Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் மற்றொரு கப்பலும் மூழ்கடிப்பாம்

Featured Replies

இன்று அறுகம்பேயில் இருந்து 190 கடல் மைல் தொலைவில் வைத்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கப்பல் அழிக்கப்பட்டது காலை 9.00 மணிக்கு எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலும் காலை 7.00 மணிக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் இணையத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடற்கரையில் இருப்போர் என அனைவரும் இலகுவில் பார்க்கும் வண்ணம் பட்டப்பகலில் தமது கப்பலைக் கொண்டுவந்து புலிகள் ஆயுதங்களை இறக்குவார்களா?

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

எதற்காக இப்படி அடுத்தடுத்து கப்பல் வெடிப்புக்கள்.???

அம்பாறை அறுகம் குடாக் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை தாக்கி அழித்திருப்பதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 9.00 மணியளவில் இந்தக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாகவும், இதில் ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

COLOMBO (Reuters) - Sri Lanka's navy sank a large ship on Sunday it said was transporting arms for Tamil Tiger rebels and the blazing vessel and its crew disappeared under the waves after a series of explosions.

ADVERTISEMENT

The incident, off the restive eastern coast and away from strategic harbor port of Trincomalee, came after a series of land and sea clashes over the past year and the military started new offensive to wipe out rebels from east.

"The Navy detected a suspicious 70 to 75 meter vessel about 195 nautical miles around 2.30 am (9.00 GMT) off Arugambey and the details given by the ship were false. We fired warning shots and they fired at us," said Navy spokesman Commander D.K.P. Dassanayake.

More than 40,000 people have fled rebel-held territory in the eastern district of Batticaloa over the past weeks as the military seeks to drive Tamil Tiger rebels from the area.

The rebels accuse the military of mounting offensives to capture territory that belongs to them under the terms of a tattered 2002 truce, and have warned of a bloodbath throughout the island. The army argues it is liberating civilians, accusing the Tigers of using them as human shields.

Both sides have repeatedly ignored calls from the international community to halt a war that has killed around 68,000 people since 1983, and around 4,000 of those in the past 15 months

  • தொடங்கியவர்

இப்போது இன்னுமொரு கதை அளந்திருக்கிறார்கள்.

பகல் 12.45 மணியளவில் இரண்டாவது கப்பலும் அதே கடற்பரப்பில் வைத்து அழிக்கப்பட்டுள்ளதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது இன்னுமொரு கதை அளந்திருக்கிறார்கள்.

பகல் 12.45 மணியளவில் இரண்டாவது கப்பலும் அதே கடற்பரப்பில் வைத்து அழிக்கப்பட்டுள்ளதாம்.

its true but the boat was,t ltte's

பொறுத்திருப்போம். உண்மைகள் வெளிவர சிறிது தாமதமாகும்.

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பிற்கு சுமார் 400 கடல்மைல்களிற்கு அப்பால் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு கப்பல்களை ஞாயிற்றுகிழமை அதிகாலை தமது கடற்படைப்படகுகள் தாக்கி மூழ்கடித்திருப்பதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பி.டி.கே. தசாநாயக்க, ஞாயிற்றுகிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையின் அதிவேகப் படகுகள், கிழக்கு மாகாணம் அறுகம்பே கடற்பகுதிக்கு தென்கிழக்குத்திசையில் சுமார் 400 கடல்மைல்கள் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான கப்பல் ஒன்றை முதலில் அவதானித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்தக் கப்பலுடன் தொடர்பினை ஏற்படுத்தி அதன் அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் முரண்பட்டுக் காணப்பட்டதால், அதனை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு கோரிய போது அதற்கு இணங்க மறுத்த அந்தக் கப்பல் மேலும் ஆழ்கடல் பகுதிக்கு நோக்கிச் செல்ல முயற்சித்தது என்றும் தெரிவித்தார்.

அத்தருணத்தில் கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்ததாகவும், ஆனால் கடற்படையினரின் எச்சரிக்கை வேட்டுகளிற்குப் பதிலாக அந்தக் கப்பலிலிருந்து கடற்படையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், தற்பாதுகாப்பிற்காக கடற்படையினர் திருப்பித்தாக்கியபோது அந்தக்கப்பல் பாரிய வெடிசத்தங்களுடன் தீப்பற்றி, காலை சுமார் 9.30 மணியளவில் கடலில் முழுமையாக மூழ்கியதாகவும் தெரிவித்தார் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பி.டி.கே. தசாநாயக்க.

இதன் பின்னர் அந்தப் பகுதிக்கு சற்றே சுமார் 15 கடல்மைல்கள் தொலைவில் இதே முறையில் மற்றுமொரு காணப்பட்டு தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் போது புலிகளின் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 20 தொடக்கம் 24 வரையான உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர் இன்றைய இந்தத் தாக்குதல் மூலம் புலிகளின் பாரிய ஆயுதக் கடத்தல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டிருப்பதாகவ

என்னங்க நாம எழுதின கருத்த காணமுங்க? :P

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இவ்வளவு கப்பல்களை வைச்சிருக்காங்க என்பதும் அவை சர்வசாதாரணமா பயணிக்கின்றன என்பதும் இதன் மூலம் காட்டப்படுகிறது.

ஏலவே கருணாவின் பங்களிப்போடு புலிகளின் சர்வதேச ஆயுத வியாபாரிகளை முடக்க சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் சிறீலங்கா அரசும் பெரும் முயற்சி செய்து தாய்லாந்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனிசியாவிலும் கைதுகள் நடந்துள்ளன.

அழிக்கப்பட படகுகள் பெரிய ரோலர் மீன்பிடி படகு வகைகளைச் சார்ந்தவையாகவே தென்படுகின்றன. இவை கப்பல்கள் என்று மிகைப்படுத்தி சோடிக்கப்படுகின்றன.

புலிகள் களத்திலும் கடலிலும் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று காட்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம். களத்தில் பின்னடைவுகள் வரும் போது கடலில் கப்பல்கள் தகரும்.

குறிப்பாக முல்லைத்தளப் பெருவீழ்ச்சிக்குப் பிறகு கடற்புலிகளை பல சமர்களின் வெற்றி கொண்டதாகவே சந்திரிக்கா அமையார் காட்டி வந்தார். புலிகளின் கப்பல்களை ஜெயசுக்குறு காலத்தில் அடிக்கடி கவிழ்த்தும் வந்தார். அதையெல்லாம் தாண்டி புலிகள் பெரும் போர் செய்தனர்..!

ஒருவேளை இவை புலிகளின் கப்பல்களாக இருந்து அழிக்கப்பட்டிருந்தால் கூட புலிகள் ஏலவே விளங்கிக் கொண்ட ஆபத்தான பாதைகளூடு பெறுமதியான ஆயுதங்களை கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை..! அடிக்கடி புலிகளின் கப்பல்களை கவிழ்ப்பதாகக் கதை விடுவடுவதால்.. புலிகள் பற்றிய பிரச்சாரப் போருக்கு நல்ல பயன்கிடைக்கும்.. அதேவேளை சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் கவனத்தை தங்கள் பக்கம் தொடர்ந்து தக்க வைக்க இது சிறீலங்காவுக்கு உதவும்..! ஆனால் விடுதலைப் புலிகளை இது கட்டுப்படுத்தாது..!

ஏலவே சிங்கள மீனவர்களின் படகுகளை தாக்கிவிட்டு புலிகளின் தற்கொலைப்படகுகள் அழிப்பு என்றவர்கள் றோலர்களைத் தாக்கிவிட்டு புலிகளின் கப்பல்கள் என்று கதைவிட அதிக நேரம் எடுக்காது. புலிகளும் றோலர்களைப் பயன்படுத்தி கடத்தல் செய்தாலும் பேரளவு ஆயுதங்களைக் கொண்டு வருவது சாத்தியமில்லை. புலிகளின் றோலர்கள் என்றால் ஆளணி இழப்புக்கள் தவிர மிகுதி மிகைப்படுத்தியதாகவே இருக்கும்..! :)

Edited by nedukkalapoovan

வெளிநாட்டவரோ சிங்களவரோ கொல்லப்பட்டதாகவோ அல்லது தமது கப்பல் தாக்கப்பட்டதாக எவருமே முறைப்பாடு எதுவும் செய்யாத நிலையில் இவை புலிகளின் படகுகள் / ரோலர்கள் / கப்பல்களாக இருக்கவே அதிக சாத்தியமிருக்கிறது.

ஆனால் வேண்டுமென்றே இத்தனை கப்பல்களை புலிகள் காவு கொடுப்பதிலும் ஒரு மர்மம் இருக்கிறது. அது என்னவென்று தெரிய சில காலம் செல்லலாம்!!!!!!!

:)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவரோ சிங்களவரோ கொல்லப்பட்டதாகவோ அல்லது தமது கப்பல் தாக்கப்பட்டதாக எவருமே முறைப்பாடு எதுவும் செய்யாத நிலையில் இவை புலிகளின் படகுகள் ரோலர்கள் கப்பல்களாக இருக்கவே அதிக சாத்தியமிருக்கிறது.

ஆனால் வேண்டுமென்றே இத்தனை கப்பல்களை புலிகள் காவு கொடுப்பதிலும் ஒரு மர்மம் இருக்கிறது. அது என்னவென்று தெரிய சில காலம் செல்லலாம்!!!!!!!

:o

பலமுறை சீன மற்றும் தாய்லாந்து மீனவர்களின் ஆழ்கடல் றோலர்கள் தாக்கப்பட்டுள்ளன. சீன தாய்லாந்துச் செய்திகள் இந்திய தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது வரும் இந்தியச் செய்திகள் போல எம்மை எட்டுவதும் இல்லை.

இராணுவ இணையத்தளம் பிரசுரித்துள்ளது போன்ற றோலர்களை ஆழ்கடல் செல்லும் நீர்கொழும்பு களுத்துறை மற்றும் தென்னிலங்கை மீனவர்கள் அதிகம் பாவிக்கின்றனர். இவற்றில் அரசு வழங்கிய றோலர்களும் அடங்கும். அரசுக்கு சொந்தமான ரோலர்களை அரசே தனது தேவைக்காக பயன்படுத்தி இருக்கலாம்..! இவை கடற்படை தான் விழிப்பாக இருப்பதாகக் காட்டவும் சர்வதேசத்துக்கு புலிகள் சமாதானம் என்று சொல்லிக்கொண்டு ஆயுதங்களை கடத்த முனைவதாகவும்... தரைப் படையினருக்கு தாங்கள் புலிகளின் ஆயுத வழங்களைத் தடுப்பதால் புலிகள் ஆயுத ரீதியாக பலவீனப்படுத்திக் கொண்டிருப்பதாகக் காட்டவும் தமிழ் மக்களைக் குழப்பவும்.. என்று இவ்வகைப் பிரச்சாரங்கள் அரசைப் பொறுத்தவரை பல தளங்களில் அவர்களுக்கு உதவும். ஆனால் புலிகளுக்கு...???!

ஒருவேளை இவை புலிகளின் றோலர்களாக இருப்பின் ஏன் அவை ஆபத்தான தென்னிலங்கை கடல்சார் பகுதிகளூடு பயணிக்கின்றன..??! ஏலவே சிங்கள ஆழகடல் மீனவர்களை அரசு தனக்கு உளவு பார்க்கப் பாவிக்கின்ற வேளையில் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் காலி துறைமுகம் போன்று இதர தென்பகுதி கடற்பாதுகாப்பு பலமான உள்ள நிலையில் கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கடற்கண்காணிப்பு பலமாகியுள்ள நிலையில் ஏன் புலிகள் றிஸ்க் கூடிய பாதைகளில் பயணிக்க வேண்டும். அதுவும் கடற்புலிகள் ஆதிக்கம் செய்ய முடியாத பகுதிகளில் அதிகம் பயணிக்க வேண்டும்..??!

சாணக்கியன் குறிப்பிடுவது போல இந்த றோலர்கள் தொடர்பில் மெளனங்கள் நிலவ பிரதானமாக 4 காரணங்கள் இருக்கலாம்..

1. தூரக் கிழக்கு வெளிநாட்டு றோலர்களாக இருந்து சர்வதேச எல்லைகளைக் கடந்து சட்டவிரோத தொழில் செய்பவர்களை கைது செய்து.. மறைத்து விட்டு அல்லது செய்யாமலே படகுகளோடு அழித்து விட்டு செய்திகளை புலிகளைச் சாட்டி வெளியிட்டு விட்டால் உண்மைகள் அப்படியே உறங்க வேண்டியதுதான்..!

2. அரசே தான் செற்றப் செய்து இப்படியான தாக்குதலை நடத்திவிட்டு புலிகளைச் சாட்டிவிட்டால் புலிகள் வழமைபோல காக்கும் மெளனத்தை கலைத்து அவர்களின் வாயால் சிலவற்றைச் சொல்ல வைத்து சர்வதேச சமூகத்துக்கு புலிகள் ஆயுதக்கடத்தல் செய்வதாகக் காட்ட என்று இருக்கலாம். அல்லது புலிகள் மெளனத்தை வைத்தே அரசு தனக்கு தேவையான தளங்களில் பிரச்சாரங்களையும் தான் கடல் மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை நிறுவி உள்ளதாகக் காட்டவும் என்று இருக்கலாம்..! சர்வதேசத்துக்கு புலிகள் ஆயுதக்கடத்தல் செய்கின்றனர் என்று காட்ட என்று அரசுக்கு இதனால் பல தள நன்மைகள் உண்டு..!

3. புலிகளின் ரோலர்களாக இருந்து அவை அழிக்கப்பட்டு.. வழமை போல புலிகளின் மெளனத்துக்குள் அது மறைக்கப்பட்டும் இருக்கலாம்..! புலிகளின் அடுத்த மாவீரர் பட்டியல் வரும் போது உண்மை துலங்களாம்..!

4. புலிகளே வேண்டும் என்று இப்படகுகளை கடற்படையின் கவனக் கலைப்பான் களாகப் பாவித்து தமக்கு சாதகமான முனையினூடு பாரிய ஆயுதக் கடத்தலை செய்து முடித்திருக்கலாம்..! அல்லது ஆளணி மற்றும் ஆயுதங்களை நகர்த்தி இருக்கலாம்..! :)

Edited by nedukkalapoovan

நல்ல கருத்து நெடுக்ஸ் எப்போதும் இரண்டு கப்பலை ஒன்றாக அதுவும் ஒன்று தாக்கப்பட்டு சில மணித்தியாளத்தில் அதே பாதையால் கொண்டூவந்து அழிக்க கொடுக்க புலிகள் ஜேவீபி போல முட்டாள் இயக்கமல்ல.அப்படி பாதுகாப்பற்ற பிரதேசத்தால் பயணிக்க முயலப்போவதுமில்லை இதை சிறு குழந்தை கூட அறியும் .ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்களை கொண்டு வர போவதுமில்லை.இதில் ஏதோ மர்மம் இருக்குது.புலிகளின் மவுனம் கலையும் போதுததன் அதன் உண்மம வெளிவரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை புலிகள் தூண்டிலில் புளுவை போட்டுவிட்டு வேறு வழியாக சுறா மீனை கொண்டுவந்தார்களோ தெரியாது.

நல்ல கருத்து நெடுக்ஸ் எப்போதும் இரண்டு கப்பலை ஒன்றாக அதுவும் ஒன்று தாக்கப்பட்டு சில மணித்தியாளத்தில் அதே பாதையால் கொண்டூவந்து அழிக்க கொடுக்க புலிகள் ஜேவீபி போல முட்டாள் இயக்கமல்ல.அப்படி பாதுகாப்பற்ற பிரதேசத்தால் பயணிக்க முயலப்போவதுமில்லை இதை சிறு குழந்தை கூட அறியும் .ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்களை கொண்டு வர போவதுமில்லை.இதில் ஏதோ மர்மம் இருக்குது.புலிகளின் மவுனம் கலையும் போதுததன் அதன் உண்மம வெளிவரும்

you got it!!! done.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வடிவேல் இருக்கும் போது எனக்கெதிராக வெற்றிவேலா??? இருக்கப்படாதே.

எது உண்மையாயினும் ஈழக்கடலில் அன்னியப்படைகளின் அடாவடித்தனங்கள் அழிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்து நெடுக்ஸ் எப்போதும் இரண்டு கப்பலை ஒன்றாக அதுவும் ஒன்று தாக்கப்பட்டு சில மணித்தியாளத்தில் அதே பாதையால் கொண்டூவந்து அழிக்க கொடுக்க புலிகள் ஜேவீபி போல முட்டாள் இயக்கமல்ல.அப்படி பாதுகாப்பற்ற பிரதேசத்தால் பயணிக்க முயலப்போவதுமில்லை இதை சிறு குழந்தை கூட அறியும் .ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்களை கொண்டு வர போவதுமில்லை.இதில் ஏதோ மர்மம் இருக்குது.புலிகளின் மவுனம் கலையும் போதுததன் அதன் உண்மம வெளிவரும்

உண்மைதான்! ஆனால் அது நிச்சயமாக புலிகளினுடையதாக இருக்கவே முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறலாம்!. ஒரு வேளை அது வெறும்கப்பலாய் இருக்கும் பட்சத்தில் சாத்தியம். சிங்கள இராணுவமும் தன்னிடம் உள்ள ஆயுதங்களை பயன்படுத்தவேண்டும் அல்லோ!...இப்படியாவது ஆயுதங்களை பிரயோகித்து முடிக்கட்டும்!. என எங்கட அண்ணைமார் யோசிச்சிருப்பினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்! ஆனால் அது நிச்சயமாக புலிகளினுடையதாக இருக்கவே முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறலாம்!. ஒரு வேளை அது வெறும்கப்பலாய் இருக்கும் பட்சத்தில் சாத்தியம். சிங்கள இராணுவமும் தன்னிடம் உள்ள ஆயுதங்களை பயன்படுத்தவேண்டும் அல்லோ!...இப்படியாவது ஆயுதங்களை பிரயோகித்து முடிக்கட்டும்!. என எங்கட அண்ணைமார் யோசிச்சிருப்பினம்.

ithu 100% unmaii ltte loosing in the war against da SLA

இது தான் முதல் தாட்ட புலி கப்பல் இதிலை உள்ளதை எழுதினால் உடனை அழிச்சிடுவாங்கள்

http://www.youtube.com/watch?v=FvdoUhmummA

உண்மையென்றால் ஏன் ஒளிப்பதிவுக்காட்சிகள் இணையத்தில் உலவவிடப்படவில்லை.

அதைத்தானே அரசாங்கம் முதலில் செய்திருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்புத் துறைமுகத்தில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறக்க முயன்ற சிறிலங்கா அரசுக்கு இங்கு எந்த பிரச்சனையுமில்லாமல் தன் பாட்டுக்கு கதையளக்க முடியும். பொட்டு வெளிக்கச் சந்தர்ப்பம் இல்லை. இதற்கெல்லாம் விடுதலைப் புலிகள் விளக்கமளித்துக் கொண்டிருப்பார்கள் என நினைப்பது முட்டாள் தனம்.

முன்னைய ஒரு நிலவரத்தில் அடிக்கடி வரும் கப்பல் கதைகள் பற்றி கேட்டபோது இதுமாதிரியான கதைகள் அடிக்கடி இனி வரும் என்று இளந்திரையன் எதிர்வு கூறியிருந்தார். அது நடக்கிறது.

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்

இதிலை முக்கிய விடயம் என்னவென்றால் தமிழ் மக்களையும், போராளிகளையும் உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தவே சிங்களம் இவ்வாறான நாடகங்களை ஆடுகிறது. தனது பழைய கப்பல்களை செலவில்லாமல் டம் பண்ணுகிறது அரசு.

புலம்பெயர் தமிழர்களிற்கும் உளவியல் தாக்கத்தைக் கொடுத்து அவர்களின் போராட்டப் பங்களிப்பை வழங்காது தடுக்கவும் இதனை சிங்களம் பயன்படுத்த முனைகிறது.

அதாவது நீங்கள் படைக் கலங்களைப் பெருக்க எவ்வளவு காசு கொடுத்தாலும் ஆயுதங்கள் வன்னி வந்து சேரமுதல் தாங்கள் அழித்திடுவோம் என மறை முகமாகச் சொல்லுகிறார்கள்

ஆனால் நீங்கள் உண்மையில் கப்பலை அடித்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் பல கப்பல்களை அனுப்புவோம் எண்டு புலம்பெயர்ந்தோர் தமது பங்களிப்பசை; செய்ய வேணும்

அமேரிக்கா தனது நாட்டு கழிவுகளை கொட்டுவதற்கு இப்படி ஒரு உத்தியை கையாள்கிறதோ இலத்திரனியல் மற்றும் கதிரியக்க கழிவுகளை கொணட கப்பல் முன்பொரு முறை கொழும்பு வந்ததாக ஞாபகம்.

இலங்கை அரசிற்கும் இது தெரிந்தே இருக்கும்

கழிவுகளை கொட்ட இடம் மாற்றிடாக அமேரிக்காவிடம் இருந்து ஆயுத நிதி உதவி

மகிந்த கூட்டம் எம் தாயக கடல் வளங்களை நாசம் செய்கிறது

இதையும் தடுக்க வேண்டியது நாமே.

சிஙகள மக்களுக்கு புலிகள் கப்பல் எனறு கூறி

அவரகளையும் ஏமாற்றுகிறது

இது தான் முதல் தாட்ட புலி கப்பல் இதிலை உள்ளதை எழுதினால் உடனை அழிச்சிடுவாங்கள்

http://www.youtube.com/watch?v=FvdoUhmummA

கவிதா உங்கள் இணைப்பிற்கு நன்றி, பார்த்தேன் ரசித்தேன்.

மூழ்கடிக்கப்ப்ட்ட புலிகளின் ஆயுதக்கப்பலில் கொள்கலன்கள் இல்லாததன் மர்மம் தான் எனக்கு புரியவில்லை. மேலும் ஸ்ரீல்ங்கா கடற்படையின் டேறாப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை சுற்றிவளைத்து தாக்காததன் காரணம் புரியவில்லை. ஒளிப்படத்திலே ஒரு சிறிய படகு மாத்திரம் தெரிகிறது. ஏறி நின்று வீடியோ பிடித்த டோறா 1 மட்டும் தாக்குதலை மேற்கொண்டதா??? மூழ்கடிக்கப்பட்ட கப்பலுக்கு மறுபக்கம் ஸ்ரீல்ங்கா கடற்படையின் நடமாட்டத்தையே காணம்???

ஆருக்கடா படம் காட்டுறிங்க????

கடல் அலைகளின் தன்மையையும் வெடித்து எரியும் நெருப்பின் சுவாலையையும் பார்த்தால் இது ஒரு விளையாட்டுக் கப்பல் போல தெரிகிறது. கப்பல் தீப்பற்றிய சில வினாடிகளில் கடலில் மூழ்கிவிட்டது. நீங்கள் பெரிய கப்பல்கள் கடலில் மூழ்குவதைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.

இது தான் முதல் தாட்ட புலி கப்பல் இதிலை உள்ளதை எழுதினால் உடனை அழிச்சிடுவாங்கள்

http://www.youtube.com/watch?v=FvdoUhmummA

கப்பல் உண்மையானதே ஆனால் அது பழைய கப்பல். கப்பலின் மேற்றளம்

அதனை அப்பட்டமாகக் காட்டுகிறது. ஆகவே அழிக்கப்படுவதற்காக துறைமுக

ங்களில் கிடந்த ஒரு பழைய கப்பலைத்தான் கடலில் விட்டு அருக்கில் நின்று

தாக்கியழித்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.