Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமான கட்டத்தில் குடாநாட்டின் பாதுகாப்பு

Featured Replies

மோசமான கட்டத்தில் குடாநாட்டின் பாதுகாப்பு

 
மோசமான கட்டத்தில்  குடாநாட்டின் பாதுகாப்பு
 

குடா­நாட்­டின் பாது­காப்பு மோச­மான கட்­டத்தை எட்­டி­யுள்­ளதை அரி­யாலை கிழக்­கில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் எடுத்­துக் காட்­டி­யுள்­ளது.

இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் இளை­ஞர் ஒரு­வர் அநி­யா­ய­மாக உயி­ரி­ழந்­துள்­ளார்.

குடா­நாட்­டில் துப்­பாக்­கிக் கலா­சா­ரம் மீண்டும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளதை மேற்­படி சம்­ப­வம் எடுத்­துக் காட்­டு­கின்­றது.

குடா­நாட்டு மக்­க­ளுக்கு துப்­பாக்­கி­கள் புதி­தா­ன­வை­யல்ல. நீண்ட கால­மாக இடம்­பெற்ற போர் கார­ண­மா­கத் துப்­பாக்­கி­கள் மட்­டு­மல்­லாது ஏனைய போரா­யு­தங்­க­ளும் இவர்­க­ளுக்கு அத்­துப்­ப­டி­யா­கி­விட்­டன.

ஆனால் போர் ஓய்ந்து அமைதி திரும்­பி­யுள்­ள­தா­கக் கூறி வரு­கின்ற இன்றைய நிலை­யில் வாள்­வெட்­டுக் கலா­சா­ரம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

குடா­நாட் டைப் பொறுத்­த­வ­ரை­யில் இங்கு நிலை­கொண்­டி­ருக்­கும் பொலி­ஸார் மற்­றும் படை­யி­ன­ரைத் தவிர ஏனைய சாதா­ரண பொது­மக்­க­ளி­டம் துப்­பாக்கி சட்டபூர்வமாக வைத்திருப்பதற்கான கார­ணம் எது­வு­மில்லை.

இவ்­வாறு பொது­மக்­க­ளி­ட­மும் துப்­பாக்­கி­கள் இருக்­கு­மே­யா­னால் குடா­நாட்­டின் பாது­காப்பு மோச­மான கட்­டத்தை எட்­டி­விட்­டது என்­று­தான் கூற வேண்­டும்.

குடாநாட்டில் படையினரது
பிரசன்னம் அவசியமாக்கப்படும் 
ஏதுநிலை

இந்த நிலை­யில் குடா­நாட்­டி­லி­ருந்து படை­யி­னரை அகற்ற வேண்­டுமெ ன இனி­மேல் எவ­ருமே கோரிக்­கை­விட முடி­யாத ஒரு ஏது­நிலை உரு­வாக்­கப்­பட்டு வரு­வ­து­போல் தோன்­று­கி­றது.

படை­யி­னர் இங்கு நிலை­கொண்­டி­ப்பதை நியாயப்படுத்த வலு­வான ஆதா­ர­மொன்று தற்­போது அர­சுக்­குக் கிைடத்­து விட்­டது.

போருக்­குப் பிந்­திய காலப்­ப­குதி குடா­நாட்டு மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் சோத­னைக் கள­மா­கவே மாறிவிட்­டது. திருட்­டுக்­கள், கொள்­ளை­க­ளில் ஆரம்­பித்து கொலை­ க­ளும் இடம்­பெற ஆரம்­பித்­து­விட்­டன.

இளை­ஞர்­க­ளில் ஒரு பிரி­வி­னர் வாள்களுடன் வெறி­யாட்­டத்­தில் ஈடு­படுகின்றனர். குடா­நாட்டு மக்­க­ளது தனித்­து­வ­மிக்க கலா­சா­ரம் மறைந்து வன்­மு­றைக் கலா­சா­ர­மாக மாறி­ வரு கின்றது.

மீண்டும் தலைதூக்கும்
வன்முறைக்கலாசாரம்

கல்­விக்­கும் கலா­சா­ரத்­துக்­கும் தெய்வ வழி­பாட்­டுக்­கும் புகழ்­பெற்ற குடா­நாடு தலை­கு­னிந்து நிற்க வேண்­டி­ய­தா­யிற்று. ஆனால் இந்த இழி­நி­லை­யைக் களை­வ­தற்­கான நட­வ­டிக்கை எது­வும் அதற்­கு­ரிய அதி­கா­ரத் தரப்­பி­ன­ரால் எடுக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

குடா­நாட்­டின் படித்த மனி­தர்­க­ளும் சமு­தா­யத்­தில் உயர்ந்த அந்­தஸ்தை வகிப்­ப­வர்­க­ளும் வாய்­மூடி மெள­னி­க­ளாக இருந்து கொண்டு இங்கு நடப்­ப­வற்­றைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கவே முடிந்­தது.

அர­சி­யல்­வா­தி­க­ளின் நிலை­யும் இது­போன்று தான் காணப்­பட்­டது.
கோண்­டா­வி­லில் நிகழ்ந்த பொலி­ஸார் மீதான வாள்­வெட்­டுச் சம்­ப­வம் பொலிஸ் தரப்­பி­னரை விழிப்­ப­டை­யச் செய்­தது.

அதைப் போன்று வட­ம­ராட்­சி­யில் துன்­னா­லைப் பகு­தி­யைச் சேர்ந்த சில­ரால் நடத்­தப்­பட்ட வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளும் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டன.

இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யின் மெய்ப்­பா­து­க­வ­லர் சுட்­டுக் கொல்­லப்­பட்­டமை பொலி­ஸாரை ஆத்­தி­ர­ம­டையச் செய்­து­விட்­டது.

இதன் பின்­னர் பொலி­ஸார் மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­ளால் வாள்­வெட்­டி­லும் வன்­மு­றை­க­ளி­லும் ஈடு­பட்ட பலர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் குறைந்து காணப்­பட்­டன. ஆனால் சமீப நாள்­க­ளாக அவை மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ள­தைக் காண­மு­டி­கின்­றது.

இதன் உச்­சக்­கட்­ட­மாக அரி­யா­லை­யில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் அமைந்­து­விட்­டது. இந்­தச் சம்­ப­வத்தை கேள்­விப்­பட்­ட­தும் தெற்­கில் உள்ள இன­வா­தி­கள் துள்­ளிக் குதிக்­கப் போகி­றார்­கள்.

புலிப் பயங்­க­ர­வா­தம் மீண்­டும் வடக்­கில் தலை­தூக்­கி­விட்­டது. பெரும்­பான்­மை­யின மக்­கள் இனி­மேல் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாது. வடக்­கில் மேல­திக படை­மு­காம்­களை அமைத்து அங்கு தலை­தூக்­கி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­துக் கட்ட வேண்­டும் என்­றெல்­லாம் கூச்­சல்­கள் தலை­தூக்­கப் போகின்­றன.

வழிதவறிச் செல்ல முயலும்
இளைய சமுதாயம்

அர­சி­யல் கைதி­கள் பற்­றிப் பேசு­கின்­றோம். படை­யி­ன­ரி­டம் தமது காணி­களை இழந்து தவிக்­கின்ற மக்­க­ளின் நிலை கண்டு வேத­னைப்­ப­டு­கின்­றோம். காணா­மற் போகச் செய்­யப்­பட்­ட­வர் தொடர்­பா­கக் குரல் எழுப்­பு­கின்­றோம்.

ஆனால் எம்­மால் ஒழுங்­காக இருக்க மு­டி­ய­வில்லை. இந்த நிலை­யில் மற்­ற­வர்­க­ளைக் குறை­கா­ணு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­க­மாட்­டாது.

இங்­குள்ள இளை­ஞர்­க­ளில் சிலர் திரைப்­ப­டங்­க­ளை­யும் தொலைக்­காட்­சித் தொடர்­க­ளை­யும் பார்த்­து­விட்டு அதில் தோன்­று­கின்ற கதா­பாத்­தி­ரங்­கள் போன்று தாமும் நடக்க முற்­ப­டு­கின்­ற­னர்.

இதன் விளை­வு ­க­ளைத்­தான் குடா­நாட்டு மக்­கள் இன்று அனு­ப­விக்­கின்­ற­னர்.
புலி­க­ளின் காலம் தொடர்­பாக நாம் பேசு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­காது.

அத்­த­கை­ய­தொரு காலம் இல­கு­வில் உரு­வா­கி­விட முடி­யாது. எம்மை நாமே திருத்­திக் கொள்­வ­தன் மூல­மாக அந்­தக் காலத்­தில் நிலை­நாட்­டப்பட்ட சட்­டத்­தை­யும் ஒழுங்­கை­யும் எம்­மால் உய்த்துணர மு­டி­யும்.

இளை­ஞர்­கள் அனை­வ­ரும் சரி­யான திசை­க­ளில் செய்­வார்­க­ளா­யின் குடா­நாட்­டில் அமைதி மீள நிலை­பெ­றும். இல்­லை­யென்­றால் இங்கு வாழ்­கின்ற மக்­களை எவ­ரா­லும் காப்­பாற்­றி­விட முடி­யாது.

http://newuthayan.com/story/40215.html

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது என்ன?  ஏன் அந்த இளைஞன் சுடப்பட்டான் ?  ஏதாவது இயக்கரீதியான தொடர்புகளா? எனபன போன்ற   கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.  எல்லா தொடர்புச்  சாதனங்களும் நடந்த நிகழ்ச்சியை வைத்துக்கொண்டே செய்திகளைத் தருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இங்­குள்ள இளை­ஞர்­க­ளில் சிலர் திரைப்­ப­டங்­க­ளை­யும் தொலைக்­காட்­சித் தொடர்­க­ளை­யும் பார்த்­து­விட்டு அதில் தோன்­று­கின்ற கதா­பாத்­தி­ரங்­கள் போன்று தாமும் நடக்க முற்­ப­டு­கின்­ற­னர்.

நிறைய சண்டை படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பும் வந்துள்ளன.
 இவ்வளவு இராணுவம், காவல்துறையினரை வைத்துக்கொண்டு வன்முறை எப்படி நடைபெறுகின்றது என்பதை யாரும் ஊகிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, karu said:

நடந்தது என்ன?  ஏன் அந்த இளைஞன் சுடப்பட்டான் ?  ஏதாவது இயக்கரீதியான தொடர்புகளா?

இயக்கரீதியான தொடர்புக்குக்கான சாத்தியம் குறைவு .....அப்படி அடிபட்டவையள் பலர் இப்பொழுது கவிதை, கட்டுரை, கதை என்று எழுதிகொண்டு வெளிநாட்டிலிருக்கினம் ...சிலர் தீவிர பக்தர்களாகி ஆத்மீகவாதியாகிவிட்டார்கள்...


அலை பேசி அழைப்பு வந்தவுடன் வெளி சென்றவர் என்று சொல்லுகிறார்கள்....இந்தியா ஸ்டைலில் என்கவுன்டர் நடக்குதோ தெரியாது....

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.