Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள்

Featured Replies

ஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள்

 

 

கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவென வந்திருக்கும் மீட்புக் குழுவினர், விடுவிக்கப்பட்ட படகுகளில் ஏழு படகுகளை மீட்டுள்ளனர்.

12_TN_Boat.jpg

அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர், அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

முன்னதாக, படகுகளை ஆய்வு செய்திருந்த தமிழக மீனவர் குழுவினர், அவற்றுள் 38 படகுகளை மட்டும் மீட்க முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, அண்மையில் இலங்கை வந்திருக்கும் மீட்புக் குழுவினர், ஏழு படகுகளை மட்டும் மீட்டெடுத்து காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து நாளை காலை சுமார் ஆறு மணியளவில் ஏழு படகுகளையும் இராமேஸ்வரத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25096

  • தொடங்கியவர்

எடுத்துச் சென்ற படகுகளில் ஒன்று மூழ்கியதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

 

 

இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றை மீட்டுச் சென்ற தமிழக மீனவர்கள், வழியில் ஒரு படகு மூழ்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.

12_TN_Boat.jpg

இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் படகுகளை மீட்டுச் செல்ல தமிழக மீனவர் குழுவொன்று வந்திருந்தது.

மொத்தமுள்ள படகுகளில் 38 படகுகளை மட்டுமே மீட்க முடிவுசெய்திருந்த அந்தக் குழு, முதற்கட்டமாக ஏழு படகுகளை இன்று காலை ஏழு மணியளவில் காரைநகரில் இருந்து எடுத்துச் சென்றது.

இராமேஸ்வரம் புறப்பட்டு வந்துகொண்டிருக்கும்போது கடுங்காற்று வீசியதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் ஒரு படகு கடலில் மூழ்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் எஞ்சிய 6 படகுகளுடன் இராமேஸ்வரம் சென்று சேர்ந்தது.

இதேவேளை, ஊர்காவல்துறையில் உள்ள மேலும் 2  படகுகளை மீட்க  மற்றொரு மீனவர் குழு இன்று இலங்கை வருகிறது.

http://www.virakesari.lk/article/25137

பக்கத்து வீடுகளிழும் அயல்களிலும் கொள்ளையிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்த பின் கொஞ்ச காலம் சென்றபின் விடுதலை செய்வர், ஆனால் கொள்ளையிட பயன்படுத்திய பொருட்களை மீண்டும் கொடுப்பதில்லை.
இங்கு இந்திய அரசின் அழுத்தங்களால் கொள்ளைக்கு பயன்பட்ட பொருளான படகுகள் மீள் கையளிக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.