Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிருசாந்தியின் நினைவு தினம்

Featured Replies

கிருசாந்தியின் நினைவு தினம்

 
கிருசாந்தியின் நினைவு தினம்
 

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது.

கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

21314577_1471710252898214_6385835740328521314604_940850379388845_40985091852215621314673_1471710349564871_2338481308537321370940_940850429388840_867774098592189

http://newuthayan.com/story/26347.html

  • தொடங்கியவர்
கிரிசாந்தியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
 

image_d9a8c99d4f.jpg

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். - செம்மணி பகுதியில், படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம், செம்மணி பகுதியில் இன்று (07) அனுஷ்டிக்கப்பட்டது.

1996ஆம் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி, யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கழுத்தை நெரித்து படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

image_e16bdacfc6.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கிரிசாந்தியின்-நினைவு-தினம்-அனுஷ்டிப்பு/71-203385

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்

  • தொடங்கியவர்

சமஷ்டி முறையிலான சுயாட்சியை கோருவது இதற்குத்தான்: விக்னேஸ்வரன்

 
சமஷ்டி முறையிலான சுயாட்சியை கோருவது இதற்குத்தான்: விக்னேஸ்வரன்

கிருஷாந்தி குமாரசுவாமிக்கு ஏற்பட்டது போன்ற அவலங்கள் இனி மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கே சமஷ்டி முறையிலான சுயாட்சியை கோருவதாக வட மாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கான அடையாளமாக கிருஷாந்தி குமாரசுவாமியின் பாலாத்காரமும் கொலையும் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி, அன்று ஒரு திறந்தவெளி கொல் களமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கிருஷாந்தி குமாரசுவாமியை நினைவுகூரும் நிகழ்வுகளும் செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவரகள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிவைத்த உரையை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வாசித்தார்.

1996 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, வீடு திரும்பிய கிருஷாந்தி குமாரசுவாமி கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து ஒன்பது இராணுவத்தினரும் இரண்டு பொலிஸாரும் அடங்கலாக பதினொரு பேர் கிருஷாந்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருந்தனர்.

கிருஷாந்தி கைதுசெய்யப்பட்டமை குறித்து விசாரிப்பதற்காக சென்ற அவரது தாயார் இராசம்மா, சகோதரர் பிரணவன் மற்றும் அயல்வீட்டு காரரான சிதம்பரம் கிருபா மூர்த்தி ஆகியோரையும் இராணுத்தினர் கொலை செய்திருந்தனர்.

சர்வதேசம் உத்தரவாதம் வழங்காததால் கிருசாந்தியின் படுகொலைக்கு நிகரான சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் மேலும் இடம்பெறும் சாத்தியங்கள் உள்ளதாக  இன்றைய அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் எச்சரித்தார்.

வடக்கு, கிழக்கில் அரச படையினரால் அரங்கேற்றப்பட்ட ஒவ்வொரு படுகொலைகளையும் ஒவ்வொரு தமிழனும் நினைவுகூர வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/demand-for-federal-autonomy-this--Wigneswaran

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அவா படிச்ச.. சுண்டுக்குளி சகோதரிகள் அஞ்சலிக்குப் போகவில்லை. அதிபர் அரசியல் செய்யுறாவோ..?!

இந்த அஞ்சலி நிகழ்வை.. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி தான் உண்மையில் செய்து வந்திருக்கனும். 

நினைவஞ்சலிகள். 

  • தொடங்கியவர்

செம்மணிப் புதைகுழியும் கிரிசாந்தி குமாரசாமியின் வன்புணர்ந்த படுகொலையும்!

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி எவரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று நடந்தேறியது.
 
கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர்.  செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி குமாரசாமியும் ஒருவர்.  யாழ்ப்பாணத் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.
 
கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர். இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59 வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு   டியூஷன்  போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.
 
அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர். கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொருபேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில்  கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர்.
 
அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது. இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர்  1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
 
கிருசாந்தி வன்கொலை மூடுண்டிருந்த யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. இதனால் தொடர் யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. நெருக்கடியை தவிர்க்க சந்திரிக்கா அரசு ஒன்பதுபேரை கைது செய்தது. ஏழு இராணுவத்தையும் இரண்டு சிப்பாய்களையும் செய்து செய்தனர். அரசு எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காகியது.  1988ஆம் ஆண்டு ஜீலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
 
‘”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் – 300ல் இருந்து 400 வரை – புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.”
 
அப்போதைய அரசு கிருசாந்தி வழக்குடன் இந்த விவகாரத்தை முடிமறைக்க முற்பட்டது. ஆனால் உலகளவில் இந்த விவகாரம் அவதானிக்கப்பட்டது. செம்மணிப் புதைகுழியை தோண்ட வேண்டும் உண்மையை கண்டறிய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன.  இதனையடுத்து இலங்கை அரசுக்கு புதைகுழி விவகாரத்தை தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. செம்மணியில் வெளிவந்த எலும்புக்கூடுகள்  சோமரத்தின ராஜபக்ச வாக்குமூலத்தை மெய்ப்பித்தது.
 
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை கண்ணீருடன் திரண்ட தாய்மாரும் உறவுகளும் அடையாளம் காட்டினர். யாழ்ப்பாணமே கண்ணீர் கோலம் பூண்டது. செம்மணியைவிட 16 புதைகுழிகள் உள்ளன என்றும் அதில் பத்துப் புதைகுழிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஐந்தை உதவி பொலீஸ் அதிகாரி பெரேராவால் காட்ட முடியும். எஞ்சிய ஒன்றை – அது ஒரு கோவில் அருகில் உள்ளது – டி.எம். ஜெயதிலக்காவால் (மரணதண்டனை பெற்ற இன்னொரு சிப்பாய்) அடையாளம் காட்ட முடியும் என்றும் ராஜபக்ச கூறினார்.
 
அத்துடன் இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்று சிப்பாய்  ராஜபக்ச கூறினார். கப்டன் லலித் ஹேவா, லெப்டினன் விஜயசிறிவர்த்தன, லெப்டினன் துடுகல, மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகரா முதலிய இராணு அதிகாரிகளது விபரங்களை பகிரங்கப்படுத்தினான். அத்துடன் தனது வாக்குமூலத்தில் பல்வேறு கொலைகளை ராஜபக்ச விபரித்திருந்தார். இதன்போது செல்வரத்தினம் என்ற அரச ஊழியரை  இராணுவம் கைது செய்த பின்னர் அவரை தேடி வந்த மனைவிக்கு என்ன நடந்தது என்று கீழ்கண்டவாறு ராஜபக்ச விபரித்தார்.
 
‘ஒருநாள் ஒரு மண்வெட்டியை எடுத்துவருமாறு கப்டன் லலித் ஹேவா என்னிடம் கேட்டார். நான் அங்கு சென்றபோது ஆடையில்லாது நிர்வாண கோலத்தில் இருந்த பெண் ஒருவருடன் கப்டன் ஹேவா நின்றார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அந்த முகாமுக்கு முன்பு கொண்டு வரப்பட்டிருந்தனர். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை கற்பழித்தார். பின்னர் நான் கொண்டுவந்து கொடுத்த மண்வெட்டியினாலும் இன்னும் சில பொல்லுகளாலும் கப்டன் ஹேவா அந்தக் கணவர் மனைவி இருவரையும் தாக்கினார். இருவரும் இறந்து போனார்கள்.’
 
கிரிசாந்தி கொலையும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் செம்மணிப் புதைகுழிகளும் இலங்கை இராணுவத்தின் இன அழிப்பு சார்ந்த கொடூர முகங்களை உலகிற்கு அம்பலப்படுத்தின. யாழ்ப்பாண மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதாக கூறி யுத்தம் செய்த சந்திரிக்கா அரசாங்கம் எதற்காக யுத்தத்தை மேற்கொண்டது என்பதையும் செம்மணிப் புதைகுழிகள் அம்பலமாக்கின. குற்றவாளிகள் இனம் காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டபோதும் இலங்கை அரசினதும் இராணுவப்படைகளினதும் தமிழ் இன அழிப்பு செம்மணியுடன் முடிந்துவிடவில்லை. அவை முள்ளிவாய்க்கால் வரை உச்சம் கண்டன.
 
செம்மணி வெளி ஒரு இனம் சந்தித்த மிகப் பெரிய இன அழிப்பின் சுவடு. ஒரு இன அழிப்புச் செயல் உலகின் எதிர்காலத்தின் மனித உரிமை, இன உரிமை குறித்த விழிப்புக்கும் சிந்தனைக்கும் உரிய அனுபவம். அதை நினைவுகூர்வதே மனித மாண்பும் மனிதகுலத்தை பாதுகாக்கும் செயலுமாகும்.
 
ஆனால் செம்மணி விவகாரத்தில்  கால ஓட்டத்தில் அதனை மறக்கடிக்கும் விதமான காரியங்கள் நிகழ்ந்தன. 600க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட செம்மணி வெளியில் நிறைந்துள்ள பல்தேசிய கம்பனிகளின் விளம்பரங்கள் எதன் வெளிப்பாடு? ஒரு அரசின் இனப்படுகொலையிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள செம்மணிப்படுகொலை சிறந்த உதாரணம். தமிழின அழிப்பு வரலாற்றில் செம்மணியை மறக்காமல் அழிக்கப்பட்டவர்களை நினைவுகூர கிருசாந்தி கொல்லப்பட்ட இந்த நாளே மிகவும் பொருத்தமானது.
 
தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/40047

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.