Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும்  காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக  அரசாங்கம்  அறிவித்திருந்தது.

இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கும் இக்காப்புறுதி வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அரசாங்கத்தினால் இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பாடசாலைகளிலிருந்து உணவுகள் வழங்கப்படமாட்டாது என பாடாசலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் யுத்தம் இடம்பெற்றதால் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இம்மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வீட்டில் ஒழுங்கான உணவு வழங்கப்படுவதில்லை. சில மாணவர்களுக்கு வீட்டில் உண்பதற்கு உணவிருக்காது.

இவ்வாறான நிலையில், பாடசாலைகளில் வழங்கப்படும் இலவச உணவானது நிறுத்தப்பட்டு அதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியே காப்புறுதித் திட்டமாக  மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமான உணவை நிறுத்தி, மாணவர்கள் நோயாளியாகும் பட்சத்தில் அவர்களுக்கான வைத்தியச் செலவுக்காகவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

உயிர்வாழ அவசியமான உணவையே நிறுத்தி காப்புறுதித் திட்டம் வழங்கும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான முடிவால் பெருமளவு பாடசாலை மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதை மறுக்கமுடியாது.

அத்துடன், மாணவர்களை அரசாங்கமே நோயாளிகளாக்கி, அதில் ஆதாயம் பெறுகின்றது. இலவசம் என்ற பெயரில், பெரியதொரு கொள்ளையை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.

http://inioru.com/சாப்பாட்டிற்குப்-பதிலாக/

  • கருத்துக்கள உறவுகள்

படு பிற்போக்குத் தனமான முடிவு.
இன்று கிடைக்கும் உணவை விட.... நாளை கிடைக்கவிருக்கும் காப்புறுதி திட்டம் மாணவர்களுக்கு பலனளிக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா மறைமுகமாக அந்நியர்களின் அடிமையாகி விட்டது என்பதையே இந்த அறிக்கை காட்டுகின்றது .

தோலிருக்க சுளை விழுங்கும் உலகவங்கி ,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் அடிமையாகிவிட்டது எப்போது மக்களுக்கு எதிரான அல்லது அனுகூலமற்ற முடிவுகளை வலுகட்டாயமாக நடைமுறைபடுத்த தொடங்குதோ அப்பவே அந்த நாடு பொருளாதார ரீதியில் பெரும் சரிவை நோக்கி பயணிக்க தொடங்கிவிடும் .

இந்த உலக வங்கியோ இல்லை இந்த ஆசிய அபிவிருத்தி வங்கியோ உள்ளே புகுந்தால் அந்த நாடு நாசம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

 

 

 2018ஆம் ஆண்டு பாடசாலைகளிலிருந்து உணவுகள் வழங்கப்படமாட்டாது என பாடாசலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், மாணவர்களை அரசாங்கமே நோயாளிகளாக்கி, அதில் ஆதாயம் பெறுகின்றது. இலவசம் என்ற பெயரில், பெரியதொரு கொள்ளையை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.

http://inioru.com/சாப்பாட்டிற்குப்-பதிலாக/

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை,காலையுணவு என்பன வழங்கப்படும் அதேநேரம் அனைத்து மாணவர்களுக்கும் காப்புறுதி வழங்கும் அரசின் திட்டம் தற்போது நடைமுறை சாத்தியமாகியுள்ளது.

http://www.thinakaran.lk/2017/09/08/உள்நாடு/19789

‘’இன்னொரு’’ இணையதளம் ஒரு தகவல் சொல்கிறது. இலங்கை அரசின் உள்ளூர் பத்திரிகை இப்படி ஒரு தகவல் சொல்கிறது, எது உண்மையோ நாமறியோம் பராபரமே!

மாணவர்களை நோயாளியாக்கி காப்புறுதி வழங்கினால் அரசுக்குத்தான் செலவு அதிகம் ஏனென்றால் அது இலவச காப்புறுதி திட்டம் என்று அறியபடுகிறது.

’’’இந்த திட்டத்தின் மூலம் தெற்காசியாவில் பள்ளிக் கூட மாணவர்களுக்கு இலவச காப்புறுதி வசதிகளை நடைமுறைப்படுத்துகின்ற முதலாவது நாடு என்ற அடையாளத்தை இலங்கை பெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.’’’’’

http://www.bbc.com/tamil/sri-lanka-41475262

 

எது உண்மையோ எது பொய்யோ தெரியாது, ஆனால் பொய் சொல்பவர்களின் வரிசையில் சிங்களவர்களுடன் எம்மையும் சேர்த்து உலகம் பார்க்கும் நடவடிக்கையை எமது ஊடகங்கள் சிலதும் பண்ணிக்கொண்டிருக்கின்றன, அதில் இன்னொரு என்னும் ஊடகமும் இணைந்திருக்கா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

 

15 hours ago, கிருபன் said:

இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கும் இக்காப்புறுதி வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

காப்புறுதி நிறுவனங்களிடம் பெருமளவு இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு நல்லாட்சி அரச பயங்கரவாதிகள் ஆடும் கூத்து இது.

காப்புறுதிகளால் 1% க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.