Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருமித்த நாடு என்பதே மிகப்பெரிய விடயமாகும் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சம்பந்தன் எடுத்துரைப்பு

Featured Replies

கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு உள்பட்ட அதியுச்ச அதிகாரப் பகிர்வையே கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும்

 

‘வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்ட கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கோட்­பாட்­டுக்கு இணங்க அதி­யுச்ச அள­வில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்ட தீர்­வையே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக் கொள்­ளும். கூட்­ட­மைப்பு அதில் உறு­தி­யாக இருக்­கின்­றது’ இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும்இ எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் அம்­பா­றை­யில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே தற்­போது வெளி­வந்­துள்­ளது. இது இறுதி அறிக்கை அல்ல. இடைக்­கால அறிக்கை தொடர்­பில் நாடா­ளு­மன்­றில் அடுத்த மாதம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. அதன் பின்­னர் அர­ச­மைப்பு வரை­யப்­ப­டும். அது­வும் அறிக்­கை­யாக வெளி­வந்து அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யான நாடா­ளு­மன்­றில் விவா­திக்­கப்­ப­டும்.
பின்­னர் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் அர­ச­மைப்­பின் இறுதி அறிக்கை நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும்.

அது மக்­க­ளின் ஒப்­பு­த­லைப் பெறு­வ­தற்கு பொது வாக்­கெ­டுப்­புக்­கும் விடப்­பட்டு வெற்­றி­பெற வேண்­டும். அதன் பின்­னரே புதிய அர­ச­மைப்­புக்கு நடை­மு­றைக்கு வரும். தற்­போது இடைக்­கால அறிக்­கை­யின் பின்­னி­ணைப்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு வெளி­வந்­துள்­ளது.

ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தொரு கருத்­தொ­ரு­மிப்பை அடை­வ­தற்­கான நலன்­க­ருதி இடைக்­கால அறிக்­கை­யில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முதன்­மைக் கோட்­பா­டு­களை இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும்இ சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தாக இருக்­கு­மா­யின்இ அவற்­று­ட­னான இணக்­கத்­தைப் பரி­சீ­லிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ராக உள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­கள் முழு­மை­யாக வெற்­றி­பெ­ற­வேண்­டும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்­சிக்கு முடிவு கட்­டப்­பட்­டுள்­ளது.

இலங்கை இனி­மேல் ஒரு­மித்த நாடு. எனவேஇ பிரி­ப­டாத மற்­றும் பிரிக்க முடி­யாத நாட்­டுக்­குள் கூட்­டாட்­சிக் கோட்­பா­டு­க­ளுக்கு இணங்க அதி­யுச்ச அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­ட­வேண்­டும்.

தமிழ்­பே­சும் மக்­க­ளின் தாய­க­மான வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் மீளி­ணைக்­கப்­பட்டு ஒரு மாகா­ண­மாக அமை­தல் வேண்­டும். இந்த நிலைப்­பாட்­டில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறு­தி­யாக இருக்­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு தீர்­வையே கூட்­ட­மைப்பு ஏற்­றுக் கொள்­ளும் – என்­றார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா தலை­மை­யில் அம்­பாறை மாவட்­டத்­தின் கல்­முனை வாடி­வீட்டு விடு­தி­யில் அமைந்­துள்ள ஜெயா மண்­ட­பத்­தில் கூட்­டம் நடை­பெற்­றது.

இந்­தக் கூட்­டத்­தில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­ச­பைத் தேர்­தல் மற்­றும் மாகாண சபைத் தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்­பி­லும் பேசப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/31695.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒருமித்த நாடு என்பதே மிகப்பெரிய விடயமாகும்

p25-2-358da3d23062fdf74bae62680f728ff793cd5776.jpg

 

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சம்பந்தன் எடுத்துரைப்பு

(நமது நிருபர்)

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் நாட்டின் தன்­மை­யா­னது ஒற்றை ஆட்சி முறை என்ற சொற்­ப­தத்­தி­லி­ருந்து ஒரு­ மித்த நாடு என்று மாற்­றப்­பட்­டமை மிகப்­பெரும் 

விட­ய­மாகும் என சுட்­டிக்­காட்­டிய எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், இடைக்­கால அறிக்கை குறித்து தொடர்ச்­சி­யாக 14 நாட்கள் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பிட்ட விட­யங்கள் அனைத்­துமே இறு­தி­யா­னவை அல்ல எனக் குறிப்­பிட்ட சம்­பந்தன், முழு­மை­யான அர­சியல் சாசன உரு­வாக்­கத்தின் போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஏனைய தரப்­பி­னரின் முரண்­பா­டான விட­யங்கள் குறித்த நிலைப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்தும் எனவும் தெரி­வித்தார்.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­பா­றையின் கல்­முனை மாந­க­ரி­லுள்ள ஜெயா மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. காலை 10.30 மணிக்கு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் ஆரம்­ப­மான இக்­கூட்­டத்தில் வெளிவந்­துள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது.

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்கள் குறித்து தெளிவு படுத்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

புதிய அர­சியல் சாச­னத்­திற்­கான செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்டு தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்று அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வௌிவந்­துள்ள இடைக்­கால அறிக்­கையில் விதைந்­து­ரைக்­கப்­பட்ட விட­யங்கள் அனைத்­துமே இறு­தி­யா­ன­தாக கொள்ள முடி­யாது. அவை கொள்­கை­ய­ளவில் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்கம் ஏற்­பட்ட விட­யங்­களே ஆகும். அவை தொடர்பில் மேலும் பல வாத­வி­வா­தங்கள் நடத்­தப்­பட வேண்­டி­யுள்­ளன.

எதிர்­வரும் காலப்­ப­கு­தியில் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக 14 நாட்கள் தொடர்ச்­சி­யான விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்த விவாதம் விரைவில் நடத்­தப்­படும் என நாம் எதி­பார்க்­கின்றோம். அதே­போன்று வழி­ந­டத்தல் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட உப குழுக்­களின் அறிக்­கைகள் குறித்தும் விரி­வான விவாதம் நட­தப்­ப­ட­வுள்­ளது.

முதற்­த­ட­வை­யாக தமிழ் மக்­களின் பங்­கேற்­புடன் ஒரு அர­சியல் சாசன உரு­வாக்கம் நடை­பெ­றுக்­கின்­றது. அந்த செயற்­பாட்டில் ஒற்றை ஆட்சி என்ற சொற்­பதம் நீக்­கப்­பட்டு அதற்கு பதி­லாக ஒரு­மித்த நாடு என்ற சொற்­பதம் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளது. இதுவே மிகப்­பெரும் விட­ய­மாகும். ஒரு­மித்த நாடு என்­பது பிரிக்­கப்­பா­டாத பிளவு படாத நாடு என்­பதைக் குறிக்­கின்­றது.

இதனை விடவும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலும் எமது முன்­மொ­ழிவை செய்­துள்ளோம். அது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளன.

இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பிட்ட விட­யங்கள் தொடர்பில் பிர­தான கட்­சிகள் உள்­ளிட்ட சில அர­சியல் கட்­சி­க­ளுக்கு மாறு­பட்ட நிலைப்­பா­டுகள் உள்­ளன. அவை தொடர்பில் அடுத்த கட்­ட­மாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

அந்த தரு­ணங்­களில் நாமும் எமது நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்வோம். இடைக்­கால அறிக்­கையில் உள்ள விட­யங்­களை இறு­தி­யானவை என்று கொள்ள முடி­யாது.

விவா­தங்­களின் பின்னர் முழ­மை­யான அர­சியல் சாசன உரு­வாக்க நட­வ­டிக்­கை­க­ளின்­போது மேலும் பல மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன.

தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சியில் ஈடு­பட்­டுள்­ள­தோடு அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திலும் கூட்­டா­கவே பங்­கேற்­றுள்­ளன. இந்தச் சந்­தர்ப்­பத்­தினை எமக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்த வேண்டும். ஆகவே அனைத்து விட­யங்­க­ளையும் கரு­மங்­க­ளையும் நிதா­ன­மாக கையாள வேண்டும்.

இடைக்­கால அறிக்கை வெளிவந்தவுடன் எம்மை நோக்கி பல விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அவைதொடர்பாகவும் நாம் நிதமான கவனத்தினை செலுத்த வேண்டும். இருப்பினும் ஏற்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தினை நாம் இழந்து விடக்கூடாது.

எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நியாயமான நிரந்தரமான தீர்வொன்றை பெறுவதற்கான ஒற்றுமையாக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். குழப்பங்களை ஏற்படுவதை தவிர்த்து பொறுமையான செயற்படவேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-25#page-1

  • தொடங்கியவர்

திலீ­பனின் தியா­கத்­திற்கு நிரந்­தர தீர்வே பரி­காரம்

p13-ff69a223b019e54afc2fcb42307a268ae942c44c.jpg

 

மாலை அணி­வித்து சுட­ரேற்றி அஞ்­சலி செலுத்­திய சம்­பந்தன் தெரி­விப்பு 
(சம்­மாந்­துறை மேல­திக நிருபர்) 

தமிழ் மக்­களின் விடு­த­லைக்­காக உண்­ணா­நோன்­ பி­ருந்து உயி­ரைத்­து­றந்த திலீ­பனின் தியாகம் அளப் ­பரி­யது. அதற்­கான பரி ­காரம் தமிழ் மக்கள் நிரந்­த­ர­மான தீர்வைப் பெறு­வ­தே­யாகும் என்று என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­பா­றையின் கல்­முனை மாந­க­ரி­லுள்ள ஜெயா மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. காலை 10.30இக்கு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் ஆரம்­ப­மான இக்­கூட்­டத்தில் 1987ஆம் ஆண்டு ஐந்­தம்சக் கோரிக்­கைளை முன்­வைத்து செப்­ரம்பர் 15ஆம் திகதி முதல் 12நாட்கள் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ர­த­மி­ருந்து உயர்­தி­யாகம் செய்த தியாகி திலீ­ப­னுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

திலீ­பனின் உருவப்படத்திற்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மாலை அணி­வித்து முத­லா­வது ஈகைச்­சு­டரை ஏற்­றினார். அத­னை­ய­டுத்து இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ரா­ஜாவும், தமி­ழ­ரசுக் கட்­சியின் சிரேஷ்ட உப­த­லைவர் பொன்.செல்­வ­ரா­ஜாவும் ஈகைச்­சு­டரை ஏற்­றி­னார்கள்.

அத­னை­ய­டுத்து அஞ்­சலி உரை­யொன்றை ஆற்­று­கை­யி­லேயே எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தமிழ் மக்­க­ளுக்கு தற்­போது வரையில் பல்­வேறு அநீ­திகள் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தமிழ் மக்­க­ளுக்­காக அகிம்சை வழி­யிலும், பின்னர் ஆயுத வழி­யிலும் போராட்­டங்கள் இடம்­பெற்­றன. தற்­போது இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

1987ஆம் ஆண்டு இந்­திய இலங்கை ஒப்­பந்தம் செய்­யப்­பட்­ட­போது பாரிய மாற்றம் ஏற்­ப­டு­மென்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தார்கள். ஆனால் துர­திஸ்­ட­வ­ச­மாக எந்த எதிர்­பார்ப்பு நிறை­வே­ற­வில்லை.

அவ்­வா­றான நிலையில் தான் திலீபன் அவர்கள் ஐந்து அம்சக் கோரிக்­கை­களை முன்­வைத்து அகிம்சை ரீதி­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்தார். இந்­தப்­போ­ராட்­டத்தில் அவர் தனது உயிரை நீத்தார். அவரின் தியாகம் அளப்­பெ­ரி­யது. ஏதற்கும் ஈடு இணையற்றது.

அவரின் தியாகத்தின் மூலம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் பிரச்சினைகள் அனைத்தும் உலகறியச் செய்யப்பட்டது. ஆகவே திலீபனின் அளப்பெரிய தியாகத்திற்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வே பரிகரமாக அமையும். அதற்காக அனைவரும் செயற்படுவோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-25#page-1

  • தொடங்கியவர்

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களை ஒருமித்து எடுக்க எவருடனும் பேசத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

23 hours ago, நவீனன் said:

ஒருமித்த நாடு என்பதே மிகப்பெரிய விடயமாகும் - தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சம்பந்தன் எடுத்துரைப்பு

சம்பந்தன் வழமைபோல தனது பித்தலாட்ட அரசியலை ஆரம்பித்துள்ளார்.

சிங்களத்தில் தெளிவாக ஒற்றை ஆட்சி என்றுள்ளது. இதை மறைத்து சம்பந்தன் தனது அரைவேக்காடு அரசியலை முன்னெடுக்கிறார். அரைவேக்காடுகளைக் கொண்ட தமிழரசுக் கட்சி மக்களை ஏமாற்ற முடியாது என்பது உணர்த்தப்படும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள அரச பயங்கரவாதிகளின் இடைக்கால அறிக்கை என்ற ஏமாற்று நாடக முகமூடியை கிழித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இண்டைக்கு இப்பிடி பிதற்றுவார், நாளைக்கு இவற்ற சிஷ்யன் வந்து சொல்லுவார். "அரசாங்கம் எங்கட வேண்டுகோளுக்கு இணங்கியுள்ளது ஆகவே நாங்கள் (த. தே. கூ)  புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கு ஆதரவு குடுக்க தீர்மானித்துளோம். அவர்களோட தலையாட்டிக்கொண்டே இங்கால மாறி மாறி தாங்கள் ஏதோ போராடுற மாதிரி கதையளக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.