Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எங்கடா போறே, சிறீலங்காவா..?

 

ஆபத்தான விடயங்களை சீண்டிப்பார்ப்பது இளசுகளின் இயல்பு.. ஆனால் இப்படியா..?  boucheoh.gif

பாம்பன் பாலத்திருந்து குதிக்கும் நபர், கடலின் நீரோட்டம் பற்றி அறியாமல் விளையாடுவதை என்னவென்று சொல்வது?

 

 

 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மனதை... பதற வைத்த, காணொளி.
இளம் கன்று. பயம் அறியாது  சொல்வார்கள். ஆனால் இப்படி செய்வதால்... வரும் உயிர் ஆபத்துக்கள் அதிகம் என்பதை, இவர்களுக்கு... தமிழக ஊடகங்கள்  கற்றுக் கொடுக்கவில்லை என்பது வேதனை.

முதலில் இவர்கள்...  ஆழ்கடலில், சுலபமாக நீந்தக் கூடிய உடைகள் போடவில்லை.
மற்றும்.... இவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்கும் போது, தண்ணீரில் எந்தக்  கோணத்தில்.. உடலை வைத்திருக்க வேண்டும் என்ற, அடிப்பறை அறிவு இவர்களுக்கு தெரியவில்லை.

உப்புத்   தண்ணீர், அடர்த்தியானது. அதில்.. எமது உடல் நிறையை, படுத்த படி பாய்ந்தால்,  கடினமான  கொங்கிரீட் நிலத்தில் விழுந்தது போல்....  தோல் வெடிக்கும், உடல் சிதறும், எலும்பு முறிவு ஏற்படக் கூடிய  சாத்தியங்கள் மிக அதிகம் என்பதை.... ஜேர்மனி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக காட்டி மக்களுக்கு  விழிப்புணர்வு  ஊட்டியதை பார்த்தேன்.    

"தொப்பொன்று... விழுந்தான், பட்டென்று... செத்தான்"  என்ற கதையாகி விட்டால்.... 
இவர்களை  நம்பி வளர்த்த  பெற்றோரின்...  கவலையை,  நினைத்துப் பார்க்க வேண்டாமா?    

தமிழக தொலைக்காட்சிகள்... ரஜனி/ கமல்/ விசால்... போன்ற நடிகர்கள்,  அரசியலுக்கு வருவார்களா? மாட்டார்களா? எனற உப்பு சப்பு இல்லாத விடயங்களை.. விவாதிப்பதை விட தமிழ் மக்களுக்கு பிரயோசனமான... விடயங்களை விவாதிப்பது நல்லது.

வார சஞ்சிகளை பார்த்தால்... முன் அட்டைப்  படத்திலிருந்து, பின் பக்கம் வரை... சினிமா  நடிகைகளின்  படங்கள். இதெல்லாம் ஏன்... என்று புரியவில்லை.

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

 

எங்கடா போறே, சிறீலங்காவா..?

 

 

ஆபத்தான விடயங்களை சீண்டிப்பார்ப்பது இளசுகளின் இயல்பு.. ஆனால் இப்படியா..?  boucheoh.gif

 

 

காணொளியில வேற போட்டிருக்காங்க இனி கண்டவென்லாம் போய் விழுந்து மேல போகப் போறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சினிமா பழையதும் சரி சமீபத்தில் பத்து வலசு கூட்டம் விசால் போன்றவர்கள் கூட தண்ணியில் நீச்சலுக்கு பாயும்போது பிழையாகவே பாய்கிறார்கள் அதுவும் கதாநாயகிகள் என்றால் பன்னிக்கு பாவாடை கட்டி குதிப்பது போல் எடுப்பார்கள் தமிழ்நாட்டில் நீச்சல் பற்றிய அடிப்படை அறிவு ஒருத்தருக்குமே இல்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படத்தில் உள்ளவர் இப்படி குதிப்பது  முதல் தரமன்று படத்தை பார்க்கும்போது தெரிகிறது ஆனாலும் உயிர் ஆபத்து விளையாட்டு இனி என்ன போலிஸ் தேடிபோய் பிடித்து நாலு போடு போட்டு விடியோவில் அமைதியாக சிங்கன் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவார் பாருங்கள் அப்படி பிடிபடாவிட்டால் ஆள் XXX:14_relaxed:



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.