Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி

Featured Replies

புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி

 
 
 
 
 
 
 
 
 
Advertisement
 
புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி
 
 

 

 


புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பலர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடாவில் ப்ரோவார்ட்கவுண்டி பள்ளியில் திடீரென பயங்கர துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடன் சுதாகரித்த மாணவர்கள் பள்ளியைவிட்டு வெளியே ஒடி வந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாகியிருக்கலாம் எனவும் சிலர் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1959450

 

 

 

Florida shooting: Casualties reported as suspect arrested

 

 

Police in Parkland, Florida, have arrested a suspect after responding to a major shooting incident at a local high school.

More than an hour after the shooting began, the Broward Sherriff's Office said the "shooter is now in custody."

But it warned that the scene at Stoneman Douglas High School "is still active".

School superintendent Robert Runcie told reporters: "there are fatalities involved here."

He also said the suspect was "potentially a former student… that individual, we believe, is in custody."

"So far we have at least 14 victims," the Sherriff's department said, without specifying their condition.

US media outlets reported that up to 20 people may have been injured, while some have been evacuated.

 

A line of kids

A local Fox news affiliate reported seeing several people being treated for injuries outside the school.

Meanwhile, Florida Senator Bill Nelson told Fox News there were "many deaths", citing conversations with the school superintendent, the FBI, and the undersheriff.

The local public school district tweeted: "Today, close to Marjory Stoneman Douglas High School's dismissal, students and staff heard what sounded like gunfire."

"The school immediately went on lockdown but is now dismissing students. We are receiving reports of possible multiple injuries," it said.

Police were clearing students from the school "one building at a time", the school said.

Video footage from the scene showed students being evacuated in small groups, while armed police patrolled the school's perimeter.

As the situation unfolded, helicopter footage appeared to show a person being handcuffed and placed in the back of a police car.

Coral Springs Police department tweeted instructions to teachers and students to "remain barricaded inside until police reach you".

 

The FBI also said it was attending the scene and assisting local law enforcement.

US television networks reported large numbers of parents had gathered outside the police perimeter.

One student evacuated from the school told CBS that Miami students had thought the sound of gunshots was a drill.

"We already had one earlier this morning... and then we heard gunshots; some students thought it was not that serious."

President Donald Trump tweeted condolences "to the families of the victims". White House Deputy Press Secretary Lindsay Walters said the president had been briefed and that the White House was monitoring the situation.

 

Florida Governor Rick Scott said he spoke to President Trump about the shooting, and was continuing to receive updates from law enforcement.

Congressman Ted Deutch, the district's representative, tweeted: "I'm sick about this news from home. Just spoke with the sheriff. This is devastating."

He said it was an "incredible school in my district - great teachers and staff, involved parents and amazing kids. Spoke with the kids there just a few weeks back."

Students were taken by bus to a "staging area" on Heron Bay Blvd, Coral Springs, where their parents could collect them.

http://www.bbc.com/news/world-us-canada-43066226

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி

அமெரிக்காவின் சர்வசாதாரண விடயங்களில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

CNN)At least 17 people were killed Wednesday in a high school shooting in Parkland, Florida, Broward County Sheriff Scott Israel said.

The suspect, 19-year-old former student Nikolaus Cruz, is in custody, the sheriff said. The sheriff said he was expelled for unspecified disciplinary reasons. Police are investigating his digital profile, he said. So far, what they've found is "very, very disturbing," Israel said.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே முஸ்லீம் சுட்டால் பயங்கரவாதம்

வெள்ளைக்காரன் சுட்டால் பைத்தியக்காரன்.

  • தொடங்கியவர்

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் ; 17 பேர் பலி, பலர் பணயக் கைதிகள் : துப்பாக்கிதாரி கைது

 

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

usa.jpg

குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். 

துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர்.

28052661_10209034211887201_1374172915_n.

உடனடியாக பொலிஸாரும் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28109133_10209034211847200_1544255303_n.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30625

  • தொடங்கியவர்

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை

 

புதன்கிழமையன்று ஃபுளோரிடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சுமத்தப்பட்ட பதின்ம வயது நபர் குறித்து முன்பே எழுந்த எச்சரிக்கையை தாங்கள் கையாண்ட விதம் குறித்து எஃப்பிஐ மதிப்பாய்வு செய்து வருகிறது.

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை Image captionகுற்றம் சுமத்தப்பட்ட நபர்

19 வயதாகும் நிக்கோலஸ் குரூஸ் திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும்.

இது குறித்த முந்தைய செய்தி: அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி

தான் "தொழில்முறையாக பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் நபராகப் போவதாக" குருஸ் முன்னர் யூ ட்யூப் பதிவு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு

அதுகுறித்து பயன்பாட்டாளர் ஒருவர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

குரூஸ் பற்றி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அவர் பள்ளி வளாகத்திற்குள் பையுடன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாங்கள் யூ ட்யூப் பதிவை ஆராய்ந்ததாகவும் ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போனதாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு:படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

ஃபுளோரிடாவில், பார்க்லாண்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர், அதில் மூன்று பெண்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

வியாழனன்று குரூஸ் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதை ஒப்புக் கொண்டார். அவர் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் தனது பையில் துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்ததாக விசாரணையாளர்களிடம் அவர் ஒப்புக் கொண்டார்.

தனது அனுதாபத்தை தெரிவித்திருந்த டொனால்ட் டிரம்ப், தான் பார்க்லாண்டிற்கு வருகை புரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-43080978

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க துப்பாக்கிச்சூடு: துணிவுடன் குழந்தைகளை காப்பாற்றிய இந்திய ஆசிரியை

 
Floridajpgjpg

அமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, இந்திய வம்சாவளி ஆசிரியை ஒருவர் துணிவுடன் செயல்பட்டு ஏராளமான குழந்தைகளை காப்பாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், 17 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரூஸை கைது போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்ந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, அந்த பள்ளியில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஏராளமான குழந்தைகளை தாக்குதலில் இருந்து காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் பெருமளவு இந்திய வம்சாவளி குழந்தைகள் அதிகஅளவில் படிக்கின்றனர். அதுபோலவே அங்கு இந்திய வம்சாவளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் சாந்தி விஸ்வநாதன்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது, சாந்தி விஸ்வநாதன் தனது வகுப்பறையில் அல்ஜீப்ரா வகுப்பு நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது முன்னாள் மாணவன் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினார். இதையடுத்து பள்ளியின் அபாய மணி இரண்டுமுறை ஒலித்தது. அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து கொண்ட ஆசிரியர் சாந்தி விஸ்வநாதன் வேகமாக சென்று வகுப்பறையின் கதவை உட்புறமாக தாழிட்டார்.

ஜன்னல் கதவுகளையும் மூடி யாரும் உள்ளே வர முடியாதவாறு தடுத்துள்ளார். மேலும், மாணவ, மாணவியரை குப்புறப்படுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் மாணவர் அடுத்தடுத்து வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வகுப்பறை கதவு மூடப்பட்டு இருந்ததால், அந்த நபரால் உள்ளே வர முடியவில்லை.

பள்ளி முழுவதும் பெரும் பதற்றத்துடன் மாணவ, மாணவியரும், ஆசிரியரும் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில், சாந்தி விஸ்வநாதன், பதற்றப்படாமல், வகுப்பறையை திறக்கவில்லை. இந்த துப்பாக்கிசூடு முடிந்து அதிரடிப்படை போலீஸார் உள்ளே வந்து ஒவ்வாரு வகுப்பறையாக வந்து மாணவர்களை மீட்டனர். அப்போது ஒரே ஓரு வகுப்பறையின் கதவு மட்டும் மூடியிருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக அந்த அறையின் கதவை தட்டினர். உள்ளே தாக்குதல் நடத்திய நபர் பதுங்கி இருக்க கூடும் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தும் நபர் வகுப்பறைக்குள் வருவதற்காக தட்டுவதசாக ஆசிரியர் சாந்தி எண்ணியுள்ளார். இதனால் அவர் கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே வரவா என அவர்கள் கேட்ட பிறகும், சாந்தி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

குழந்தைகளை பாதுகாத்துக் கொண்டு தான் உள்ளே இருப்பதை கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் கதவை உடைக்காமல் ஜன்னல் கதவை மட்டும் உடைத்து வந்திருப்பது போலீஸ் என்பதை உறுதி செய்தனர். அதன் பிறகே ஆசிரியர் சாந்தி கதவை திறந்து போலீஸார் உள்ளே வர வழி விட்டுள்ளார். அதன் பிறகு போலீஸார் வந்து குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பத்திரமாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆசிரியை சாந்தியை பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று ஆசிரியை சாந்திக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.