Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்ஜட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவு..வழங்கவேண்டிய கடப்பாடு என்கிறார் மாவை

Featured Replies

பட்ஜட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவு

123-c1182cbd5709670f7d9756eb2936ccd0046e316d.jpg

 

வழங்கவேண்டிய கடப்பாடு என்கிறார் மாவை
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இன நல்­லி­ணக்­கத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட 20 விட­யங்­க­ளுக்கு வரவு – செல­வுத்­திட்­டத்தில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நேற்று (நேற்று முன்தினம்) நிதி அமைச்­சரை சந்­தித்து மேல­திக  கோரிக்­கை­க­ளையும் நாம் முன்­வைத்தோம். 

 அவற்றை நிறை­வேற்­று­வ­தா­கவும் நிதி அமைச்சர் எமக்கு உறு­தி­ய­ளித்தார். ஆகவே நல்­லி­ணக்­கத்­திற்­கான வரவு – செல­வுத்­திட்­ட­மொன்றை கொண்டு வந்­த­மை­யினால் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டிய கடப்­பாட்டில் நாம் உள் ளோம் என இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை

­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா சபையில் தெரி­வித்தார்.

ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இணை தீர்­மா­னத்தை அர­சாங்கம் நிறை­வேற்­றா­விட்டால் சர்­வ­தேச ஆத­ர­வையும் தமிழ் மக்­களின் நம்­பிக்­கை­யயும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு இழக்க நேரிடும். அது­மாத்­தி­ர­மின்றி ஜன­நா­யக முறை­மை­யி­லான பாதையில் இருந்து விலகி மீண்டும் மக்கள் கிளர்ச்­சி­யொன்று ஏற்­டலாம். எனவே வடக்கு கிழக்கு மக்­களை கிளர்ச்­சிக்குள் தள்ள வேண்டாம் என்றும் அவர் கோரினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

போர் நடந்த கார­ணத்­தினால் 400 பில்­லியன் செலவு ஏற்­பட்­ட­தாக அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல ஒரு மதீப்­பீட்டை சபையில் முன்­வைத்­தி­ருந்தார். அவ­ரது கூற்றின் பிர­காரம் இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டா­த­மை­யி­னா­லேயே விடு­தலை புலி­க­ளுக்கும் இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் இத்­த­கைய பணத்தை விரயம் செய்ய வேண்டி ஏற்­பட்­ட­தாக கூறினார். அப்­ப­டி­யாயின் இனப்­பி­ரச்­சி­னையை தற்­போ­தைய ஆட்­சி­யி­லா­வது இழுத்­த­டிப்பு செய்­யாமல் தீர்ப்­பது நல்­லது. இதனால் இவ்­வா­றான வீண் செல­வுகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் குறை­வாகும். நாட்டில் நடந்த போர் கார­ண­மாக தமிழ் முஸ்லிம் மக்கள் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டனர். நல்­லி­ணக்கம் மோச­மாக பாதிக்­க­ப­பட்­டது.

எனினும் இந்த வரவு செலவு திட்­டத்தில் நல்­லி­ணக்­கத்தை காண்­ப­தற்­கான 20 துறை­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­தமை சாத­க­மா­னது. இந்த வரவு செல­வுத்­திட்டம் முன்­வைப்­ப­தற்கு முதல் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் நிதி அமைச்­ச­ருடன் சந்­தித்து வடக்கு கிழக்கு மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப பேச்சு நடத்­தினோம். அதன்­படி பல திட்­டங்கள் வரவு செல­வுத்­திட்­டத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

ஒரு இலட்­சத்­துக்கும்

அதிக வீடுகள் தேவை

இதன்­படி 20 துறை­களை வரவு செல­வுத்­திட்­டத்தில் அறி­வித்­துள்­ளனர். போரினால் பாதிக்­கப்­பட்ட இளை­ஞர்கள் காயங்­க­ளுடன் கை, கால்­களை இழந்து வாழ்­வா­தா­ரங்கள் இன்றி வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு உரிய நிதி ஒதுக்­கீடும் இதில் முன­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு எந்­த­வொரு வேலைத்­திட்­டங்­களும் முன்­னைய ஆட்­சியின் போது முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை. எனினும் இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் அதற்­கான முன்­மொ­ழி­வுகள் செய்­யப்­பட்­டமை வர­வேற்­க­தக்­கது. எனினும் இந்த முன்­மொ­ழி­வு­களும் ஒதுக்­கீடும் போது­மா­ன­தாக இல்லை. வடக்கை பொறுத்­த­வ­ரையில் ஒரு இலட்சம் வீடுகள் தேவை­யாக உள்­ளன.

ஏற்­க­னவே முன்­மொ­ழி­யப்­பட்ட இந்­திய வீட்டு திட்டம் இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனினும் தற்­போ­தைய வரவு செல­வுத்­திட்­டத்தில் 50 ஆயிரம் கல்­வீடு நிர்­மா­ணிக்க உத்­தே­சித்­த­மையை வர­வேற்­கின்றோம். ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான விடுகள் தேவை­யாக உள்­ளன. அத்­துடன் போரினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து வாழ்­ப­வர்­களும் இந்­திய அகதி முகாம்­களில் உள்­ள­வர்­களும் தமது பூர்­வீக நிலங்­க­ளுக்கு திரும்­பினால் எந­த­வொரு வச­தியும் இல்­லாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. எனவே இந்த வரவு செல­வுத்­திட்ட ஒதுக்­கீட்டில் முஸ்­லிம்­களும் பய­னு­ருவர்.

இந்த வரவு செல­வுத்­திட்­டத்தின் ஊடாக எப்­போதும் இல்­லாத வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மாக 20 திட்­டங்­களை முன்­மொ­ழிந்­தமை போரினால் ஏற்­பட்ட காயங்­களை ஆற்­று­வ­தற்கு சிறந்­த­தாக அமையும். அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேர்­மை­யான அர­சியல் தலை­வ­ராகும். அவ­ரது நேர்­மையை மதிக்க வேண்டும். இந்த திட்­டங்­களை நிறை­வேற்ற நாம் ஆத­ரவு வழங்க வேண்டும்.

நான் நேற்று (நேற்று முன் தினம்) நிதி அமைச்­சரை சந்­தித்த போது மேல­திக கோரிக்­கை­களை வழங்­கினோம். மன்னார் மாவட்ட எல்லை பிர­சே­தங்கள் சுன்­னாகல் இருக்­கின்ற இடங்­க­ளாக இணங்­கா­ணப்­பட்டு பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­கின்­றன.இதன்­படி அங்கு சிமெந்து தொழிற்­சாலை நிறு­வலாம். எதிர்­கா­லத்தில் இதனை கவ­னத்தில் எடுக்க வேண்டும்.

ஆத­ரவு

அத்­துடன் இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் மயி­லிட்டி மீன்­பிடி துறை­மு­கத்­திற்கு தேவை­யான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டாலும் ஐஸ் தொழிற்­சா­லை­களை நிர்­மா­ணிக்க வேண்டும். அதற்­காக மேல­தி­க­மாக நோர்வே அரசு உதவி செய்ய 15 கோடிக்கு மேல் வழங்க முன்­வந்­துள்­ளது.இதன்­படி வடக்கு கிழக்கை பொறுத்­த­வ­ரையில் தனி­யான மதிப்­பீடு இருக்க வேண்டும். அதற்­கான குழு­வொன்றை நிறுவ வேண்டும். நல்­லி­ணக்­கத்­திற்­கான வரவு செல­வுத்­திட்­ட­மொன்றை கொண்டு வந்­த­மை­யினால் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டிய கடப்­பாட்டில் நாம் உள்ளோம்.

காணி பிரச்­சி­னையை திர்க்க ஆலோ­சனை

பாது­காப்­புக்கு அதி­க­ளவில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. வடக்கு கிழக்கில் படை­யினர் குவிக்­கப்­பட்­டுள்­ளனர். எமது நிலங்கள் அவர்­க­ளது கட்­டு­பாட்டில் உள்­ளன. எங்­க­ளது நிலங்­களை பயிர்­செய்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிர­யோகம் செய்­கின்­றனர். எனவே எமது சொந்த நிலங்­களை விடு­விக்க வேண்டும். அப்­ப­டி­யாயின் இரா­ணு­வத்தில் பல திற­மை­யா­ள­வர்கள் உள்­ளனர். இவர்­களில் பொறி­யி­ய­லா­ளர்கள், பயிர்­செய்­கை­யா­ளர்கள் உள்­ளனர். எனவே இவர்­களை மகா­வலி, மாது­று­ஒயா, மல்­வத்து ஒயா பகு­தி­களில் குடி­யேற்றி நிர்­மா­ணித்து கொடுத்தால் வடக்­கி­லுள்ள காணி பிரச்­சி­னையும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பும் தீரும்.

பியர் விலை குறைத்­த­மைக்கு எதிர்ப்பு

சரி­யான நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மாயின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணிகள் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும். நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய நட­வ­டிக்­கைகள் வீணாகி போகி விட கூடாது. அத்­துடன் கித்துல் கல்லு, பனை றா விட­யத்தில் நிதி அமைச்சர் அண்­மையில் வெளி­யிட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லினால் பரா­பட்சம் காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வரி திட்­டத்­தினால் மோச­மான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. எனினும் கித்­துல,பனை றா உற்­பத்­தி­க­ளுக்கு வரி விதித்து விட்டு பியர் , வைன் வரி நீக்­கப்­பட்­ட­மையை கண்டு கவ­லைப்­ப­டு­கின்றோம். எனவே அதனை நீக்க வேண்டும். யாழ்ப்­பா­ணத்தில் திராட்சை பழம் அதி­க­மாக விளை­கின்­றது. இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு பியர் மூலப்­பொ­ருட்­களை எடுத்து பியர் நிறு­வ­னங்­களை உரு­வாக்­கலாம். மருத்­துவ குடி­வ­கை­யாக பாவிக்­கலாம். எனவே கித்துல் வர்த்­மா­னியை ஏற்­றுக்­கெள்ள முடி­யாது.

மக்கள் கிளர்ச்சி

வடக்கு கிழக்கில் உள்ள பல்­க­லை­க­ழ­கங்­களில் காணப்­படும் பிரச்­சினை தீர்க்க வேண்டும்.அதற்­கான நிதி ஒதுக்­கீடு செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு பொருத்தமான வேலைகளை வழங்க வேண்டும். இனப்பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம். இந்நிலையில் ‍இன்றைய (நேற்று) ஜெனிவா கூட்டத்தொடரின் போது அரசாங்கத்தின் பிரதிநிதி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என கூறியுள்ளார். இதன்படி ஏற்கனவே அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கை அரசாங்கம் கொண்டு வந்த இணை தீர்மானத்திலும் இதனை குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆகவே இணை தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச ஆதரவும் தமிழ் மக்களின் நம்பிக்கையயும் இழக்க நேரிடும். அதுமாத்திரமின்றி ஜனநாயக முறைமையிலான பாதையில் இருந்து விலகி மீண்டும் மக்கள் கிளர்ச்சியை ஏற்டலாம். எனவே வடக்கு கிழக்கு மக்களை கிளர்ச்சிக்குள் தள்ள வேண்டாம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-16#page-1

1 hour ago, நவீனன் said:

பட்ஜட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டிய கடப்பாடு என்கிறார் மாவை

கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு இதைவிட வேறென்ன வேலையிருக்க முடியும்?

கூட்டமைப்பா? தமிழரசுக்கட்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

உது எப்பவோ தெரிந்த விடயம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்ஜட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவு..வழங்கவேண்டிய கடப்பாடு என்கிறார் மாவை

நக்கிப்பிழைக்கும் அரசியல்வாதிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நக்கிப்பிழைக்கும் அரசியல்வாதிகள்.

 

 அரசியலெல்லாம் சும்மா! எங்கட குருதியிலை** க்குருதிதானே ஓடுது. அப்ப நாங்க நக்குவம்தானே! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.