Jump to content

தலித்தியமும் தமிழ் தேசியமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இரண்டையும் தவிர சர்வாதிகாரம் என்கின்ற ஒரு வழியும் உண்டு. ஆனால் அது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு பொருந்தாத

சர்வாதிகாரம் என்பதை விட சட்டம் என்று கூறுங்கள்.

இன்று மேலை நாடுகளில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்ட இடங்களில் யாராவது புகைப்பிடித்ததை கண்டிருக்கிறோமா? இல்லையே! ஆனால் இங்கு சர்வாதிகாரமும் இல்லையே?!

மேலை நாடுகளில் இனத்துவேசத்தையும் சட்டங்களின் மூலம் அடக்கிவிட்டார்கள்.

ஒரு பிரபல்யமான சுலோகம் இருக்கிறது.

Racism costs you! :)

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

குறுக்கால போவான்,

உங்களது விவாதத் தன்மை ஆரோக்கியமாக இருக்கிறது. எனது அறிவிற்கு எட்டியவரை உங்கள் கேள்விகளை அணுகுகின்றேன்.

முதற்கண் மக்கள் நமக்கு உடன்பாடில்லாத நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையிட்டு மக்கள் மேல் கோபப் படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அனைவரது தேவைகள், பலம், பலவீனம், சிந்தனை என்பனவும் ஒருமாதிரி இருப்பதில்லை. எனவே முதலில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அந்த அடிப்படைக் கருத்தை நாம் மனதிருத்தல் வேண்டும்.

எனினும், எம்மால் சகித்துக் கொள்ள முடியாத விடயங்களை மற்றையோர் ஏன் விரும்புகிறார்கள் என்ற அடிப்படையிலும், எம்மைப் போல அனைவரும் இருந்தால் நல்லா இருக்குமே என ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கின்ற ஆசைப் பிரகாரமும், மற்றவரை கேள்விக்குட்படுத்துவதிலோ அவர்களோடு விவாதிப்பதிலேயோ எனக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. உண்மையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் நன்றாகப் புரியாமலும், அதே நேரம் புரிய மறுத்தும் வாழ்வது தான் பல பிரச்சினைகளிற்குக் காரணம் என்பது எனது நம்பிக்கை. Xenophobia போன்ற விவகாரங்;கள் எல்லாம் இதனால் தான் இருக்கின்றன என்பதனையும் பலவகையான மனிதர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இனி, ஒவ்வாரு மனிதரிற்குள்ளும் இன்னோரன்ன குறைபாடுகள் காணப்படுவது இயல்பு. முயற்சி இன்மை, சோம்பல் முதலியனவும் இந்த வகையின தான். சமூகத்தில் சில விதமான நடைமுறைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டும், சில விதமானவை நகைப்பிற்கிடமாக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில், எங்கே தமது சோம்பல் போன்ற குணங்களினை அப்படியே ஒத்துக் கொண்டால் தமது பெயர் நாசமாகி விடுமோ என்பதனால், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தை தேடவும் கற்பிக்கவும் முனைகிறார்கள். இது அனைத்து மனிதரிலும் இருக்கின்ற ஒரு குணம். பலவீனங்கள் குறைபாடுகள் வேறுபடினும் கூட, பிறரால் பலவீனாங்கள் குறைகள் எனத் தூற்றப் படுகின்ற விடயங்களை இயன்ற வரை காரணங் கற்பிக்க முயல்வது மனித இயல்பு. இதில் வேடிக்கை என்னவெனில் சில முயற்சியின்மை உடையோர், தாம் முயற்சி இன்மை உடையவர்கள் அல்ல என நிரூபிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஒரு துளி தானும் தமது முன்னேற்ரத்திற்காக முயன்றால் நிலைமை வேறு விதமாக இருக்கும். ஆனால் ஏனோ பலர் அவ்வாறு இல்லை. இதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் இந்தக் குறைபாடுகள் எல்லாம் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று இருப்பதனால் தான் இருக்கின்றது என ஒரு முடிவு முடிக்கிறீர்கள் பாருங்க்ள் அங்கு தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

இப்போ, கடவுள் சம்பந்தப்படாத ஒரு அல்ப்ப் விடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு இந்த கலையுலக பிரபலங்கள் பங்கெடுக்கும் தென் இந்திய தொலைக்காட்சிகள் சில நடாத்தும் போட்டி நிகழ்ச்சிகளை எடுத்தால், அதில் தோற்பவர்களில் பல பேர். தமக்கு யுரம் என்றோ, சூட்டிங் காரணமா வெளிய இருந்ததாலே போதிய பயிற்சி எடுக்கல என்றோ தமது தோல்விக்கு ஏதாவது ஒரு காரணம் கற்பிப்பார்கள். அது போல கடவுள் என்ற விடயத்தைச் சமன் பாட்டிலிருந்து முற்றாக நீக்கி விட்டாலும் கூட மனிதர்கள் தங்களது பலவீனங்கள் குறைபாடுகளிற்கு ஏதாவது ஒரு காரணத்தை மிகவும் creative ஆக கண்டு பிடித்தபடி தான் இருப்பார்கள். இதற்கு நாம் கடவுளின் தலையில் பொறுப்பைப் போடுவதா சரியா?

இனிப் பாருங்க, நீங்கள் சொல்வது போல் முயற்சி மிக்க தன்நம்பிக்கை நிரம்பி வழியும் மனிதராக வாழ்ந்தால் நல்லம் தான், ஆனால் அனைவரும் ஒரு மாதிரி இல்லை. தன்னம்பிக்கை அற்ற ஒரு மனிதன் தன்நம்பிக்கை மிக்க மக்களின் மத்தியில் அகப்பட்டால் அவன் அவமானத்தில் துவழ்ந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நாங்கள் ஆரும் விரும்பவில்லை அல்லவா. எனவே, ஏதோ ஒரு காரணத்தில் அந்த நொடிப்பொழுதில் தன்நம்பிக்கை அற்றவனாக--தன்நம்பிக்கை என்பது பிறப்பால் வருவதல்ல அதனை ஒவ்வொருவரும் பயிற்சி செய்து வழர்த்துக் கொள்ளலாம் என்று நாங்கள் நம்பி அவன் அதை வழர்;த்துக் கொள்ளத் தவறியது அவனது பிழை என்று தான் எடுத்துக் கொண்டால் கூட--அந்த நேரத்தில் அவனிற்கு அங்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. சக மனிதனை மதித்து அவனும் உருப்படோணும் என நாம் நினைப் போமேயானால், அந்த நேரத்தில் அவனது உயிர்வாழ்வை நீடிப்பதற்காக அவன் கடவுள் நம்பிக்கையை எடுத்துக் கொள்ளட்டுமே என விட்டுவிடும், வேண்டுமானால் மன்னிக்கும் என்று கூடச் சொல்லலாம், மனப்பான்மை எமக்கு வரவேண்டும். இன்னும் பாருங்கள் வாழ்க்கையில் பலபேர் வெற்றியின் உச்சியில் கடவுளை அவ்வளவு தூரம் நினைக்த் தவறி விடுகிறார்கள். ஏலாத போது தான் ஒரு tonic போல கடவுளைத் தேடுகிறார்கள். இப்போ நிஜ உலகத்தில கஸ்ரப்படும் போது ஒருவனிடம் உதவி பெற்று விட்டு நல்லா வந்தவுடனை அவனை யாரென்று கேட்டோமென்றால், அடுத்த முறை நாம் உதவி கேட்டால் அவன் நாயைத் தான் அவிழ்த்து விடுவான். ஆனா இந்த கடவுள் நம்பிக்கை வந்து, அப்பவும் அவனிற்குக் கை கொடுக்கும். இதை ஏன் நாங்கள் கெடுப்பான்?

மற்றது, ஒரு பலவீனமான ஆள் எனத் தன்னைத் தானே நினைத்து, வெளியில் பிற மனிதரிடம் உதவி கேட்க வெட்கப்பட்டு ஒருவன் தன்நம்பிக்கையை வழாக்காது உருப்படாது போவதை விட கடவுளுடன் அந்தரங்கத்தில் பேசி உருப்பட்டுப் போகட்டன். நூம் ஏன் அவனை வம்பிற்கிளுக்ன்றோம்.

இனிப்பாருங்கள், இந்த காசு விடயம். உண்மையாச் சொல்லுறன் நான் கஸ்ரப் பட்டு நானா உழைத்த பணத்தை நான் எப்படிச் செலவு செய்யலாம் என ஆராவது சொன்னால் எனக்குக் கெட்ட கோபம் வரும்.

ஏன் நாம் பணம் சம்பாதிக்கி;ன்றோம்? எமக்கு வேண்டும் என்று படுபவற்றை நாம் நினைத்த படி பெற்றுக் கொள்ளலாம் என்று தானே? ஆப்போ ஒருவன் தனக்கு வேண்டியதை தான் செய்ய தானா காசு சேர்த்து தன்ர பாட்டில அதை செய்து அதால கிடைக்கிற சந்தோசத்தை அனுபவிக்க வெளிக்கிடேக்க, நாங்களேன் அவனின்ர சந்தோசத்தில மண்ணப் போட முனையிறம? ஆவ்வளவு முயற்சி செய்து கஸ்ரப்பட்டு வேற ஆரிற்கும் பிரச்சினை இல்லாமல் அவன் தன்ர ஆசையை நிறைவேற்ற முனைகையில், அவனை மடையன் என்று கூறி எம்மை நாம் உயர்த்துவது சற்று அடாவடி போலவும் சிலரிற்குத் தெரியலாம் அல்லவா.

இனிப்பாருங்க, கல்லிற்குப் பாலூத்தி தாயக நிதியை நாசமாக்குறானே என நாங்கள் சொல்கிறோம்.அனைத்து வழங்களையும் தாயகத்திற்கு ஒதுக்காம இப்பிடி அழிக்கிறானே என ஆதங்கப் படுகின்றோம். அப்படி தன்னுடைய அனைத்தையும் பொது நலனிற்காக ஒதுக்கிற ஒருத்தர் மற்றையவரும் அப்படிச் செய்யேல்லையே என ஆதங்கப்படுவது நியாமானது தான் புரிந்து கொள்ளக் கூடியது தான். ஆனால் உலகம் அவ்வாறு இல்லை. கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ, தனக்குப் பின் தான் தானம் என்பது தான் பலரது நடைமுறையாக உள்ளது. அதுக்காக அவர்கள் அப்படித்தான் என நாங்கள் முயற்சி ஈனமாக இருக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. எமது ஆதங்கம் ஏன் பிறக்கிறது என்பதனை அவர்கறிக்குப் புரிய வைக்கவும் அதனால் எமது பொது நல எண்ணத்திற்கு நன்மை ஏற்படுத்தவும் அவ்வாறான ஆதங்கம் உடைய ஒவ்வொருவரும் முனையலாம்.

இப்ப பாருங்க விடயங்களைத் திறந்த மனதோடு அணுகி சரியா எடுத்துரைக்கும் போதும் எமது பொது நல நோக்கிற்கு அதிக லாபம் கிடைக்கச் செய்ய நம் அனைவராலும் முடியும் (தேவை கருதிச் சொல்லுகிறேன் இதை நான் வெறும் இணையத்தளப் பார்வையளானாக, arm-chair critique காகச் சொல்லவில்லை). நாங்கள் தானே சொல்லுகிறோம் எங்களிற்குப் பொதுநலம் அதிகம் என்றும் அதால சுயநல செலவீனங்களைப் பார்க்கையில் எங்களிற்கு கோபம் கட்டுப்படுத்த முடியவில்லை என்று. நம்மள நாமளே பொதுநல வாதிகளாக் கூறிக் கொண்டால் மட்டும் போதுமா? நாம் தானே முயல வேண்டும். எல்லாரும் ஒரே மாதிரிச் சிந்திச்h மொத்தப் பழுவில் ஒவ்வொருவருடைய பங்கும் கணிசமாக் குறையுந் தான் ஆனால் நடைமுறை அப்பிடி இல்லையே. இப்ப பாருங்க கடவுள் நம்பிக்கை இல்லாத எத்தினை பேர் B.M.W ஓடுகிறார்கள். கல்லிற்குப் பாலூற்றுவது போல் இதுவும் நமக்கு ஆத்திரம் வரணுமல்ல. ஏனுங்க பிரயாணத்திற்குத் தான் பொதுப் போக்கு வரத்து இருக்கே அப்புறம் எதற்கு தனிக் கார். சுரி அப்பிடித் தான் கார் வேண்டும் என்றாலும் எதற்கு ஆடம்பரக் கார். போது நலனிற்குக் கொடுக்கலாம் எல்லா இந்தக் காசை என்று கூறுகிறோமா?

இப்பா பாருங்க அனைத்து மக்களுமா போராளியானாங்க. நம்மளே ஓடி வந்து தானே இங்க பொது நலம் பேசுறோம். இது கூட பலரிற்கு அநியாயமாப் படலாம் இல்லியா. ஆனா நாங்க என்ன சொல்லுறம், ஓடி வந்தாப் போல நாங்க சும்மாவா இருக்கிறம். காசு குடுக்கேல்லையா. புpரச்சாரம் பண்ணேல்லையா. இன்னும் சொல்லப் போனால் நாங்க இஞ்ச வந்திருக்காட்டி இன்டைக்கு எப்பிடிஇருக்கும் நிலைமை எண்டல்லோ கதைக்கிறம். அது மாதிரி கல்லுக்குப் பாலுத்துறவன் சில சமயம் சொல்லலாம், நான் ஒன்றிற்கும் உருப்படாத பயலா ஆசுப்பத்திரியில இருக்கிறதை விட சில பங்கு கடவுள் நம்பிக்கைக்குச் செலவிடுவதனால் என்னாலும் சற்றேனும் பொது நலத்திற்கு உதவ முடிகிறது என்று சொல்லலாம் எலலோ.

நாங்கள் தான் அறிவாளிகள் என்றாலும் சில சமயம், எங்களிற்குச் சில கோணங்கள் புலப்படாமல் போக வாய்ப்பு இருக்குமெல்லோ.

மனிதர்கள், அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களோ இல்லையோ, வித்தியாசமானவர்கள். முரண்பாடுகள, பலவீனங்கள், பலங்கள் என பலதரப்பட்டவர்கள். எல்லாரும் ஆரோக்கியமா சாப்பிட்டு, உடற்பயிச்சி செய்து சமூக நலன் பேணி வாழ்ந்தால் மருந்துகளின் தேவை குறைவாக அமையலாம். ஆனால் நமது சமூகத்தில் மருந்துகள் தேவைப்பட்டுக் கொண்டும் அதனால் பார்மசூட்டிக்கல் கொம்பனிகள் பில்லியன்களை அள்ளிய படியும் தானே இருக்கின்றது. அதைச் சொல்லத் தான் ஞாபகம் வருகுது, கடவுள் நம்பிக்கை மக்களிற்கு இருப்பதும் புலம் பெயர் தேசத்தில் பொருளாதாரத்திற்கு உதவாமல் இல்லை (ஊரில் கோயிற் திருவிழா ஆடம்பரங்கள் வந்ததும் இதனால தான்). குனடாவில் அறுகம் புல்லு சாணி முதல் நீத்துப் பூசணிக்காய் மாவிலை வரை இறக்குமதி நடக்குது.

இப்போ, கடவுள் நம்பிக்கையால முயற்சி அற்று மனிதன் வாழ்கிறான் என்ற சிந்தனை உள்ளவர்கள், அந்தச் சிந்தனைக்குத் தாம் எப்படி உரிமையுடையவர்களோ அது போல, தன்நம்பிக்கை அற்று முயற்சி அற்று இருப்பவன் தன்நம்பிக்கையோடு முயல்வதற்குக் கடவுள் நம்பிக்கை உதவுது என்ற சிந்தனையும் இருக்கலாம் என ஒத்துக் கொள்ளின் இந்த விவாதமே தேவை அற்றது.

Link to comment
Share on other sites

இன்று மேலை நாடுகளில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்ட இடங்களில் யாராவது புகைப்பிடித்ததை கண்டிருக்கிறோமா? இல்லையே! ஆனால் இங்கு சர்வாதிகாரமும் இல்லையே?!

Racism costs you! :)

நான் புகைபிடித்தால் எனக்கு அருகிருப்பவரிற்கு என்னை விட ஆபத்து. எனது சுதந்திரம் அவரிடம் அத்து மீறுகிறது. ஆனால் நான் எனது மனதிற்குள் பிள்ளையார் அப்பனே என்றால் ஆரிற்கு என்ன பிரச்சினை? இது யாருடைய சுதந்திரத்தை அத்து மீறுகிறது.

ஆனால் சுதந்திர அத்து மீறல்கள பாதுகபாப்பு இன்மை முதலியன என்ன வடிவில் வந்தாலும் அரசானது சட்ட மியற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதில் கூட பாம்பு கொல்லக் காடு கொழுத்தாத வகையில் சட்டம் வேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழத்தைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியான சட்டம் தமிழர்களை சாதியில் இருந்து விடுவிக்கும் என்று நான் உண்மையாகவே நம்பவில்லை.

எப்படி இந்தியாவில் தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள், வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றனவோ, அதே நிலைதான் வரும்.

ஆகவே ஒரு 50 வருடம் சர்வாதிகார ஆட்சியில் சாதி, வரதட்சணை போன்றவைகளை தடை செய்து வைத்திருந்தால், அடுத்த தலைமுறை சாதி என்றால் என்னவென்று தெரியாமலேயே வளரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியான சட்டம் தமிழர்களை சாதியில் இருந்து விடுவிக்கும் என்று நான் உண்மையாகவே நம்பவில்லை.

எப்படி இந்தியாவில் தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள், வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றனவோ, அதே நிலைதான் வரும்.

ஆகவே ஒரு 50 வருடம் சர்வாதிகார ஆட்சியில் சாதி, வரதட்சணை போன்றவைகளை தடை செய்து வைத்திருந்தால், அடுத்த தலைமுறை சாதி என்றால் என்னவென்று தெரியாமலேயே வளரும்.

சட்டத்தின் பிடியில் நாட்டைக்கொண்டுவர 3 விடயங்கள் தேவை

  1. ஊழலற்ற ஆட்சி
  2. ஊழலற்ற ஆட்சி
  3. ஊழலற்ற ஆட்சி
விடுதலைப்புலிகளிடம் அது இருக்கிறது. இந்தியாவிடம் அது இல்லை.

இது தவிர வேறுபல உபரி விடயங்களும் எமக்கு சாதகமாக உள்ளன.

*)இந்தியா போன்ற பெரிய diverse கலாசாரம் எம்மிடம் இல்லை.

*)சிறிய நாடு

*)இந்தியாவுடன் ஒப்பீட்டளவில் intensity குறைந்த சமூகப் பிரச்சனைகள்

போன்றன

Link to comment
Share on other sites

இன்னுமொருவன், பண்டிதர்

இப்ப அடிப்படைப் பிரச்சனை என்ன வென்றால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் அடுத்து சந்திக்கப் போவது வரலாறுகாணாத ஒரு தீக்குழிப்பு. அதை சிங்களத்தோடு சேர்ந்து முன்னெடுக்கப் போவது சர்வதேசம். அதை தாக்குப்பிடித்து வென்றால் தான் சுதந்திரம் இல்லாவிட்டால் 30 வருட கால போராட்டத்திற்கும் 18000 மேற்பட்ட மாவீரர்களிற்கும் 1.5 லட்சம் மக்களின் இழப்பிற்கு அர்த்தமில்லாது போகும். அதாவது எமது பிரிந்து சென்று சுதந்திர தமிழீழம் அமைப்பதற்கான உறுதிப்பாடு ஒற்றுமையை உச்சமாக சோதிக்கும் ஒரு அமிலப் பரீட்சை.

இதற்கு ஒரு முக்கிய தேவை பொருளாதாரம். ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை பேண பராமரிக்க, இழப்புகளை சரி செய்ய, புதியவற்றை தேவைகளிற்கு ஏற்ப கட்டியெழுப்ப மாத்திரமல்ல. புதிதாக பிரதேசங்களையும் மக்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அவர்களிற்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இன்று போல் சிறீலங்காவிலோ வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களிலோ நம்பியிருக்காது பல வருடங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு பாரிய சவால் இருக்கு. இதற்கு அங்கு அந்த வளம் இருக்கு இந்த வளம் இருக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்து பயனில்லை. நாம் பிரிந்து செல்வதில் உறுதியாக இருக்கிறோம் என்றால் அந்த உறுதியை உடைக்க சர்வதேசமும் சிங்களமும் இந்தியாவும் தரும் அழுத்தங்கள் சோதனை என்பவற்றின் வடிவங்களாக இராணுவ பொருளாதார அரசியல் இராஜதந்திர நகர்வுகள் இருக்கும். எமது எந்த நடவடிக்கைகளிற்கான அங்கீகாரமும் இருக்காது, அது கொள்முதலாகவும் இருக்கலாம் ஏற்றுமதியாகவும் இருக்கலாம்.

வருமானம் இல்லாது பல லட்சம் முதல் சில மில்லியன் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பொருளாதாரத்தை திரட்டிக் கொடுக்க வேண்டிய கடமை புலம்பெயர்ந்தவர்களிடம் மாத்திரம் தான் இருக்கு. அவர்கள் மட்டும் தான் இதற்கு நம்பியிருக்க முடியும். இது வந்து வெள்ள நிவாரணம் சுனாமி நிவாரணம் என்று சில வாரங்கள் மாதங்கள் செய்து போட்டு விடும் கதையாக இருக்கப் போவது இல்லை. சில முதல் பல வருடங்கள் நடக்கும் தொடர் அமிலப் பரீட்சையில் நம்மவர்கள் தற்காத்துக் கொள்ள தொடர்ச்சியான பங்களிப்பு இதுவரை கொடுத்ததை விட பலமடங்கு அதிகமா அளவில் தேவை.

இதை எப்படி சமாளிக்கப் போகிறோம்? எங்கிருந்து ஒரு தனி நாட்டை நிர்வகிக்கக் கூடி அளவிலான வளத்தை தொடர்ச்சியாக திரட்ட முடியும்?

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் திரட்டப்படும் நிதி எவ்வளவு? அவர்கள் ஈட்டும் இலாபம் என்பதைவிட வரவு என்ன என்பது தான் முக்கியம். அவர்களுடைய செலவுகளில் பெருமளவிலானது ஒரு எழிமையான வழிப்பாட்டுத் தலத்தை மன ஆறுதலை தருவதற்கும் கலாச்சாரம் பண்பாட்டில் மக்கள் ஒன்று கூடுவதற்குமான இடத்தை பேணுவதை விட மிக ஆடம்பரமானது.

நம்மவர்கள் தமது சொந்த வாழ்க்ககையில் எந்தளவிற்கு செலவுகளை குறைத்து தாயகத்துக்கு தமது பங்களிப்பை அதிகரிப்பார்கள் என்பது சந்தேகமானது. எனவே புலம்பெயர்ந்தவர்களில் பொருளாதார ஆற்றலில் எந்த பகுதி திசை திருப்பக் கூடி நிலையில் இருக்கிறது என்று யோசியுங்கள். Where do we have the room & potential to unlock the funds out of diaspora.

ஒரு நாட்டில் அவசரகால சட்டத்தில் சில உரிமைகள் மறுக்கப்படுகிறது அல்லது ஆடம்பரமாக கருதப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்படுகிறார்கள். அது போலவே புலம்பெயர்ந்தவர்கள் சிந்திக்கும் காலம் இன்று உருவாகி உள்ளது. இதற்கு தனிமனித சுதந்திரம், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், மக்கள் இயலாமையில் செய்கிறார்கள், பாசத்தில் அங்கலாய்க்கிறார்கள், 100டொலருக்கு அருச்சனை செய்யாட்டி மனநோயாளி ஆகிவிடுவினம் எண்ட விவாதங்கள் பயன் இல்லை.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன், பண்டிதர்

இப்ப கதைக்கிறீங்கள் பாருங்கள், இது கதை.

ஓரு விடயத்தை விரைவா சொல்லிப் போட்டு அப்பால் நர்கிறேன். நீங்கள் சொல்கிறீர்கள் சொந்த செலவை மககள் குறைப்பார்கள் என உங்களிற்கு நம்பிக்கையின்மையால் அவசரகால நிதியாக எதை அவிழ்க்கலாம் என்று நீங்கள் யோசித்ததில், நீங்கள் தெரிவு செய்தது உங்களைப் பாதிக்காத உங்களிற்கு உடன்பாடில்லாத கடவுள். சற்று வேடிக்கையாக இருக்கிறது. கடவுள் செலவுகளையும் மக்களின் சொந்தச் செலவாக பார்க்க நாம் முதலில் பழகிக் கொள்ளோணும். அதோட எம்மைப் பாதிக்காத வகையில் மற்றவரை வைத்து எவ்வாறு பங்களிப்பை அதிபரிப்பது என்று சிந்திப்பதையும் தவிர்கோணும்.

நாளிலும் பொழுதிலும் நாங்கள் பாடுபட வேண்டும்.

அத்தோடு கடவுள் நம்பிக்கையை விட்டு விடுங்கள் என்பதற்குப் பதிலாக, ஆடம்பர திருவிழாக்கள் முதலியவற்றைக் குறைத்து நிதி தாருங்கள் என கேளுங்கள். அது மட்டுமல்லாது, நீங்கள் மேலே சொன்னது போல சொந்த செலவுகளை விடுவம் எண்டில்லாது அதிலும் பங்கு கேட்டு நாங்கள் செல்ல வேண்டும். நிநைய வேலை இருக்கு எங்களிற்கு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிறைவான முழு விடுதலை வரும் வரை அயராது நாமும் ஒரு போராளி போன்று உழைக்கோணும். இப்ப கதைக்கிறமெல்லோ இதில எனக்கு முழதான உடன்பாடு இது முற்றிலும் ஆரோக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ எழுதிய ஞாபகம்.. பாரிஸில் தேர்த்திருவிழாவுக்கு 50 000 பேர் போயிருந்தார்கள்.. ஆனால் அண்மையில் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்கு ஒரு சில நூறு பேர்களே போயிருந்தார்கள் என்று.. தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு போதாது. அதைப்போலவே பலவிடயங்களில் விளக்கமற்ற சமூகமாக உள்ளோம்.. பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்களை ஆராயாது போகிறபோக்கில் வாழ்வதும், மாற்றங்களை உள்வாங்கப் பின்நிற்பதும் எம்முள் உள்ள பாரிய பிரச்சினைகள்..

சாதி, சமயம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற விடயங்களிலும் இப்படியான நிலைதான்..

ஒரு கேள்வி.. ஆயுதப் போராட்டம் உருவாகாமல் விட்டிருந்தால் இன்று தாயகத்தில் நிலைமை எப்படி இருந்திருக்கும்? சாதி, சமயப் பிரச்சினைகளை மட்டும் கருத்தில் கொண்டு யாராவது விடை தாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஒன்று இல்லாமலிருந்தால்............சாதி முதலாமிடத்திலும் மதம் இரண்டாமிடத்திலும் கோலோச்சியிருக்கும்.

Link to comment
Share on other sites

எனக்கு நம்பிக்கையில்லாத கடவுளிற்கு செலவிடும் பணத்திலை கை வைப்பது அல்ல நோக்கம். பெரிய அளவில் எமது புலம் பெயர்ந்த சமூகத்தின் பெரும்பான்மையினரால் அவர்களது ஆற்றல் ஒரு வகையில் ஒற்றுமையாக எங்கு விரையமடிக்கப்படுகிறது?

மக்களின் மன ஆறுதலுக்கு நிம்மதிக்கு ஒரு எழிமையான வழிபாட்டுத் தலம் வேணும் அது பலருக்கு ஒரு அடிப்படையான தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எல்லோரும் நாத்திகராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால் அதற்கு ஆயிரம் பத்தாயிரம் அல்ல நூறாயிரம் என்ற அளவுகளில் செலவு செய்து கருங்கல்லுகள் தேர்கள் இறக்குமதி செய்ய வேண்டுமா? கீரைக் கடை கடலைக் கடை போல இத்தனை கேவில்கள் வேண்டுமா?

இன்று எம்மவர்கள் இந்து மதத்தின் கடவுள் நம்பிக்கையின் பெயரால் செய்பவை மிதமிஞ்சிய ஆடம்பரங்கள். அது போக பெரும்பாலான சினிமா சின்னத்திரை போன்றவற்றின் மூலமும் இந்த தவறான நம்பிக்கைகளும் ஏனைய சீரழிவுச் சிந்தனைகளும் தான் ஊட்டப்படுகின்றன வலுப்படுத்தப்படுகின்றன மேலும் மேலும்.

இவற்றைப் பற்றி தெளிவு பெற பகுத்தறிவு தேவை. நம்மவர்கள் சிக்கித் தவிக்கும் இந்த அவலத்தை சொல்லும் முறை விரக்த்தியால் தவறாக இருக்கிறது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கதைக்கிறீங்கள் பாருங்கள், இது கதை.

...

இப்ப கதைக்கிறமெல்லோ இதில எனக்கு முழதான உடன்பாடு இது முற்றிலும் ஆரோக்கியமானது.

இன்னுமொருவன்,

நீங்கள் மேலே சொன்னவற்றை நான் இவ்வாறு

"சும்மா நாவலரையும், சாதி பற்றிய பக்கம் பக்கமான வியாக்கியானங்களும் சொல்பவர்கள் (இது விடயங்களில் தங்கள் தங்கள் பாண்டித்"தீ"யத்தைக் காட்டுவதற்காக), இன்று புலம் பெயர்ந்த தேசத்தில் சாதியை எவ்வாறு ஒழிப்பதன் மூலம் மக்களை தேசியத்தை நோக்கி அணிதிரட்டலாம் என்று சிந்தியுங்கள். அல்லது தேசியப்பாதையைல் மக்களை திரட்ட சிறந்த வேறு என்ன வழிகள் என்ன என்று சிந்தியுங்கள். சிங்கள பரப்புரை இயந்திரத்தை எவ்வாறு செயலிழக்க வைப்பது என்று சிந்தியுங்கள். உங்கள் கருத்தை முன் வையுங்கள். கருத்தாடுவோம். மற்றபடி இப்படி பழைய கதை பறைய நேரத்தை செலவழிப்போர் களத்தில் நிற்கும் போராளிகளிற்கு துரோகம் செய்வோரே!" என

ஒரு சில நாட்களுக்கு முன் சொன்ன போது நீங்கள் இப்படி சொன்னநீங்கள்.

குறுக்காலை போவான்,

எனது இன்றைய பதிவின் சாராம்சம்

"எனவே, எமது மக்களை ஒன்று படுத்த வழி, இடையறாத தேசியம் தொடர்பான விழிப்புணர்வூட்டலே. இதற்கு ஊடகங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்றரீதியில் சிந்திக்க வேண்டும்."

என்பதாகவும்

"தமது இந்த கவலையை எவ்வாறு ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவது என்று இந்த மக்களுக்கு ஒரு நல்ல தலமைத்துவமும் வழிகாட்டலும் தேவை. "

என்பதாகவுமே இருந்தது.

எனிவே,

இப்பவாவது நாங்கள் எல்லாரும் ஒரே அலைவரிசைக்கு வந்தது பற்றி எனக்கு மட்டற்ற சந்தோசம். இனி நாங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்போம்.

தொடரும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியிலுள்ள மக்களை போருக்கு பொருளாதார ரீதியில் தயார் படுத்த புதுவை ஐயா அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்,

தன்னைத்தானே தாங்கும் வலுவுள்ளவனே

எந்தப் புயலிலும் இடிந்துவிழமாட்டான்.

உடனே உழுது பயிரிடத்தொடங்கு,

உன்னால் முடிந்த உரமெறிந்துகொள்,

அறுவடை செய்,

அவதானமாகப் பேண்,

கத்தரியை வற்றலாக்கு,

கிழங்கை ஒடியலாக்கு,

கீரிமீனைக் கருவாடாக்கு,

கேக்கை நிறுத்து,

பேக்கரியில் பாண்மட்டும் போடு,

வீட்டுக்குப் பத்து மரவள்ளி நடு,

வேலியில் முல்லையும், முசுட்டையும் படரவிடு,

நெல்லை அட்டாளையில் அடுக்கு,

அன்றாடத் தேவைக்கு மட்டும் அரிசியாக்கு,

அதாவது மக்களுக்கான பொருளாதார அறிவுரையை மிகவும் இலகு படுத்தி சொல்லப்படுகிறது. இத்தோடு நின்றுவிடாது இன்னும் பலவிதமான ஊடகங்கள் தெருக்கூத்து போன்ற எல்லாமுறைகளாலும் மக்களை அடைந்து மக்களுக்கு வரப்போகும் இன்னல்களை விளங்கப்படுத்தி அவர்களை தயார்படுத்துகிறார்கள்.

ஆனால், இங்கு இன்னும் போர்ப்பறை முழங்கவில்லையே?

இங்கு (ஒவ்வொரு நாட்டிலும்) ஒரு குழு வரப்போகும் இன்னல்கள் எவை எவ்வாறு மக்கள் தம்மை தயார்படுத்தவேண்டும போன்றவற்றை முதலில் பட்டியலிட வேண்டும். பின்னர் அவற்றை ஊடக வடிவில் அவ்வவ் ஊடகத்திற்கேற்றவாறு மாற்றி (வானொலி, தொலைக்காட்சி, பட்திரிகை, இணையம் பொன்ற) மக்களுக்கு சொல்லவேண்டும். அந்தந்த நாட்டிலுள்ள "நிலமை"க்கேற்ப தொனியை மாற்றி இந்தப் பிரச்சாரம் செய்யப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக சில விடயங்களும், எல்லாநாட்டிற்கும் பொதுவாக சிலவிடயங்களும் உள்ளன. முதலில் நாங்கள் பொதுவான விடயங்களைப் பற்றி சேர்ந்துவிவாதிக்கலாம். விவாதப் பொருளாக, மக்கள் ஒரு நீண்டகால அடிப்படையில் தமிழீழத்துக்கு முண்டு கொடுக்க வேண்டிவந்தால் (அண்மையில் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டது போல) என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர், ஒவ்வொரு நாடு சம்பந்தமாகவும் இத்தளத்திலேயே குழுமங்களாக விவாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

எனக்கு நம்பிக்கையில்லாத கடவுளிற்கு செலவிடும் பணத்திலை கை வைப்பது அல்ல நோக்கம். பெரிய அளவில் எமது புலம் பெயர்ந்த சமூகத்தின் பெரும்பான்மையினரால் அவர்களது ஆற்றல் ஒரு வகையில் ஒற்றுமையாக எங்கு விரையமடிக்கப்படுகிறது?

மக்களின் மன ஆறுதலுக்கு நிம்மதிக்கு ஒரு எழிமையான வழிபாட்டுத் தலம் வேணும் அது பலருக்கு ஒரு அடிப்படையான தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எல்லோரும் நாத்திகராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால் அதற்கு ஆயிரம் பத்தாயிரம் அல்ல நூறாயிரம் என்ற அளவுகளில் செலவு செய்து கருங்கல்லுகள் தேர்கள் இறக்குமதி செய்ய வேண்டுமா? கீரைக் கடை கடலைக் கடை போல இத்தனை கேவில்கள் வேண்டுமா?

இன்று எம்மவர்கள் இந்து மதத்தின் கடவுள் நம்பிக்கையின் பெயரால் செய்பவை மிதமிஞ்சிய ஆடம்பரங்கள். அது போக பெரும்பாலான சினிமா சின்னத்திரை போன்றவற்றின் மூலமும் இந்த தவறான நம்பிக்கைகளும் ஏனைய சீரழிவுச் சிந்தனைகளும் தான் ஊட்டப்படுகின்றன வலுப்படுத்தப்படுகின்றன மேலும் மேலும்.

இவற்றைப் பற்றி தெளிவு பெற பகுத்தறிவு தேவை. நம்மவர்கள் சிக்கித் தவிக்கும் இந்த அவலத்தை சொல்லும் முறை விரக்த்தியால் தவறாக இருக்கிறது தான்.

உண்மை தான்,

பொதுவாகப் பார்ப்போமேயானால் (அனைவரும் இவ்வாறு என்றில்லை அநேகமானவர்கள்):

கணவன், மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேர் மட்டும் வாழ்வதற்கு 4000 சதுர அடியில் வீடு வாங்குதல், தமது கடன் பெறும் தகுதியின் உச்சக்கட்டம் வரை தமக்கு கிடைக்கக் கூடியதாக உள்ள கடன்களை எடுத்து பகட்டின் உச்சியில அதற்கமைவான கார், உடைகள், தளபாடங்கள், குழந்தைகளிற்கான விளையாட்டுச் சாமான்கள், இலத்திரன் இயல் உபகரணங்கள், இதர ஆடம்பரப் பொருட்கள் இப்படி அனைத்து முனையிலும் நம்மவாகள் பகட்டும் ஆடம்பரமும் விரும்புபவர்களாக வாழ்கின்றார்கள் என்பது உண்மை தான். அது மட்டுமல்ல சுற்றுலாக்கள், காம்பிங் இப்படி உண்மையில் ஆடம்பர விரும்பிகளாகத் தான் பொதுவாக நம்மவாகள் அனைத்து முனைகளிலும் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

நீங்கள் [இப்படிசொன்னநீங்கள்.

குறுக்காலை போவான்,

எனது இன்றைய பதிவின் சாராம்சம்

"எனவே, எமது மக்களை ஒன்று படுத்த வழி, இடையறாத தேசியம் தொடர்பான விழிப்புணர்வூட்டலே. இதற்கு ஊடகங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்றரீதியில் சிந்திக்க வேண்டும்."

என்பதாகவும்

"தமது இந்த கவலையை எவ்வாறு ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவது என்று இந்த மக்களுக்கு ஒரு நல்ல தலமைத்துவமும் வழிகாட்டலும் தேவை. "

என்பதாகவுமே இருந்தது.

வே,

இப்பவாவது நாங்கள் எல்லாரும் ஒரே அலைவரிசைக்கு வந்தது பற்றி எனக்கு மட்டற்ற சந்தோசம். இனி நாங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்போம்.

தொடரும் ...

புண்டிதர் நீங்கள் நான் குறிப்பிட்டதாகச் சொன்னவற்றிற்கான பதிவு இலக்கம் என்ன வென்று சொல்லமுடியுமா?

மற்றையது, நான் குறுக்கால போவானிற்கு சொன்ன “இப்ப கதைக்கிறியளே இது நியாயம் என்பது அவர் கடவுள் பற்றைத் துற என முதல் சொன்னதிற்கும் ஆடம்பரம் துற என பிறகு சொன்னதிற்கும் இருந்த வித்தியாசத்தைக் குறித்துச் சொன்னது. திரிக்காதீர்கள். மற்றபடி தாய பங்களிப்பு தொடர்பில் இங்கு யாரும் முரண்பட்டதாய் நானறியவில்லை. முரண்பாடு கடவைள மற என்பதில் தான்.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

குறுக்காலை போவான்,

எனது இன்றைய பதிவின் சாராம்சம்

"எனவே, எமது மக்களை ஒன்று படுத்த வழி, இடையறாத தேசியம் தொடர்பான விழிப்புணர்வூட்டலே. இதற்கு ஊடகங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்றரீதியில் சிந்திக்க வேண்டும்."

என்பதாகவும்

"தமது இந்த கவலையை எவ்வாறு ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவது என்று இந்த மக்களுக்கு ஒரு நல்ல தலமைத்துவமும் வழிகாட்டலும் தேவை. "

என்பதாகவுமே இருந்தது.

எனிவே,

இப்பவாவது நாங்கள் எல்லாரும் ஒரே அலைவரிசைக்கு வந்தது பற்றி எனக்கு மட்டற்ற சந்தோசம். இனி நாங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்போம்.

தொடரும் ...

பண்டிதர் ஐயா நீங்கள் செல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களது இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த தேசிய உணர்வை வலுப்படுத்தவது தான் ஒரே வழி என்பது சரி.அதுக்கு ஊடகங்கள் பெரும் பங்காற்றவேண்டும் என்பதும் உண்மை.ஆனால் நான் தெருவிலை நிண்டு பொறிக்கித்தனம் செய்து போட்டு ஊடகத்தில போய் சமூக சீர் திருத்தம் பற்றிக் கதைச்சால் எப்படி ஐயா மக்கள் எற்றுக் கொள்ளுவினம்.அதிலும் அவை தாங்கள் தான் ஊடகங்களின்ரை முக்கியமான தூண்கள் என்று கதைச்சால் அவையை வைத்துத்தானே ஐயா மக்கள் அந்த ஊடகங்களைப் பாhர்ப்பினம். சமூத்துக்கு கருத்துச் சொல்லுறவை முதல்லை தாங்கள் முன்மாதிரியா நடந்து காட்டினால தானே மக்கள் அதை பின்பற்றுவார்கள்.

இதைவிட ஊடகங்களுக்குள்ளேயே பிறப்பாலை தகுதி பார்க்கிற நிலைமை இருக்கிறபோது ஊடகங்களை வைத்து எங்கடை சமூகத்தை ஒன்று படுத்தலாம் என்று மூத்த தலைமுறையினரான நீங்களும் இளைய தலைமுறையினனான நானும் கனவு தான் காணலாம்;.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புண்டிதர் நீங்கள் நான் குறிப்பிட்டதாகச் சொன்னவற்றிற்கான பதிவு இலக்கம் என்ன வென்று சொல்லமுடியுமா?

மற்றையது, நான் குறுக்கால போவானிற்கு சொன்ன “இப்ப கதைக்கிறியளே இது நியாயம் என்பது அவர் கடவுள் பற்றைத் துற என முதல் சொன்னதிற்கும் ஆடம்பரம் துற என பிறகு சொன்னதிற்கும் இருந்த வித்தியாசத்தைக் குறித்துச் சொன்னது. திரிக்காதீர்கள். மற்றபடி தாய பங்களிப்பு தொடர்பில் இங்கு யாரும் முரண்பட்டதாய் நானறியவில்லை. முரண்பாடு கடவைள மற என்பதில் தான்.

இதுதான் இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry264186

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சமயம் பற்றிய விவாதம் இன்னும் தொடரும் போலவல்லோ இருக்கிறது? :) அப்படியானால் நான் கொஞ்சம் கழித்து வந்து இணைந்துகொள்வேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதர் ஐயா நீங்கள் செல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களது இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த தேசிய உணர்வை வலுப்படுத்தவது தான் ஒரே வழி என்பது சரி.அதுக்கு ஊடகங்கள் பெரும் பங்காற்றவேண்டும் என்பதும் உண்மை.ஆனால் நான் தெருவிலை நிண்டு பொறிக்கித்தனம் செய்து போட்டு ஊடகத்தில போய் சமூக சீர் திருத்தம் பற்றிக் கதைச்சால் எப்படி ஐயா மக்கள் எற்றுக் கொள்ளுவினம்.அதிலும் அவை தாங்கள் தான் ஊடகங்களின்ரை முக்கியமான தூண்கள் என்று கதைச்சால் அவையை வைத்துத்தானே ஐயா மக்கள் அந்த ஊடகங்களைப் பாhர்ப்பினம். சமூத்துக்கு கருத்துச் சொல்லுறவை முதல்லை தாங்கள் முன்மாதிரியா நடந்து காட்டினால தானே மக்கள் அதை பின்பற்றுவார்கள்.

இதைவிட ஊடகங்களுக்குள்ளேயே பிறப்பாலை தகுதி பார்க்கிற நிலைமை இருக்கிறபோது ஊடகங்களை வைத்து எங்கடை சமூகத்தை ஒன்று படுத்தலாம் என்று மூத்த தலைமுறையினரான நீங்களும் இளைய தலைமுறையினனான நானும் கனவு தான் காணலாம்;.

நவம் அவர்களே,

இன்று யாரோ குறிப்பிட்டது போல இது ஒரு அவசரகாலம (Emergency). வரப்போகும் காலம் கொடியது. அது வந்தபிற்பாடு எமது வேறுபாடுகள் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. அது வரும் வரை தான் நானும் நீங்களும் இவ்வாறு பேசிக்கொள்ளலாம். வந்தபிற்பாடு பேச்சுக்கு நேரமிருக்காது என நினைக்கிறேன். எவ்வாறு 95 இடப்பெயர்வின்போது மக்கள் தமது வேறுபாடுகளுக்கு இடங்கொடுக்கமுடியாமல் போனதோ அப்படி ஒரு காலம் வரலாம். எனவே தான் இருக்கும் இந்த சொற்ப காலத்தில் வரப்போகும் வினையைப்பற்றி கதைப்போமே என்பது எனது தாழ்மையான கருத்து. மற்றவை கதைக்க முன்னர் பலகாலம் இருந்தது. இனி பல சந்தர்ப்பம் வரும். ஆனால் இப்போ வரப்போகிறதே, அதைப்பற்றி கதைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் தான். அது இது தான்.

நவம் அவர்களே,

உங்களின் கூற்றுக்கு நான் சரியாகப் பதிலளிக்கவில்லை என உணர்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்சனைகளை நான் முற்றுமுழுதாக உணர்கிறேன். ஆனால், எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இன்றைக்கு நாங்கள் எங்களிடம் என்ன வளம் இருக்கிறதோ அதைக்கொண்டு முழுமூச்சாக வேலையை தொடங்கவேண்டும். நான் முதலில் சொன்னது போல நாங்கள் தேசியத்தின் பெயரால் மக்களை ஒருமைப்படுத்த அதன் ஒரு பக்க விளைவாக எமது வேறுபாடுகள் (கு)மறையலாம். இப்போது நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம். அதாவது, we have to prioritize events, எதை முதனிலைப்படுத்தவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

நீங்கள் மேலே சொன்னவற்றை நான் இவ்வாறு

"சும்மா நாவலரையும், சாதி பற்றிய பக்கம் பக்கமான வியாக்கியானங்களும் சொல்பவர்கள் (இது விடயங்களில் தங்கள் தங்கள் பாண்டித்"தீ"யத்தைக் காட்டுவதற்காக), இன்று புலம் பெயர்ந்த தேசத்தில் சாதியை எவ்வாறு ஒழிப்பதன் மூலம் மக்களை தேசியத்தை நோக்கி அணிதிரட்டலாம் என்று சிந்தியுங்கள். அல்லது தேசியப்பாதையைல் மக்களை திரட்ட சிறந்த வேறு என்ன வழிகள் என்ன என்று சிந்தியுங்கள். சிங்கள பரப்புரை இயந்திரத்தை எவ்வாறு செயலிழக்க வைப்பது என்று சிந்தியுங்கள். உங்கள் கருத்தை முன் வையுங்கள். கருத்தாடுவோம். மற்றபடி இப்படி பழைய கதை பறைய நேரத்தை செலவழிப்போர் களத்தில் நிற்கும் போராளிகளிற்கு துரோகம் செய்வோரே!" என

ஒரு சில நாட்களுக்கு முன் சொன்ன போது நீங்கள் இப்படி சொன்னநீங்கள்.

குறுக்காலை போவான்,

எனது இன்றைய பதிவின் சாராம்சம்

"எனவே, எமது மக்களை ஒன்று படுத்த வழி, இடையறாத தேசியம் தொடர்பான விழிப்புணர்வூட்டலே. இதற்கு ஊடகங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்றரீதியில் சிந்திக்க வேண்டும்."

என்பதாகவும்

"தமது இந்த கவலையை எவ்வாறு ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவது என்று இந்த மக்களுக்கு ஒரு நல்ல தலமைத்துவமும் வழிகாட்டலும் தேவை. "

என்பதாகவுமே இருந்தது.

எனிவே,

இப்பவாவது நாங்கள் எல்லாரும் ஒரே அலைவரிசைக்கு வந்தது பற்றி எனக்கு மட்டற்ற சந்தோசம். இனி நாங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்போம்.

தொடரும் ...

பண்டிதர் நீங்கள் இணைத்த அந்த லிங் அன்றைய தினத்தில் உங்களின் கருத்திற்குச் சொல்லவில்லை. சபேசன் என்று நினைக்கிறேன், அவரது கருத்தை நான் படித்து விட்டு எனது பதிலை இடுவதற்குள் உங்கள் பதில் இடப்பட்டிருந்தது. எனது பதிலிலும் நாவலர் இருந்து நீங்களும் அவரைக் கதைக்க இந்தத் தபபவிப்பிராயம் நிகழ்ந்துள்ளது.

எதிர்காலத்திpல் கவனம் அதிகம் செலுத்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதர் ...

அது ஒரு விடயமே அல்ல.

நாங்கள் நல்ல ஒரு விவாதப் பொருளுக்கு வந்திருந்தோம். அதை விடாது தொடர்வோம். இன்னும் பலர் இணைந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்வார்கள் என எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா ஒரு கதைக்குக் கேட்கிறன் (என்ரை பொது அறிவிலை இடி விழ!),

இலங்கையின் சனத்தொகை அண்ணளவாக 20 மில்லியன். இலங்கையின் பொருளாதாரம் 20 பில்லியன் அமெரிக்க டொலர்.

அப்பிடிப்பார்த்தால், தமிழீழத்தின் சனத்தொகை ஒரு 1 மில்லியன். எனவே தமிழீழ பொருளாதாரமும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் என்று சொல்லலாம்தானே?

இனி, வெளிநாடுகளில் 1 மில்லியன் தமிழர் இருக்கிறதாக சொல்லுகினம்.

1 மில்லியன் மக்களும் பங்களிப்பு செய்தால் - வருடத்துக்கு 1,000 அமெரிக்க டொலர்

5 லட்சம் மக்கள் பங்களிப்பு செய்தால் - வருடத்துக்கு 2,000 அமெரிக்க டொலர்

1 லட்சம் மக்கள் பங்களிப்பு செய்தால் - வருடத்துக்கு 10,000 அமெரிக்க டொலர் (கொஞ்சம் கூடிப்போச்சுது)

:mellow: :mellow: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி இங்கை எங்கட ஆக்களின்ரை பொருளாதாரத்தைப்பற்றியும் ஒரு விளக்கம் எங்களுக்கு வேண்டும்:

  • ஆடம்பர திருமணத்தை மக்கள் நிறுத்தினால் திருமணசேவை செய்பவர்களுக்கு பிழைப்பு நின்றுவிடும் (கோல், சோடனை, சாப்பாடு இத்யாதி)
  • ஆடம்பர பொருட்கொள்வனவை நிறுத்தினால் பல வணிகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டி வரும் (உதாரணமாக வீடு வாங்குவோர் அதை தள்ளிப்போட்டால் ரியல் எஸ்டேட் காரருக்கு பிழைப்பு இருக்காது, கார் வாங்குவோர் நிறுத்தினால் டீலர்ஸ் நடத்துவோருக்கு பிழைப்பு இருக்காது, கோயில் ஆடம்பர செலவை நிறுத்தினால் கோயிலுக்கு பிழைப்பு நின்றுவிடும்)
  • மக்கள் பணம் மீதப்படுத்த சமைக்க வெளிக்கிட்டால் அரைவாசி பிசினஸ் மக்னேட்டுகளின் வயிறே காயும் நிலை ஏற்படும்

அதாவது, எம்மவர் செய்யும் பிஸினஸ் எல்லாம் எம்மவருக்குத்தான் (மிகச்சொற்ப விதிவிலக்குகளுடன்). வெளியாட்களுக்கு எப்படி பிசினஸ் செய்வது என்று அவர்களுக்கு தெரியாது. இவர்களின் சாப்பாட்டுக்கடைக்குப் போனால் கொழும்பிலுள்ளது போலவே ஷோகேஸினுள் இலையான் பறக்கும்.

நான் ஒருநாள் நேரில் கண்ட சம்பவம்: ஒரு வெள்ளை தப்பித்தவறி எங்கட ஆட்களின்ரை கடையிலை ஒரு வடை வேண்டித்திண்டு போட்டு, அந்தக்கடை வாசலில் வேண்டுமென்றே ஓங்காளித்து ஓங்காளித்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான், கடைக்காரர் செய்வதறியாது பேந்திக்கொண்டிருந்தார்.

வெளியிலிருந்து எம்மவர்க்குப்பணம் வருவதென்றால் அது தொழிற்சாலைகளின் வேலைசெய்வோரினாலும் மற்றும் வேறு தொழிலகங்களில் வேலைசெய்வோரினாலும் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு வடகொரியா தன்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடைக்கு அணுகுண்டு வெடிச்சு சவால் விட்டதைப்போலவும், ஈரான் தன் மீது வரக்கூடிய அழுத்தங்களுக்கு ஒரு பிடியாக எண்ணையை கொண்டிருப்பதையும் போல எங்களுக்கும் ஏதாவது இருக்கா (கொழும்புத்துறைமுகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைத் தவிர ?)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.