Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலியான தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

Featured Replies

போலியான தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

 

வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை காண விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போலியான ஒரு தீர்வை ஏற்கப் போவதில்லையெனவும், இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போலியான  தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லூங்கிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து சிங்கப்பூர் பிரதமருக்கு இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

 இந்த நடைமுறைகளை வெற்றிகரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும் பிழையான, தேவையற்ற அச்சங்களை நீக்குவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

போலியான  தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல என்பதையும் இரா.சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள்.

ஆகவே, புதிய அரசியல் யாப்பானது தமிழ்மக்களின் நீண்டகால அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற ஒன்றாக அமைய வேண்டுமெனவும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்  வலியுறுத்தியுள்ளார்.

போலியான ஒரு தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே வேண்டி நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்க முடியாதெனவும், இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

போலியான  தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

 மேலும், இந்நாடானது கடந்த காலங்களில் துர்அதிஸ்டவசமாக பிழையான பாதையில் பயணித்துள்ளது.  அந்நிலைமைகளைச் சரிசெய்வதற்கு இதுவொரு நல்ல தருணம் எனவும் இரா.சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமரிடம் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் விசேடமாக வடக்குக் கிழக்கில் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், முதலீடுகள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டுமென சிங்கப்பூர் பிரதமரிடம் வேண்டிக்கொண்டார்.

வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புள்ள, கடின உழைப்பாளிகள்.  ஆனால், துர்அதிஷ்டவசமாக யுத்தத்தின் நிமித்தம் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களும் திறன் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 சிங்கப்பூர் அரசும் மக்களும் எமது இளைஞர்களின் திறன்களையும் அறிவையும் விருத்தி செய்வதும் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதுமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். 

வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான வாய்ப்புக்களைச் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் விசேடமாக, இயற்கைத் துறைமுகம் ஒன்றையும், பல வளங்களையும் கொண்ட திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் சிங்கப்பூர் கருத்திற் கொள்ளவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் முதலீடுகள் ஒரு பலமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார். 

போலியான  தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

வடக்குக் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கை குறித்து தான் சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுவேன் என உறுதி வழங்கிய சிங்கப்பூர் பிரதமர்,

தனது அடுத்த விஜயத்தின்போது நிச்சயம் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ்மக்கள் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர், எதிர்காலத்தில் இரா.சம்பந்தன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டுமெனத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sampanthan-Meets-Singapore-PM-

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் இனி தமிழர் பகுதிகளில் தேர்தல் நடக்கும் நேரங்களில் தான் வரனும் என்று கடவுளை வேண்ட வேண்டி கிடக்கு .அப்பத்தான் எலக்சனில் தங்கள் கட்சி ஓட்டு வங்கி பாதிக்க கூடாது என்று தமிழர்களின் முக்கிய பிரச்சனைகளை கதைப்பினம் . இதே சிங்கபூர் ராஜதந்திரி மற்ற நேரம்களில் வந்தால் இந்தாள் பேப்பர் படித்துகொண்டு எங்களின் பிரச்சனையை சிங்கள சகோதரர்களுடன் பேசி தீர்த்துக்கொள்ளுவம் நீங்க உங்கடை வேலையை பார்த்து கொண்டு போங்க என்று சொல்லிபோட்டு இங்காலை திரும்பி எப்படி என் ராஜதந்திரம் என்று எங்களை பார்த்து கேட்க்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால... "தீர்வே" இல்ல, அப்புறம் உங்களுக்கு எங்க இருந்து  "போலி தீர்வு" வந்தது. :rolleyes:

  • தொடங்கியவர்

உங்­களின் முயற்­சி­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருப்போம் : சம்­பந்­த­னி­டத்தில் சிங்­கப்பூர் பிர­தமர் திட்­ட­வட்டம்

p15-0d5faebcbeec9a6d7e3376d2eaa8f6214ec1169e.jpg

 

(ஆர்.ராம்)

தமிழ் மக்­க­ளுக்­காக நீங்கள் எடுக்கும் அனை த்து முயற்­சி­களும் வெற்­றி­ய­டை­வேண்டும் என்று வாழ்த்­து­வ­தோடு உங்­களின் முயற்­சிகள் அனை த்­துக்கும் பக்­க­ப­ல­மாக இருப்போம் என்று எதிர்க்  

­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டத்தில் சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஹிசேயின் லூங் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார்.

தனது அடுத்த விஜ­யத்­தின்­போது திரு­ம­லை க்கு வரு­வ­தாக சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்த சிங்­கப்பூர் பிர­தமர், வட­கி­ழக்கில் முத­லீ­டு­களை செய்­வ­தற்­கான

 கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பிப்­ப­தா­கவும் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

இதே­நேரம் போலி­யான தீர்­வொன்றை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்று குறிப்­பிட்ட எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன், இந்த வருட இறு­திக்குள் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

இலங்கை வந்­தி­ருந்த சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஹிசேயின் லூங் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு நேற்று புதன்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்­பின்­போது, சிங்­கப்பூர் பிர­த­ம­ரி­டத்தில் கருத்­துக்­களை முன்­வைத்த சம்­பந்தன், புதிய அர­சியல் யாப்­புக்­கான நடை­மு­றை­களை வெற்­றி­க­ர­மான ஒரு முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு இலங்­கையின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர்பில் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பப்­படும் பிழை­யான, தேவை­யற்ற அச்­சங்­களை நீக்­கும்­மு­க­மாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சிங்­கள மக்கள் மத்­தியில் புதிய அர­சியல் யாப்புத் தொடர்பில் தெ ளிவூட்­டல்­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. தற்­போது மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் போது­மா­ன­தாக அமை­ய­வில்லை. ஆகவே அதி­யுச்­ச­மான அதி­கா­ரப்­ப­கிர்­வி­னையே நாம் கோரு­கின்றோம்.

வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒரு­மித்த, பிரிக்க முடி­யாத, பிரி­வு­ப­டாத நாட்­டிற்குள் தீர்­வொன்றை விரும்­பு­கி­றார்கள். ஆகவே, புதிய அர­சியல் யாப்­பா­னது தமிழ்­மக்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­கின்­ற­தொன்­றாக அமைய வேண்டும். போலி­யான ஒரு தீர்வை நாம் எப்­போதும் ஏற்கப் போவ­தில்லை. மக்கள் தமது நாளாந்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பான விட­யங்­களில் தங்­க­ளது அதி­கா­ரங்­களைப் பாவிக்­கக்­கூ­டிய ஓர் உண்­மை­யான அதி­காரப் பகிர்வு ஏற்­பாட்­டி­னையே நாம் வேண்டி நிற்­கிறோம். இந்தப் பிரச்­சினை தொடர்ந்தும் தீர்க்­கப்­ப­டாமல் இருக்க முடி­யாது. இந்த வரு­டத்­திற்குள் புதிய அர­சியல் யாப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்­நா­டா­னது கடந்த காலங்­களில் துர்­அ­தி‘ர்­ஷ­ட­வ­ச­மாக பிழை­யான பாதையில் பய­ணித்­துள்­ளது. அந்­நி­லை­மை­களைச் சரி­செய்­வ­தற்கு இது­வொரு நல்ல தருணம் ஏற்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் விசே­ட­மாக வடக்குக் கிழக்கில் சிங்­கப்பூர் முத­லீட்­டா­ளர்கள், முத­லீ­டுகள் மேற்­கொள்­வ­தற்கு ஊக்­கப்­ப­டுத்த வேண்டும். வடக்குக் கிழக்கில் உள்ள இளை­ஞர்கள் அர்ப்­ப­ணிப்­புள்ள, கடின உழைப்­பா­ளிகள். ஆனால், துர்­அ­திர்­ட­வ­ச­மாக யுத்­தத்தின் நிமித்தம் அவர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்­களும் திறன் அபி­வி­ருத்­திக்­கான வாய்ப்­புக்­களும் கிடைக்­க­வில்லை. சிங்­கப்பூர் அரசும் மக்­களும் எமது இளை­ஞர்­களின் திறன்­க­ளையும் அறி­வையும் விருத்தி செய்­வதும் வேலை­வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்கச் செய்­வ­து­மான முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும்.

வடக்குக் கிழக்கில் பெரு­ம­ள­வி­லான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. விசே­ட­மாக, இயற்கைத் துறை­முகம் ஒன்­றையும் மேலும் பல வளங்­க­ளையும் கொண்ட திரு­கோ­ண­ம­லையில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வது தொடர்பில் சிங்­கப்பூர் கருத்திற் கொள்­ள­வேண்டும். இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் இம் முத­லீ­டுகள் ஒரு பல­மாக அமையும் என்று குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து கருத்­து­ரைத்த சிங்கப்பூர் பிரதமர், வடக்குக் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும்படியான உங்களின் கோரிக்கை குறித்து தான் சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுவேன். எனது அடுத்த விஜயத்தின்போது நிச்சயம் திருகோணமலைக்கு விஜயம் செய்வேன் மேலும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ்மக்கள் ஆற்றிய பங்களிப்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-25#page-1

On 1/24/2018 at 3:58 PM, நவீனன் said:

போலியான தீர்வை எப்போதும் ஏற்கப் போவதில்லை, சம்பந்தன்

இதுபோன்று தேர்தல் காலங்களில் சம்மந்தனின் பித்தலாட்டங்கள் அதிகரிப்பது வழமையே.  

சம்மந்தனின் போலியான அறிக்கைகளையும் தமிழ்மக்கள் எப்போதும் ஏற்கப் போவதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.