Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் பிர­தி­நி­தித்­து­வம் தொடர்­பில் குழப்­பங்­கள்!!

Featured Replies

பெண் பிர­தி­நி­தித்­து­வம் தொடர்­பில் குழப்­பங்­கள்!!

 

உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் பெண் பிர­தி­நி­தித்­து­வம் தொடர்­பில் குழப்­பம் நில­வு­வ­தால், தேர்­த­லில் வெற்றி பெற்­ற­வர்­க­ளது பெயர்­களை அர­சி­த­ழில் வெளி­யி­டு­வ­தில் தாம­தம் ஏற்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் தலை­மை­யில், ஒவ்­வொரு மாவட்­டத்­தி­னது உத­வித் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர்­க­ளு­டன் கொழும்­பி­லுள்ள தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தில் நேற்று முன்­தி­னம் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் சட்­டத்­தில், சபை­க­ளில் 25 சத­வீ­தம் பெண் பிர­தி­நி­தித்­து­வம் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வெளி­யா­கி­யுள்ள தேர்­தல் முடி­வு­ க­ளுக்கு அமை­வாக அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வட்­டா­ரங்­க­ளில் பெரு­ம­ள­வான பெண் உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லேயே பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. செல்­லு­ப­டி­யான வாக்­கு­க­ளில் 20 சத­வீ­தத்­திற்கு குறை­வா­க­வும், இரண்டு அல்­லது ஒரு ஆச­னத்­தைப் பெற்­ற­து­மான கட்­சிக்கு, கிடைக்­கப் பெற்ற விகி­தா­சார ஆச­னத்­தில் பெண் பிர­தி­நி­தி­களை நிய­மிக்­கு­மாறு கோர முடி­யாது என்று சட்­டத்­தில் கூறப்­பட் டுள்­ளது.

 

இதன் கார­ண­மாக, சில கட்­சி­கள் வட்­டா­ரங்­க­ளில் ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­தா­லும் விகி­தா­சா­ரத்­தில் ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ள­வில்லை. சட்­ட­ஏற்­பா­டு­க­ளில் மாற்­றங்­களை மேற்­கொள்­ளா­மல் சபை­க­ளுக்­கான உறுப்­பி­னர்­க­ளை­யும் நிய­மிக்க முடி­யாத நிலமை காணப்­ப­டு­கின்­றது. சபை­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் விவ­ரங்­களை அர­சி­த­ழில் வெளி­யி­டு­வ­தில் தாம­தம் ஏற்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

http://newuthayan.com/story/69413.html

  • கருத்துக்கள உறவுகள்

'பெண் என்றால் பேயும் இரங்கும்' என்பது பழமொழி.

சிறீலங்காவில்! பேய்மட்டுமல்ல...... பிசாசு, பூதம்கூட இராங்காது என்ற புதுமொழியைப் பாஞ் இங்கு அங்குரார்பணம் செய்து வைக்கிறார். :grin:

  • தொடங்கியவர்

கலப்­பு­முறைத் தேர்­தலில் பெண் பிர­தி­நி­தித்­துவம் ஒரு சவாலா?

 

வர­லாற்றில் முதற்­ற­ட­வை­யாக இலங்­கையில் நடை­பெற்­று­மு­டிந்த கலப்­பு­மு­றை­யி­லான உள்ளூராட்சிமு­றைத்­தேர்­தலில் பெண் பிர­தி­நி­தித்­துவத் தெரிவு என்­பது ஒரு சவா­லாக மாறி­யுள்­ள­தைக் ­கா­ணலாம்.

60 பெண் பிர­தி­நி­தி­களைத் தெரி­வு­செய்­வதில் சிக்கல் நில­வு­வ­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

தேர்தல் ஆணைக்­குழு தானே ­வ­குத்த தேர்தல் கணிப்­புப் ­பொ­றி­மு­றை­களுள் இதற்­குத்­ தீர்­வு­கா­ண­மு­டி­யா­மல்­ திண்­டா­டு­கின்ற நிலை தென்­ப­டு­கின்­றது.

பெண்­க­ளுக்­கான 25வீத இட­ஒ­துக்­கீட்டை பரி­பூ­ர­ண­மாக நிறை­வேற்­ற­வேண்டும். இது சட்டம். அப்­படி நிறை­வேற்­றப்­பு­றப்­ப­டு­கின்ற பட்­சத்தில் பெண் பிர­தி­நி­தித்­துவத் தெரிவில் தேர்தல் ஆணைக்­குழு சவாலை எதிர்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அப்­படி என்ன பெரி­தாக சவால் என்று நீங்கள் கேட்­கலாம்.

உள்ளூராட்சி மன்­றக்­கட்­ட­ளைச்­சட்டம் கலப்­பு­முறைத் தேர்தல் சட்­டப்­படி 20வீதத்­திற்கு குறை­வான வாக்­கு­க­ளோடு சேர்த்து 3 ஆச­னங்­க­ளுக்கு குறை­வாகப் பெறும் கட்­சி­க­ளிடம் பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை கோர­மு­டி­யாது. அதா­வது 20வீதத்­திற்கு கூடு­த­லான வாக்­கு­க­ளோடு சேர்த்து 3 ஆச­னங்­க­ளுக்கு மேல் பெறும் கட்­சி­க­ளிடம் அல்­லது சுயேச்­சைகளிடம் தான் பெண் ஆச­னங்­களைக் கோர­மு­டியும். இது ­சட்டம்.

கணிப்­பு­மு­றையைப் பார்த்தால்

தேர்­தலில் 20வீதத்­திற்குக் குறை­வான வாக்­கு­க­ளோடு சேர்த்து 3 ஆச­னங்­க­ளுக்கு குறை­வா­கவும் பெறும் கட்­சி­களின் அல்­லது சுயேச்­சை­களின் வாக்­கு­களை மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­க­ளி­லி­ருந்து கழிக்­க­வேண்டும்..

வரும் தொகையை ஏலவே குறித்த சபைக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட பெண் பிர­தி­நி­தித்­து­வத்தால் பிரிக்­க­வேண்டும். வரும் தொகையை கட்­சிகள் பெற்ற வாக்­கு­களால் பிரித்தால் எத்­தனை பெண் பிர­தி­நி­தித்­துவம் என்று தெரி­ய­வரும். அதனை அந்­தந்த கட்­சிகள் வழங்­க­வேண்டும். ஒரு­வேளை பெண்­பி­ர­தி­நிதித்­துவம் வட்­டா­ரத்தில் தெரி­வா­கி­யி­ருந்தால் குறித்­த ­கட்சி பெண் ­பி­ர­தி­நி­தித்­து­வத்தை வழங்­க­வேண்­டிய­ தேவை இல்லை. மாறாக தெரி­வா­கி­யி­ருக்­கா­விட்டால் விகி­தா­சா­ர­மு­றையில் வழங்­க­வேண்டும்.

சிக்கல் நிலை

வட்­டா­ரத்தில் தேவைப்­பட்ட பெண் பிர­தி­நி­தித்­துவம் தெரி­வா­காமல் ஆண்­பி­ர­தி­நிதி மாத்­தி­ரமே தெரி­வா­கி­யி­ருந்தால் குறித்­த­கட்சி விகி­தா­சா­ரத்தில் பெண் ஆச­னங்­களை வழங்­க­வேண்டும். அங்கு தேவை­யான போனஸ் ஆச­ன­மில்­லா­விட்டால் என்ன செய்­வது?

அல்­லது குறித்த சபையில் ஒரு கட்­சி­யைத்­த­விர ஏனைய கட்­சிகள் அல்­லது சுயேச்­சைகள் 20வீதத்­திற்குக் குறை­வான வாக்­கு­க­ளோடு சேர்த்து 3 ஆச­னங்­க­ளுக்கு குறை­வா­கவும் பெற்­றி­ருந்தால் அங்கு தேவை­யான பெண்­பி­ர­திநி­தித்­துவ ஆச­னங்­களை யாரி­ட­மி­ருந்து பெறு­வது?

இந்­தச்­சிக்­கல்கள் பல சபை­க­ளுக்கு உள்­ளன.

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில் சட்டத்தை திருத்த முடி­யாது. நடந்து முடிந்த உள்ளூ­ராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சட்­டங்­களைப் பயன்­ப­டுத்­து­வதே பொருத்­த­மா­னது என உள்ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சபை­க­ளுக்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வதில் பிர­யோக ரீதி­யி­லான சிக்­கல்கள் உள்­ள­போதும் நடை­பெற்ற தேர்­தலில் திருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யாது எனவும் அந்த அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

ஆயினும் எதிர்­கா­லத்தில் நடை­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைக் காணும் பொருட்டு திருத்­தங்­களை மேற்­கொள்ள முடியும் என்­றும் உள்ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இதே­வேளை, உறுப்­பி­னர்­களின் பதவிக் காலம் பற்­றிய அறி­விப்­புகள் வெளி­யாகும் வரை­வில் அவர்கள் தங்கள் பத­வி­களை ஆரம்­பிக்க முடி­யாது என்றும் அவ்­வ­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

உள்ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் கூறி­ய­தன்­படி நடை­மு­றையில் பெண்­ பி­ர­தி­நி­தித்­துவம் தெரி­வதில் சிக்கல் நிலை தோன்­றி­யுள்­ளது. எனவே சட்­ட­மா­அ­தி­பரின் பரிந்­து­ரை­யுடன் இதற்கு தீர்­வு­ கா­ண­மு­டியும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

கொள்கை வகுப்­பா­ளர்கள், விதி­மு­றைகளை ஆக்­குவோர், சட்­டங்­களை ஆக்­குவோர் இத்­த­கைய சிக்­கல்கள் பிர­யோ­க ­ரீ­தியில் வரு­மென்று அல­சி­ ஆ­ராய்ந்த பின்­னரே அத்­த­கைய சட்­டங்­களை விதி­மு­றை­களை அமு­லுக்­கு­கொண்­டு­ வ­ர­வேண்டும்.

அதை­வி­டுத்து நடை­முறை ரீதியில் பிரச்­சி­னை­வந்த பிற்­பாடு அப்­ப­டியும் செய்­யலாம் இப்­ப­டியும் செய்­யலாம் என்று கூற­வி­ழை­வது உய­ர­தி­கா­ரி­க­ளுக்குப் பொருத்­த­மா­ன­தல்ல.

சரி. இனி விட­யத்­திற்கு வருவோம். எவ்­வாறு பெண் பிர­தி­நி­தித்­துவத் தெரிவு சவா­லாக மாறி­யுள்­ளது என­பதை இங்கு 2 உதா­ர­ணங்கள் மூல­மாகப் பார்ப்போம்.1. சம்­மாந்­துறை பிர­தே­ச­சபை 2. காரை­தீவு பிர­தே­ச­சபை  சம்­மாந்­துறை பிர­தே­ச­சபை 

சம்­மாந்­து­றை ­பி­ர­தே­ச­ச­பையில் 20 ஆச­னங்கள். அவற்றில் 25 வீத­மெனின் 5 ஆச­னங்கள் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும். இது சட்டம். தேர்தல் இடம்­பெற்­று­ மு­டிந்து பெறு­பேறும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு வட்­டார விகி­தா­சார தெரிவு இடம்­பெற்­றுள்­ள­தென்­பதைப் பார்ப்போம்.

சம்­மாந்­துறை பிர­தே­ச­ சபைத் தேர்தல் முடி­வு­க­ளின்­படி ஐ.தே.கட்­சிக்கு 8 ஆச­னங்கள், அ.இ.ம.காங்­கி­ர­ஸுக்கு 8 ஆச­னங்கள், ஸ்ரீல.சு.கட்­சிக்கு 4 ஆச­னங்கள் கிடைத்­துள்­ளன.

சம்­மாந்­துறை பிர­தேச சபையில் செல்­லு­ப­டி­யான மொத்த வாக்­குகள் 34262

20 வீதத்­திற்கும் குறை­வான வாக்­கு­க­ளோடு சேர்த்து 3 ஆச­னங்­க­ளுக்கு குறை­வா­கவும் பெறும் கட்­சி­களின் அல்­லது சுயேச்­சை­களின் வாக்­கு­களை மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­க­ளி­லி­ருந்து கழிக்­க­ வேண்டும்..

அதா­வது இங்கு ஜே.வி.பி. த.ஐ.வி.மு. மற்றும் ஸ்ரீல.பொ.பெர­முன பெற்ற வாக்­குகள் நீக்­கப்­பட வேண்டும்.

அதனை 1397 வாக்­குகள் கழிக்­கப்­பட்­டது. எனவே (13022 + 1 2911 + 6932) = 32865

இதனை 25% ஆன பெண்கள் ஆசனம் 5 ஆல் வகுக்­கும்­போது 6573

இதனை கட்­சி­க­ளுக்கு பிர­யோ­கித்தால்

ஐ.தே.கட்சி பெற்ற வாக்­கு­களின் படி 13022/6573 = 1 மீதி 6449

அ.இ.ம.காங்­கிரஸ் பெற்ற வாக்­கு­களின் படி 12911/6573 = 1 மீதி 6338

ஸ்ரீல.சு.கட்சி பெற்ற வாக்­குகள் படி 6932/6573 = 1 மீதி 359

ஆகவே . முதல் கட்ட பிரிப்பில் ஐ.தே.கட்சி 1, அ.இ.ம.காங்­கிரஸ் 1, ஸ்ரீல.சு.கட்சி 1, ஏனைய 2 ஆச­னங்­களும் மிகு­தியை வைத்து தீர்­மா­னிக்கப்படும்.

அதன்­படி ஐ.தே.கட்சி கொண்ட மிகுதி 6449 க்கு ஒன்றும் அ.இ.ம.கா மிகுதி 6338 க்கு ஒன்றும் பெண் உறுப்­பினர் வழங்­கப்­பட வேண்டும். ஆனால் அ.இ.ம.காங்­கி­ர­ஸிற்கு இருக்கும் போனஸ் ஆச­னமே 1 ஆகையால் அக்­கட்­சிக்கு அதனை வழங்க முடி­யாது. எனவே, அடுத்த நிலையில் உள்ள மீதி 359 ஐ கொண்­டுள்ள ஸ்ரீல.சு.கட்­சிக்கு வழங்க வேண்டும்.

எனவே ஐ.தே. கட்சி 2, அ.இ.ம. காங்­கிரஸ் 1, ஸ்ரீல.சு.கட்சி 2.

இதில் வட்­டார முறையில் கட்சி பெண் ஆசனம் பெற்று இருந்தால் அது கழிக்­கப்­படும். உதா­ர­ண­மாக சு.கட்சி வட்­டார முறையில் மல்­வத்­தையில் பெண் ஆசனம் பெற்­ற­கா­ர­ணத்­தினால் போனஸ் இல் ஒரு பெண் நிய­மித்தால் போதும்.

ஆனால் இறு­தி­யாக ஐ.தே.கட்சி 2, அ.இ.ம. காங்­கிரஸ் 1, ஸ்ரீல.சு.கட்சி 1 போனஸ் என்ற முறையில் பெண்கள் நிய­மிக்க வேண்டும். மொத்­த­மாக (வட்­டார முறையில் தெரி­வான பெண்­ணோடு சேர்த்து) 5 வரும்.

இம்­முறை மூலமே 25% ஆன பெண் ஆச­னங்கள் அதா­வது 5 பெண் ஆச­னங்கள் தீர்­மா­னிக்கப்படும்.

இதே­வேளை சு.கட்சி பெண் ஆசனம் தொடர்பில் சில கருத்து வேறு­பா­டுகள் நில­வு­வதால் சில வேளை அது 2 உம் ஆண்­க­ளுக்கே வழங்­கப்­படும் சாத்­தி­யமும் உண்டு. காரணம் அக்­கட்சி பெற்ற ஆச­னங்­களில் 4 இல் 1 வட்­டார முறைப்­ப­டியே பெண் உறுப்­பி­னரை கொண்டு உள்­ளது. அதா­வது 25 வீதம். இதனால் போனஸ் மூலம் நிய­மிக்­கப்­படும் 2 உறுப்­பி­னர்­களும் ஆண்­க­ளாக அமைய வாய்ப்பு உண்டு. இது பற்­றிய இறுதி முடிவு எடுக்கும் அதி­காரம் தேர்தல் ஆணை­க் குழு தலைவ­ருக்கே உண்டு என தெளி­வாக உள்­ளூ­ராட்­சி­ மன்ற தேர்­தல்கள் திருத்த சட்ட மூலத்தில் கூறப்­பட்­டுள்­ளது. எனவே, சம்­மாந்­துறை பிர­தேச சபைக்கு 4 பெண் அங்­கத்­த­வர்கள் வரு­வ­தற்கே வாய்ப்பு உண்டு.

இறு­தி­யாக ஐ.தே.கட்சி 1, அ.இ.ம.காங்­கிரஸ் 1, ஸ்ரீல.சு.கட்சி 0 என்ற போனஸ் முறையில் பெண்கள் நிய­மிக்கப்பட வேண்டும். மொத்­த­மாக (வட்­டார முறையில் தெரி­வான பெண்­ணோடு சேர்த்து) 4 வரும்.

சில­வேளை இப்­படி நடந்­தி­ருந்தால் அதா­வது அ.இ.ம.காங்­கிரஸ் 8 ஆச­னங்­க­ளையும் வட்­டார முறையில் பெற்று அது அனை­வரும் ஆணாக இருந்து போனஸ் இல்­லாது போனால் 5ஆவது பெண் ஆச­னத்தை வழங்­கு­வது யார்? வெற்றி பெற்ற கட்­சியா?

சட்ட சிக்­கல்கள்:-

விகி­தா­சா­ரப்­படி அ.இ.ம.காங்­கி­ர­ஸிற்கு 2 ஆச­னங்கள் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால், வட்­டார முறை­யி­லேயே 7 ஆண்கள் தெரி­வாகி இருப்­பதால் அதில் ஒரு­வரை சட்­டப்­படி மாற்ற முடி­யாது. (1 போனஸ் மட்­டுமே பெண் வழங்க வேண்டும்)

சு.கட்சி க்கு விகி­தா­சா­ரப்­படி 2 பெண்கள் என்று வரு­கி­றது. வட்­டா­ரத்தில் ஒன்று இருப்­பதால் போனஸ் 1 ஆக குறையும். போனஸ் 1 உம் கொடுக்க தேவை இல்லை. காரணம் வட்­டார ஒரு ஆச­னத்­தோடு மொத்த 4 இல் 1 அதா­வது 25% பெண்கள் வரு­கி­றது. சட்­டப்­படி போனஸ் 2 ஐயும் ஆண்­க­ளுக்கே கொடுக்­கலாம்.

ஐ.தே.கட்­சியைப் பொறுத்­த­வரை விகி­தா­சா­ரப்­படி 2. அதா­வது 8 இல் 2. ஆகவே 25% பூர்த்தி. ஆகவே ஐ.தே.க.வுக்கு 2 க்கு மேல் கொடுக்க வேண்டி சட்­டத்­திலும் முடி­யாது. விகி­தா­சா­ரத்­திலும் முடி­யாது. (விகி­தா­சா­ரப்­படி கொடுக்க வேண்டி வந்தால் அது சு.கவே யே கொடுக்­கணும். மேலுள்ள கணிப்பை பார்க்க.)

கடை­சியில் சம்­மாந்­துறை பிர­தேச சபைக்கு 4 பெண்கள் ஆச­னமே (20%) வரு­கி­றது. இது தேர்தல் அடிப்­படை சட்­டத்­தையே மீறு­கி­றது.

காரை­தீவு பிர­தே­ச­சபை

காரை­தீவு பிர­தே­ச­ச­பையில் பெற்ற செல்­லு­ப­டி­யான வாக்­குகள் - 10715

10715 / 11 = 974 ( ஒரு­வ­ருக்கு)

இத­ன­டிப்­ப­டையில் கட்­சி­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களை பங்­கிட்டால் (விகி­தா­சார முறை)

அ.இ.ம.கா. - 1010 / 974 = 1.03 = 1

த.அ.கட்சி - 3202 / 974 = 3.28 = 3

ஸ்ரீல.சு.கட்சி - 1684 / 974 = 1.72 = 2

சுயேச்சை- 01 - 1985 / 974 = 2.03 = 2

ஸ்ரீல.மு.கா. - 1522 / 974 = 1.56 = 2

சுயேச்சை -2 - 829 / 974 = 0.85 = 1

இவ்­வாறே 11 அங்­கத்­த­வர்­களும் கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டது, ஆனால், த.அ.கட்சி வட்­டா­ரங்கள் நான்கை வென்­ற­தனால் அவர்­க­ளிடம் இருந்து ஒரு உறுப்­பி­னரை கழிக்க முடி­யாது ஆனால், ஏனைய கட்­சிக்கு வழங்க­ வேண்­டி­ய­தையும் குறைக்க முடி­யாது இதனால் ஒரு உறுப்­பினர் அதி­க­ரித்­துள்­ளது. அது தொங்­கு ­உ­றுப்­பி­ன­ரென்­பதை அறிவோம். அதன்­படி காரை­தீவு பிர­தே­ச­ச­பைக்கு 12 ஆச­ன­ங்கள் கிடைத்­துள்­ளன.

சரி இனி பெண் பிர­தி­நி­தித்­துவம் பற்­றிப்­பார்ப்போம். இங்கு சட்டப்­படி 2 பெண்கள் இருக்­க­வேண்டும். ஏலவே, த.அ.கட்சி வட்­டா­ர­ மு­றையில் ஒரு பெண் உறுப்­பி­ன­ரைப்­பெற்­றுள்­ளது.

எனவே, போனஸ் முறையில் ஒரு பெண் உறுப்­பி­ன­ரைப் ­பெ­ற ­வேண்டும்.

ஏலவே கூறிய கணிப்­பின்­ பி­ர­காரம் இங்கு பார்ப்போம்.

20 வீதத்­திற்கு கூடு­த­லான வாக்­கு­க­ளோடு சேர்த்து 3 ஆச­னங்­க­ளுக்கு மேல் பெறும் கட்­சி­க­ளிடம் அல்­லது சுயேச்­சை­யிடம் தான் பெண் ஆச­னங்­களைக் கோர­மு­டியும்.

இங்கு இந்­தச்­சட்­டத்­தின்­படி ஆக த.அ.கட்சி மட்­டுமே 3ஆச­னங்­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ளது. 20வீதத்திற்கும் கூடுதலான 3202(29.8)வாக்குகளைப்பெற்றுள்ளது.

ஏனைய 7 அணிகளும் 20வீதத்திற்கு குறை வான வாக்குகளையும் 3 ஆசனங்களுக்கும் குறைவான ஆசனங்களையுமே பெற்றுள்ளன. அதன்படி யாரிடமிருந்து இந்த ஒரு பெண் ஆசனத்தைப் பெறுவது? இது சிக்கல்.

சரி 20% க்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும் என்று பார்த்தால்

செல்லுபடியான வாக்குகள் 10715 -.(1985 + 1964 + 1522 + 1010 + 829 + 280 +203 ) = 7793 வரும்

இந்த 7793ஐ பெண் ஆசனங்களின் எண்ணிக்கையான 2 ஆல் வகுத்தால் 3896.5 வரும்.

இந்தத்தொகையைவைத்து பெண் ஆசனம் பெறமுயற்சித்தால் எந்தவொரு கட்சியும் இந்தத்தொகையைப் பெறவில்லை. முதல் 4 ஆசனங்களைப்பெற்ற த.அ.கட்சிகூட இந்த வாக்குகளைப் பெறவில்லை. இந்த நிலையில் இந்தப் பெண் ஆசனத்தை யாரிடமிருந்து பெறுவது? எப்படி 25 வீதமாக்குவது?

இதுவே இன்றுள்ள பிரச்சினையும் சிக்கலும். இப்படி இலங்கையில் 60 பெண் உறுப்பினர்களின் தெரிவு சிக்கலில் உள்ளது.இதனைத் தீர்க்கும் பட்சத்திலேயே புதிய உறுப்பினர்கள் 240 சபைகளில் பதவியேற்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-19#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.