Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டமா?- எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம்: பாரதிராஜா ஆவேசம்

Featured Replies

வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டமா?- எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம்: பாரதிராஜா ஆவேசம்

 

 
bharathiraja

இயக்குநர் பாரதிராஜா | கோப்புப் படம்.

வைரமுத்துவைக் காரணமாகக் காட்டி கொல்லைப்புறமாக தமிழகத்துக்குள் வர நினைப்பவர்களின் ஆசை நிறைவேறாது. எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.அக்கட்டுரையைப் பிரசுரித்த தனியார் நாளிதழும் வருத்தம் தெரிவித்தது.

ஆனாலும் எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துப் பேசினர். இதற்கு மு.க.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன் போன்றோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ‘கடவுள் 2’ படத் தொடக்க விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ''வைரமுத்து தனி மனிதன் அல்ல. இலக்கியத்துக்கும், தமிழுக்கும் அவர் அளித்த தொண்டு சாதரணமாதனல்ல. இந்த மண்ணோடு கலந்தவர். அவருக்கு எதிரான போராட்டத்தை தமிழர்களுக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறேன். மதம் எங்களுக்கு ஒரு போதும் கிடையாது. வைரமுத்துவுக்கு ஆதரவாக சினிமாத்துறையில் இருந்து இன்னும் பலமாக குரல் வந்திருக்க வேண்டும்.

வைரமுத்துவைக் காரணமாகக் காட்டி கொல்லைப்புறமாக தமிழகத்துக்குள் வர நினைப்பவர்களின் கனவு பலிக்காது. எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம். எங்களை குற்றப் பரம்பரை ஆக்கிவிடாதீர்கள். இந்த பிரச்சினை வழியே பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் நாங்கள் ஆயுதம் எடுக்க வேண்டி வரும்'' என்றார் பாரதிராஜா.

http://tamil.thehindu.com/tamilnadu/article22466260.ece?homepage=true

  • தொடங்கியவர்

“வைரமுத்துவுக்காக ‘அந்த’ நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை?” பாரதிராஜா

 
 

இருபது வருடங்களுக்குமுன் ‘கடவுள்’ என்ற படத்தை இயக்கினார் வேலுபிரபாகரன். மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நேற்று தொடங்கினார். இளையராஜா இசையமைப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வேலுபிரபாகரன் 'கடவுள்-2' படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழாவில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் சிநேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கடவுள் 2 படதுவக்க விழா

 

பாரதிராஜா பேசும்போது, “உலகம் முழுவதும் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றனர். அதுதான் இங்கு பிரச்னை. முருகன் ஆறு படைகள் கொண்டு தமிழனை ஆண்ட மனிதன். அதனாலேயே அவனை முப்பாட்டன் எனக் கூறுகிறோம். அந்த முருகனின் கையிலிருக்கும் வேல் அறிவை குறிக்கும். அத்தகைய கூர்மையான அறிவையுடையவன், வேலுபிரபாகரன். நேர்கொண்ட கொள்கையில் தவறாமல் வாழ்ந்து இருந்தவன் வேலுபிரபாகரன். எத்தகைய பொருளாதார நிலையிலும் தன் வழி தவறாத கொள்கையாளன்.

பா.ஜ.க கட்சியின் தமிழக ஆட்சி வேக்கையைப் பற்றி பேசும்போது

"எங்க தாத்தனுங்க கொடுத்த விதைகளை விதைக்காமல்விட்டாதால்  நிலம் புண்பட்டு, புதர் பிடித்து பாம்புகள் அதிமாக கூட்டம் கூட்டமாக வந்துவிட்டது. எங்களுக்குப் பாம்பு விரட்டத் தெறியும், மீண்டும் விதைகளை விதைத்துள்ளோம், முதல் விதைதான் சீமான். எனது படத்தில் மத அடையாளங்களான சிலுவையையும், பூணுலையும் அருத்தபோது இதைப் பார்க்க அண்ணாவும், பெரியாரும் உயிருடன் இல்லையே என எம்.ஜி.ஆர். என்னிடம் வருத்தப்பட்டார். பல மேடைகளில் பாராட்டினார். அப்போது எங்கு போனது  இவர்களின் தைரியம். வீட்டைப் பூட்டி சந்தோஷமாக இருக்கலாம் என்று பார்த்தால் கொல்லைப்புறமாக வருகிறார்கள். அதானால்தான், வைரமுத்து விவகாரத்தைப் பூதாகரமாக சித்தரிக்கிறார்கள். இதைக் காரணமாகக் காட்டி கொல்லைப் புறமாக வர எண்ணாதீர்கள்... கையில் ஆயுதமேந்த வைக்காதீர்கள் மீண்டும் எங்களை குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்" என என எச்சரித்தார்.

பாரதிராஜா

வைரமுத்துவைக் கண்டனத்திற்குரிய வகையில் பேசியவர்களைக் கடிந்து பேசியபோது,

பிரதேசம் தாண்டி வந்த பரதேசிகளிடம் பேசும் நேரமாக ஹெச். ராஜா பேசியதுபோல் அவரை பார்த்து அதே வார்த்தையில் ஏசி தாழ்வாக பேச இயலாது. வைரமுத்துவைப் பற்றி இழுக்கு பேசுவது என் மண்ணைப் பற்றி பேசுவதற்குச் சமம், என் வைகையை கலங்கப்படுத்துவதற்குச் சமம், எனது மேற்குத் தொடர்ச்சி மலை எரிக்கப்படுவதுபோல் உணர்கிறேன். எனது வைகையை நஞ்சாக்க நினைத்தால் சும்மா விடமுடியாது. வைரமுத்து தனிமனிதன் கிடையாது. அவருக்கும் தமிழுக்கும் உள்ள உறவு பெரியது. அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை.    

அரசியலுக்கு வரும் முன்னனி நடிகர்களை சூசகமாகச் சாடினார் பாரதிராஜா

 

என்னையும் சேர்த்துச் சொல்கிறேன், சினிமாகாரர்கள் விசுவாசம் இல்லாதவர்கள். நியாயமாக எங்கிருந்து குரல் வரவேண்டுமோ அது வரவேயில்லையே. எவன் வார்த்தைகளை வடித்தெடுத்து, எவன் தனது வார்த்தைகளால் உங்களுக்கு அடையாளம் கொடுத்தானோ, அவனுக்கு அவநிலைமை ஏற்படும்போது ஏன் நீங்கள் குரல் எழுப்பவில்லை. எத்தனை பாடல்களை உங்கள் வாய்வழி கேட்டு உங்கள்  கருத்துகள் என நம்பியிருப்பார்கள். இன்று நீங்கள் அறுவடை செய்யலாம் என்று எண்ணுகிறீர்களே... உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தாமல், நீங்கள் ஆட்சிக்கு வருவதை நினைத்தால்... எனக்குப் பயமாக இருக்கிறது" என அரசியலுக்கு வரும் முன்னனி நடிகர்களைச் சாடினார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/114005-i-wont-swear-h-raja-bharathi-raja-in-kadavul2-movie-launch.html

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி குரல் கொடுக்கவில்லை எங்கிறீர்கள், ரஜனியின் பாபா படம் வெளியிடவிடாது தடுக்க முயற்சிகள் நடந்தபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா?

ரஜனி சுயநலமிக்கவர் என்றால் அந்த சுயநலமிக்கவரை எதற்கு உங்கள் மகனது திரைப்பட கல்லூரி தொடக்கவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்தீர்கள் ஐயா?

விசுவாசமில்லாத ரஜனி பேசும் பேச்சை பின்னணியின் நின்று உங்கள் மகன் பவ்வியத்தோடு ரசித்து சிரித்து பணிவுடன் நின்று ரசிக்கும்போது அது அசிங்கம்போல தோன்றவில்லையா?

தனக்கு ஒரு லாபம் வருகிறதென்றால் எவனும் நல்லவனே என்ற தற்காலிக புத்தனாக வாழ்பவர்கள் விசுவாசமில்லாதவர்களேதான், ஆம் நீங்கள் உட்பட!

அதற்காக ரஜனி மிகவும் புனிதமான, சுத்துமாத்து என்றால் சுத்தாமாவே தெரியாத ஆள் என்பது அர்த்தம் அல்ல, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல இங்கே யாரும் யோக்கியர்கள் அல்ல என்று சொல்ல வருகிறேன்.

 

இவ்வளவு கேக்கிற பாரதிராஜா, வைரமுத்துவை பார்த்து 'இது நாள் வரைக்கும் இந்து தீவிரவாதிகள் செய்த ஒரு அநியாயத்துக்கு எதிராகவேனும் எப்பவாவது குரல் கொடுத்துள்ளீர்களா" என்று கேட்க வேண்டும்.  அல்லது ஆணவப்படுகொலைக்கு எதிராக எந்தளவுக்கு குரல் கொடுத்தீர்கள் என்றாவது கேட்க வேண்டும்

தனக்கு கண் முன் நடக்கும் அநீதிகளை சுயலாபத்துக்காக கண்டிக்காமல் இருந்த வைரமுத்து இறுதியில் அதே விதமான அநியாயம் தனக்கு நிகழும் போதும் மெளனமாக இருக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

விமரிசனம் என்று வரும்போது சிங்களவனோ ,கன்னடனோ தன் மொழிக்கு பழுதில்லை என்றபின்தான் விமர்சிப்பு இருக்கும் எம்மவர் நாலு எழுத்து படித்துவிட்டம் என்ற வக்கனையில்............................................................................................................................................ சொல்ல வருது . விரும்பியவர்கள் நிரப்பி கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவை திட்டும் வெள்ளைகள்

 

 

  • தொடங்கியவர்

`வேசி - தாசி...' ஆண்டாள் சர்ச்சைகுறித்து வைரமுத்து விளக்கம்!

 

ஆண்டாள் கட்டுரை தொடர்பான சர்ச்சைகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். 

Vairamuthu

 

 

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்குறித்து ஒரு நாளிதழில் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்டார். ஆண்டாளை அவமதிப்பது என் நோக்கமல்ல என்று கூறினார். என்றாலும் சிலர் சமாதானமடையவில்லை. வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டமிருந்தார். வைரமுத்துமீது வழக்குகள் பதியப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கத் தடை கோரியும், தன் மீதான நியாயத்தைத் தெரிவித்தும் கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வைரமுத்து பேசியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்றக் கருத்தை தெரிவித்தது. வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்தது. 

இந்நிலையில், வைரமுத்து ஆண்டாள் சர்ச்சைக் குறித்து விளக்கமளித்து வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆண்டாள் புகழ்பாட நான் ஆசைப்பட்டது தவறா? கடந்த 10 நாள்களாக மூர்ச்சையற்றுக் கிடக்கிறேன். ஆண்டாள் பாசுரங்கள் பாடப்பாட எனக்கு பக்தி பிறக்கிறது. சக்தி பிறக்கிறது. ஆண்டாள்குறித்து பேசுவதற்காக ஆய்வுக்கட்டுரைகளை 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன். தமிழ்வெளியில் கேட்ட முதல் பெண் விடுதலைக்குரல் ஆண்டாள் என்று நான் பேசினேன். புதிய தலைமுறையும், இளையதலைமுறையும் பயன்பெறவே ஆண்டாள் பற்றி கட்டுரை எழுதினேன். சமூக, சமூகவியல் பார்வையுடையவள் ஆண்டாள். ஆண்டாள் பற்றி நான் சொன்னதாக சர்ச்சைக்குள்ளாகும் விஷயம் நான் பேசியது அல்ல.

 

தாசி என்ற கருத்து திரிக்கப்பட்டு வேசி எனப் பரப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் மத இனக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். தேவதாசி என்பது உயர்ந்த குலப்பெண்களுக்கு வழங்கப்பட்ட சொல். யாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்துக்காகவோ இதைத் திரித்துவிட்டனர். இவர்கள் மத்தியில் தமிழ் வளர்க்க வேண்டுமென நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. என் தமிழால் யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் வருத்தம் தெரிவித்தேன்” என்று பேசியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/114062-vairamuthu-gives-explanation-on-aandal-controverssy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.