Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் தமிழசுக் கட்சிக்குள் குழப்பம்!

Featured Replies

12-1.jpg

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது மகனை மாகாணசபைத் தேர்தலில் அறிமுகப்படுத்தி, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவைத்து, மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கியபின்னர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாத்திரம் இருப்பதற்காக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலையொன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான உத்தரவை மாவை சேனாதிராஜா ஒவ்வொரு மாவட்டங்களிலிலும் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பிறப்பித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

http://thuliyam.com/?p=81210

 

  • கருத்துக்கள உறவுகள்

எருமை மாட்டைக் காட்டியே வாக்கு போடலாம் எனும் போது மாவையின் மகனுக்கு வாக்கு விழாதா என்ன?

விழாவிட்டாலும் மாவைக்கு மாற்ற தெரியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன் போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த புரட்சிவெடி களமிறங்கப்போகுது எண்டுறியள்....அதுசரி வாரிசு அரசியல்வாதி சித்தார்த்தன் இருக்கேக்கை....இவரும் தன்ரை வாரிசை இறக்கிறார் போலை....

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை நிண்டு ஜெயிச்சவைக்கு கையிலை அதிகாரமும் இருக்கும் காசுபாக்கிறாதாயும் போகும். அரசியலுக்கு மனிசர் வாறது மக்களுக்கு சேவை செய்யவெண்டே நனைக்கிறியள். இவையெல்லாம் அரசியல் தொழிலாளர். தமிழர் பிரச்சினை தீர்ந்தமாதிரித்தான். மிகச்சீக்கிரம் தீர்வு வருகுதாம் அதிலைவர்றதை அனுபவிக்க பதவிகளை தக்கவைக்க குடும்பத்துக்கொரு அரசியல் தொழிலாளியை அனுப்பவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் போய் மகன் ஊரை ஏய்க்க சரியா இருக்கும். 

தமிழரின் பலவீனங்களை நன்கறிந்த அரசியல் வியாதிகள் இவர்கள்.  தொற்று நோய் போல் தொடர்கிறார்கள். தமிழன் நோய் பட்டே அழியுறான். :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.