Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போரின்போது நடந்தது என்ன? - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்

Featured Replies

இலங்கை போரின்போது நடந்தது என்ன? - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்

 

 
08chkanDayaKopalRajan

(இடமிருந்து) தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன்,

இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து...

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988-ல் மனித உரிமை அமைப்பை (யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் பார் ஹியூமன் ரைட்ஸ்) தொடங்கினர். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவு தலைவராக பணியாற்றிய ரஜனி திரநகமா, ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் இந்த அமைப்பின் முகமாக விளங்கினர்.

வெளிநாட்டில் தத்துவப் படிப்பை (டாக்ட்ரேட்) முடித்த இந்த இளம் கல்வியாளர்கள், எந்த நாட்டு பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்காக 1980-களில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி உள்ளனர்.

கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிராக 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சுமார் 1 லட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். இதையடுத்து, தமிழர்களுக்கு ஆதரவாக பல கிளர்ச்சி குழுக்கள் வளரத் தொடங்கின. ஆயுதம் ஏந்திய இக்குழுக்கள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததுடன் பயிற்சியும் வழங்கத் தொடங்கின.

ஒருபுறம் ராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சண்டை நடந்த நிலையில், தலைமை தாங்குவது தொடர்பாக கிளர்ச்சிக் குழுக்களுக்குள்ளேயே மோதல் வெடித்தது. இதனால் தமிழ் சமுதாயமே மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது என இந்த 4 பேரும் முடிவு செய்தனர்.

ராணுவமோ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ் கிளர்ச்சி குழுக்களோ யாராக இருந்தாலும் அவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை இவர்கள் ஆவணப்படுத்தினர். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல்களை திரட்டி, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தினர்.

08CHKANTIRANAGAMA

ரஜனி திரநகமா

இவர்கள் யாருமே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக செயல்படவில்லை. மாறாக, காயமடைந்த புலிகளுக்கு திரநகமா மருத்துவ உதவி செய்தார். இலங்கை அரசு இரக்கமற்றதாக மாறியதால், இவர்களைப் போன்ற தமிழ் அறிவாளிகள் அவ்வாறு மாறவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஒரு அரசு போலவே நடத்தினர்.

கணிதவியலாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரன், மாணவ பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தபோதும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து விலகி நின்றார். அவர் கூறும்போது, “என்ன நடக்கும் என்று நினைத்தேனோ அது நடக்கவில்லை. இது பொதுமக்களின் போராட்டம் என அனைவரும் கூறினர். ஆனால், உண்மையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மட்டுமே போராட்டத்தை முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப்புலிகள்) பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை விரும்பவில்லை” என்றார்.

மனநல நிபுணரான தயா சோமசுந்தரம் கூறும்போது, “உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொதுமக்கள் இங்கும் அங்கும் ஓடினர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. சாலைகளில் மக்கள் செத்து மடிந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில்தான் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது” என்றார்.

 

தவறான கணிப்பு

இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987-ல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பை தவறாக கணித்துவிட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “எதற்காக இங்கு வந்தீர்கள் என இந்திய அமைதிப்படையினரிடம் கேட்டேன். அப்போது அவர்கள் அளித்த பதிலில் தமிழர்களின் நலன் என்பது கடைசியாகத்தான் இருந்தது. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இங்கு வந்தார்கள் என்பதுதான் உண்மை. 24 மணி நேரத்தில் விடுதலைப்புலிகளை சரணடைய வைத்து விடலாம் என எண்ணினார்கள். அது நடக்கவில்லை. விடுதலைப்புலிகளைப் பற்றி அவர்கள் தவறாக கணித்துவிட்டார்கள். இந்திய ராணுவம் மட்டுமல்ல, ஏராளமான அறிவுஜீவிகளும் இந்த விவகாரத்தில் தோற்றுப் போனார்கள்” என்றார்.

 

பின்னடைவு

இதனிடையே, 1989-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி மாலை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பியபோது, திரநகமா தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை மிரட்டல் காரணமாக, மற்ற 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தபடி, இலங்கைப் போர் பற்றி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே திரநகமா படுகொலை மனித உரிமை அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. திரநகமா படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், இதற்குக் காரணம் விடுதலைப்புலிகள்தான் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சந்தேகித்தனர்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலையில் கணிதம் படித்தவரான ஹூலே கூறும்போது, “திரநகமா படுகொலைக்குப் பிறகு எங்கள் அமைப்புக்கு உதவியவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் துன்புறுத்தினர். குறிப்பாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான மனோகரன் மற்றும் செல்வி ஆகியோர் 1991-ல் கொல்லப்பட்டனர். எங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த மேலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து சொன்னால் நமக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று தமிழர்கள் அச்சமடைந்தனர்” என்றார்.

இறுதியில் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்த்தது போலவே, 2009-ல் போர் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டனர். இறுதிக்கட்ட போரில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களைப் பற்றிய தகவலை அரசிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் உறவினர்கள்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “1980கள் மற்றும் 1990களில் நாங்கள் வெளியிட்ட பகுப்பாய்வுகள் இறுதியில் நிஜமானதை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், பேரழிவையும் மனித உயிரிழப்பையும் எங்களால் தடுக்க முடியாமல் போய்விட்டது. எங்களைப் போன்ற ஒரு சில நபர்களால் இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும். எனினும் குற்றம் செய்ததாகவே நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் நாடு திரும்பி என்னால் முடிந்ததைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதில் நான் தோற்றுவிட்டேன்” என்றார்.

 

நிலைமை மாறவில்லை

கொலை மிரட்டல் காரணமாக சிறிது காலம் இந்தியாவில் வசித்த ஹூலேயும் ஆஸ்திரேலியாவில் வசித்த சோமசுந்தரமும் போர் முடிந்த பிறகு நாடு திரும்பி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீதரனும் நாடு திரும்பி உள்ளார். இலங்கையில் போர் முடிந்த பிறகும் நிலைமை மாறவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/article19823064.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சண்டை நடந்தபோது சண்டையிட்ட ராணுவமும், அமைப்புப் போராளிகளும், அனைவருமே மனித உரிமை மீறலில் ஈடுபட்டதில்லை. இன, மத பேதமின்றி பொதுமக்களுக்கு உதவிபுரிந்து காப்பாற்றிய தனி மனிதர்களும், படைப்பிரிவினரும் அதற்குள் இருந்துள்ளனர்.

மனித உரிமை மீறலில் அதி உச்ச வரம்பைத் தொட்ட இந்தியப் படைகளில்கூடப் பொதுமக்களையும், அவர்கள் பண்பாடுகளைக்கூடப் பாதுகாக்க முற்பட்ட 'மதறாசு ரெயிமென்ட்' பற்றி இன்றும் மக்கள் பேசுவதைக்  கேட்கலாம். இதுபோலவேதான் தமிழ்ப் போராட்டக் குழுக்களிடையே....! அது புலிப்படையாக இருந்தாலென்ன.! வேறு படைகளாக இருந்தாலென்ன...!!. மனிதத்தை மதிப்பவர்கள் அதற்குள் இருந்துள்ளார்கள். இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது, இந்த மனித உரிமை ஆவலர்களாக வெளிப்படும்.... ரயனி திரநகமா, ராயன் கூலே, கோபாலசிங்கம் சிறிதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும், கிளர்ச்சிக் குழுக்களில், விடுதலைப் புலிகள் என்ற பெயரைமட்டுமே குறிப்பிட்டு, அவர்களே முற்று முழுதாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அடையாளமிட்டுக் காட்ட முயற்சிப்பதுபோல் இந்தப் பதிவு தெரிவிக்கிறது.

உண்மையில் இந்த 4 மனித உரிமை ஆவலர்களும் புலிகள்மேலுள்ள காழ்ப்புணர்ச்சியினால் இப்படி அறிக்கையை லெளியிட்டார்களா...? அல்லது தமிழர்மேல் காழ்ப்புணவைக் காட்டும் 'இந்து' அவர்கள் அறிக்கையைத் திரிவுபடுத்தித் தனது வன்மத்தைத் தொடர்கிறதா..??
 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தினதும், அதனை ஆதரிக்கும் பிராந்திய, சர்வதேச சகதிகளினதும் அடிவருடிகள் இவர்கள். உண்மையில் மனித உரிமை என்பதை அரசியல் ஆயுதமாக புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும்  எதிராக மட்டும் அந்த சக்திகள் பவிப்பதத்திற்கு இவர்கலாய் கருவியாக பாவிக்கின்றனர். இவர்கள் ஈழத்து தமிழ் தேசம் என்பதிற்றுக்கே எதிரானவர்கள்.

கீழே சொல்வஹிட்ற்கு இவர்கள் பத்தி என்ன ?

யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள், மானுடவியல், மற்றும் வரலாறு ஆய்வு கூடத்தில் இருந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் வரலாறு பற்றிய மிகப் பழமைவந்த, அரிய நூதனப் பொருட்களை, ரா இன் சிறப்பு உத்தரவுக்கமைய இரவோடிரவாக திட்டமிட்டே திருடி கிந்தியாவிடற்கு  அனுப்பிவிட்டு, சண்டையின் உக்கிரத்திலும் ஹிந்திய சிப்பாய்களின் வெப்பியாரத்திலும் தீயில் அழிந்ததாக்க காட்சிப்படுத்திய,காட்டுமிராண்டிகளிலும் கேவலமான, பூமியில் இருந்தே சுவடு இல்லாமல் துடைத்தெரியப்படவேண்டிய கிருமிகள்.

இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் கிந்தியா தமிழை இலங்கைத் தீவில் இருந்து அகற்றுவதற்கு உத்தியோகபூர்வம் அற்ற, ஆனால் தீவிரமாக நடைமுறைத்தபடும் கொள்கையை ரத்தமும் சதையுமாக முன்னெடுத்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதற்கு.        

நீங்கள் திருடிய அந்த தமிழர்கள் வரலாறு பற்றிய மிகப் பழமைவந்த, அரிய நூதனப் பொருட்கல் எங்கே?

ரொமிலா தப்பார், தான் ஆண்டாண்டு காலமாக புனைந்த சரித்திரக் கட்டுக்கதைகள் எல்லாவற்றையும், இலங்கைத் தீவின் பூர்விகத் தமிழர்கள் பற்றிய புராதனமான இந்த தொல்பொருட்கள் ஒரே நொடியில் தகர்த்தெறிந்து விட்டதினால்,   அந்த தொல்பொருட்களுக்கு ஏற்ப வேறு சரித்திரக் கட்டுக்கதைகள் கட்டுகிறாரோ?   ஆனால்,அந்த தொல்பொருட்கள் ரோமிலா  தப்பாரை குடைந்து பைத்தியாமாகிவிட்டது என்பதே உண்மை. 

http://www.dailypioneer.com/sunday-edition/agenda/analysis/decline-and-fall-of-historians.html

சில வேலைகளில், கிந்தியாவின்  அப்பாவி அழிப்பு படைகளால், இலங்கைத்  தீவின் பூர்விக தமிழரின் வரலாற்றை சுவடு தெரியாமல், அத்துடன் மக்களுக்கு கொடுமை அழிவுகள் செய்யாமல், செய்யப்பட்ட  மிகப் பெரிய தமிழின அழிப்பு இதுவாகத் தான் இருக்கும்.

ஏனெனில்,  கிந்தியாவின்  அப்பாவி அழிப்பு படைகளால் முன்னெடுக்கப்பட அழிவுகள், இயற்கையாலேயே நடந்திருக்கலாம். ஆனால், எமது வரலாற்றை திட்டமிட்டு அது அழித்திராது.   

 இதே பாணியிலேயே கிந்தியா தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை, தமிழ் நாட்டின் பூர்விக, வரலாற்று, பண்பாட்டு, மொழி, அரசியல் உரிமைகளையும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வலுவையும் இல்லாமல் செய்வதற்கு, மறைத்து வைத்து இருக்கிறது

கிந்தியாவின் சமீபத்திய மறைக்கும் முயற்சி - https://scroll.in/article/833255/transfer-of-archaeologist-from-history-defining-sangam-era-site-leads-to-uproar-in-tamil-nadu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.