Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம்

*மகளிர் தின சிறப்புக் கட்டுரை

ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு வரும் வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட இந்த நாளன்று பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டவும் பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணவும் இந்த நாளில் முயற்சி மேற்கொள்ளும் வகையில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நம் நாட்டையும் அயல்நாடான இந்திய நாட்டையும் பொறுத்தவரை வளமான நாடாக உருமாற்றுவதற்கு பெண்கள் ஆற்றிவரும் அரும்பணிகளை இந்த தினத்தில் முன்னிலைப்படுத்தி எடுத்துரைக்கலாம். வேளாண் நிலங்களில் நாற்று நடவு தொடங்கி தற்போதைய நவீனயுகத்தில் விண்கலங்களில் சென்று விண்வெளி மையங்களை பழுதுபார்ப்பது வரை பெண்களின் தொழில்நுட்ப நிபுணத்துவ இறக்கைகள் பரந்து விரிந்திருப்பதைப் பார்க்கிறோம்.

பல்வேறு நாடுகளிலும் பெண்கள் தினம் சுமார் ஒருவார காலத்திற்கு கொண்டாடப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய அனைத்து பெண்கள் அமைப்புகளும் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

பெண்கள் தங்கள் நாடு, மதம், மொழி கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் கடைப்பிடிக்கும் ஒரே நாள் மகளிர் தினம் என்றால் மிகையில்லை.

மகளிர் தினத்தையொட்டி பல்வேறு முக்கிய நகரங்களிலும் பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற தலைப்புகளில் சிறப்புக் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக சர்வதேச பெண்கள் தினத்தைக் கடைப்பிடிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட பேரணிகள், போராட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

பெண்களுக்கு சம உரிமை, வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. முந்தைய கிரீ நகரில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல்ரீதியான ஆண்களின் தாக்குதல்களுக்கு எதிராக முதல்முறையாக லீசி டிராட்டா என்பவர் குரல் கொடுத்தார்.

தொடர்ந்து பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம், சம உரிமை, மத சகோதரத்துவம் போன்றவற்றை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பார்சிய பெண்கள் வலியுறுத்தினர்.

நிற அடிப்படையிலான கொள்கைகள், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் உலக அளவில் தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டம் அது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான உரிமைகள் குறித்த போராட்டம் பல்வேறு நாடுகளிலும் தொடங்கலாயிற்று.

1909 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் தினத்தைக் கடைப்பிடித்து வந்தனர். கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினத்தை உலக அளவில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டில் (1911) மார்ச் மாதம் 19 ஆம் திகதி டென்மார்க் ஆடிரியா, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் மகளிர் தின பேரணிகள் நடைபெற்றன. வாக்களிக்கும் உரிமை, பணியாற்றும் உரிமை, பெண்களுக்கும் தொழிற்பயிற்சி, பணிகளில் பாகுபாடின்மை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். பேரணி நடைபெற்ற வாரத்திற்குள் அதாவது 1911 மார்ச் 25 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டடிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து வந்தவர்கள்.

இந்த சம்பவமே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வாகிவிட்டது. தொடர்ந்து சர்வதேச பெண்கள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.

1913-1914 ஆம் ஆண்டுகளில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் அமைதி இயக்கமாகவோ அல்லது போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக மகளிர் தின பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் பெப்ரவரி 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜூலியன் கலண்டரிலும். ஜியார்ஜியா கலண்டரில் அதுவே மார்ச் 8 ஆம் திகதியாகவும் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

பின்வந்த நாட்களில் ஐ.நா.பெண்கள் அமைப்பு சார்பில் சர்வதேச பெண்கள் தினம் கடைப்பிடிப்பது எனவும், சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் வகையிலும் பெண்களின் உரிமைகள் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நாளை கொண்டாடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் உலக பெண்கள் தினம் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

ஆண்களுக்கு நிகராக பொப் தலைமுடி வெட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆண்களைப் போல ஜீன்ஸ் பாண்ட மாட்டிக் கொள்வதும். டீ சேர்ட் போட்டுக் கொள்வதுமே பெண் சுதந்திரம் என்று கருதி விடக் கூடாது. சமூகத்தில் நிலவும் பிற்போக்கு கருத்துகளை புறந்தள்ளி விட்டு புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைய வேண்டும்.

பெண்கள் பல ஆண்டுகளாக சம உரிமை, சமூகநீதி, அமைதி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை இந்த நாளில் நினைவு கூர்வதுடன் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட பெண்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பது போல சமுதாயத்தில் ஒவ்வொரு வீட்டின் கண்களாகத் திகழும் பெண்களைப் போற்றும் தினமாக இதனைக் கொண்டாடுவோம்.

ஆண் பிள்ளையை அடித்து வளருங்கள், பெண்களைப் போற்றி வளருங்கள் என்பதுபோல மகளிர் தினத்தில் மனித குலத்திற்கு ஆதாரமாகத் திகழும் பெண்களைக் கௌரவிப்போம் போற்றுவோம்.

http://www.thinakkural.com

ஆண் பிள்ளையை அடித்து வளருங்கள், பெண்களைப் போற்றி வளருங்கள்

???????????????????????????????????????????????????????????????????????

:rolleyes::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பிள்ளைகளை அணைத்து வளருங்கள். பெண் பிள்ளைகளை மிதித்து வளருங்கள் என்பதுதான் சரி. :rolleyes::lol:

அதுசரி பெண்களை கெளரவப்படுத்த அவங்க என்ன விசித்திரமான பிறவிகளா..??! பெண்களே தாங்கள் தங்களை இன்னும் மனிசரா அடையாளம் காணேல்லைப் போல இருக்கே..!

மகளிர் தினம் என்பதிலும் மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதே சாலப் பொருந்தும். :P

ஆண் பிள்ளைகளை அணைத்து வளருங்கள். பெண் பிள்ளைகளை மிதித்து வளருங்கள் என்பதுதான் சரி. :lol::lol:

அதுசரி பெண்களை கெளரவப்படுத்த அவங்க என்ன விசித்திரமான பிறவிகளா..??! பெண்களே தாங்கள் தங்களை இன்னும் மனிசரா அடையாளம் காணேல்லைப் போல இருக்கே..!

மகளிர் தினம் என்பதிலும் மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதே சாலப் பொருந்தும். :P

நெடுக்கு உங்க அட்ரஸைத் தரமுடியுமா?

கனபேர் தேடித்திரிகிறார்கள்.

ஒன்றுமில்லை பலவீட்டில் துடப்பக்கட்டைக்கு அலுவல் இல்லாமல் இருக்காம்.

இதை நான் சொல்லேல்லை மூக்காயிதான் சொன்னவா. :P :P :P

நெடுக்கு உங்க அட்ரஸைத் தரமுடியுமா?

கனபேர் தேடித்திரிகிறார்கள்.

ஒன்றுமில்லை பலவீட்டில் துடப்பக்கட்டைக்கு அலுவல் இல்லாமல் இருக்காம்.

இதை நான் சொல்லேல்லை மூக்காயிதான் சொன்னவா. :P :P :P

ஆதி ஏன் உம் வீட்டு அட்ரஸை கொடுக்கிரது, நீங்களும் வேலை வெட்டியில்லாம இருக்குறீங்க என்டு கேள்விப் பட்டேன் :P

ஆதி ஏன் உம் வீட்டு அட்ரஸை கொடுக்கிரது, நீங்களும் வேலை வெட்டியில்லாம இருக்குறீங்க என்டு கேள்விப் பட்டேன் :P

யாருப்பா இப்படி நோட்டீஸ் அடிச்சு விட்டது? :lol:

வீட்ல சும்மா இருக்கல்லைப்பா வீட்டுக்காரிக்கு வேலைக்காரனாக வேலை செய்து கொண்டுதான் இருக்கன். :angry: :angry: :angry:

யாருப்பா இப்படி நோட்டீஸ் அடிச்சு விட்டது? :lol:

வீட்ல சும்மா இருக்கல்லைப்பா வீட்டுக்காரிக்கு வேலைக்காரனாக வேலை செய்து கொண்டுதான் இருக்கன். :angry: :angry: :angry:

வீட்டுக்காரிக்கிட விளக்குமாத்தால வாங்காம ஒழுங்கா வேலைய்ப் பாத்து நல்ல பேரு வாங்கிறத விட்டுட்டு இப்படி வாலாட்டுறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி ஏன் உம் வீட்டு அட்ரஸை கொடுக்கிரது, நீங்களும் வேலை வெட்டியில்லாம இருக்குறீங்க என்டு கேள்விப் பட்டேன் :P

நிச்சயம் கொடுக்கலாம்.ஆனால் துடைப்பக் கட்டோட வாறவ துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் நிலைக்கு வருவினம் என்று அறிவிச்சுப் போட்டுக் கொடுங்கோ. :lol:

நாங்க வன்முறைகளுக்கு மிக மோசமாக வன்முறைகளால் பதிலளிக்க பிந்நிற்கம். அன்பு வழியின்னா அன்பு வழி. வன்முறையின்னா வன்முறை. பெண் என்பவளை மனிதனாப் பார்கிறமே தவிர விசித்திரமாப் பார்க்கல்ல. அவர்கள் மனிதத்தோடு நடந்தால் மனிதம் பதிலளிக்கும். மிருகத்தனமா நடந்தால் மிருகம் பதிலளிக்கும்.ஆண்களே அன்புக்கு மதிப்பளியுங்கள் பதிலுக்கு அன்பை அளியுங்கள். பெண்களின் வாய் வன்முறை தொடங்கி அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் படி காட்டமான பதிலடி கொடுக்கத் தயங்காதீர்கள். அவர்கள் வன்மை வாத நிலையில் இருந்து வெளிவர வேண்டும். அன்பு வழிக்கு திரும்ப வேண்டும். அதுவரை அணுமுறைகளை தேவைக்கு ஏற்ப மாற்றுங்கள். அடங்கி ஒடுங்கி அவர்களின் ஆதிக்கத்துக்கு உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். அன்புக்கு அன்பைப் பொழியுங்கள் சுயத்தை இழக்காதீர்கள். வன்முறைகளைப் பிரயோகிக்காத பெண்கள் மீது வன்முறை வேண்டாம். உங்களைப் புரிந்து கொள்ள நினைக்கும் பெண்ணை புரிந்து கொள்ளுங்கள். சமாதானம் கொள்ளுங்கள் விட்டுக் கொடுங்கள் உங்கள் சுயத்துக்கு பாதிப்பு வராத அளவுக்கு. மனிதாபிமான உதவிகளை ப்பெணணெண்று நோக்காமல் வழங்குங்கள். பெண் என்பதற்காக பின்னால் அலையாதீர்கள் அடிபணியாநீர்கள்.மற்றும் படி எதுவும் சொல்ல இல்லை ஆண்களுக்கு. :P :lol:

நிச்சயம் கொடுக்கலாம்.ஆனால் துடைப்பக் கட்டோட வாறவ துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் நிலைக்கு வருவினம் என்று அறிவிச்சுப் போட்டுக் கொடுங்கோ. :D

நாங்க வன்முறைகளுக்கு மிக மோசமாக வன்முறைகளால் பதிலளிக்க பிந்நிற்கம். அன்பு வழியின்னா அன்பு வழி. வன்முறையின்னா வன்முறை. பெண் என்பவளை மனிதனாப் பார்கிறமே தவிர விசித்திரமாப் பார்க்கல்ல. அவர்கள் மனிதத்தோடு நடந்தால் மனிதம் பதிலளிக்கும். மிருகத்தனமா நடந்தால் மிருகம் பதிலளிக்கும்.ஆண்களே அன்புக்கு மதிப்பளியுங்கள் பதிலுக்கு அன்பை அளியுங்கள். பெண்களின் வாய் வன்முறை தொடங்கி அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் படி காட்டமான பதிலடி கொடுக்கத் தயங்காதீர்கள். அவர்கள் வன்மை வாத நிலையில் இருந்து வெளிவர வேண்டும். அன்பு வழிக்கு திரும்ப வேண்டும். அதுவரை அணுமுறைகளை தேவைக்கு ஏற்ப மாற்றுங்கள். அடங்கி ஒடுங்கி அவர்களின் ஆதிக்கத்துக்கு உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். அன்புக்கு அன்பைப் பொழியுங்கள் சுயத்தை இழக்காதீர்கள். வன்முறைகளைப் பிரயோகிக்காத பெண்கள் மீது வன்முறை வேண்டாம். உங்களைப் புரிந்து கொள்ள நினைக்கும் பெண்ணை புரிந்து கொள்ளுங்கள். சமாதானம் கொள்ளுங்கள் விட்டுக் கொடுங்கள் உங்கள் சுயத்துக்கு பாதிப்பு வராத அளவுக்கு. மனிதாபிமான உதவிகளை ப்பெணணெண்று நோக்காமல் வழங்குங்கள். பெண் என்பதற்காக பின்னால் அலையாதீர்கள் அடிபணியாநீர்கள்.மற்றும் படி எதுவும் சொல்ல இல்லை ஆண்களுக்கு. :P :lol:

:D:D:D:D :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண் பிள்ளைகளை அணைத்து வளருங்கள். பெண் பிள்ளைகளை மிதித்து வளருங்கள் என்பதுதான் சரி. :lol::D

அதுசரி பெண்களை கெளரவப்படுத்த அவங்க என்ன விசித்திரமான பிறவிகளா..??! பெண்களே தாங்கள் தங்களை இன்னும் மனிசரா அடையாளம் காணேல்லைப் போல இருக்கே..!

மகளிர் தினம் என்பதிலும் மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதே சாலப் பொருந்தும். :P

<<<<<

மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதெல்லாம் நல்லாத் தான் இருக்கு. அது என்ன பெண் பிள்ளளயளை மிதித்து வளர்க்க வேணும் என்று சொல்லுறியள்..இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்போட்டன்!

பெண்கள் கொஞ்சம் தலை தூக்கினால் காணும் அதைப் பொறுத்துக்கொள்ளாத மனோபாவம் தான் ஆண்களிடம் நிறைஞ்சு போய் இருக்கு.

இப்ப உள்ள தலைமுறை எல்லாம் பெண்களூக்கு மதிப்பளிச்சு சம உரிமை கொடுத்து அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுகொள்றவையாத் தான் இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள தலைமுறை எல்லாம் பெண்களூக்கு மதிப்பளிச்சு சம உரிமை கொடுத்து அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுகொள்றவையாத் தான் இருக்கினம்.

உண்மைதான். இப்ப உள்ள தலைமுறை.. பெண்களுக்கு நல்லா மதிப்பு மட்டுமில்ல மப்பும் அளிக்குது. அம்மா தாயே எங்களுக்கு உலகம் எப்படி உருண்டிட்டு இருக்கென்று நல்லாவே தெரியும் அப்பத்த இப்பத்த தலைமுறைக் கதைகளை நம்கிட்ட அளக்காதீங்க.

பெண்களை மதிக்கனும் என்றது ஒன்றும் எழுதாத சட்டமில்லை. மனிதனை மனிதன் மதிக்கனும். பெண்கள் மனிதத்தோட இருந்தா எல்லோரும் மதிப்பினம். இப்பத்த தலை முறை மதிக்குதோ மிதிக்குதோ அதுவல்ல பிரச்சனை பெண்கள் மனிதர்களாக உள்ளார்களா என்பதுதான் வினவலே..! பல பெண்கள் சக மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூட தகுதியற்ற ஜடங்களாக இருக்கும் போது இப்பத்த தலைமுறை என்ன பெண்களை போதைவஸ்தாகக் கருதி மதிக்குதா..??! இல்ல மனிதராத்தான் காணுதா..?! :unsure:

பெண்களுக்கு பிரச்சனை அவர்களே அன்றி வேறு யாருமில்லை. அவர்கள் சுயமா விழித்தெழும் பொழுது விடியவும் அவர்கள் மனிதர்களாக மனிதம் பேணவும் வேண்டுவோமாக...!!!

உலகை அலங்கோலமாக்கிக் கொண்டிருக்கும் இப்பத் தலைமுறையிடம் எதிர்கால சந்ததியின் அங்கத்துவனான வேண்டுகோள். அழகிய உலகை எதிர்கால சந்ததியிடம் கையளியுங்கள். அதற்காய் மனிதர்களாக வாழுங்கள். இயற்கைச் சூழலை பாதுகாக்கப் பாடுபடுங்கள். மனிதரையும் அழித்து இயற்கையையும் அழிக்கும் கைங்கரியத்தை நிறுத்துங்கள். எத்தனையோ நிகழ்காலப் பெண்களின் சூலகங்களில் கருத்தடை மாத்திரைகளோடு போராடும் ஒரு உயிராக நான் என் வேண்டுகோளை முன்வைக்கின்றேன். :P

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
:rolleyes:அடக்கடவுளே...இதே வேலையாத்தான் திரியுறீங்களா? :rolleyes::D :D :D :D :(:o

Edited by ப்ரியசகி

:Dஅடக்கடவுளே...இதே வேலையாத்தான் திரியுறீங்களா? :D :D :D:(:o :o :o

ஹா ஹா சகி.............. ஏதோ ரொம்ப பெண்ணால் கஸ்டப்பட்டுட்டார் போல..... ஹிஹி நானும் இப்பத்தான் இந்த தலைப்புப் பார்த்தன்... இதுல நெடுக்ஸ் எழுதினதைப் பார்க்க கோவம் வரல, சிரிப்புத்தான் வந்தது. :rolleyes::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.