Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு தொப்பிகல காட்டுப்பகுதியை நோக்கி இராணுவ நடவடிக்கை

Featured Replies

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு தொப்பிகல காட்டுப்பகுதியை நோக்கி இராணுவ நடவடிக்கை

ஆயிரக்கணக்கான சிறீலங்கா இராணுவத்தினர் பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் மட்டக்களப்பு தொப்பிகல காட்டுப்பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு துணையாக அம்பாறை மாவட்ட சிறீலங்கா படையினரும் பலத்த சூட்டாதரவை வழங்கிவருவதாகவும் இதுவரை எதுவித இழப்புகள் குறித்தும் தெரிவிக்கவில்லை என அம்பாறை மாவட்ட இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

attached from

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

அப்படியானால் மணலாறில் காட்டியது பூச்சாண்டியா ? புலிகள் நிச்சயமாக இதை அறிந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரக்கணக்கான சிறீலங்கா இராணுவத்தினர் பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் மட்டக்களப்பு தொப்பிகல காட்டுப்பகுதியை நோக்கி வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு துணையாக அம்பாறை மாவட்ட சிறீலங்கா படையினரும் பலத்த சூட்டாதரவை வழங்கிவருவதாகவும் இதுவரை எதுவித இழப்புகள் குறித்தும் தெரிவிக்கவில்லை என அம்பாறை மாவட்ட இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

source:www.pathivu.com

www.thakkam.comVisit My Website

கிழக்கில் தற்போது நடைபெறும் பாரிய படை நகர்வை எதிர்த்து புலிகள் தாக்குதல்!

நீலவாணன் 08 பங்குனி 2007

இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி சிறீ லங்கா இராணுவத்தினர் ஒரு பாரிய முன்நகர்வை மேற் கொண்டுள்ளனர். பாரிய எடுப்பபுடன் மகாஓயா, புழுக்குணாவை வழியாக வந்த சிறீ லங்கா இராணுவத்தினர் எந்த வித எதிர்ப்புமின்றி உன்னிச்சைப்பகுதியை கைப்பற்றினர். இதனை அடுத்து உன்னிச்சையிலிருந்து பாவற்கொடிச்சேனை நோக்கி தம் படை நகர்வை மேற்கொண்டனர். ஆனால் உன்னிச்சை பகுதியல் இருந்து பின் வாங்கிய விடுதலைப் புலிகள் தற்போது பாவற்கொட்டிச்சோனையில் இராணுவத்தினரை சுற்றிவழைத்து தாக்குதல் நடாத்தி வருகின்றனர். பாவற்கொட்டிச்சேனையில் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டதை அடுத்து அங்கு படையினரின் முன்நகர்வை தடுத்து நிறுத்தியுள்ளனர் விடுதலைப் புலிகளின் உக்கிர தாக்குதலால் நிலை குலைந்த இராணுவத்தினர் தற்போது ஒரு அங்குலம் கூட நகர முடியது சிக்கி திணறுகின்றனர். இதே வேளை மட்டு நகரில் இருந்து கறுத்தப்பாலம் வழியாக ஒரு படைப்பிரிவினர் புலிபாயந்தகல் பகுதி நோக்கி தாக்குதல் நடாத்த முனைந்ததாகவும் இதனை எதிர் கொண்ட விடுதலைப்புலிகளின் பலத்த எதிர் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. படையினரின் 5 சடலங்களை விடுதலைப் புலிகள் தற்போது கைப்பற்றியுள்ளதுடன் ஆயுத தளபாடங்களையும் மீட்டுள்ளனர்.

இராணுவத்தின் இழப்பை குறைக்க தற்போது இராணுவத்தின் ஒரு பிரிவான கருணா அணியினரை மிகவும் பலவந்தமாக தாக்குதல் முன்னரங்கில் இராணுவத்தினர் நிறுத்தி வைத்துள்ளனர். இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக கருணா குழுவில் இணைக்கப்பட்ட பல சிறுவர்களை குழறிக் குழறி அழுதபோதும் பலவந்தமாக அவர்களை ட்ரக்குகளில் ஏற்றி தாக்குதல் முன் அரங்கிற்கு இராணுவத்தினர் கொண்டு செல்கின்றனர். இதை கண்ணுற்ற பல பொது மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரரிய வருகிறது. மேலதிக செய்திகள் விரைவில்!

Thaakam

இராணுவத்தின் இழப்பை குறைக்க தற்போது இராணுவத்தின் ஒரு பிரிவான கருணா அணியினரை மிகவும் பலவந்தமாக தாக்குதல் முன்னரங்கில் இராணுவத்தினர் நிறுத்தி வைத்துள்ளனர். இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக கருணா குழுவில் இணைக்கப்பட்ட பல சிறுவர்களை குழறிக் குழறி அழுதபோதும் பலவந்தமாக அவர்களை ட்ரக்குகளில் ஏற்றி தாக்குதல் முன் அரங்கிற்கு இராணுவத்தினர் கொண்டு செல்கின்றனர். இதை கண்ணுற்ற பல பொது மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரரிய வருகிறது.

மேலதிக செய்திகள்: Thaakam

இலங்கையின் கிழக்கு பகுதியில் பாரிய இராணுவ முன்னேடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது, தாக்குதல்கள் தொடருகின்றன [Thursday March 08 2007 12:43:12 PM GMT] [pathma]

கிழக்கில் விடுதலைப்புலிகளின் இலக்குகளை நோக்கி இராணுவத்தினர் படை நகர்வுகளை இன்று ஆரம்பித்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவிதுள்ளது.

இதன்னொரு கட்டமாக படையினர் தொப்பிகலயிலுள்ள விடுதலைப்புலிகளின் பிரதான முகாமினை நோக்கி ஆட்டிலறி மற்றும் பல குழல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .

எனினும் இத்தாக்குதலில் போதனா சேத விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை என இராணுவ தரப்பு மேலும் தெரிவித்தது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வு முறியடிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்தப்பாலத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி கறுத்தப் பாலத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் நகர்வை மேற்கொண்ட படையினரின் நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி இழப்புக்களை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே புலுக்குணாவைப் பகுதியில் இருந்து தந்தாமலை நோக்கி ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டு வரும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

http://www.eelampage.com/?cn=31050

7000 people displaced due to shelling in Batticaloa

Continuous shelling by the Sri Lankan armed forces in Batticaloa escalated into large scale attacks today, 8 March 2007. Since this morning, Sri Lankan armed forces are firing artillery shells and mortar shells into almost all parts of the LTTE administered areas in Batticaloa.

Sri Lankan military is launching its attacks from Pulukkunavai, Komanthurai, Webber stadium and Sathurukondan camps.

People from Kokkaddicholai, 40th village, Palukamam, Kurukkalmadam, Poratheevu, Paddipalai, and Thravai areas in Batticaloa have been displaced to Kaluvanchikkudy in SLA controlled area due to this indiscriminate attacks.

The displaced people were moving by the Manmunai and Ampilanthurai routes to SLA administered areas. Special Task Force (STF) of the Sri Lankan military has closed these routes since this morning. More than 7000 people from 2000 families have displaced so far through Paddiruppu to SLA controlled areas.

Mean while, Sri Lankan military’s another attempt to move from the Black bridge towards LTTE area of Koduvamadhu, was thwarted this morning.

One body of Sri Lankan military was also recovered by the LTTE.

08 March 2007

Peace Secretariat - LTTE

Thousands displaced in fresh Sri Lankan offensive

[TamilNet, Thursday, 08 March 2007, 13:35 GMT]

Sri Lanka Army has launched heavy artillery barrage towards Liberation Tigers controlled territories in Batticaloa district since Thursday morning as Sri Lankan Special Task Force (STF) began a two pronged ground offensive from Chenkalady through A-15 (Batticaloa Badulla Road) and from Pulukunawa and Syambalanduwa. Around 10 000 civilians were forced to flee from the shelling inside the LTTE territory. Liberation Tigers said their fighters were engaged in a defensive fight on two fronts. Two civilians were killed in SLA shelling on Thandiyadi. Access routes were closed. Wireless telephone link and mobile network remain dead in the district.

The ground offensive from Chenkalady through Koduwamadu, 15 km northwest of Batticaloa, was thwarted, according to LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan.

LTTE fighters had seized weapons, ammunitions and recovered a dead body of a Sri Lankan trooper, Mr. Ilanthirayan further said.

Meanwhile, another STF ground movement was launched from the southwest, into LTTE territory from Pulukunawa and Siambalanduwa.

Sri Lanka Army was firing artillery shells from Valaichenai SLA base, 23-3 Brigade Commanding base of Sri Lanka Army (SLA), located near the Weber stadium in Batticaloa city, according to the reports from SLA controlled areas in Batticaloa.

Access routes to LTTE controlled area via Ampilanthurai and Manmunai remain closed.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21502

உந்தத் தாக்குதல்களைப் பார்த்தால், அகிம்சாவாதிகளாக மாறிவிட்ட எம்மை, காடுக்குள்ளையும் சிங்களவன் உலாவ விடத் தயாரில்லை போலிருக்குது!!!!

உந்தத் தாக்குதல்களைப் பார்த்தால், அகிம்சாவாதிகளாக மாறிவிட்ட எம்மை, காடுக்குள்ளையும் சிங்களவன் உலாவ விடத் தயாரில்லை போலிருக்குது!!!!

சோழன் அண்ணா என்னத்துக்கும் நீங்கள் செருவி வைத்திருக்கிற வாளை எடுத்தால் தான் சரி வரும் போல இருக்கு

:mellow::mellow:

தொப்பிகல காட்டுப்பகுதியை நோக்கி இராணுவ நடவடிக்கை முறியடிப்பு.

இன்று காலை சிறீலங்கா படையினரின் விசேட அதிரடிப்படையினர் இருமுனைகளில் செங்கலடி பகுதியில் இருந்து குடுவாமடு பகுதியூடாக ஏ-15 பாதையூடாகவும் , புளுக்குனாவ மற்றும் சம்பலாந்துவ பகுதியில் இருந்து பலந்த எறிகணை சூட்டாதரவுடன் வலிந்த ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்று மேற்கொண்டிருந்தனர்.

இதனை இருமுனைகளில் எதிர்த்த விடுதலைப்புலிகள் இவர்களை பழையநிலைகளுக்கு விரட்டியடித்துள்ளதாகவும் சிறீலங்கா படையினர் ஒருவரின் உடலம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினரின் வாழைச்சேனை முகாம், கொம்மாந்துறை முகாம் மற்றும் 23-3 பிரிகேட்டின் கட்டளை மையம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் 10000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது

-Pathivu-

அரசாங்கம் இத மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக அறிவிக்கும்.

அரசாங்க இராணுவபேச்சாளர் லீசா அறிக்கை விட்டுவிட்டா எல்லாரும் கேளுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரையை கைப்பற்றூவதற்கு முன் தமிழ் ஊடகங்களின் செய்தி இப்படி தான் இருந்தது

மட்டக்களப்பு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முன்நகர்வு புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்தப்பாலத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி கறுத்தப் பாலத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி இழப்புக்களை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து படையினர் பின்வாங்கிவிட்டனர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே புலுக்குணாவைப் பகுதியில் இருந்து தந்தாமலையை நோக்கி ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டு வரும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரையை கைப்பற்றூவதற்கு முன் தமிழ் ஊடகங்களின் செய்தி இப்படி தான் இருந்தது

இதனுாடாக நீங்கள் சொல்லவாற செய்தி என்ற என்று தெளிவாக விளக்குவீர்களா??

நன்றி..

இராணுவ ஆக்கிரமிப்பு முன்னகர்வு - முறியடிப்பு

இராணுவ வலிந்த தாக்குதல் - முறியடிப்பு

இராணுவ ஆக்கிரமிப்பு முயற்சி - முறியடிப்பு

................................

................................

இராணுவத்தின் இறுதித் தாக்குதல் - தந்திரோபாய பின்னகர்வு.

(யாழ்கள இராணுவ ஆய்வாளர்கள் அறிக்கை சமர்ப்பிப்பு)

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்

[Thursday March 08 2007 07:57:51 PM GMT] [யாழ் வாணன்]

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய சில பகுதிகளில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளார்கள்.

மட்டக்களப்பு வாவிக்கு அப்பாலும் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கிராமங்களிலிருந்தும் கடந்த ஒரு வார காலத்திற்குள் 3200 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளதாகக் கூறும் அதிகாரிகள் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மட்டும் 3 ஆயிரம் பேர் வந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ முகாம்களிலிருந்து பரவலாக ஏவப்படும் எறிகனைகள் தமது குடியிருப்புகளில் விழுந்து வெடிப்பதால் தாம் இடம் பெயர வேண்டியேற்பட்டதாக அங்கிருந்து வெளியேறியவர்கள் கூறுகின்றார்கள்

இம்மாவட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 25875 குடும்பங்களைச சேர்ந்த 95 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தவர்களாக தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

bbc.com

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுமலை நோக்கிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்பு: 6 படையினர் பலி! ஆயுதங்கள் மீட்பு: போராளி ஒருவர் வீரச்சாவு.

மட்டக்களப்பு புல்லுமலை நோக்கிய படை நடவடிக்கை ஒன்றை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்புச் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. இன்று மதியம் இப்படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனரக ஆயுதங்கள், எறிகணை, மற்றும் பல்குழல் சகிதம் முன்னேற்ற நகர்வு விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

இன்றைய மோதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 20 பேர் வரையில் உயிரிழந்திருக்காலம் என நம்பப்படுவதோடு இராணுவத்தினரின் 6 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 20 வரையிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.