Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிற்கு அஞ்சி மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சி : சமல் ராஜபக்ஷ

Featured Replies

சீனாவிற்கு அஞ்சி மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சி :  சமல் ராஜபக்ஷ

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஹம்பாந்தோட்டை ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்தார்.

chamal-rajapahsha.jpg

பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அவ்வாறு அல்லாது தேசிய வளங்களை தொடர்ந்தும் அந்நிய நாடுகளுக்கு வழங்கி வந்தால் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் ,

தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் அவற்றை அந்நிய நாடுகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் விற்பணை செய்து வருகின்றது. 

இலங்கையின் தெற்கு பகுதி என்பது பூகோள ரீதியாக பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை நகரம் துறைமுகம் மறறும் விமான நிலைய சிறப்புகளை கொண்டுள்ளதால் பல நாடுகளும் அந்த பகுதியை குறி வைத்து திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

கபடத்தனமான நோக்கங்களுடன் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் அந்நிய நாடுகள் பல செயற்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சர்வதேச நாடுகளுடன் செயற்படும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுத்தோம். ஆனால் தற்போதைய நல்லாட்சி முற்றிலும் நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25409

  • கருத்துக்கள உறவுகள்

கில்லாடி அறிவித்தல், அதுவும் முன்னாள் சொறி சிங்களத்தின் முன்னாள் சபாநாயகர் மூலம்.

கிந்தியா இதைப் பற்றி இனி மூச்சும் காட்டாது, காட்டினால் சீனாவிற்கு பயந்து விட்டது, கிந்தியாவின் பிராந்திய வல்லரசு என்ற மாயை  கிந்தியவே களைந்தது போன்றதாகும்.

 இது போன்றே தமிழ் தரப்பு எல்லோருடனும் உறவை வளர்க்க வேண்டும். தேவையான நேரத்தில் கழட்டவும், அணைக்கவும் வேண்டும்.       

முக்கியமாக கிந்தியவிடற்கு எதிரான சசக்திகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் உறவை நிச்சயம் வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தகப்பன் மேனன் கிந்தியாவின் வடக்கே சீனாவை கொண்டுவந்தார், ஆனால் யுத்தம் மூலமாக. தனயன் மேனனும், கேரளா மாபியா நாராயணனும்,  கிந்தியாவின் ரத்தத்தின் ரத்தமும் ஆளும் வர்க்கத்தின் வர்க்கமுமான ராமம் , சீனாவை ஓர் எதிர்ப்பும் இன்றி தென் கோடியில், அதுவும் சர்வதேச வர்த்தக சமுத்திர பாதைகள் சங்கமிக்குமிடத்தில், தரை வார்த்து காணிக்கையாக கொடுத்துளார்கள். மிகவும் கொடுத்து வைத்தது ஹிந்தியா. மலையாளிகள் ரத்தத்தில் கம்யூனிஸ்டுகள்.

தமிழ் தரப்பு, இனியும் தாமதிக்காமல், இந்த உணர்ச்சி வயப்பட்ட கிந்தியாவின் உறவை உதட்டளவில் உச்சரித்து கொண்டு, சீனாவுடன் உறவை வளர்க்க வேண்டும்.

தமிழ் தரப்பின் மிகப் பெரிய நகர்வு என்பது, சீன அமெரிக்காவின் பொருளாதரத்தை விஞ்சி, அமெரிக்காவின் பாதுகாப்பு பாதீடு மிகவும் சீனாவின் பாதுகாப்பு பாதீட்டிலும் மிகவும்  குறையும் போதே இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, Kadancha said:

சீனாவும் சிங்களவனுக்குத்தான் கெல்ப் பண்ணுமெண்டு உங்கை இஞ்சை எண்டு எல்லா இடங்களிலையும் கதைக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

சீனாவும் சிங்களவனுக்குத்தான் கெல்ப் பண்ணுமெண்டு உங்கை இஞ்சை எண்டு எல்லா இடங்களிலையும் கதைக்கினம்.

இப்போதைய நிலையில் இது உண்மையாக இருக்கலாம்.

ஆயினும், முழு இலங்கைத்தீவும் சீனாவிடம் இருப்பதை, கிந்திய, முக்கியமாக அமெரிக்கா விரும்புமா?

இன்னுமொரு விடயம், சீனாவின் இந்த நவீன பட்டுப்பாதை திட்டம் முழுமை பெரும் போது சீன முதலில் கிந்தியப் பொருளாதாரத்தையே முடக்க முனையும்.

இதை நிறைய வாய்ப்புகளை தமிழ் தரப்பிற்கு உருவாக்குவாதத்திற்கு சந்தர்ப்பம் உள்ளது, தமிழ் நாட்டையும் சேர்த்தே பார்த்தோமானால். 

இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவத்திற்கு, உறவுக்குள் தேவை.

மறுவழமாக, கிந்தியா ஈழத் தமிழ் தேசத்தை டோடோ ஆகவே நடத்தியது. அந்த டோடோ தன்னால் இயன்ற பாதுகாப்பை தேட, தன்னை மீறி டோடோ இடம் பாதுகாக்கும் திறன் இருக்கக்கூடாது என்று அந்த பாதுகாப்பை அழிப்பதற்கு டோடோ இனத்தையே பணயம் வைத்து அழித்தது, மிஞ்செய்ய டோடோ இனத்தை படிப்படியாக அழிக்கிறது. 

அப்படி சீன ஈழத்து தமிழ் தேசத்தை டோடோ ஆக்கினால், கிந்தியாவின் இருப்பை பகடையாக வைத்து பேரம் பேசலாம். சாதத்திற்கு கிந்தியாவின் பொருளாதரத்தை மிகவும் நலிவுறச் செய்ய வேண்டும். அதற்கண வலுவும், உந்துதலும் சீனாவிடம் உண்டு. இது தான் சிங்களத்திடம் இருந்து நாம் படிக்கவேண்டியது. எதை எந்த நேரத்தில் எந்த சக்தியுடன் பேரம் பேசுவது?

ஆயினும், இது நீண்ட கால நோக்கில் நடைபெறவேண்டும்.

Edited by Kadancha
add info.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.