Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் வரமாட்டார்கள்

Featured Replies

சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் வரமாட்டார்கள்

3-10eb2d219ed72b925df1706eb4eaaff0f8e063f8.jpg

 

இதுவே இறுதி சந்தர்ப்பம்; அமைச்சர் டிலான்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அர­சி­ய­ல­மைப்பு பணி­களை இடை­நி­றுத்த அர­சாங்­கத்­திற்கு காணப்­படும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை தகர்ப்ப­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்த பின்னர் பெரும்­பா­மையை இல்லாமல் செய்யுங்கள். அதன்­பின்னர் ஜோன் சென­வி­ரத்ன மாத்­தி­ர­மல்ல நானும் வருவேன். ஏனெனில் இதுதான் இறுதி சந்­தர்ப்பம். இனிமேல் தமிழ் மக்­களில் இருந்து சம்­பந்தன் போன்ற தலைவர் ஒருவர் வர­மாட்டார் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். 

அதி­கார பகிர்வு விட­யத்தில் கூட்டு எதிர்க்­கட்சி பிள­வுப்­பட்­டுள்­ளது. மேலும் தமிழ் பெண்­களை அழைத்து சென்று கொலை செய்­வ­தனை பார்ப்­பதில் சந்­தோ­ஷப்­படும் விமல் வீர­வன்ச , கமால் குண­வ­ரத்ன ஆகியோர் மிரு­கங்­க­ளாவர். விமல் வீர­வன்ச, வீர­வன்ச அல்ல. கார்ட்போர் வன்­ச­வாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

வெள்ளை தாமரை நிகழ்ச்சி திட்­டத்தின் ஊடாக அன்று ஒற்­றை­யாட்­சிக்கு பதி­லாக ஐக்­கிய நாடு என்ற தீர்வு காண முன்­வந்தோம். இந்த அர­சி­ய­ல­மைப்­பினை ஜீ.எல் பீரிஸே கொண்டு வந்தார். அந்த அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்ற கிரா­மத்­திற்கு கிராமம் நாம் சென்று பிர­சாரம் செய்தோம். இதன்­போது டலஸ் அழ­கப்­பெ­ரும உட்­பட பலர் எம்­முடன் வந்­தனர். எனது நண்பன் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கேயும் வருகை தந்தார். அவர் தமிழ் மொழி­யில்தான் உரை நிகழ்த்­தினார். எனினும் உண்­மையில் கூற போனால் ஐக்­கிய நாடு என்ற தீர்­வு­திட்­டத்­திற்கே நான் விரும்­பினேன். எனினும் தற்­போது சுதந்­திரக் கட்சி அந்த நிலைப்­பாட்டில் இல்லை. எனினும் நாம் முன்­வைத்த அர­சியல் தீர்­வினை ஐக்­கிய தேசியக் கட்சி அன்று தீயிட்டு கொழுத்­தி­யது.

 ஐக்­கிய , சுயா­தீன சுய­நிர்­ண­யத்தை ஏற்­பதே சிறந்­தது என நாமும் பீரிஸூம் கோரினோம். அப்­போது நாம் முன்­வைத்த தீர்வு திட்­டத்தில் ஒற்­றை­யாட்சி இருக்­க­வில்லை. அந்த திட்­டத்தில் ஐக்­கியம் என்றே பிர­யோகம் செய்­யப்­பட்­டது. பெளத்த மதத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. அது தொடர்­பாக வேறு வாக்­கி­யமே இருந்­தது. இந்த தீர்­வினை நிறை­வேற்ற நாம் இலங்கை பூரா­கவும் சென்றோம். பெளத்த நாடும், ஒற்­றை­யாட்சி இல்­லாத அர­சி­ய­ல­மைப்­புக்­காக நாம் கிரா­மத்­திற்கு சென்றோம்.

ஒரு தரப்பின் அபி­லாஷை மற்­றொரு தரப்­புக்கு சந்­தேகம். சம்ஷ்டி என்­பதே தீர்வு ஆனால் அதுதான் மற்ற தரப்­பி­ன­ருக்கு சந்­தேகம். எவ்­வா­றா­யினும் அந்த திட்­டத்தை நிறை­வேற்ற முடி­யாமல் போனது. அத்­துடன் தற்­போது தினேஷ் குண­வர்­தன எம்.பியும் ஐக்­கிய நாடு திட்­டத்­திற்கு விருப்பம் கொண்­டவர். என்­றாலும் அவ­ரது கட்­சியின் நிலைப்­பாட்டின் கார­ண­மாக அவ­ரது உண்­மை­யான நிலைப்­பாடு மறை­மு­க­மா­கி­யுள்­ளது. அவர் எதுவும் தெரி­யா­தது போன்று செயற்­ப­டு­கின்றார்.

நாம் தற்­போது பேசு­வது இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கவே ஆகும். இது முதன்­மை­யான யோச­னை­யாகும். இதில் கட்­சி­க­ளி­டையே இணக்­க­பாடு இல்லை. இணக்­க­பாடு ஒன்று ஏற்­பட்­டி­ருந்தால் வழ­ந­டத்தல் குழு நிறுவ வேண்­டிய தேவை­யில்லை. அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பு சபை நிறு­வவும் தேவை­யில்லை. இணக்­க­பாடு இல்லை. அத­னா­லேயே வழி­ந­டத்தல் குழு நிறு­வி­யுள்ளோம். இதன்­பின்னர் தான் இணக்­கப்­பாட்­டிற்கு வர வேண்டும்.

அத்­துடன் தற்­போது அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை. திருத்­தங்கள் மாத்­திரம் போதும் என்­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்க வேண்டும் என்ற செயன்­மு­றைக்கு முழு பாரா­ளு­மன்­றமும் அங்­கீ­காரம் வழங்­க­விட்­டது. முழு பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்­பாக மாற்ற எவரும் எதிர்க்­க­வில்லை. தற்­போது தேவையா? இல்­லையா? என்­பது பிற்­பட்ட விடயம். அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். எவ­ரும எதிர்க்­க­வில்லை. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யாகும். நாம் இணங்கி விட்டோம். இனிமேல் மாற்ற முடி­யாது.

இதன்­படி உப குழுக்­களும் நிறு­வப்­பட்­டது. இதன்­போது நான் இருந்த குழுவின் தலை­வ­ராக தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தனே இருந்தார். அவர் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரின் யோச­னைக்கே அதிக நேரம் கொடுத்து செயற்­பட்டார். இலங்கை வர­லாற்றில் ஆட்சி புரிந்­த­வர்கள் மாறி மாறி பலர் தீர்வு வழங்க முற்­பட்ட போது எதிர்­கட்­சி­யினர் எதிர்ப்பு தெரி­வித்­தனர். சுதந்­திரக் கட்சி கொண்டு வரும் போது ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்த்­தது. ஐக்­கிய தேசியக் கட்சி கொண்டு வரும் போது நாம் எதிர்த்தோம்.

இந்­நி­லையில் தற்­போது அதி­கார பகிர்வு விட­யத்தில் கூட்டு எதிர்க்­கட்சி பிள­வுப்­பட்­டுள்­ளது.இதன்­படி வாசு­தேவ நாண­யக்­கார போன்றோர் அதி­கார பகிர்வு விடத்­திற்கு இணக்கம் தெரி­விக்­கின்­றனர். எனினும் பாரா­ளு­மன்ற குண்டு போட வேண்டும் என கூறிய இன­வாத சிந்­தனை கொண்­ட­வர்கள் வேறு நிலைப்­பாட்டில் உள்­ளனர். எனவே எமக்கு கூற முடியும் கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் பிளவு என்று கூற­மு­டி­யும. அத்­துடன் ஒருவர் ஒரு குண்டு போட வேண்டும் என்று கூறு­கின்­றனர். இன்­னொ­ருவர் 100 குண்டு போட வேண்­டும என்­கின்­றனர். ஆகையால் இவ­ர­க­ளுக்குள் பிளவு ஒன்று உள்­ளது.

 இதே­வேளை இன்­னொரு விட­யத்தை நான் குறிப்­பிட்டே ஆக வேண்டும். சுதந்­தி­ரத்­திற்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்­ப­தற்கு தமிழ் மக்­க­ளுக்கு 67 வருடம் சென்­றது. இது வெட்­கப்­பட வேண்­டி­ய­தாகும். ஏன் இனப் பிரச்­சினை வந்­தது. வீட்டில் கட்­டு­கோப்­புடன் வாழும் தமிழ் பெண்கள் வயிற்றில் குண்டு வைத்து தாக்­குதல் நடத்த ஏவி விடு­வ­தற்கு பிர­பா­க­ர­னினால் ஏன் முடிந்­தது. அவர்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைகள் இருந்­த­மையின் கார­ண­மா­கவே தமிழ் பெண்கள் அவ்­வாறு செயற்­பட்­டனர். தமிழ் மக்­களை இழி­வுப்­ப­டுத்த வேண்டாம். அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை நாம் வழங்க வேண்டும். நாம் அனை­வரும் ஒரு நாட்­டிற்குள் அதிகாரங்களை பகிர்ந்­த­ளித்து செயற்­பட வேண்டும்.எனினும் பகிர்ந்­த­ளிக்கும் போது பிரச்­சினை ஏற்­படும். அத்­துடன் தற்­போது வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்­பான பிரச்­சி­னையின் போது பிர­தான கட்­சிகள் இணக்­கத்­திற்கு வந்தால் அர­சாங்­கத்­துடன் பேசு­வ­தற்கு தயார் என கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறினார். எனினும் சிங்­கள பத்­தி­ரி­கை­களில் அதற்கு முக்­கி­யத்தும் வழங்­கப்­ப­ட­வில்லை.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பில் மும்­மொ­ழி­க­ளிலும் ஒற்­றை­யாட்சி சொற்­ப­தத்தை வைப்­ப­தற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இணக்கம் தெரி­வித்­துள்­ளது. சுதந்­திரக் கட்­சியும் அதி­கா­ர­ப­கிர்­வுக்கு விரும்புகின்றது. விமல் வீர­வன்ச ஆகி­யோரின் செயற்­பாட்­டினால் எமக்கு அதி­கார பகர்­விற்­கான விருப்பம் மேலும் மேலும் அதி­க­ரிக்கும். அவர்­க­ளுக்கு எம்மை அச்­ச­மூட்ட முடி­யாது. அத்­துடன் தமிழ் பெண்­களை அழைத்து சென்று கொலை செய்­வ­தனை பார்ப்­பதில் சந்­தோ­ஷப்­படும் விமல் வீர­வன்ச , கமால் குண­வ­ரத்ன ஆகியோர் மிரு­கங்­களோயாவர். இந்த பிரச்­சி­னையை மத்­திய நிலைக்கு வந்து தீர்க்க வேண்டும். இன­வா­தத்தை கக்கும் விமல வீர­வன்ச வீர வன்ச அல்ல. கார்போர்ட் வன்ச ஆவார்.

அத்­துடன் தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்­களம் ஆகிய அனைத்து கட்­சி­களும் இன­வா­தத்தை தூண்­டி­யுள்­ளன. வடக்கில் தமிழ் மக்­க­ளுக்கும் குல பிரச்­சி­னைகள் உள்­ளன. அதனை அவர்­க­ளுக்குள் தீர்­வு­காண முன்­வர வேண்டும். இலங்கை வர­லாற்றில் அர­சியல் கட்சி தலை­வர்கள் தவறு இழைத்­துள்­ளனர். அதனை நாம் ஒப்­புக்­கொள்­கின்றேன். எனவே தற்­போது நல்ல பிர­வே­சத்­திற்கு வருவோம். முன்­னுக்கு கொண்டு செல்வோம். பிரச்­சி­னைகள் உள்ள இடத்தில் தீர்வு காண சர்­வ­கட்சி மாநாட்டை நடத்த ஜனா­தி­பதி தீர்­மா­னித்­துள்ளார். சிங்­கள மக்­க­ளி­டையே சந்­தேகம் இருந்­தாலும் அதனை வைத்­துக்­கொண்டு இல்­லாத பூதத்தை கிளப்­பு­கின்­றனர்.

வடக்கை பொறுத்­த­வ­ரையில் மத்­தி­யஸ்தம் வகித்து செயற்­படும் சம்­பந்தன் , சுமந்­திரன், மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரை சி.வி விக்­கி­னேஸ்­வ­ரனும் சிவா­ஜி­லிங்­கமும் துரோ­கிகள் என்­கின்­றனர். இவர்கள் இடைக்­கால அறிக்­கையில் உள்ள கட்­சி­களின் நிலைப்­பாட்டை வடக்கு மக்­க­ளிடம் கொண்டு செல்­கின்­றனர்.

எனவே நாம் மத்­திஸ்த நிலைக்கு வருவோம். ஆகவே இறுதி தீர்வு திட்டம் தொடர்பில் விவாத்தின் பின்னர் பேசுவோம். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு பணி­களை இடை­நி­றுத்த அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தகர்த்துவதற்கு சதி திட்டம் தீட்டுகின்றனர். இதுவரைக்கும் மூவரை கூட்டு எதிர்க்கட்சி தன்வசம் எடுத்து கொண்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தகர்ப்பதாயின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வந்த பின்னர் செய்யுங்கள்.அதன்பின்னர் ஜோன் செனவிரத்ன மாத்திரமல்ல நானும் வருவேன். ஏனென்றால் இதுதான் இறுதி பஸ் வண்டியாகும். இனிமேல் பிரச்சினைகளை தீர்க்க சந்தர்ப்பம் கிடைக்காது. ஒற்றையாட்சியையும் பெளத்த மத முன்னுரிமையை ஏற்கும் சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் தமிழ் மக்களிடையே இருந்து வரமாட்டார். ஆகவே அனவைரும் ஒன்றிணைந்து அனைத்து இனத்தவர்களையும் சமமாக கருதும் தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் வரமாட்டார்கள்

3-10eb2d219ed72b925df1706eb4eaaff0f8e063f8.jpg

ம்! பாருங்கள், தமிழருக்கு நன்மைவிளையுமெனில் சிங்கள மட்டங்கள் இப்படி அன்பைப் பொழியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

 இவர்கள் நம்  பிரச்சனைக்கு தீர்வு இன்றி   இழுத்தடித்து வீண் விதண்டாவாதம் பண்ணினால் சர்வதேச விசாரணையையும், நாடு பிரிவதையும் இவர்களால் தடுக்க முடியாது. தாங்களே எம்மை அந்த முடிவுக்கு துரிதப்படுத்தியவர்களாவர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

 இவர்கள் நம்  பிரச்சனைக்கு தீர்வு இன்றி   இழுத்தடித்து வீண் விதண்டாவாதம் பண்ணினால் சர்வதேச விசாரணையையும், நாடு பிரிவதையும் இவர்களால் தடுக்க முடியாது. தாங்களே எம்மை அந்த முடிவுக்கு துரிதப்படுத்தியவர்களாவர்.

சதனவர்களே !  நாம் கிட்டத்தட்ட இந்த நிலையைத் தொட்டவர்களாகவே நிற்கின்றோம். ஆனால் இவற்றை ஒரு நிரற்படுத்தி ஆளுமையோடு முன்னெடுக்கக்கூடிய தலைமைகளோ அமைப்புகளோ தாயகத்திலோ புலத்திலோ இல்லாத இருள்நிலையாகவல்லவா இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

சதனவர்களே !  நாம் கிட்டத்தட்ட இந்த நிலையைத் தொட்டவர்களாகவே நிற்கின்றோம். ஆனால் இவற்றை ஒரு நிரற்படுத்தி ஆளுமையோடு முன்னெடுக்கக்கூடிய தலைமைகளோ அமைப்புகளோ தாயகத்திலோ புலத்திலோ இல்லாத இருள்நிலையாகவல்லவா இருக்கிறது. 

இருக்கும் தலைமைகளையும் உதாசீனப்படுத்தி, மலினப்படுத்தி ஒரே இடத்தில நின்றுதான் உழுவோம் என்று மல்லுகட்டுறவையோடு  நின்று எப்பிடி? யார் முன்வருவர்? இப்போ இருக்கும் முதலமைச்சர் கையை பலப்படுத்த  வேண்டாம், அவரை பலயீனப்படுத்தாமல் விட்டாலே நாங்கள் ஓரளவு  எங்கள் இலக்கை அடையலாம். அவர் கையை கட்டி ஒரு மூலையில் வைக்க எவ்வளவு முயற்சி நடக்கிறது. எத்தனைபேர் துடிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

இருக்கும் தலைமைகளையும் உதாசீனப்படுத்தி, மலினப்படுத்தி ஒரே இடத்தில நின்றுதான் உழுவோம் என்று மல்லுகட்டுறவையோடு  நின்று எப்பிடி? யார் முன்வருவர்? இப்போ இருக்கும் முதலமைச்சர் கையை பலப்படுத்த  வேண்டாம், அவரை பலயீனப்படுத்தாமல் விட்டாலே நாங்கள் ஓரளவு  எங்கள் இலக்கை அடையலாம். அவர் கையை கட்டி ஒரு மூலையில் வைக்க எவ்வளவு முயற்சி நடக்கிறது. எத்தனைபேர் துடிக்கினம்.

சிங்களம் மட்டுமல்ல,  விலைபோன, தமிழினத்தை விற்கின்ற,  தலைமைகளும் அகற்ற விளையும்  முதலமைச்சர் போன்றவர்களைப்  பாதுகாத்து ஒருமக்கள் பலம் கொண்ட  அரசியல் சக்தியாக மாற்றுவதை,  அதாவது தமிழ்தேசியக் கூட்டமைப்பை  மடைமாற்றம் செய்வதுகூடச் சாத்தியப்படாதுள்ளதே. அவர்கூட அப்பப்போ மாற்றுத்தலைமை தேவையில்லை என்று கூறிவருகிறார். தமிழ் மக்கள் பேரவை ஒரு காத்திரமான நகர்வுகளைச் செய்தது. ஆனால் அண்மைக்காலமாக அவர்களையும் காணவில்லை. அதற்காக உழைத்த இளையோரான பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள காவற்றுறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைசெய்தவர்களும் தண்டிக்கப்படவில்லை.  இந்தச்சூழலானது  ஒரு உறைநிலைதானே. அப்படியாயின் எப்படி ஒரு பொருத்தமான தேவைப்படும் சூழலில் நகர்வுகளைத் தலைமையேற்று நகர்த்துவது சாத்தியமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

 த.ம. பேரவை முதலமைச்சரை பாவித்து மக்களை தம் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்களேயொழிய பெரிதாய் எதுவும் நிகழ்த்துவதாய் தெரியவில்லை. முதலமைச்சர் கடந்த தேர்தலில் ஒன்று சொல்லப்போக அந்தத் தொப்பியை தங்கட தலையில போட்டுகொண்டு ஆடின சன்னதம் தெரிந்ததே. அதை விட கள்ள வோட்டை தடுக்க  முதல்வரால் முடியாது. அதனால் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கலாம் எண்டு நினைக்கிறார். பாவம் அவர் எது சொன்னாலும் இன்று அது  உலக செய்தியாகிறது. மகா தப்பாக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.