Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடு புகுந்து கொள்ளை : கல்லடியில் சம்பவம்

Featured Replies

வீடு புகுந்து கொள்ளை : கல்லடியில் சம்பவம்

 

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இனந்தெரியாதோரினால் கொள்ளை சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Local_News.jpg

குறித்த வீட்டில் இருந்த 200 கிலோ கிராம் எடையுள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து ஒரு தொகை தங்கமும், இலங்கை ரூபாய் ஒரு இலட்சமும், வெளிநாட்டு பணம் ஒரு இலட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் பிடிபடாத நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

 

http://www.virakesari.lk/article/25387

சினிமா பாணியில் 125 பவுண் நகைகள் கொள்ளை

 

மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடைப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 125 பவுண் தங்க நகைகளும் 1 இலட்சம் பெறுமதியான இலங்கைக் காசும், 1 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டுக் காசும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சினிமா பாணியில்  125 பவுண் நகைகள் கொள்ளை

வீட்டு உரிமையாளர்கள் நேற்று  மாலை வேலை நிமித்தம் வெளியில் சென்ற இந்லையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீட்டின் ஒரு பகுதியில்  வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த 3 நபர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் கதவினை உடைத்து சந்தேகம் ஏற்படாதவாறு வீட்டினுள்ளும் வெளிப்பகுதியிலும் அதிகளவிலான மிளகாய்த் தூள்களைத் தூவி அங்கிருந்த நாயின் கவனத்தை திசை திருப்பி திரைப்படப் பாணியில் கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சினிமா பாணியில்  125 பவுண் நகைகள் கொள்ளை

சந்தேக நபர்கள் வீட்டின் உரிமையாளர்கள் வருவதற்கு முன்னர் கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடிப் பொலிஸார் சந்தேக நபர்களை வாகரையில் வைத்து கைது செய்துள்ளனர். 

சினிமா பாணியில்  125 பவுண் நகைகள் கொள்ளை

சினிமா பாணியில்  125 பவுண் நகைகள் கொள்ளை

https://news.ibctamil.com/ta/internal-affairs/-GOLD-RABARE-in-Batticaloa

  • தொடங்கியவர்

மட்டுவில் திருட்டுப் போன நகை பணம் திருகோணமலையில் மீட்பு

மட்டக்களப்பு கல்லடியில் திட்ருட்டு போன நகை  மற்றும் பணம் என்பன திருகோணமலை திரியாய் பகுதியில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

DSC_3135.jpg

இதேவேளை, குறித்த  திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

DSC_3153.jpg

காத்தான்குடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணமும் திருகோணமலை, திரியாய்  பகுதியில் வைத்து கைப்பற்றபட்டுள்ளன.

DSC_3141.jpg

 

http://www.virakesari.lk/article/25407

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குயிக்கு  இருந்தாலும் கண்டு பிடித்த பொலிசாருக்கு வாழ்த்து கூறி ஆக வேண்டும் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன குயிக்கு  இருந்தாலும் கண்டு பிடித்த பொலிசாருக்கு வாழ்த்து கூறி ஆக வேண்டும் வாழ்த்துக்கள் 

உண்மை தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.