Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குளால் முற்றுகை : பொலிஸார் வரவழைப்பு ; தெஹிவளையில் பதற்றம்

Featured Replies

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குளால் முற்றுகை : பொலிஸார் வரவழைப்பு ; தெஹிவளையில் பதற்றம்

 

ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

burma.jpg

ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளைப் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்ட வீட்டினை, பௌத்த பிக்குகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் பொலிஸாரால் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த அகதிகளை தாம் கைதுசெய்யவில்லையெனவும் அவர்களை ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவிவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/24932

  • தொடங்கியவர்

இலங்கை: ரோஹிஞ்சாக்கள் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள்

 

இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்ததை அடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா அகதிகளும் காவல் துறையினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் ரோஹிஞ்சாக்கள் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பில் இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெளியில் உள்ள கல்கிசை பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 ரோஹிஞ்சா அகதிகள் இரண்டு அடுக்கு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த இடத்தை இன்று, செவ்வாய்க்கிழமை, காலை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் இவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தற்போது பல்லாயிரக்கணக்கில் மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமைடையும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் நாட்டில் மியான்மர் ராணுவத்தினரும் பௌத்தர்களும் நடத்தும் தாக்குதல்களைப் பற்றிப் புகார் கூறுவது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளே அங்கு தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை வெளியேற்ற வேண்டும் என பௌத்த பிக்குகள் சத்தமிட்டனர்.

அதனையடுத்து ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அங்கு விரைந்த காவல் துறையினர், அகதிகளை தங்கள் பாதுகாப்பில் பொறுப்பேற்று அழைத்து சென்றுள்ளனர்.

இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா அகதிகள் Image captionஇலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா அகதிகள்

கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக அகதிகளாக தமது நாட்டை விட்டு வெளியேறி வந்த ரோஹிஞ்சா அகதிகள் இந்தியத் தலைநகர் புது டெல்லியிலும் பின்னர் தமிழ் நாட்டிலும் தங்கியிருந்தனர்.

இந்தியாவிலிருந்து வேறொரு நாட்டிற்கு படகு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ம் திகதி இலங்கை கடற் பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீரிகான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவர்களின் நலன்களை கவனிக்கும் மனித உரிமைகள் சட்டத்தரணியான சிராஸ் நூர்டின் தெரிவிக்கின்றார்.

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவான இலங்கை முஸ்லிம்களின் போராட்டம் Image captionரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவான இலங்கை முஸ்லிம்களின் போராட்டம்

இவர்களுக்கு பிறிதொரு நாட்டில் அரசியல் புகலிடம் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளில் ஐ.நா அகதிகள் ஆணையம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. அதுவரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு இலங்கை அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இவர்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் குழுவிற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அக்மீமன தயாரத்ன தேரோ. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றார்.

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில் ஏற்கனவே முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருவதோடு அவர்களுக்கு நீதி கோரி ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை மியான்மர் அரசுக்கு தமது ஆதரவை வெளியிட்டு கடும் போக்கு பௌத்த அமைப்புகளும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-41400608

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

 

பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாட்டால் பெரும் பதற்றம்
(எம்.எப்.எம்.பஸீர்)

கல்­கிசை பொலிஸ் பிரிவில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­

பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ் லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று அவ்­வீட்டை சுற்றி வளைத்து ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இதனால் அப்­ப­குதி எங்கும் பெரும் பதற்­ற­மான சூழ் நிலை உரு­வா­ன­துடன் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களின்

பாது­காப்பை உறுதி செய்ய பொலிஸார் அவர்­களை

 தமது பொறுப்பில் எடுத்­தனர்.

 இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய அவர்­களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலை­யத்தில் வைத்­துள்­ள­தா­கவும், நேற்­றைய இந்த சம்­பவம் தொடர்பில் கல்­கிசை நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்­பித்­துள்­ள­துடன் சம்­பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

நேற்று காலையும், மாலையும் குறித்த வீட்டை தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் சுற்­றி­வ­ளைத்து கலகம் விளை­விக்கும் வண்ணம் நடந்­து­கொண்ட நிலையில் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். இதனால் கல்­கிசை -, இரத்­ம­லானை வீதியில் அதிக வாகன நெரி­சலும் ஏற்­பட்­ட­துடன் பிர­தே­சத்தில் பதற்­றமும் அதி­க­ரித்­தது.

இந்த நிலையில் ஸ்தலத்­துக்கு உட­ன­டி­யாக கல்­கிசை பொலிஸார் அழைக்­கப்­பட்டு நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நேற்று காலை 10.15 மணி­ய­ளவில் பிக்­குகள் தலை­மையில் குறித்த ரோஹிங்யா முஸ்­லிகள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்கு வந்­துள்ள குழு­வினர் வீட்டின் முன்­பாக, அவர்­களை வெளி­யேற்­று­மாறு கோரி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதன்­போது, அவர்கள் வீட்­டுக்குள் நுழை­யவும் முற்­பட்ட நிலையில் ஸ்தலத்­துக்கு கல்­கிசை பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து பாட­சா­லைக்கு சென்­றி­ருந்த அகதிச் சிறு­வர்கள் ஓரி­ருவர் தவிர ஏனை­யோரை பொலிஸ் ட்ரக் வண்டி ஊடாக கல்­கிசை பொலிஸ் நிலை­யத்­துக்கு பொலிஸார் அழைத்து சென்­றனர்.

அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய இவ்­வாறு அவர்­களை பொலிஸார் பொறுப்­பேற்­ற­தாக கல்­கிசை பிராந்­திய பொலிஸ் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இந் நிலையில் பாட­சா­லையில் இருந்த சிறு­வர்­களும் பின்னர் பாது­காப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்து செல்­லப்­பட்­டுள்­ளனர்.

அதன்­பின்னர் நிலை­மையை ஆராய்ந்த பொலிஸார் அக­தி­களை மீளவும் அவர்கள் வசித்த வீட்டில் பிற்­பகல் வேளையில் மீள குடி­ய­மர்த்­தினர். எனினும் மீளவும் மாலை 5.30 மணி­ய­ளவில் அப்­ப­கு­தியில் கூடிய சுமார் 70பேர் வரை­யி­லான பிக்­குகள் உள்­ளிட்ட கடும்­போக்கு பெரும்­பான்மை இனத்­த­வர்கள் கல­கத்தை ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­ட­துடன்.அவர்கள் வீட்­டினுள் அத்­து­மீறி பிர­வே­சிக்க முயற்­சித்­துள்­ளனர். இதனால் அப்­ப­கு­தியில் கடும் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இதற்கு மேல­தி­க­மாக அவர்கள் பிர­தான பாதையில் வாகன போக்­கு­வ­ரத்­துக்கு இடைஞ்ல் ஏற்­படும் வண்­ணமும் ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இந் நிலையில் மாலை வேளையில் மீளவும் அக­தி­களை பாது­காக்க பொலிஸார் கடும் பிர­யத்­த­னத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இதன்­போது இரு பொலி­ஸா­ருக்கு சிறு காயங்கள் ஏற்­பட்­டன. இந் நிலையில் நிலைமை மோச­ம­டை­வதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்யா அக­தி­களை தமது பொறுப்பில் எடுத்து, ட்ரக் வண்­டியில் பொலிஸ் பாது­காப்­புடன் கல்­கிசை பொலிஸ் நிலையம் அழைத்து சென்­றனர்.

இந் நிலையில் நேற்று இரவு முழு­வதும் அந்த அக­திகள் பொலிஸ்­பா­து­காப்பின் கீழ் கல்­கிசை பொலிஸ் நிலை­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 30 ரோஹிங்யா முஸ்­லிம்கள் காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கடற்­ப­டை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்­லிம்கள் மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அவர்­களை மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன் பின்­ன­ரான வழக்கு விசா­ர­ணை­களின் போது, ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம், குறித்த ரோஹிங்யா முஸ்­லிம்­களை பொறுப்­பேற்­றது. மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில், ஐ.நா. அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம் சார்பில் அவர்­களை வேறு நாடொன்றில் அக­தி­க­ளாக குடி­யேற்றும் வரை, மிரி­ஹான தடுப்பு முகா­முக்கு வெளியே வைத்து பரா­ம­ரிக்க அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து முஸ்லிம் எய்ட் என்ற அரச சார்­பற்ற நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணையில் குறித்த 30 பேரும் இரத்­ம­லானை பகு­தியில் மூன்று மாடி வீடொன்று பெறப்­பட்டு அங்கு தங்­க­வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இந்த 30 பேரில் இலங்­கைக்கு வந்த பின்னர் புதி­தாக ஒரு குழந்தை பிறந்­துள்ள நிலையில் தற்­போது மொத்­த­மாக 31 பேர் அங்கு தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில் 7 பெண்­களும் 16 பேர் வரையில் சிறு­வர்­க­ளு­மாவர். அவர்­களில் பலர் பிர­தே­சத்தின் பாட­சாலை ஒன்­றிலும் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் மியன்­மாரில் இருந்து தீவி­ர­வா­திகள் அக­திகள் எனும் போர்­வையில் நாட்­டுக்குள் வந்­துள்­ள­தா­கவும் அவர்கள் சட்ட விரோ­த­மாக தங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தே கல்­கிசை பகு­தியில் உள்ள குறித்த மூன்று மாடிக் கட்­டிடம் பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­னரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது.

 ரோஹிங்யா முஸ்­லிம்கள் நாட்­டுக்குள் வர­வில்லை எனவும் அவர்­களை தாம் பொறுப்­பேற்கப் போவதும் இல்லை எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்த நிலையில், அப்­படி யாரும் இருந்தால் தகவல் தாருங்கள் என கோரி­ய­தா­கவும், இந்த வீட்டில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் உள்­ளார்கள் அவர்­களை உட­ன­டி­யாக நாட்டை விட்டு அனுப்ப வேண்டும் எனவும் சுற்றி வளைத்து கலகம் செய்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் கோஷம் எழுப்­பினர். இதன்­போது அவர்கள் கல­கத்தை ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­டனர்.

 எனினும் அங்கு தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் அகதி அந்­தஸ்து கோரிய ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் இருந்­துள்­ளமை பொலிஸார் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் அவர்­களின் பாது­காப்பை பொலிஸார் உறுதி செய்ய நட­வ­டிக்கை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம் அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடாத்­த­வுள்­ள­துடன், இந்த பிக்­கு­களின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

 இந் நிலையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முணசிங்க, மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அத்துகோரளவின் நேரடி கட்டுப்பாட்டில் கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் பிரதேசத்தின் பாதுகாப்பும் ரோஹிங்யா அகதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-27#page-1

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.