Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவியின் கர்ப்பத்திற்கு ஆசிரியர் காரணமானார் – நீதி வேண்டி ஓமந்தையில் ஆர்ப்பாட்டமும் பேரணியும்…

Featured Replies

மாணவியின் கர்ப்பத்திற்கு ஆசிரியர் காரணமானார் – நீதி வேண்டி ஓமந்தையில் ஆர்ப்பாட்டமும் பேரணியும்…

 

Omanthai4.jpg

மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் ர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்றையதினம்  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

வவுனியா ஓமந்தை கல்லுப் போட்ட குளத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர், கர்ப்பமடைந்துள்ளமை  கண்டறியப்பட்டது

இந்த விடயம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை மற்றும் குறித்த மாணவியிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலம் என்பவற்றின் அடிப்படையில், நொச்சிக்குளத்தை சேர்ந்த 50 வயது ஆசிரியர் ஒருவரே இதற்கு காணம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதனை கண்டித்தும் சிறுமிக்கு நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரதேச மக்கள்  குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து   ஓமந்தை காவல் நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காவற்துறையினரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்ததுடன் தமது கோரிக்கை தொடர்பிலும் விளக்கம் அளித்துள்ளனர்.

Omanthai2.jpgOmanthai1.jpgOmanthai-3.jpg

http://globaltamilnews.net/archives/54078

  • கருத்துக்கள உறவுகள்

கற்பமானதை உறுதிசெய்யக் குறைந்தது 6 வாரங்கள் செல்லவேண்டும். அந்த ஆறு வாரங்களாகவும், மாணவி விரும்பியோ விரும்பாமலோ வல்லுறவில் என்றாலும், தனக்கு நடந்ததை வெளிப்படையாகத் தனது நண்பிகளிடமோ, தங்களிடமோ தெரிவிக்கும் மனத்திடத்தை பெற்றவர்கள் கொடுத்து வளர்க்கவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலை அந்தப் பெண்ணைக் கற்பமாக்கிய வாத்திபோன்ற வல்லூறுகள் அதிக தையிரியம் கொள்ளவே வாய்ப்பளிக்கிறது. 

தோளுக்கு மிஞ்சினால் மகன் தோழனாவதுபோல்.....! மகளும் தோழியாக வேண்டும்.!!
 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவியின் கல்விக்கு காரணமா இருக்க வேண்டிய வாத்தியார், கர்ப்பத்துக்கு காரணமா போட்டார்.tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

இதுகெல்லாம் சிங்கபூர் போல பிரம்படி கொண்டு வரணும் (நம்ம பச்சை மட்டை கதையை சொன்னால் கொஞ்சபேருக்கு உதறல் இனிமே சிங்கபூரை சொல்லுவம் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

இதுகெல்லாம் சிங்கபூர் போல பிரம்படி கொண்டு வரணும் (நம்ம பச்சை மட்டை கதையை சொன்னால் கொஞ்சபேருக்கு உதறல் இனிமே சிங்கபூரை சொல்லுவம் )

அப்பிடி மாத்திச்சொல்லு....கண்ட கண்ட கழுதையளும் கத்தாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.