி­வித்­த­னர்.

அவர்­கள் தெரி­வித்­த­தா­வது;
”காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் விட­யத்­தில் அரச தலை­வர் கரி­சனை கொள்­ள­வில்லை என்று எமக்­குத் தோன்­று­கின்­றது. திருப்­தி­ய­ளிக்காத பதில்­களை அரச தலை­வர் எமக்­குக் கூறி­னார்.

நல்­ல­தொரு தீர்வு கிடைக்­கும் என்று நாங்­கள் நம்­பிக்­கை­யு­டன் அங்கு சென்­றி­ருந்­தோம். தான் அரச தலை­வ­ராக இருக்­கும் போது காணா­மல் ஆக்­கப்­ப­டும் சம்­ப­வங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று அவர் எம்­மி­டம் கூறி­னார்.

எங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்­கள் என்று ஆதா­ரத்­து­டன் நிரூ­பிக்க முடி­யு­மாக இருந்­தால், அவர்­களை விடு­விக்­கத் தயார் – என்­றார். நாங்­கள் அவ­ரி­டம் பதிலை எதிர்­பார்த்­தோம். அவர் எம்­மி­டம் கேள்வி கேட்­கி­றார்.

அரச தலை­வ­ரால் விசா­ரணை செய்ய முடி­யாத ஒன்றை சாதா­ரண மக்­கள் எம்­மால் எப்­படி முடி­யும்.” – என்­ற­னர்.

http://newuthayan.com/story/26673.html

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு தெரிந்தும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் அரசியல் தலைவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.