Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க:

பழைய திரியான   சென்னை மெட்ரோ ரயில் அதிக படங்களையும், செய்திகளையும் தாங்கியிருப்பதால் கணனியில் உடனடியாக தெரிவதில் தாமதம் ஏற்படுகிறது.. ஆகையால் அதன் தொடர்ச்சி சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2 என்ற பெயரில் இங்கே..

************************************************

சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம்...

highcourt2.jpg

high_court_4.jpg

high_court_5.jpg

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

சென்ற மாதம் சென்னை சென்றபோது சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது..

மேம்பால பாதையில் கடக்கும் ரயில் நிலையங்களை விட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களின் குறைகள் சில இருந்தாலும் உள்கட்ட வடிவமைப்பு நன்றாக உள்ளது.. பகல் நேரங்களில் பேரனுடன் பயணம் செய்தபோது கூட்டம் குறைவாக இருந்தது.. ஆனால் மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் கூட்டம் அதிகமாக உள்ளது.. சென்னை சென்ட்ரல் வரை சேவைகள் திறந்தவுடன் கூட்டம் மிக அதிகமாக இருக்குமென தெரிகிறது..

புதிய மேம்பட்ட 'மெட்ரோ ரயில் சேவை', சென்னைக்கு ஒரு வரப்பிரசாதமே! :)

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரு மாதங்களில் துவங்க இருக்கும் சைதாப்பேட்டை வழியாகச் செல்லும் ஏ.ஜி-டி.எம்.எஸ் - சின்னமலை மற்றும் நேரு பூங்கா - சென்ட்ரல் மெட்ரோ வழித்தட நீட்சியின் வேலைத் திட்டங்களை தமிழக தொழிற்துறை அமைச்சர் பார்வையிட்டபோது எடுத்த படம்..

இந்த இரண்டு வழித்தட நீட்சிகளும் சுரங்கப் பாதையில் அமைத்துள்ளது.

27336741_1928542637158918_37774862447962

27540688_1928542397158942_23774319467422

27073397_1928542630492252_89332681732512

Edited by ராசவன்னியன்

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1' ன் விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி..

 

Chennai_Metro.jpg

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

'சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1' ன் விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி..

 

Chennai_Metro.jpg

கெதியாக கட்டி முடிக்கச் சொல்லுங்கோ.
அடுத்த தேர்தலில்.. அ .தி.மு.க. வர சந்தர்ப்பம் இல்லை. 
தி.மு.க. வந்தால்... இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டால்... தூண்  எல்லாம் வீணாகி போய் விடும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கெதியாக கட்டி முடிக்கச் சொல்லுங்கோ.
அடுத்த தேர்தலில்.. அ .தி.மு.க. வர சந்தர்ப்பம் இல்லை. 
தி.மு.க. வந்தால்... இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டால்... தூண்  எல்லாம் வீணாகி போய் விடும்.

இந்த மெட்ரோ ரயில் திட்டமும், மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேம்பால சாலை திட்டமும் கடந்த 2007 ம் ஆண்டு திமு.க ஆட்சியில்தான் திட்டமிடப்பட்டு, அங்கீகரிகப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டவை. மறைந்த செயலலிதா அம்மையார்தான் 'ஈகோ'வினால் இத்திட்டங்களை எதிர்த்து, ஒத்தி வைத்தார்..

இரு திட்டங்களும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முதலீட்டில் 50 - 50 அடிப்படையில் தொடங்கப்பட்டவை.. தற்பொழுது ஓடும் அடிமை அரசு ஒழிந்தாலும், தி.மு.க நிச்சயம் இத்திட்டங்களை செயல்படுத்தும்.. ஏனெனில் இது அவர்களின்  ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களாகும்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விபரங்கள்:

 

page.jpg

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் வண்ணாரப்பேட்டை சென்னை விமான நிலைய மெட்ரோ வழித் தடத்தை மேலும் நீட்டிக்கும் விதமாக வண்டலூர் அருகே அமையவிருக்கும் மாநகர பேருந்து முனையமான கிளாம்பாக்கம் வரை ரூ.3500 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் வரவிருக்கிறது.

இந்த வழித்தடம் தென் தமிழகத்தை நோக்கி செல்லும் பிரதான சாலையின்(Grand Southern Trunk Road - GST) நடுவே 15 மீ உயர தூண்கள் அமைக்கப்பட்டு, உயர்மட்ட மெட்ரோ வழித்தடமாக இருக்கும்.

 

72250147.jpg

 

டைம்ஸ் ஆஃப் இந்தியா

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது கட்டிமுடிவுறும் நிலையிலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் தலைமை அலுவலகம்,(Head Quarters) சென்னை அண்ணா சாலையில் நந்தனம் பகுதியில் உள்ளது.

கட்டிட வேலைகள் முடிந்தவுடன், சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் இத்தலைமை அலுவலகம் இங்கே மாற்றப்படும். 😌

FZKLG9yaQAIBn6Y?format=jpg&name=large

FZKLG9-aIAE8wWB?format=jpg&name=large

FZKLG92aAAYKNjC?format=jpg&name=large

 

கோயம்பேட்டில் இயங்கும் தற்காலிக சென்னை மெட்ரோ தலைமை அலுவலகம்.

photo.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.