Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது.

Featured Replies

ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது.

 
 
உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசியலில் போட்டியிட்டோம்.இன்றைய சூழ்நிலையில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம். நல்லாட்சி என சொல்லப்படும் இந்த அரசாங்கம் உலகில் பெரும் மோசடியான மத்திய வங்கி மோசடி செய்தவர்கள். அதனை ஜனாதிபதியே ஒப்புக்கொண்டு உள்ளார். அவ்வாறு செய்தவர்களுடன் கூட்டு சேர விரும்பவில்லை. அதனால் தனித்து போட்டியிடுகின்றோம்.ஆனாலும் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கொள்கையில் மாற்றமில்லை.
 
வெள்ளத்தால் பாதிப்பு அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுகின்றனர் அரசியல்வாதிகள் கூட கண்டு கொள்ளவில்லை இவ்வாறான அரசியல்வாதிகளை உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.காணாமல் போனவர்கள் போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடக்கின்றது அதற்கு கூட தீர்வினை பெற்று தர கூட நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் முனையவில்லை.
 
யாழ்.பல்கலைகழக போராட்டம் இலக்கை அடையவில்லை. எதிர்பார்த்த வெற்றி அரசியல் கைதிகளுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அரசுடன் சேர்ந்தியங்கும்  தமிழ் அரசியல்வாதிகளின் பாராமுகம் ஆகும் நல்லாட்சி அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகள். காத்திரமான நடவடிக்கையை எடுக்கவில்லை. அவர்களை மக்கள் இனிவரும் காலங்களில் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
அதேவேளை கூட்டமைப்பில் யாரும் சேரலாம். யாரும் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.  சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தமை தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது , கூட்டமைப்பு மக்களின் வாக்குகளை அபகரிக்க கூட்டு சேர்ந்தவர்கள்.  அவர்களிடம் எந்த கொள்கையும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் இல்லாதவர்கள் அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாம் என்ன செய்ய முடியும். அவர்களுடன் கூட்டு சேர மாட்டோம்.
 
ஐநா வில் இங்கே நடந்தது இனப்படுகொலை இல்லை என சட்டத்தரணியாக கூறுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கு அவர் சட்டத்தரணியாக போகவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக தான் சென்றவர் இப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து என்ன செய்ய ? என மேலும் தெரிவித்தார்.
 
அதேவேளை மற்றுமொரு அமைப்பாளரான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில்,ஏழை மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அவர்களுக்கு கிடைக்க இருந்த பொருத்து வீடுகளை தடுத்து நிறுத்திவயர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். இன்று அந்த மக்கள் வறுமையில் குடிசை வீடுகளில் வெள்ளத்தின் பாதிப்புடன் வாழ்கின்றனர் .அவர்களுக்கு அந்த வீடு கிடைத்து இருக்கனும் அதனை கூட்டமைப்பினரே தடுத்தனர். அதனை தடுத்து நிறுத்தியமை கண்டிக்கிறோம்.
 
அப்படிப்பட்ட கூட்டமைப்புடன்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சேர்ந்து என்ன செய்வது ? அவர்கள் மக்களுக்கு எதனை செய்துள்ளனர் ? மக்களுக்கு சேவை செய்யும் நாங்கள்  அவர்களுடன் இணைந்து என்ன செய்வது? அவர்களுடன் கூட்டு சேர மாட்டோம். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49154

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

ஐநா வில் இங்கே நடந்தது இனப்படுகொலை இல்லை என சட்டத்தரணியாக கூறுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கு அவர் சட்டத்தரணியாக போகவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக தான் சென்றவர் இப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து என்ன செய்ய ? என மேலும் தெரிவித்தார்

எல்லாம் நேரம் இந்த சுமத்திரன் எனும் பேய் யால் வந்த வினை 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

நல்லாட்சி என சொல்லப்படும் இந்த அரசாங்கம் உலகில் பெரும் மோசடியான மத்திய வங்கி மோசடி செய்தவர்கள். அதனை ஜனாதிபதியே ஒப்புக்கொண்டு உள்ளார். அவ்வாறு செய்தவர்களுடன் கூட்டு சேர விரும்பவில்லை. அதனால் தனித்து போட்டியிடுகின்றோம்.

 ஓமோம். நீங்கள் எல்லாம் நீதி நிஞாயமாய் செயற்படுபவர்கள் அதனால் யாருடனும் கூட்டுச் சேரமாட்டீர்கள்  என்று பீற்றிக்கொள்ளுங்கள். ஒருவரும் உங்களுடன் கூட்டுச் சேரவோ, சேர்க்கவோ மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள். நீங்கள் செய்ததை நாங்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம், மறக்கவும் முடியாது. இன்னும் மறைமுகமாய் இராணுவத்துடன் சேர்ந்து  உங்கள் பரம்பரை தொழிலை  தொடர்ந்து செய்கிறீர்கள் என்பது பலபேருக்கு  தெரியாமல் இருந்தாலும் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

எல்லாம் நேரம் இந்த சுமத்திரன் எனும் பேய் யால் வந்த வினை 

 

21 minutes ago, satan said:

 ஓமோம். நீங்கள் எல்லாம் நீதி நிஞாயமாய் செயற்படுபவர்கள் அதனால் யாருடனும் கூட்டுச் சேரமாட்டீர்கள்  என்று பீற்றிக்கொள்ளுங்கள். ஒருவரும் உங்களுடன் கூட்டுச் சேரவோ, சேர்க்கவோ மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள். நீங்கள் செய்ததை நாங்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம், மறக்கவும் முடியாது. இன்னும் மறைமுகமாய் இராணுவத்துடன் சேர்ந்து  உங்கள் பரம்பரை தொழிலை  தொடர்ந்து செய்கிறீர்கள் என்பது பலபேருக்கு  தெரியாமல் இருந்தாலும் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்.

நாங்கள் எங்கள் கோபங்களை, ஆதங்கங்களை காட்டிக் கொள்ளலாம். ஆனாலும் ஒன்றை மறந்துவிட்டோம்... :shocked:

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

ஈ.பி.டி.பி  தற்போது அங்கு இலுப்பைப்பூ. :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் தந்திரத்தையும், எம் தலைவர்களின் கையாலாகாத்தனத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேணும். தமிழரை   கூட்டி வைத்தும், குடுத்தும் குழப்பியடித்து அந்தக் குட்டையில் தன்காரியம் சாதிக்கிறான். அவனது அற்ப சலுகைகளுக்கு சோரம்போய் எல்லாற்றையும் கோட்டை    விட்டிட்டு தம்மைத் தாமே சாணக்கியர் என்றும், ராஜதந்திரிகள் என்றும் தட்டிக்கொடுத்துக் கொண்டும் மக்களை முட்டாளாக்கிக்கொண்டும்  வெறுங்கையோடு அடுத்த தேர்தலிலும் வாக்குப் பிச்சை கேட்டுக்கொண்டு வருவினம். இவர்களைத் தம் தலைவர்களாய் தெரிவு செய்வதால் பாதிக்கப்பட்ட தமக்கு எந்த விமோசனமும் வரப்போவதில்லை என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் அது அல்லது இது என்று எதையோ தெரிவு செய்கிறார்கள். அதுவோ, இதுவோ எது வந்தாலும் அதை தனக்கு சாதகமாக்கி கருமமாற்றுகிறான் சிங்களவன். இந்த நிலை மாற வேண்டும். இவர்களுக்கு வாக்கு போடுங்கள், போடாதீர்கள் என்று சொல்வதை விட்டு கடமை செய்பவர்களுக்கே வாக்கு என்கிற நிலை வரவேண்டும். கள்ள வாக்கை நம்பி களமிறங்குபவர்கள் தலை தெறிக்க ஓட வேண்டும். தேர்தலை கண்காணிக்க சர்வதேசத்தின் மேற்பார்வை பெறப்படவேண்டும். இப்படியான சூழல் ஏற்படுமானால் ஏமாற்றுவோரும், ஏமாற்றப்படுவோரும் தடுக்கப்பட்டு நல்ல ஒரு தலைவன் தெரிந்தெடுக்கப்பட்டு எந்தத் தடையும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய முடியும். எல்லா மாற்றமும் மக்களிடமிருந்து வரவேணும். இன்று எத்தனையோ காரியங்கள் மக்களின் ஒருமித்த போராட்டங்களாலேயே நிகழ்ந்துள்ளன. எவ்வளவோ திறமையும், வளமும் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாமலும், ஒற்றுமையின்றியும், சுயநலத்தாலும் அவை யாவும் வீணடிக்கப்பட்டு இன்று   அடிமைகளாகவும், நாடோடிகளாகவும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.