Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.

Featured Replies

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.

  • தொடங்கியவர்

இரவு 11.30 மணி வரை நடந்த கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய வைர விழா

 

 

இரவு 11.30 மணி வரை நடந்த கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய வைர விழா
 

மாகாணக் கல்வி அமைச்சின் கோரிக்கையை மீறி கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் நேற்று (02) வைர விழா நடத்தப்பட்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழாவினை பிற்போடுமாறு கோரி பாடசாலை சமூகத்தினால், வட மாகாண கல்வி அமைச்சருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அதனை பிற்போடுமாறு அறிவித்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் நேற்று தெரிவித்தார்.

வைர விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் அழைக்கப்பட்டமை தொடர்பில் தமக்க உடன்பாடு இல்லை எனவும் இதன் காரணமாக இந்த நிகழ்வினைப் பிற்போடுமாறும் பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் சிலர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் காரணமாக வைர விழாவினை பிறிதொரு தினத்தில் நடத்துமாறு பாடசாலை அதிபருக்கு கடிதமூலம் அறிவித்ததாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும், ஏற்பாடு செய்யப்பட்டதைப் போன்று கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழா நேற்று நடைபெற்றது.

மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான வைர விழா இரவு 11.30 மணி வரை நடைபெற்றது.

வைர விழா நிகழ்வுகள் இரவு வரை நீடித்ததால் மாணவர்கள் பலர் நிகழ்வுகளின் இடையில் உறங்கியமையை அவதானிக்க முடிந்தது.

கல்வி அமைச்சு உத்தரவொன்றைப் பிறப்பிக்கும் போது அதனை ஒரு பாடசாலை மீறுமாக இருந்தால், எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகளும் அவ்வாறு நடந்துகொள்ள முயற்சிக்கும். ஆகையால், இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 

http://newsfirst.lk/tamil/2017/10/இரவு-11-30-மணி-வரை-நடந்த-கிளிநொ/

  • தொடங்கியவர்

நெருடுகிறது உறவு

 
 
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

கிளிநொச்சி மாவட்­டத்­தில் உள்ள இரா­ம­நா­த­பு­ரம் மகா வித்­தி­யா­ல­யத்­தின் வைர விழா நிகழ்வை நிறுத்த முற்­பட்டு மூக்­கு­டைப்­பட்டு நிற்­கின்­றார் வடக்கு மாகாண சபை­யின் கல்வி அமைச்­சர். அந்த நிகழ்வை இடை­நி­றுத்­து­மாறு அமைச்­சர் தனது செய­லா­ளர் ஊடாகக் கடி­தம் அனுப்­பி­ய­போ­தும், நிகழ்­வைத் தாம் திட்­ட­மிட்­ட­படி சிறப்­பாக நடத்தி முடித்­தி­ருக்­கி­றது பாட­சா­லைச் சமூ­கம்.

பாட­சா­லைச் சமூ­கத்­தின் நிகழ்­வில் தலை­யிட்டு அதனை நிறுத்­தும்­படி மாகா­ணக் கல்வி அமைச்­சர் உத்­த­ர­விட்­ட­மைக்கு அர­சி­யல் உள்­நோக்­கங்­களே கார­ணம் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. இந்த விவ­கா­ரம் தொடர்­பில் மாகா­ணக் கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் விடுத்த அறிக்­கை­யி­லும் அந்த அர­சி­யல் புகைச்­சல் வெளிப்­ப­டை­யா­கவே தெரிந்­தது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த அர­சி­யல்­வாதி ஒரு­வர் தன்­னைத் தவிர வேறு எவ­ரை­யும் கிளி­நொச்­சி­யில் நடக்­கும் நிகழ்­வு­க­ளுக்கு அழைக்­கக்­கூ­டாது என்று தெரி­வித்­த­தன் அடிப்­ப­டை­யி­லும், நிகழ்வை நடத்­தப் பணம் தரு­வ­தா­கக் கூறி­ய­தன் அடிப்­ப­டை­யி­லும், கொழும்பு அர­சி­டம் இருந்து பாட­சா­லைக்கு ஒரு வகுப்­ப­றைக் கட்­ட­டம் அமைக்க உத­வி­யைப் பெற்­றுத் தரு­வ­தா­கக் கூறி­ய­தன் அடிப்­ப­டை­யி­லும்­தான் மாகா­ணக் கல்வி அமைச்­சர் மற்­றும் முத­ல­மைச்­சர் ஆகி­யோர் இந்த நிகழ்­வுக்கு அழைக்­கப்­ப­ட­வில்லை என்று அந்த அறிக்­கை­யில் மாகாண அமைச்­சர் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்­கும் இடை­யிலான உறவு எத்­த­கை­யது என்­பதை இந்­தச் சம்­ப­வம் துல்­லி­ய­மா­கக் காட்­டு­கின்­றது. இது­வரை கால­மும் கூட்­ட­மைப்­புக்­குள் பங்­கா­ளிக் கட்­சி­கள் கொள்கை ரீதி­யாக மோதிக்­கொண்­டன.

ஒரு ஜன­நா­யக அமைப்­புக்­குள் இத்­த­கைய கருத்து மோதல்­கள் ஆரோக்­கி­ய­மா­னவை, அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்­டி­யவை என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் எப்­போ­தும் அதற்கு விளக்­கம் அளித்து வந்­தார். ஆனால், பங்­கா­ளிக் கட்­சி­கள் இடை­யி­லான பிளவு என்­பது கருத்து மோதல்­க­ளைத் தாண்டி அதி­கா­ரப் போட்­டி­யாக, அர­சி­யல் மோத­லாக விரி­வாக்­கம் கண்­டுள்­ளது என்­ப­தையே பாட­சாலை நிகழ்வு எடுத்­துக் காட்­டு­கின்­றது.

எல்­லோ­ரும் ஒரே அணி­யைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­கள்­தான் என்­றா­லும் , அவர்­க­ளுக்கு இடை­யில் புரிந்­து­ணர்­வின்­மை­யும் இணக்­கப்­பா­டின்­மை­யும் வளர்ந்­தி­ருப்­பது தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லில் ஆரோக்­கி­ய­மான நகர்­வல்ல என்­ப­தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­யம்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விரோ­தி­க­ளா­க­வும் அவர்­க­ளைக் கொழும்பு அர­சின் முக­வர்­க­ளா­க­வும் பார்க்­கும் போக்கை ஆரம்பித்து வைத்­த­வர் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் என்­ப­தில் மாற்­றுக் கருத்து இருக்க முடி­யாது. அந்த விசச் செடி இப்­போது வளர்ந்து விருட்­ச­மா­கிப் பயன்­த­ரத் தொடங்­கி­யுள்­ளது.

மாகாண அமைச்­சர் ஒரு­வ­ரின் உத்­த­ர­வைக் கண்­டு­கொள்­ளா­மல், அதனை உதா­சீ­னப்­ப­டுத்­தித் தூக்கி எறிந்­து­விட்டு ஒரு விழாவை நடத்­தி­ய­தன் மூலம் சொந்­தச் சமூ­கமே மாகாண சபை­யைத் தூக்கி எறிந்­தி­ருப்­பது மெச்­சிக்­கொள்­ளக்­கூ­டி­யது அல்ல.

எந்த அதி­கா­ரங்­க­ளுக்­கா­கத் தமி­ழர்­கள் போராடி வரு­கின்­றார்­களோ அதே அதி­கா­ரத்தை வேண்­டாம் எனப் புற­மொ­துக்கி கொழும்­பின் அதி­கா­ரத்தை வர­வேற்­றி­ருப்­ப­தும் மக்­கள் நகர்ந்­தி­ருப்­ப­தும் வர­வேற்­புக்­கு­ரி­ய­தல்ல. இந்­தப் போக்­குத் தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­க­ளையே அர்த்­த­மற்­ற­தாக்­கி­வி­டும்.

இது­போன்ற சம்­ப­வங்­கள், தமி­ழர்­க­ளுக்கு மாகாண சபையை நிர்­வ­கிக்­கத் தெரி­யா­தது மட்­டு­மல்ல, மாகா­ணம் மற்­றும் கொழும்பு என்ற கட்­ட­மைப்­புக்­க­ளைக் கையா­ள­வும் தெரி­ய­ வில்லை. இவர்­க­ளுக்கு ஏன் அதி­கா­ரப் பகிர்வு என்று தெற்­கைச் சேர்ந்­த­வர்­கள் கேலி பேசும் நிலை­மைக்­கும் தமி­ழர்­க­ளைத் தள்­ளி­விட்­டு­வி­டும்.

எனவே மாகாண உறுப்­பி­னர்­க­ளுக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தில் கூட்­ட­மைப்­புக் கவ­னம் செலுத்த வேண்­டி­யது இப்­போது மிக முக்­கி­யம்.

http://newuthayan.com/story/34203.html

  • கருத்துக்கள உறவுகள்

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வ­ரனை ஒதுக்குவதற்காகப் பிளந்து கிடக்கும் வாய்களுக்கு வேண்டிய அவலை அள்ளிப் போடுவதற்காகப் பெரும் அகப்பைகளை....!  கிளிநொச்சி இரா­ம­நா­த­பு­ரம் மகா வித்­தி­யா­ல­யத்­தின் வைர விழா நிகழ்வானது, புதியஉதயன் என்ற பத்திரிகைக்குத்  தானமாக வழங்கி உதவியுள்ளது. :shocked:   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.