Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயிற்சிக்காக சீனா செல்லவுள்ள பிரிகேடியர் பிரியங்கர

Featured Replies

பயிற்சிக்காக சீனா செல்லவுள்ள பிரிகேடியர் பிரியங்கர
 
 

image_20cae94a96.jpgபிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

5 மாதத்துக்கான குறித்த  பயிற்சி பாடநெறியைத் தொடர்வதற்காக, பிரியங்கர அடுத்த மாதம் 2ஆம் திகதி சீனாவுக்க செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பயிற்சிக்காக-சீனா-செல்லவுள்ள-பிரிகேடியர்-பிரியங்கர/175-212089

  • தொடங்கியவர்

பிரிகேடியர் பிரியங்கவின் நிலை என்ன ? மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படமாட்டாராம் 

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீள லண்டனுக்கு அனுப்படாது சீனாவில் கட்டளை தளபதிகள் (brigade commander) தொடர்பில் நடாத்தப்படும் இராணுவ பாடநெறி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Brigadier-Priyankara-Fernando_-Sri-Lanka

நேற்று மாலை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால்  மகேஷ் சேனநாயக்கவுக்கும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கும் இடையில் விஷேட சந்திப்பு இடம்பெற்ற நிலையில், இதன்போது இது குறித்த தீர்மானத்தை இராணுவ தளபதி பிரிகேடியரிடம் கூறியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில், இலங்கை உயரிஸ்தானிகராலயம் முன்பாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் செய்த புலம் பெயர் தமிழர்களை நோக்கி  ' கழுத்தறுத்து' கொலை செய்வேன் எனும் அர்த்தத்தை கொடுக்கும் வகையில் சைகளை வெளிப்படுத்தியமை தொடர்பில், உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

 எனினும்  தான் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தவில்லை எனவும் இலங்கை பிரபாகரனை கொன்றுவிட்டது என்றே செய்கை ஊடாக கூறியதாகவும் பிரிகேடியர் பிரியங்க விளக்கமளித்திருந்தார்.

 இந் நிலையில் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி பிரிகேடியர் பிரியங்க நாட்டுக்கு மீள அழைக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார்.

 இந் நிலையில் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சுக்கு அவர் சென்ற போதும், அங்கு வெளிவிவகார செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாது இராணுவத் தளபதியை சந்திப்பது போதுமானது என அவருக்கு கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரிகேடியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவரை நாட்டுக்கு அழைத்ததாக  ஏற்கனவே அறிவித்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க, நேற்று பிரியங்க பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதன்போது பிரிகேடியர் பிரியங்கவை மீள லண்டனுக்கு அனுப்பாமல் இருப்பது குறித்து இராணுவ தளபதி விளக்கியதாகவும், அதற்கு பதிலாக அவரை சீனாவின் உயர் பாடநெறிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31081

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப வரமுடியாது, ஆ... அம்புட்டுத்தான்

தாமரை மொட்டில் அடுத்த தேர்தலில் நிற்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விசயம் இந்தியாவுக்கு தெரிஞ்சால் இருப்புக்கொள்ளாது. தானும் தன்ரை பங்குக்கு 100 ஆமியை கூப்பிட்டு பயிற்சியும் குடுத்து பட்டமும் குடுத்து வழியனுப்பி வைக்கும் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இந்த விசயம் இந்தியாவுக்கு தெரிஞ்சால் இருப்புக்கொள்ளாது. தானும் தன்ரை பங்குக்கு 100 ஆமியை கூப்பிட்டு பயிற்சியும் குடுத்து பட்டமும் குடுத்து வழியனுப்பி வைக்கும் :grin:

கிந்தியர்கள் வாழ்க்கையின் கனவே அரசாங்க வேலை எடுப்பது அதன்மூலம் ஊழல் பண்ணுவது அதன் மூலம்  வாழ்க்கையில் முன்னேறுவது அது அவர்களுக்கு பெருமை அந்த வேலை கொள்கை வகுப்பாளர்களாக இருந்தாலும் அந்த பெருமையை அடையணும் மற்றபடி தாய்நாட்டு பற்றாவது ம...ஆவது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.