Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்  அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்......!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலக்கணம் மாறுதோ ....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : பூவும் பொட்டும்(1968)

இசை : கோவர்தன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் :  P சுசீலா

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா (எண்ணம்)

பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
கண்ணன் வழங்கும் இந்த உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர
பள்ளியறைக்குள் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ (எண்ணம்)
ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம் (எண்ணம்)

டிஸ்கி :

ஜோதி லட்சுமி..👌

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு
படம்—மணிஓசை
பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி.
1962.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொருளே இல்லார்க்கு தொல்லையா .....!  😐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிட் டாக துள்ளி துள்ளி வா .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : ரீச்சரம்மா (1968) 

பாடியவர் : P. சுசீலா

இசை : T.R பாப்பா

வரிகள் : கண்ணதாசன் 

இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு

இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு

மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு

மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு (இசை)

சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே

சாரல் தூவி சாகசம் செய்யும் மேகம் உண்டு மேலே

பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை

இச்சைக் கொண்ட தாய் போலே முத்தம் சிந்தினாளோ (இசை)

சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம்

தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம் (இசை) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : கொஞ்சும் குமரி (1963)

இசை : வேதா

வரிகள் : வாலி

பாடியோர்: KJ ஜேசுதாஸ் & வசந்தா

ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே

காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன் (ஆசை)

பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே
கை விரலால் நான் தொடவா

பருவம் என்னும் மேடையிலே
பார்வை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை (ஆசை)

கண் பார்த்த போதிலே
கைக் கோர்த்த காதலே
என்னென்று சொல்லவா
என் சொந்தம் அல்லவா

எண்ணம் என்னும் மாளிகைக்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு
என்னை தந்தேன் நான் உனக்கு (ஆசை)

அன்பு தென்றல் வீசுதே.....
மனம் பேசுதே......
இன்பம் இன்பம் என்றதே...
ஆசை வந்த பின்னே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட்ட  இடம் துலங்க வரும்  தாய்க்குலமே வருக......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : அலைகள் (1973)

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : ஜெயச்சந்திரன்

வரிகள் : கண்ணதாசன்

பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

( பொன்னென்ன பூவென்ன )

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது

( பொன்னென்ன பூவென்ன )

ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது

( பொன்னென்ன பூவென்ன )

செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

=====(தத்துவ பாடல்)======

படம் : ஏன் (1970 ) 

இசை  : TR பாப்பா

வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : SP பாலசுப்ரமணியம்

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று (இறைவன்)

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு (இறைவன்)

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதை முடித்தான் (இறைவன்)

கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு (இறைவன்)..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொங்கிவரும் புதுநிலவே.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : கண் திறந்தது (1959)

இசை: T.R ராசகோபாலன்

வரிகள்: V.சீதாராமன்

பாடியோர் : ஜிக்கி & சீர்காழி

பெண்களைக் கண்டாலே மனம் போலே
வலை வீசுதல் சரிதானா.?

வரை மீறுதல் முறைதானா
ஒங்க தொழிலே இதுதானா..

ஆண்களைக் கண்டாலே மனம் போலே
நிலை மாறுதல் சரிதானா.?

குறை கூறுதல் முறைதானா
ஒங்க தொழிலே இதுதானா......

கேலி ஆகுமா...ஒங்க கிறுக்கு போகுமா..
அறியாத பெண்கள் மனதைக்
கலைப்பதுதான் நியாயமா
வலை வீசுதல் சரிதானா..?

வரை மீறுதல் முறைதானா.
ஒங்க தொழிலே இதுதானா..

கோபம் ஆகுமா உங்க குறும்பு போகுமா..
கண்ணாலே பேசி இதயம்
கலப்பதுதான் நியாயமா.?

நிலை மாறுதல் சரிதானா
குறை கூறுதல் முறைதானா..
ஒங்க தொழிலே இதுதானா..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொந்தம் இனி உன் மடியில்......!   😁

Posted

 

 

பாடல்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
படம்: பார்த்தால் பசி தீரும் (ஆண்டு 1962)
இசை: MS விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.