Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம்

இலங்கைத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாய் நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் என்ற நிலையில் தமிழர்களை இலங்கை அரச வைத்துள்ளது. அப்படிபட்ட நிலையில், இந்தியவிற்கு பல்லாயிரம் தமிழ் அகதிகள் தமிழகம் நோக்கி வந்து, சுமார் 103 அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அண்மைக்காலமாய் இலங்கையில் நிலவும் போர் சூழல் காரணாமாய், தமிழர்கள் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேசுவரம் வந்தடைகின்றனர். அங்கே அகதிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள 287 ஏக்கர் நில பரப்பில், உயரமான சுற்றுச்சுவருக்கு மேல் மின்சாரம் வேலியுடன் அமைந்துள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தான், புதிதாய் வந்திரங்கும் அகதிகளின் வாய்லாய் அமைகிறது.

மண்டபம் முகாமில் ஏற்கெனவே ஆயிரக்காணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை கண்காணிக்க காவல்துறையின் 'மண்டபம் எச்.எல்.ஆர் காவல்நிலையம்' உள்ளது. சில காலமாய் இங்குள்ள அகதிகள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாதென காவல்துறையினர் கட்டுப்பாடு இடுகின்றனர். வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு, கையில் தடி ஏந்திய காவல் போடப்படுகிறது. இவ்வகை கட்டுப்பாடுகள்;, அகதிகளின் நலனுக்காக என எடுத்துக்கொண்டாலும், இச்செயல் ஏதோ சிறை போன்றே தோன்றுகிறது.

அவ்வப்பொழுது, காவல்துறையின் அத்துமீறல்கள் நடைபெற்று வருகிறது. 07-07-2006 இங்கிருந்த 10 வயது சிறுவன் திருடினான் என்று கூறி, அவனை இரத்த காயம் வருமளவுக்கு அடித்தனர். உரிமைக்கு போராடும் பல அகதிகள், போராளி எனக்கூறி செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

அகதிகளின் இழி நிலையை தமிழகத்தின் பல அரசியல் அமைப்புகள் நேரிடையாய் சென்று முகாமிலுள்ள துன்ப நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டன. தி.மு.க ஆட்சியேற்ற பின் இரு அமைச்சர்கள் அடங்கிய குழு முகாமை பார்வையிட்டு, அடிப்படை தேவைகள் மேலும் அமைக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

எத்தனை பரிந்துறைகள், அறிக்கைகள் வெளியிட்டாலும், சில நேரங்களில் காவல்துறை அகதிகளிடம் நடந்து கொள்ளும் முறை மிக மோசமாயுள்ளது. நான்கு அகதிகள் ஒன்றாய் கூடி பேசினாலோ, சிரித்து மகிழ்தாலோ, அங்குள்ள காவல்துறையினர் அவர்களை முறைப்பதும், பல நேரங்களில் கெட்ட வார்த்தையால் ஏசுவதும், சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து அடிப்பதும் வெளியுலகுக்கு தெரியாத செய்திகளாய் காற்றி கரைகிறது.

அகதிகள் அவர்கள் சார்ந்துள்ள மத வழிபாடுகளுக்கு தகுந்த கோயிலோ, மசுதியோ அல்லது தேவாலையங்களோ இல்லாத சுழலில், அவர்கள் ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து, அங்கு ஒன்று கூடி வழிபாடு செய்வது நடைமுறை.

அங்குள்ள கிருத்துவர்கள், அகதிகள் ஆணையாரிடம் தேவாலையம் ஒன்று வேண்டுமென வேண்டுகோளை விடுத்து பல காலம் ஆகிவிட்டது. ஆணையாளாரும் அரசு தொகை ஒதுக்கும்வரை, நீங்கள் ஏதாவது ஒரு வீட்டில் வழிபாடு நடத்திக்கொள்ள அணுமதித்துள்ளார்.

14-03-2007 அன்று மாலை 12 பேர் கிருத்துவர்கள் முகாமிலுள்ள ஒரு வீட்டில்; வழிபாடு செய்ய கூடியுள்ளனர். சில நிமிடங்கள் கழித்து அங்க வந்த திரு.பாலசிங்கம் என்ற துணை ஆய்வாளரும், அவருடன் வந்த இரண்டு ஏடுகளும், கூடியிருந்தவர்களை பார்த்து கிருத்துவ வழிபாடு நடத்தகூடாது என்றனர். ஏன் எனக் கேட்ட அகதிகளை, காவல்துறையினர் கையிலிருந்த குச்சியால் (லத்தி) கண்முடித்தனமாய் அடித்துள்ளனர். பின்னர், அங்குள்ளோரை காவல் நிலையம் அழைத்து சென்றதும், அடித்த செய்தி வெளியே கசிய, காவல் நிலையம் நோக்கி ஊடவியலாளர்கள் படையெடுத்தனர். இதையறிந்த துணை ஆய்வாளரும், மற்றும் இரண்டு ஏடுகளும் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரி, அகதிகளை தங்கள் முகாமிற்கு செல்லுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

இதுபோல் நடைபெறுவது முதல்முறையல்ல. ஆகையால், தமிழக அரசு தற்பொழுது காவல் நிலையத்திலுள்ள காவல்கள் அனைவரையும் உடனடியாய் மாற்றி, மனித நேயமிக்க காவல்துறையினரை மண்டபம் முகாம் காவல் நிலையத்திற்கு பணியமத்த வேண்டும். இலங்கை அரசிடம் உயிர் தப்பி வரும், தமிழ் அகதிகளின் உயிருக்கும், உடமைக்கும் நாம் பாதுகாப்பளிப்து நம் கடமைகளில் ஒன்று.

http://www.sooriyan.com/index.php?option=c...091&Itemid=

ஈழத்தமிழனுக்கு இருக்கிறஇடத்திலும் பிரச்சினை போற இடங்களிலும் பிரச்சினை

யாரை நோவதென்ற தெரியவில்லை

அதுதான் தனி நாடு தான் எல்லோருக்கும் பாடம் படிபிக்க சரியான தீர்வு

நாம் சகோதராக மதிக்கும் தமிழ்நாட்டு காவல்துறை செய்யும் செயல் கண்டிக்கதக்கது ஆத்திரத்தை வரவழைக்கின்றது.கஸ்டங்களை தாங்கி த்நதை வீடுக்கு சென்றி நிம்மதியாய் இருக்கலாம் என சென்றவர்களை இப்படி இன்னும் கொடுமை படுத்துவது நல்லதல்ல

அதாவது ஒரு பெரிய மூடிய சிறைச்சாலக்குள் ஈழத்து அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ் குடாநாட்டு திறந்த வெளிச் சிறைச்சாலைக்கும், இந்திய அகதிமுகாமிற்கும் இடையிலான ஒரு வித்தியாசம் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அகதிமுகாம்களில் ஆட்கள் கடத்தப்படுவதோ, காணாமல் போவதோ அல்லது கொலை செய்யப்படுவதோ இல்லை. ஆனால் மற்றும்படி யாழ் குடா நாட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையும், ஈழத் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இந்திய அகதிமுகாம்களும் அடிப்படையில் ஒன்றே!

தனித்தமிழீழமே ஒரே தீர்வு. அதனைத் தமிழ்தேசியத்தின் தலைமை செவ்வனே வழிநடத்திச்

செல்கின்றது. தமிழ்மக்கள் தமது அவலங்களைத் தாங்கிக் கொள்ளும்படி தலைமையால்

கேட்கப்பட்டுள்ளது. அது ஒருபுறமிருந்தாலும் அவலங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள

தமது தொப்புட்கொடியுறவென நினைத்துச் சென்றவிடத்திலும் அவலங்களின் தாக்கங்கள்

குறைந்தபாடில்லை. இந்த நிமைக்குத் தமிழ்த்தேசியத்யே விரைவில் தீர்வுகாண வேண்டும்.

அந்த நாளே தமிழரின் அவலங்கனைப் போக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருக்கும் அகதிகள் மட்டுமல்ல இங்கிருக்கின்ற நாங்களும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது தமிழீழம் தான் எங்களுக்கு நிம்மதியான, பாதுகாப்பான ஒரு இடம் என்பது. சிந்திப்போம், செயல் படுவோம்.

இது இன்று நேற்று நடப்பதல்ல. என்று எம் இனம் இந்தியாவிற்கு அகதிகளாக போக ஆரம்பித்தார்களோ அன்றிருந்தே உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள் ஆரம்பமாகி விட்டது. அட தமிழக பொலிஸ்காரன் ஈழத்தமிழரை மட்டுமல்ல அவனது நாட்டு மக்களையும் தான் வதைக்கின்றான். ஒரு பெண் பொலிசுக்குப் போன கற்போட திரும்பிவரது அரிது. தெரிந்து தெரிந்தும் எம் மக்கள் ஏன் அங்கு அகதிகளாக போய் அவமானப் பட வேண்டும்? வன்னி என்றோரு நிலப்பரப்பு இருக்கின்றதே போனால் என்ன? சினிமா பார்க்க முடியாமல் போய் விடும் என்ற கவலையா? தன் நிலை இழிந்தால் இது தான் கதி. எப்படியோ இம் மக்களுக்காக மனம் வருந்துவதைதவிர வேறேன்ன செய்ய முடியும்?

ஈழத்திலிருந்து

ஜானா

அண்ணா நிலமை இன்னும் மோசம். நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் கையாலாகாமல் இருக்கிறார்கள். NRI/சர்வதேச சமுகமே இந்திய அரசை அணுகவேண்டும். இது என்னுடைய கணிப்பு மட்டுமே

சர்வதேச அளவிற்கு இவ் அகதிகள் பிரச்சனையை கொண்டுபோகவேண்டும். ஐக்கிய

நாடுகளின் அகதிகள் சம்பந்தமான பகுதிக்கு உடன் அறிவிக்க வேண்டும். மற்றது மனித உரிமை அமைப்புக்களுக்கும் அறிவிக்க வேண்டும். இது தான் சரியான வழி.

வழி சரியே. செயல்?

இந்தியாவிற்க்கு இப்போ ஈழத்த்மிழ்களை விட வால் பிடிக்கும் ராஜபக் ஷதான் முக்கியமாகப் போய்விட்டார்கள், தமிழனாக இருந்து கொண்டு தமிழனுக்கு கெடுதல் செய்பன் எல்லாம் தமிழனா...? அரசியல் நடத்துவதற்க்கு மட்டும் இலங்கை அகதிகளின் பேச்சை எடுக்கும் அரசியல்வாதிகள்தான் அதிகம், அவர்களெல்லாம் வாய்ப்பேச்சு வீரர்கள்................ அடைக்கலம் மட்டும் கொடுத்தால் போதுமா.......? அவரவணைக்க வேன்டாம..........? யுத்ததினல் உறவிகளை, உடமைகளை, இருப்பிடத்தை விட்டு வரும் அகதிகளிடம் வாலாட்டுகிறார்கள் காவல்கார நாய்கள். இதெற்கெல்லாம் இறுது முடிவு தனி நாடுதான். இப்பவே தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் தமிழகத்திற்க்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார்கள், இறுதியில் ஈழத்தவர்களிடம் உதவிக்கு வரும் நிலை கூட வரலாம் தமிழகத்திற்க்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டபத்தில் தேவாலயம் இல்லை எம்பதை முற்றாக மறூக்கின்றேன் பெரிய மாதாதேவாலயம் இருக்க வீட்டில் ஏன் ? கஸ்டபடு வரும் அகதிகளாஈ மதமாற்ற முயற்சியா தமிழ் நாட்டு பொலிசை நீதியானவர்கள் என்றூ கூற்வறே வரவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்குள் தகவல் பரிமாற்றம் செய்தாயிற்று. இந்தியாவைத் திட்டித் தீர்த்தாயிற்று. எம் உறவுகளை நினைத்துப்பாவப்பட்டு கண்ணீர் விட்டு கவலைப்பட்டாயிற்று!.

ஆக!! இவ்வளவுதான் நாம் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவமா?

நாம் என்ன செய்யப்போகின்றோம்? நம் பங்களிப்பு என்ன?! இதை எந்த வகையில் நாங்கள் அணுகலாம் இதை சர்வதேச/ அல்லது இந்திய சமூகத்துக்கேனும் எந்த வகையில் எடுத்துரைக்கலாம். தனியார் செய்வதை விட ஒரு குழுமம்/ இணையம்/ வலைத் தளம் என்று கூடி இருக்கும் நாம் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் உண்டு.

அதைச் செய்வோமா?! ! ஒன்று படுவோம். ஓரணியாய்த் திரண்டு எழுவோம்.

வெறும் கதைகளும்,நமக்கிடையிலேயான பேச்சுவார்த்தைகளாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை! உணர்ந்தோமா? ! !! இனியாயினும் உணர்வோமா?!!...

உங்கள் ஒற்றுமையை எதிர்நோக்கி.

மிகவும் கண்டிக்ககூடிய விடயம் தான் இது :icon_idea: இந்த கொடுமையுமில்லாமல் க்யூ பிரிவு போலிசாரிடம் இவன் அது இது என்று சொல்லிக்குடுத்து அவர்கள் சோதனை இட வரும் போது அடிவாங்கிக்கொடுக்கும் ஆள்காட்டி கும்பல்கள் முகாம்களில் செய்யும் அட்டகாசங்கள் வேறு.

:icon_idea: உண்மையில் அம்மக்கள் பாவம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் கண்டிக்ககூடிய விடயம் தான் இது :icon_idea: இந்த கொடுமையுமில்லாமல் க்யூ பிரிவு போலிசாரிடம் இவன் அது இது என்று சொல்லிக்குடுத்து அவர்கள் சோதனை இட வரும் போது அடிவாங்கிக்கொடுக்கும் ஆள்காட்டி கும்பல்கள் முகாம்களில் செய்யும் அட்டகாசங்கள் வேறு.

:icon_idea: உண்மையில் அம்மக்கள் பாவம்<<<<< அவர்கள் எம் மக்கள்! எம் உறவுகள் எம் உயிர்கள்

நமக்குள் தகவல் பரிமாற்றம் செய்தாயிற்று. இந்தியாவைத் திட்டித் தீர்த்தாயிற்று. எம் உறவுகளை நினைத்துப்பாவப்பட்டு கண்ணீர் விட்டு கவலைப்பட்டாயிற்று!.

ஆக!! இவ்வளவுதான் நாம் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவமா?

நாம் என்ன செய்யப்போகின்றோம்? நம் பங்களிப்பு என்ன?! இதை எந்த வகையில் நாங்கள் அணுகலாம் இதை சர்வதேச/ அல்லது இந்திய சமூகத்துக்கேனும் எந்த வகையில் எடுத்துரைக்கலாம். தனியார் செய்வதை விட ஒரு குழுமம்/ இணையம்/ வலைத் தளம் என்று கூடி இருக்கும் நாம் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் உண்டு.

அதைச் செய்வோமா?! ! ஒன்று படுவோம். ஓரணியாய்த் திரண்டு எழுவோம்.

வெறும் கதைகளும்,நமக்கிடையிலேயான பேச்சுவார்த்தைகளாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை! உணர்ந்தோமா? ! !! இனியாயினும் உணர்வோமா?!!...

உங்கள் ஒற்றுமையை எதிர்நோக்கி.

'''தனி நாடு தான் ஒரே தீர்வு'''

அவன(ள)வனு(ளு)க்கு தெரிந்த வழியில் முயற்சிப்போம்!

:angry:

அதாவது ஒரு பெரிய மூடிய சிறைச்சாலக்குள் ஈழத்து அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ் குடாநாட்டு திறந்த வெளிச் சிறைச்சாலைக்கும், இந்திய அகதிமுகாமிற்கும் இடையிலான ஒரு வித்தியாசம் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அகதிமுகாம்களில் ஆட்கள் கடத்தப்படுவதோ, காணாமல் போவதோ அல்லது கொலை செய்யப்படுவதோ இல்லை. ஆனால் மற்றும்படி யாழ் குடா நாட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையும், ஈழத் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இந்திய அகதிமுகாம்களும் அடிப்படையில் ஒன்றே!

தப்பு தப்பு தப்பு மாப்பி சார்.

விசாரணை என்னும் பெயரில் அடிக்கடி வந்து பொலிசு கூட்டிக்கொண்டு போகுமாம். எமக்கு தெரிந்த சில அண்ணாமார் இப்படித்தன்ன் அடிக்கடி நடந்ததால் பேசாமல் திரும்பி இலங்கைக்கே வந்து பின் சவூதி அரேபியாக்கு சென்றுவிட்டனர்.

அப்ப அவன் சந்திரகாசன் என்ன செய்கிறான். ஏதிலிகள் அமைப்பு என்ற பெயரில் கொள்ளை காசு அடிச்சு தனது சுகபோக வாழ்க்கை செய்கிறான். அவனது அமைப்புக்கு தான் ஐ.நா அகதிகள் அமைப்பும்

பணஉதவி செய்கிறது

வழி சரியே. செயல்?

இலங்கைத் தமிழர் தொடர்பாகவும் தமிழீழ நிலைவரம் தொடர்பாகவும் சர்வதேசம் நன்றாகவே

புரிந்துவைத்திருக்கின்றது. இது தொடர்பாக ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற சர்வதேச நாடுகளில்

அவ்வப்போது சில நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அவைகள் போதுமானதே.

மேற்கொண்டும் அதே செயற்பாடுகளில் ஈடுபடலாம். அதைவிட சர்வதேசங்களிலே வாழ்கின்ற

ஈழத்தமிழர்களிடத்திலும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடத்திலும் எமது தேசியத்தலைவர் கேட்டுக்

கொண்ட தார்மீக உதவி என்ற அந்த விடயத்தையே செயல் வடிவமாக்க வேண்டும்.

ஊர்வலங்களும் ஒன்று கூடுதலும் தொடரவேண்டும். இவைகளில் நிதி சேகரிப்பு முக்கிய

மானது. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்றவற்றையோ அதனையும் தாண்டியதா

கவோ அந்தத் தார்மீகக் கடமையைச் செய்தல் வேண்டும். இது ஒரு சாதாரண பங்களிப்

பல்ல நமது போராட்டத்தின் முடிவில் இவ்வாறு சேமிக்கும் நிதியில்தான் சிறிது காலத்

திற்கு தன்னை மிதக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் தார்மீகக் கடமை

யைச் செயல்வடிவமாக்குவோம்.

அது சரி முன்னுக்கு ஒரு முக்கியமான சேர்வை நடந்துகொண்டு இருக்கு. நாம் என்ன செய்தோம் என்று சொல்லி கொஞ்சம் தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவமா? முக்கியமாக போர்க்காலச்சூழ்நிலையில் நீங்க மனம் வைச்சா இந்தியாவுக்கு சன்ம போய்த்தான் வாழோனும் என்பதினை நிற்பாட்டலாம் இல்லையா? போய் ஒருக்கா உங்க பேரையும் நாங்க பார்க்கிரமாதிரி பதிக்க முடியுமா? 1983 ல் இருந்து நீங்க என்ன செய்தீங்க ஈழத்திற்கு எண்டு சொன்னா இங்க கன பேர் மனம் மாறலாம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கண்டிக்ககூடிய விடயம் தான் இது

இது எங்களைப் போன்ற ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தி எல்லோரும் இணைந்து அங்கு நடக்கும் உண்மைகளை தீவிர பிரச்சாரத்தின் மூலம் வெளிக் கொண்டு வர முயற்சிக்க வேனும்.

தறுதலைகள் சொல்வது ஜனநாயக நாடு என்று..செய்வ தெல்லாம் காட்டுமிராண்டித்தனம்.

இவங்கள் நினைப்பெல்லாம் ஈழத்தமிழர்கள் வலது குறைந்தவர்கள் மாதிரி.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.