Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா ரஜினி?- அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

Featured Replies

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா ரஜினி?- அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

 

 
rajini

ரஜினிகாந்த்   -  கோப்புப் படம்

திமுக தலைவர் கருணாநிதியை இன்று (புதன்கிழமை) மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாகவும் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

அறிவிப்புக்குப் பின்..

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவு நாளான டிசம்பர் 31 2017-ல் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நின்றுவிடாமல் இணையதளத்தையும் தொடங்கினார். இந்த இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வருகின்றனர். மேலும், கட்சிக் கொடியை உருவாக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேலி கிண்டல்கள் ஓய்ந்து 'ஆன்மீக அரசியல்' அறிவிப்பு தொடங்கி அடுத்தடுத்த சூடுபறக்கும் அவரது நடவடிக்கைகளும் தற்போது வாதவிவாதப் பொருளாகியுள்ள நிலையில் இன்று அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு சந்திப்பு நிகழ்ந்தால். தனிக்கட்சி அறிவிப்புக்குப் பின் ரஜினிகாந்த் சந்திக்கும் முதல் அரசியல் தலைவர் கருணாநிதி என்ற நிலை உருவாகும்.

ரஜினி, தனது தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்ட நாளன்றே திமுக ஆதரவாளர் கவிஞர் வைரமுத்து ரஜினியை வாழ்த்தி வரவேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22356959.ece?homepage=true

  • தொடங்கியவர்

`கருணாநிதியிடம் ஆசி பெற்றேன்!' - கோபாலபுரத்தில் ரஜினி

 
 

சென்னை கோபாலபுரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். 

6db1e1e6-6ced-4257-a533-3656b302baa1_1_2

 

சென்னையில், ரசிகர்கள் மத்தியில் டிசம்பர் மாதம் 31-ம் தேதி பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம், தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் பிரவேசத்துக்கான பணிகளில் தீவிரம் காட்டிவரும் ரஜினி, அதற்காக ரசிகர்களை ஒன்றிணைக்க புதிய இணையதளம் ஒன்றையும், செல்போன் செயலி ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.

defed535-d4cf-4047-bb5c-c54fe494d326_204

மேலும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, ஆன்மிக அரசியல்குறித்து விளக்கமளித்த ரஜினி, ‘உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல். அறவழி அரசியலே ஆன்மிக அரசியல். எனது கட்சியின் சின்னம், பெயர் போன்றவை குறித்துப் போகப் போகத் தெரியும்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை, ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார். கோபாலபுர இல்லத்தில் இருக்கும் கருணாநிதியை ரஜினி சந்திக்கச் சென்றபோது, ஸ்டாலின் அவரை கைகொடுத்து வரவேற்று, வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றார். 

be54fc0f-b136-4ce7-bd3e-e01ac5acc591_1_2

முன்னர், `மரியாதை நிமித்தமாகவே தி.மு.க-வின் தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறேன். கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கலாம் என்பதற்காகவே அவரைச் சந்திக்கிறேன்' என்று போயஸ் கார்டனில் இருக்கும் தனது இல்லத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த். 

234981e4-9787-4336-bcdb-1585ee6c0ef3_205

 

 

சந்திப்புக்குப் பின்னர் பேசிய ரஜினிகாந்த், `கருணாநிதியைச் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறினேன். அவரது உடல்நலத்தை விசாரித்தேன். எனது அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கூறினேன். பின்னர், அவரிடம் ஆசி பெற்றேன்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினார். 
 

https://www.vikatan.com/news/tamilnadu/112597-rajnikanth-meets-karunanithi.html

  • தொடங்கியவர்

ஆன்மிக அரசியலை வைத்து திராவிட அரசியலை அழிக்க முடியாது: ஸ்டாலின் பேட்டி

 

 
IMG-20180103-WA0445

ஆன்மிக அரசியலை வைத்து திராவிட அரசியலை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் தோல்வி அடைவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோபாலபுரம்  இல்லத்துக்கு இன்று இரவு 8 மணி அளவில்வந்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்திற்காக ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

''ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் என்னோடு தொடர்பு கொண்டு அதற்கான நேர அனுமதியைக் கேட்டார். ஏற்கெனவே நான்கைந்து மாதத்திற்கு முன்னால் அவர் சந்தித்துள்ளார்.

ஆகவே இந்த சந்திப்பில் ஆச்சரியம் இல்லை. புதிய ஒரு செய்தி அல்ல. அவர் கருணாநிதியையும், எனது தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசத்திற்கு ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் பண்பாட்டு அடிப்படையில் கருணாநிதி அவரை வாழ்த்தி இருக்கலாம். அவர் மட்டுமல்ல விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ரஜினி ஆசி மட்டும் கேட்டாரா? திமுகவின் ஆதரவையும் கேட்டாரா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ''அதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு பண்ண வேண்டிய விஷயம். ஆதரவை கேட்கிறாரா? கேட்கவில்லையா? அதை ஏற்றுக்கொள்வதா? மறுப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் யோசிக்க வேண்டிய விஷயம்.

அவர் ஆன்மிக அரசியலைத்தான் நடத்தப் போகிறேன் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு பலருடைய தூண்டுதலால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு சித்திரத்தை, உருவகத்தை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு எல்லாம் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இந்த மண் திராவிட இயக்க மண், தமிழ்நாட்டின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டிருக்கக் கூடிய மண் அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யார் எல்லாம் முயற்சித்துள்ளார்கள் அவர்கள் தோற்ற கதைகள் நாட்டிற்கு நன்றாக தெரியும்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22360436.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

ரஜினி ஆசி மட்டும் கேட்டாரா? திமுகவின் ஆதரவையும் கேட்டாரா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ''அதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு பண்ண வேண்டிய விஷயம். ஆதரவை கேட்கிறாரா? கேட்கவில்லையா? அதை ஏற்றுக்கொள்வதா? மறுப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் யோசிக்க வேண்டிய விஷயம்.

 எங்களுக்கு  கொள்கையுமில்லை ...நேரத்துக்கு ஏற்றமாதிரி நீச்சலடிப்பம் எண்டு சொல்ல வாறாரோ?????

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

  • தொடங்கியவர்

கருணாநிதி சந்திப்பை அரசியலுக்கு பயன்படுத்தினாரா ரஜினி?

 

 
05CHRGNRAJINI

திமுக தலைவர் கருணாநிதியை நேற்று முன்தினம் சந்தித்த ரஜினி.

திமுக தலைவர் கருணாநிதி உடனான சந்திப்பை நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு பயன் படுத்தியதாக திமுகவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கடந்த 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. குறிப்பாக திமுகவினரும், தமிழ்த் தேசியம் பேசுவோரும் அவரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்தார். அப்போது அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.

தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு கருணாநிதியை ரஜினி சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததுடன், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். தனிக்கட்சி தொடங்குவதற்காக ஆசி பெற்றேன்” என்று கூறினார். இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை மாற்றுக் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் ரஜினி கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டது. உடல்நலம் விசாரித்து விட்டு திரும்பி விடுவேன் என்றுதான் அவர் ஸ்டாலினிடம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பை தனது அரசியலுக்கு பயன்படுத்தும் வகையில் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து பெற்றேன் என கூறியது வேதனை அளிக்கிறது. ரஜினியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

நேற்று முன்தினம் ரஜினி சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை ரஜினி சந்தித்தார். தமிழ்ப் பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் அவருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருக்கலாம். ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தை அழிக்கவே ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பண்படுத்திய திராவிட மண் இது. எனவே, இந்த மண்ணிலிருந்து திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

 

தலைவர்களுடன் சந்திப்பு

ரஜினியின் செயலால் கோபமடைந்த ஸ்டாலின் அதன் வெளிப்பாடாகவே இப்படித் தெரிவித்ததாக திமுகவினர் கூறுகின்றனர். நேற்று முன்தினம் கருணாநிதியைச் சந்தித்த மு.க.அழகிரி, ரஜினியை விரைவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார். இதுவும் ஸ்டாலினின் கோபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அழகிரியை ரஜினி சந்தித்தால் அவரை நிரந்தர எதிரியாக பார்க்கும் நிலையும் ஏற்படும் என்கின்றனர் திமுகவினர்.

திமுக செய்தித் தொடர்பாளர்களும், தீவிர திமுக ஆதரவாளர்களான திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்துக்கு ஆசி பெற்றதாக ரஜினி கூறியது திமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. சமூக ஊடகங்களில் திமுகவினர் ரஜினியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22372936.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Text

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ரஜினி -கருணாநிதி சந்திப்பு; திராவிடத்தை வணங்கிய ஆன்மிக அரசியல்!

 

 
haha

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்திற்காக ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து நெட்டிசன்களும், ரஜினி ரசிகர்களும் இணையத்தில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

M.m. Abdulla

     

"வாய்யா ரஜினி! எப்படி இருக்க?"

"நல்லாருக்கேங்கய்யா. நீங்க நல்லா இருக்கீங்களா"

"நலமாருக்கேய்யா. என்ன விசயம்?"

" அது வந்துங்க... ஐயா.. சிஸ்டம் செரியா இல்லை. அதுனால நான் வந்து..."

"சிஸ்டம் செரியில்லாட்டி தூக்கி போடுய்யா. அதெல்லாம் அவுட் டேட். ஆப்பிள்லயோ ஆண்ட்ராய்லயோ டேப்லட் வாங்கிக்க"

கவிஞன் மோக்கியா @WritterRamesh

கருணாநிதி : என்னப்பா... கைல பழம் எல்லாம், ஏதும் காது குத்துக்கு போறியா?

ரஜினி : இல்லண்ணே.. நீங்க இந்த தொழில விட்டுட்டீங்க.. அதனால அந்த பதவிய நான் ஏத்துக்கலாம்ன்னு...

DSqb0n0U0AEA8s5
 

Praveen R @Praveen_TSR

கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்கினார் ரஜினி!

மகாபாரதப் போர் நடக்கும் முன், தருமர் கவுரவர் படையின் பிதாமகன் பீஷ்மரிடம் ஆசீர்வாதம் வாங்கியதை தமிழர்களுக்கு நினைவூட்டினார் சூப்பர் ஸ்டார்!

இது ஆன்மீக அரசியல்! போர்! #Thalaivar #TSR

Arul Ezhilan

புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும், அப்படியே உடல் நலம் விசாரிக்கணும் என்றுதான் ரஜினி தரப்பில் இருந்து கருணாநிதி  மகள் செல்வியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் அங்கு சென்றார். ஆனால் ரஜினி திடீரென அரசியலுக்கு வருகிறேன் ஆசி வேண்டும் என்று சொல்ல அது கருணாநிதிக்குப் புரியவில்லை. அவர் யார் கை கொடுத்தாலும் கொடுப்பார். கை கொடுத்தார் அதை ரஜினி ஆசியாக எடுத்துக் கொண்டு ஊடகங்களிடம் பொய் சொல்ல கடைசியில் வாங்கிக் கட்டும் சூழல் உருவானது.

விஷ்வா விஸ்வநாத்

காட்சி 1: அழகிரி மீட்டிங் வித் கருணாநிதி

காட்சி 2: ரஜினி மீட்டிங் வித் கருணாநிதி

காட்சி 3: கடுகடுப்பான முகத்துடன் ஸ்டாலின் "இது திராவிட மண்" என பேட்டி

அடுத்து எதிர்பார்க்கப்படும் காட்சி 4: அழகிரி மீட்டிங் வித் சூப்பர் ஸ்டார்.

- இம்புட்டுதான் பாலிடிக்ஸ்

H Umar Farook

ரஜினி பாஜக ஆளுன்னு சொன்னீங்க , இப்போ கருணாநிதியை சந்தித்து இருக்கிறாரே என்ன சொல்றீங்க என்றார் பாஜக நண்பர் ஒருவர் !

’ஆமாங்க தெரியாமல் சொல்லிட்டேன் , ரஜினி கருணாநிதியோட கையாள் , பாஜக ஓட்டை பிரிப்பதற்காக இப்படி கட்சி ஆரம்பித்து நாடகமாடுகிறார்’ என்றேன்!

ஒண்ணுமே பேசாமல் போய் விட்டார் !

Pichaikaaran Sgl

-தம்பி ரஜினி... ஒண்ணு ரெண்டுனா பரவாயில்லை.. 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் ராஜதந்திரத்தோட தேர்தல் பணி செய்ய உத்தரவிடச் சொல்றியே.. இது நல்லாவா இருக்கு ?

Bala G

நேற்று ராமகிருஷ்ண மடம்..

இன்று திமுக மடம்..

படத்தைவிட அரசியல்ல செமையா எண்டர்டெயின் பண்றார்.. ஃபேஸ்புக் சமூகத்துக்கு தினசரி விருந்துதான்..

வாழ்த்துகள் ரஜினி சார்.

2616599912024200865588199211082450385916
 

Ezhumalai Venkatesan

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்தார்.

மகாபாரதத்தில் ஒரு சீன் வரும்.போருக்கு முன் அர்ஜுனன் அண்ட் கோ போய் எதிர்த் தரப்பு மகா பெரியவரான பீஷ்மர், துரோணாச்சாரியார் அன்ட் கோகிட்டே ஆசி கேக்கும்..

ஏன்னா, எல்லாம் வல்ல குருமாரான பீஷ்மரின் ஆசிஇல்லாவிட்டால் அது சாபமாகி தங்கள் தரப்பை திருப்பியடிக்கும் என்பது அர்ஜுனன் தரப்புக்கு தெரியும்.

பகையாளி குடியை உறவாடி கெடுக்கறது ஒரு டைப்... அது டீவி சிரியல் ரகம்.. பகையாளின்னாலும் மூத்தவங்களை மதிச்சி தர்மப்படி அவங்கிட்ட ஆசிர்வாதம் வாங்கி அவங்களையே போட்டுத்தள்றது இதிகாசம் ரகம்...

கரிகாலன்

ஸ்டாலின் vs ரஜினி, கமல்!

ரஜினி கோபாலபுரத்துக்கு வந்தபோது ஸ்டாலின் முகத்தில் இறுக்கமிருந்தது. கருணாநிதியைப் பின்பற்றி ஸ்டாலினும் முரசொலி விழாவுக்கு ரஜினி, கமல் இருவரையும் அழைத்தார்.

இவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு அரசியல் ஆசை வரும் என அப்போது அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை!

Pa Raghavan

கருணாநிதி ஆசியுடன் ஆன்மிக அரசியல் என்பது ஒரு நல்ல விஷயமே.

ஒரு தகவல். நிறுத்தப்பட்டிருந்த ராமானுஜர் தொடர் கலைஞர் டிவியில் இப்போது மீண்டும் ஒளிபரப்பாகிறது.

Srinivasan J

கருணாநிதி ரஜினி சந்திப்பு - காவியை உடைக்கும் சக்தி கருணாநிதிக்கே இருக்கிறது என்று ஆன்மிக அரசியல் செய்யும் ரஜினிக்கும் புரிந்திருக்கிறது என்பதுதான் ஹைலைட்!

குருபிரசாத் தண்டபாணி

நல்லகண்ணு போன்றவர்களைத் தவிர்த்து, கருணாநிதி போன்றவர்களின் வீடு தேடிப் போய் ஆசி பெறுவதே ஆன்மிக அரசியலின் முதற்படி.

தஞ்சை தர்மா @dharmaraaaj

பெருந்தகை அண்ணாவால் அஸ்திவாரமிடப்பட்டு, கருணாநிதியால் கட்டி எழுப்பப்பட்ட மிகப்பெரிய கட்டிடம் திமுக. அதை ரஜினி எனும் சிறு ஊசியைக் கொண்டு சாய்த்திட முடியாது.

BALACHANDER KAMAL @BALACHANDER02

ரஜினி: ஐயா உங்க ஆசி வேண்டும்...

கருணாநிதி: அதற்கென்னப்பா, என் ஆசி எப்பவும் உனக்கு உண்டு. அதற்கு நீ எனக்கொரு காணிக்கை செலுத்த வேண்டும்...

ரஜினி: சொல்லுங்க ஐயா...

கருணா: 1996-ல் எனக்கு வாய்ஸ் அளித்ததைப் போல, என் மகனுக்கு 2021-ல் அளிக்க வேண்டும்...

ரஜினி: ???

Lakshmanan.P @laksh_kgm

கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன் ஆகியோரைச் சந்தித்து, ஏன் சங்கடங்களை உண்டாக்குகிறார், ரஜினி ?

கோகுல் @GokulTalks

அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார் - ஸ்டாலின்

புள்ளைக்கு ஆப்பு வைக்க அப்பாகிட்ட ஆசியா?

hahajpg1
 

Aandavar Memes @AndavarMemes

கருணாநிதி: வாய்யா! நீ சுத்தி வளைச்சு இங்கதான் வருவேனு எனக்குத் தெரியும், ஆன்மிக அரசியல் செய்ய பாஜக வேணும், பகுத்றிவு அரசியல் செய்ய நா வேணுமா?

நைனா @Writer_Naina

விஜயகாந்தும் இதே போல்தான் கட்சி துவங்குமுன் கருணாநிதியிடம் ஆசி வாங்கினார்- ஸ்டாலின்.

#எனக்கு தெரிந்து கருணாநிதி போல வார்த்தைகளை நக்கல் கலந்து ஸ்டாலின் பேசுவதை இப்பதான் கேட்கறேன்.

கு. கார்த்திகேயன் @karthetweets

திராவிட அரசியலை வணங்கும் ஆன்மிக அரசியல்! #கலைஞர் கருணாநிதி #Kalaignar #Rajinikanth

http://tamil.thehindu.com/opinion/blogs/article22367238.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.