Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதி மாநிலமான லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் (ளுP) சார்பில் ஈழத்தமிழரான திரு. லதன் சுந்தரலிங்கம் போட்டியிடுகின்றார். ஏற்கனவே 2004 ம் ஆண்டில் லுசேர்ன் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராகவுள்ள இவர் தற்போது கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலிலும் போட்டியிடுகின்றார். ஆரம்பத்தில் மருத்துவதாதி பயிற்சியை முடித்துக்கொண்ட இவர் லுசேர்ன் பல்கலைக்கழகத்தில் “பல்கலாச்சார தொடர்பாடல் நெறி” யில் (ஆழசந ஊரடவரசயடடல ஊழஅஅரniஉயவழைn) டிப்ளொமா பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் உயர்கல்லூரி முகாமைத்துவ கற்கை நெறியிலும் தனது பயிற்சியை நிறைவுசெய்துள்ளார்

சுவிற்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி ரூத் ட்ரைவூஸுடன்

lathan%20with%20Ruth%20Dreifuss.jpg

லதன் சுந்தரலிங்கம்

Lathan.jpg

தாய்நாட்டில் ஸ்ரீலங்கா அரசினால் உரிமை மறுக்கப்பட்டு உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் ஈழத்தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளின் சமூக பொருளாதார வர்ததக அரசியல் துறைகளில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வது தாய்நாட்டில் அவர்களது தார்மீகப் போராட்டத்தின் நியாயத்தன்மை எடுத்துக் கூறும் வலுவான தளத்தை உருவாக்கும். இங்கிலாந்துஇ கனடா ஆகிய நாடுகளில் உள்ளூர் அரசியலில் ஈழத்தமிழர் பலர் ஈடுபட்டுள்ள போதும் மற்றைய ஐரோப்பிய நாடுகளைப்பொறுத்தவரை ஈழத்தமிழர் உள்ளூர் அரசியலில் அக்கறை செலுத்துவது மிகவும் குறைவாகவேயுள்ளது. இந்நிலையில் திரு லதன் சுந்தரலிங்கம் மிகவும் துணிவுடனும் உற்சாகத்துடனும் சுவிஸ் அரசியலில் ஈடுபட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. இதேவேளை சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற “சுக்” கன்ரோனின் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான திரு. ரூபன் சிவகணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூபன் சிவகணேசன்

rupan_wahl1.jpg

எனவே சுவிற்சர்லாந்தில் வாக்குரிமை பெற்றிருக்கும் ஈழத்தமிழர்கள் சுவிஸ் அரசியலில் அக்கறை செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும். எமது விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தைஇ எமது மக்கள் அனுபவித்து வரும் துயரத்தை வெளிப்படுத்த உரிய தளத்தை நிர்மாணித்துக் கொள்வது புலம் பெயர்ந்து வாழும் தமிழரினது கடமையாகும். எனவே தமது வாக்குகளை வீணாக்காது பயன்படுத்த வேண்டும். எமது தனித்துவத்தை பேணிக் கொள்ளும் அதேவேளை சுவிஸ் மக்களுடன் இணைந்து (ஐவெநபசயவந) பொதுவான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது எமது மக்களின் அரசியல் செல்வாக்கினை அதிகரிக்கச் செய்யும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். தற்போது கன்ரோன் அரசியலில் ஈடுபடும் ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தில் தேசிய அரசியலில் வரை முன்னேற்றமைடைவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே சுவிற்சர்லாந்தில் பிரஜாவுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் தமது வாக்குகளை வீணாக்காது சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர்நலனில் மீது அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

swissmurasam.ch

எனக்கு தெரிந்து இவர்கள் ஈழத்தமிர்களின் பிரச்சனைகளிலோ அல்லது அவர்களின் நலன்களிலோ அக்கறை கொண்டதில்லை. மாறாக ஈழத்தமிழர்களிற்கு எதிர்மாறான கருத்துக்களை இவர்கள் பத்திரிகைகளில் முன் வைத்தை படித்திருக்கின்றேன்.

ஏன் தான் எமது ஊடகங்கள் இவர்களை இப்படி தலையில் தூக்கி வைத்ததோ தெரியவில்லை.

Edited by வடிவேல் 007

லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழர்

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதி மாநிலமான லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் (SP) சார்பில் ஈழத்தமிழரான திரு. லதன் சுந்தரலிங்கம் போட்டியிடுகின்றார். ஏற்கனவே 2004 ம் ஆண்டில் லுசேர்ன் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராகவுள்ள இவர் தற்போது கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலிலும் போட்டியிடுகின்றார். ஆரம்பத்தில் மருத்துவதாதி பயிற்சியை முடித்துக்கொண்ட இவர் லுசேர்ன் பல்கலைக்கழகத்தில் “பல்கலாச்சார தொடர்பாடல் நெறியில் (More Culturally Communication) டிப்ளொமா பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் உயர்கல்லூரி முகாமைத்துவ கற்கை நெறியிலும் தனது பயிற்சியை நிறைவுசெய்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி ரூத் ட்ரைவூஸுடன் லதன் சுந்தரலிங்கம்

தாய்நாட்டில் ஸ்ரீலங்கா அரசினால் உரிமை மறுக்கப்பட்டு உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் ஈழத்தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாடுகளின் சமூக பொருளாதார வர்ததக அரசியல் துறைகளில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வது தாய்நாட்டில் அவர்களது தார்மீகப் போராட்டத்தின் நியாயத்தன்மை எடுத்துக் கூறும் வலுவான தளத்தை உருவாக்கும். இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ளூர் அரசியலில் ஈழத்தமிழர் பலர் ஈடுபட்டுள்ள போதும் மற்றைய ஐரோப்பிய நாடுகளைப்பொறுத்தவரை ஈழத்தமிழர் உள்ளூர் அரசியலில் அக்கறை செலுத்துவது மிகவும் குறைவாகவேயுள்ளது. இந்நிலையில் திரு லதன் சுந்தரலிங்கம் மிகவும் துணிவுடனும் உற்சாகத்துடனும் சுவிஸ் அரசியலில் ஈடுபட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. இதேவேளை சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற “சுக்” கன்ரோனின் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான திரு. ரூபன் சிவகணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சுவிற்சர்லாந்தில் வாக்குரிமை பெற்றிருக்கும் ஈழத்தமிழர்கள் சுவிஸ் அரசியலில் அக்கறை செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும். எமதுவிடுதலைப்போராட்டத்தின் நியாயத்தை, எமது மக்கள் அனுபவித்து வரும் துயரத்தை வெளிப்படுத்த உரிய தளத்தை நிர்மாணித்துக் கொள்வது புலம் பெயர்ந்து வாழும் தமிழரினது கடமையாகும். எனவே தமது வாக்குகளை வீணாக்காது பயன்படுத்த வேண்டும். எமது தனித்துவத்தை பேணிக் கொள்ளும் அதேவேளை சுவிஸ் மக்களுடன் இணைந்து (Integrate) பொதுவான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது எமது மக்களின் அரசியல் செல்வாக்கினை அதிகரிக்கச் செய்யும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். தற்போது கன்ரோன் அரசியலில் ஈடுபடும் ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தில் தேசிய அரசியலில் வரை முன்னேற்றமைடைவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே சுவிற்சர்லாந்தில் பிரஜாவுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் தமது வாக்குகளை வீணாக்காது சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர்நலனில் மீது அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் வெற்றியடையவேன்டும் அற்கு எம்முடைய வாள்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எல்லோரும் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

Edited by கந்தப்பு

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எமது மனதார வாழ்த்துக்கள் வெற்றி பெற. இதனைத்தான் நாம் எதிர்பார்த்து இருந்தோம். இவரை மாதிரி எல்லா நாடுகளிலும் தொடர வேண்டும். இவை தான்

நிரந்தரமாக நம் விடுதலையை வெளி உலகிற்கு கொண்டு செல்லும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் பின்னனி பற்றி இங்கு யாருக்காவது தெரியுமா?? இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக பாராளுமன்றத்தில் உள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. லேபனானில் சண்டை நடந்த போது இதில் ஒருவர் ஒரு பத்திரிகைக்கு அதனை கண்டித்து வாசகர் எழுதினார்.அதே நேரத்தில் எமது நாட்டில் மாவிலாறு சண்டை நடந்து கொண்டிருந்தது. அதை பற்றி வாயே திறக்கவில்லை.

ஒரு ரிவி நிகழ்ச்சியில் இவர்களில் ஒருவர் சொல்கிறாh, தமிழர்கள் தான் இந்த நாட்டில் ஏனைய நாட்டவர்களுடன் சேர்ந்து வாழ்வதில் பின் தங்கி உள்ள இனம் என்று.

வெளிநாடுகளில் வாழ்பவர்களிற்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இது இவர்களின் இணைய முகவரிகள்:

www.rupan.ch

www.lathan.ch

நன்றி வடிவேலு அவர்களைப் பற்றி அறியத் தந்ததிற்க்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களை நான் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. எமது ஊடகங்களின் பார்வையில் இவர்கள் வென்றால் எமது நாட்டுப்பிரச்சனை பற்றியும் ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும் பாராளுமன்றத்தில் பேசுவார்கள் என்று நம்புகின்றன.

இவர்கள் பேச விரும்பினாலும் பேச முடியாத நிலமையில் உள்ளார்கள்.

1. இவர்களை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டது இவர்களின் கட்சி. இவர்கள் தமிழர்களின் பிரச்சனையில் முன் நின்று தலையிடுவதை இக் கட்சிகள் விரும்பமாட்டாது. அதையும் மீறி இவர்கள் செய்தார்களேயானால் தனியாக இவர்கள் போட்டியிட வேண்டியது தான். அதில் தோல்வி நிச்சயமாக வரும்.

2. இங்கு லண்டன் கனடா போல் தமிழர்களின் வாக்குகள் ஆயிரக்கணக்கானவை அல்ல. இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட 3000 ஓட்டுக்கள் பெற்று தான் வெற்றி பெற்றார்கள். இதில் தமிழ் ஓட்டுக்கள் என்று பார்த்தால் ஒரு 10 ஓட்டு தான் வரும். எனவே இவர்களிற்கு தமிழர்களின் ஆதரவு (தற்போதைக்கு) தேவையில்லை. காரணம் மிக குறைவான தமிழர்களே வாக்களிப்பார்கள்.

3. இவர்களின் தேர்தல் கொள்கைளில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் இங்கு வாழுகின்ற வெளிநாட்டவர்களை இந் நாட்டுடனும் நாட்டு மக்களுடனும் சேர்ந்து வாழ்வதற்கு அனைத்தும் செய்து தரப்படும் என்பதே. இந் நிலையில் இவர்கள் ஈழப்பிரச்சனையோ அல்லது தமிழர்களிற்கான பிரச்சனையோ என்று பார்க்க முடியாது. மாறாக தமிழர்களை இந் நாட்டவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற வைப்பதற்கே இவர்கள் முன் வருவார்கள். எமது கலாச்சாரத்தை இங்கு மேலும் வளர்ப்பதற்கு உதவும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் இவர்கள் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பது இவர்களிற்கும் இவர்களின் கட்சிக்கும் நன்கு தெரியும். லதன் என்பவர் இங்கு ஒரு தமிழர் கோயில் கட்ட திட்டமிட்டிருப்பதாக இங்கு வலது சாரிகள் ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியிருந்தனர். பின்னர் அத் திட்டம் பற்றி எதுவும் வரவில்லை.

4. இவர்கள் இருவருமே டொச் மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. இவர்கள் சொல்வதை எழுதுவதற்கு இவர்களிற்கு இவர்களின் கட்சி உறுப்பினர்கள் தேவை. எனவே கட்சியின் விருப்பம் இல்லாமல் இவர்களால் எதுவும் செய்ய முடியாது.

இப்படி நிறைய விடயங்கள் உள்ளன. இது எமது ஊடகங்களின் கண்களிற்கு தெரியவில்லை போல். இன்றும் இவ் இருவரும் தங்கள் மனைவி மாருடனும் சரி, இங்கே வளர்ந்த பிள்ளைகளுடனும் சரி டொச் மொழியில் தான் உரையாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் இவ் இருவரும் தங்கள் மனைவி மாருடனும் சரி, இங்கே வளர்ந்த பிள்ளைகளுடனும் சரி டொச் மொழியில் தான் உரையாடுவார்கள்.

அடையாளத்தை இழந்த தமிழர்களா இவர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ Quote name : RASAN]

அவர் வெற்றியடையவேன்டும் அற்கு எம்முடைய வாalதுகள்

RASAN

இவர்களை நான் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. எமது ஊடகங்களின் பார்வையில் இவர்கள் வென்றால் எமது நாட்டுப்பிரச்சனை பற்றியும் ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும் பாராளுமன்றத்தில் பேசுவார்கள் என்று நம்புகின்றன.

இவர்கள் பேச விரும்பினாலும் பேச முடியாத நிலமையில் உள்ளார்கள்.

1. இவர்களை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டது இவர்களின் கட்சி. இவர்கள் தமிழர்களின் பிரச்சனையில் முன் நின்று தலையிடுவதை இக் கட்சிகள் விரும்பமாட்டாது. அதையும் மீறி இவர்கள் செய்தார்களேயானால் தனியாக இவர்கள் போட்டியிட வேண்டியது தான். அதில் தோல்வி நிச்சயமாக வரும்.

2. இங்கு லண்டன் கனடா போல் தமிழர்களின் வாக்குகள் ஆயிரக்கணக்கானவை அல்ல. இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட 3000 ஓட்டுக்கள் பெற்று தான் வெற்றி பெற்றார்கள். இதில் தமிழ் ஓட்டுக்கள் என்று பார்த்தால் ஒரு 10 ஓட்டு தான் வரும். எனவே இவர்களிற்கு தமிழர்களின் ஆதரவு (தற்போதைக்கு) தேவையில்லை. காரணம் மிக குறைவான தமிழர்களே வாக்களிப்பார்கள்.

3. இவர்களின் தேர்தல் கொள்கைளில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் இங்கு வாழுகின்ற வெளிநாட்டவர்களை இந் நாட்டுடனும் நாட்டு மக்களுடனும் சேர்ந்து வாழ்வதற்கு அனைத்தும் செய்து தரப்படும் என்பதே. இந் நிலையில் இவர்கள் ஈழப்பிரச்சனையோ அல்லது தமிழர்களிற்கான பிரச்சனையோ என்று பார்க்க முடியாது. மாறாக தமிழர்களை இந் நாட்டவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற வைப்பதற்கே இவர்கள் முன் வருவார்கள். எமது கலாச்சாரத்தை இங்கு மேலும் வளர்ப்பதற்கு உதவும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் இவர்கள் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பது இவர்களிற்கும் இவர்களின் கட்சிக்கும் நன்கு தெரியும். லதன் என்பவர் இங்கு ஒரு தமிழர் கோயில் கட்ட திட்டமிட்டிருப்பதாக இங்கு வலது சாரிகள் ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியிருந்தனர். பின்னர் அத் திட்டம் பற்றி எதுவும் வரவில்லை.

4. இவர்கள் இருவருமே டொச் மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. இவர்கள் சொல்வதை எழுதுவதற்கு இவர்களிற்கு இவர்களின் கட்சி உறுப்பினர்கள் தேவை. எனவே கட்சியின் விருப்பம் இல்லாமல் இவர்களால் எதுவும் செய்ய முடியாது.

இப்படி நிறைய விடயங்கள் உள்ளன. இது எமது ஊடகங்களின் கண்களிற்கு தெரியவில்லை போல். இன்றும் இவ் இருவரும் தங்கள் மனைவி மாருடனும் சரி, இங்கே வளர்ந்த பிள்ளைகளுடனும் சரி டொச் மொழியில் தான் உரையாடுவார்கள்.

இவ்விடயத்தில் புரிந்து கொள்ளவேண்டிய விடயம் புலம் பெயர்ந்த நாடுகளில் எமக்கான தளத்தை உருவாக்குவதே. எமக்கென அங்கீகரிக்கப்பட்ட அரசு இல்லாததால் எமது கருத்துக்களை சொல்வதற்கேற்ற தளம் இல்லாமை என்ற குறையை மாற்றியமைக்க வேண்டும். இது ஓரு நாளில் நிறைவேறும் விடயமல்ல.

மற்றும் தனிப்பட்ட ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது அழகல்ல . இவ்விருவரும் சிறுவயதில் சுவிற்சர்லாந்திற்கு வந்து தமது சொந்த முயற்சியால் முன்னேறியவர்கள். சுவிஸ் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர்கள். இது நிச்சயமாக தமிழ்மக்களுக்கு பெருமை தரும் விடயமே. ஆகவே இளைய தலைமுறையினராகிய இவர்களைப்பற்றி தரக்குறைவாக விமர்சிப்பது பண்பாடான விடயமாக எனக்குப் தெரியவில்லை.

இவர்களை ஊக்கப்படுத்துவது எமது இளைய தலைமுறையினருக்கு நாம் கொடுக்கும் ஆதரவாகும்.

சுவிற்சர்லாந்தில் மட்டுமல்ல எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இளைய தலைமுறையினர் அந்த நாட்டு மொழியிலேயே உரையாடுவது எல்லோருக்குமே தெரிந்த விடயம். இது இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல.

இவர்கள் பாராளுமன்றத்தில் எமது பிரச்சனை பற்றி பேசுவது அல்ல இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். இவர்களைப்போல அரசியலில் செல்வாக்குப் பெறுவதன் மூலம் எமது தரப்பிலான நியாயத்தை எடுத்துரைப்பதற்கு ஏற்ற தளம் உருவாக்கப்படுகின்றது. அதை எமது திறமைக்கேற்ற பயன்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்க முடியும்.

Edited by trinco

அடையாளத்தை இழந்த தமிழர்களா இவர்கள்?

இவர்கள் இருவரும் தேர்தலில் வெற்றி பெற்ற அன்று முழுவதும் சுவிஸ் வானொலிகளில் மணிக்கொரு முறை இவர்களைப் பற்றி செய்தி வெளியிட்டு இவர்கள் ஈழத்தமிழர் என்று கூறிய போது இங்குள்ள ஓவ்வொரு தமிழர்களும் பெருமையடைந்தார்கள்.

முன்பு தமிழர்களைப்பற்றி சுவிஸ் வானொலிகளில் செய்தி வந்தால் ஓன்றில் கைகலப்பு அல்லது கொலை போன்ற தமிழ்ச்சமுதாயத்ததை மற்றவர்கள் பார்த்து எள்ளி நகையாடும் செய்திகளே வந்தன அவ்வாறான செய்திகளை சுவிஸ் ஊடகங்களுக்கு கொடுக்கும் தமிழர்களா உங்கள் பார்வையில் அடையாளத்தை காப்பாற்றும் தமிழர்கள் கந்தப்பு?

Edited by trinco

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு தமிழர்களைப்பற்றி சுவிஸ் வானொலிகளில் செய்தி வந்தால் ஓன்றில் கைகலப்பு அல்லது கொலை போன்ற தமிழ்ச்சமுதாயத்ததை மற்றவர்கள் பார்த்து எள்ளி நகையாடும் செய்திகளே வந்தன

அவங்க கத்தினாலும் சரி வெட்டினாலும் சரி கொத்தினாலும் சரி தமிழில தான் கத்தினாங்க. தமிழில தான் குழறினாங்க.. தமிழில தான் தூசனத்தாலை திட்டினாங்க.. அது தானே தமிழனுக்கு அழகு

அவங்க கத்தினாலும் சரி வெட்டினாலும் சரி கொத்தினாலும் சரி தமிழில தான் கத்தினாங்க. தமிழில தான் குழறினாங்க.. தமிழில தான் தூசனத்தாலை திட்டினாங்க.. அது தானே தமிழனுக்கு அழகு

நீங்கள் கூறுவதுதான் தமிழரின் அடையாளம் என்று நினைப்போர் பலர் எம்மிடையே இருக்கின்றார்கள் இவோன்

4. இவர்கள் இருவருமே டொச் மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. இவர்கள் சொல்வதை எழுதுவதற்கு இவர்களிற்கு இவர்களின் கட்சி உறுப்பினர்கள் தேவை. எனவே கட்சியின் விருப்பம் இல்லாமல் இவர்களால் எதுவும் செய்ய முடியாது.

இப்படி நிறைய விடயங்கள் உள்ளன. இது எமது ஊடகங்களின் கண்களிற்கு தெரியவில்லை போல். இன்றும் இவ் இருவரும் தங்கள் மனைவி மாருடனும் சரி, இங்கே வளர்ந்த பிள்ளைகளுடனும் சரி டொச் மொழியில் தான் உரையாடுவார்கள்.

மேற்கண்ட இரண்டு பந்திகளிலும் உள்ள விடயங்கள் முரண்பாடாக உள்ளது. முதலாலது பந்தியில் உள்ள கருந்தை எழுதியவரும் இரண்டாவது பந்தியில் உள்ள கருத்தை எழுதியவரும் ஓருவரே. தனது கருத்தையே மறுதலித்து அடுத்த கருத்தாக எழுதியுள்ளார்.

சுவிஸில் உயர்கல்விகற்று டிப்ளொமா பட்டம் பெற்ற ஒருவர் டொச் மொழியில் தேர்ச்சி பெற்றவர் அல்ல என்பது அடுத்த வேடிக்கையான கருத்து.

பிரான்ஸில் பலர் பிரெஞ்சு மொழியில் தான் மிள்ளைகளுடன் உரையாடுவார்கள். ஆனால் இவர்களிக்கு பிரெஞ்சு மொழியில் தெரிந்ததோ ஓரிரு வார்த்தைகள்தான். கண்றாவி, கேட்கவே சகிக்காது. ஆனால் தாங்கள் பிரெஞ்சில் மேதைகள் என் று நினைப்பு. தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைப்பவர்கள். வேறுசிலை பிரெஞ்சு மொழியில் டிப்ளோமா செய்தவர்கள், ஆனால் சரளமாக இவர்களால் பேச முடியாது.

அடையாளத்தை இழந்த தமிழர்களா இவர்கள்?

நிச்சயமாக அவர் வெற்றியடைவார். எமது வாழ்த்துக்கள். அவரைப்போலவே சுவிற்சர்லாந்தில் வாழும் இளைய தலைமுறையினர் பல துறைகளில் சாதனைகள் படைத்து எமது தேசத்திற்கு பெருமை தேடித்தருவதோடு எமது தேசத்திற்கும் அவர்களின் பங்களிப்பை தேவையான நேரத்தில் தேவையான விதத்தில் வழங்க முன்வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.