Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழந்தமிழ்ப் பதிப்புகள் வரலாறு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8010085095.jpg

பழந்தமிழ்ப் பதிப்புகள் வரலாறு

முன்னையோரின் புலமையையும் அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் அவர்கள் தங்களுடைய எண்ணங்களைப் பொறித்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றனர். அவற்றின் வழியாகவே நாம் இன்று பண்மையோரின் வரலாற்றுப் பெருமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில் எழுதிப் போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடி வடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் பண்டையோரின் புலமை நயத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

கிரேக்கர், பினிஷ’யர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை ''பைரஸ்'' என்னும் புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். கிறித்தவ வேத நூலான விவிலிய நூலுக்கும் அதுவே (பைபிள்) பெயராயிற்று என்பர்.

நம் நாட்டில் பயன்படுத்தப்பெற்ற பனையோலைச் சுவடிகள் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும் அழியாமல் இருக்கும் தன்மை வாய்ந்தவை. உலகம் முழுவதும் பல்வேறு நூலகங்களில் தமிழ்ச் சுவடிகள் உள. கிரிகோரி ஜேம்ஸ் என்பவர் அயல்நாட்டு நூலகங்களில் உள்ள தமிழ்ச் சுவடிகளைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பேராசிரியர் அ. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் இதுபற்றிய விவரங்களைத் தந்துள்ளார். ஐரோப்பிய நாட்டில் 88 முன்னோடிகளுள் ஒருவராகப் புகழ் பூத்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கட்குப் பாரிசில் இருந்த பேராசிரியர் ஜூலியன் வின்சோ 7.5.1891 ஆம் நாளில் எழுதிய கடிதத்தில் இச்சுவடிகளைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார்.

பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப்படுத்தி ஆராய வேண்டியது இன்றியமையாததாகும்.

சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க வேண்டும். தமிழறிஞர்கள் பலர் இத்துறையில் முன்பு சிறந்து விளங்கினர். பதிப்பு முன்னோடிகளான அ. தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், புஷ்பரதஞ்செட்டியார், ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மழவை மகாலிங்கையர், உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் இத்துறையில் உழைத்துப் பல அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்துத்தந்தனர்.

பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. இவற்றை அறிந்து எழுதுவதற்குத் தக்க பயிற்சி வேண்டும். பொறுமையும், பயிற்சியும், புலமையும் இப்பணிக்குத் தேவையாகும். சுவடிகளில் எழுதப்பெறும் எழுத்து வடிவங்களை எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்பது பற்றியும் வேறுபாடங்களைத் தந்தால் வரும் பொருள் மாற்றங்கள் குறித்தும் பதிப்பாசிரியர்கள் நூலின் முன்னுரைகளில் விவரம் குறித்துள்ளனர்.

பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும் போது ஆசிரியரின் உண்மைப்பாடத்தைத் தெரிந்து பதிப்பிப்பது அரிய பணியாகும். பல்வேறு சுவடிப் பிரதிகளையும் திரட்டி மூலபாடத்தைத் தெரிவு செய்து பதிப்பித்தல் வேண்டும். இவ்வரிய பணியின் அருமையைப் பின்வரும் பாடல் நன்கு காட்டும்.

ஏடுபடித்தல் என்பது ஒருகலை

எல்லோரும் ஏடுபடித்தல் இயலாது

அதற்குத்தக்க நூற்பயிற்சி பெரிதும்

உழைத்துப் பெறுதல் வேண்டும்

செல்லும் பூச்சியும் ஏட்டைச் சிதைக்கும்

ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்

மெய்யெழுத்துகள் புள்ளி எய்தா

ஒற்றைக் கொம்பும் சுழியின் கொம்பும்

வேறுபாடின்றி ஒத்து விளங்கும்

காலும் ரகரமும் ஒன்றே போலும்!

பகர யகரம் நிகருறத் திகழும்

கசதநற என்பவை வசதியாய் மாறி

ஒன்றன் இடத்தை மற்றொன்று கவரும்

எழுதுவோர் பலப்பல பிழைகளைப் புரிவர்

பக்கங்கள் பலப்பல மாறிக் கிடக்கும்

žரும் தளையும் செய்யுள் வடிவம்

சரிவரத் தெரியா வரிகள் விடுபடும்

இத்தகு நிலைகளால் எத்தனையோ பலகுழப்பமும்

கலக்கமும் விளைத்து நிற்கும்

என்று சுவடிபடித்துப் பதிப்பிக்கும்போது ஏற்படுகின்ற பல்வேறு இடர்களையும் அறிஞர் ந.ரா. முருகவேள் குறிப்பிடுவார். சுவடிப் பயிற்சியும் புலமையும் இல்லாதவர்கள் பதிப்பிக்கும்போது சொற்களும் மாற்றம் பெறும் என்பர்.

தொன்று மொழி அந்தோ தோன்றுமொழி ஆகும்

எதிபங்கம் அச்சோ எதிர்பங்கம் எனஆம்!

யவமத்திமம் எனும் எழிற் பெருஞ்சொல்தான்

பவமத்திமம் எனப் பண்பிற் பிறழும்

அரிய வழக்கு, அன்னோ ஆரிய வழக்காம்

போரவை மாறிப் போர்வை எனப்படும்

தகர சகரம் குறிக்கும் தச்சகரம்

தசக்கரம் ஆகித் தரங் கெட்டு நிற்கும்

என எழுத்தின் வேறுபாடு அறியாது பல்வேறு சொற்களைப் பதிப்பிப்போர் பயன்படுத்திவிடுவதால் சொல்லின் பொருளே மாற்றம் பெற்றுவிடும். எனவே பதிப்பாசிரியர்கள் இப்பிழைகளை எல்லாம் களைந்து ஆய்ந்து பதிப்பிக்கும் பணி பெரிது பெரிது எனப் பாராட்டுவார்.

தமிழாய்வு இன்று பலநிலைகளிலும் வளர்ச்சி பெற்றுத் தொடங்குவதற்கு அடிப்படையாய் அமைவது பதிப்புப் பணியாகும். தமிழ் நூல்களின் அச்சு வரலாற்றில் முதலில் நமக்குக் கிடைத்த நூல் தம்பிரான் வணக்கம் (1557) என்னும் நூலாகும். தொடக்க காலத்தில் கிறித்தவ சமயநூல்களை வெளியிட்டனர். தமிழகத்தில் 1712 இல் தரங்கம் பாடியில் முதன் முதலில் அச்சுக் கூடம் நிறுவப்பட்டது. தரங்கம்பாடி அச்சகம் பல சமய நூல்களையும் அகராதிகளையும் வெளியிட்டது.

1810 ஆம் ஆண்டிற்குப்பின் தமிழில் புதிய பதிப்பு முயற்சிகள் தொடங்குகின்றன. 1812 ஆம் ஆண்டில் திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் வெளியிடப் பெற்றன. இந்நூல்களே தமிழில் அச்சுருவம் பெற்ற முதல் இலக்கிய நூல்களாகும்.

சென்னையிலிருந்த ஆங்கில அலுவலர்களான எஃப்.டபுள்யு. எல்லீஸ் என்பவரும் காலின் மெக்கன்சி என்பவரும் சென்னைக் கல்விச் சங்கம் என்னும் ஓர் அமைப்பினை நிறுவி அரிய நுல்களை வெளியிடத் தொடங்குகின்றனர். 1812ஆம் ஆண்டு எல்லீசு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கின்றார். 1811ஆம் ஆண்டில் திருவேற்காடு சுப்புராய முதலியார் தமிழ்விளக்கம் என்னும் உரைநடை இலக்கணநூலினை வெளியிட்டார். தொடர்ந்து வெளியிடப் பெற்ற சில நூல்கள் அக்காலக் கல்விச் சூழலை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

சிற்றம்பல தேசிகரின் இலக்கணச் சுருக்கமும் (1813), 1824 இல் சதுர் அகராதியும் (பெஸ்கி) 1827 இல் தமிழ் அரிச்சுவடியும் (திருவேங்கட முதலியார்) 1828 இல் இலக்கண வினா விடையும் (தாண்டவராய முதலியார்) 1835 இல் நன்னூலும் (தாண்டவராய முதலியார்) 1847 இல் நன்னூல் விருத்தியுரையும் (இராமாநுச கவிராயர்) பதிப்பிக்கப்பெற்றன. தமிழ்க் கல்வியை அறிமுகப் படுத்த இவ்வச்சு நூல்கள் பெரிதும் பயன்பட்டன.

மேலைநாட்டாருக்கும் தமிழ் மொழியறிவு தேவையான நிலையில் ஜி.யு.போப், பெஸ்கி போன்றோர் இலக்கண வினாவிடை (1888) கொடுந்தமிழ் (1848) ஆகிய நூல்களை வெளியிட்டனர். ஹெண்டிரிக் பாதிரியார் (1520-1600)இதற்கு முன்னரே தமிழுக்கு இலக்கண நூலினை ஆக்கித்தந்தார். ரேனியஸ் ஐயர் 1832 இல் இலக்கண நூற் சுருக்கம் எழுதினார். தமிழ் கற்கும் ஐரோப்பியருக்காக A Grammer of Tamil Language என்னும் நூலினை 1836 இல் அவர் வெளியிட்டார். இவர் திருப்பாற் கடல் நாத கவிராயர், இராமநுச கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கணத்தைக் கற்றவர் என்பர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொல்காப்பிய இலக்கண நூல் அச்சாகியது. மழவை மகாலிங்க ஐயர் 1848 இல் தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் பதிப்பை வெளியிட்டார். அதற்குப் பின்னர் 1885 இல் யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம்பிள்ளை தொல்காப்பிய பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையை வெளியிட்டார். எஸ். சாமுவேல் பிள்ளை 1858 இல் வெளியிட்ட தொல்காப்பிய நன்னூல் பதிப்பானது ஒப்பியல் பார்வைக்குப் பெரிதும் பயன் தருவதாகும்.

தொல்காப்பிய முதல் பதிப்பாசிரியரான மழவை மகாலிங்க ஐயர் ஓரளவு ஏடுகளிலிருந்த நூற்பா நிலையை நன்கு புரிந்து கொள்வதற்காக முற்றுப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகளை அமைத்துப் பதிப்பித்தார். நூற்பாவும் உரையும் ஒரேவகை எழுத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பிய பதிப்பு வரலாற்றில் இந்நூலே முதன்முயற்சி (1855) என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்பதிப்பிற்குப் பின்னர் தோன்றிய சோட சாவதானம் சுப்பராயச் செட்டியாரின் எழுத்ததிகாரப் பதிப்பு (1868), சி.வை. தாமோரம் பிள்ளையின் சொல்லதிகார சேனாவரையர் பதிப்பு (1868) கோமளபுரம் இராச கோபாலப் பிள்ளை சொல்லதிகாரப் பதிப்பு (1868) முதலியன குறிப்படத்தக்கன.

சி.வை.தாமோதம்பிள்ளை அவர்கள் வெளியிட்ட பதிப்பு நூல்கள் படிப்போர்க்குப் பேரளவில் துணைபுரியுமாறு பல சிறப்புக் கூறுகளைப் பெற்றிருந்தன. எல்லாப் பதிப்பகளிலும் அரிய பதிப்புரைகள் உள்ளன. மூலபாடம் பெரிய அளவிலும், உரை அதனின் வேறான வடிவத்திலும் அமைந்தன. நுற்பாவின் கருத்து, விளக்கம், பொருள் சான்றுகள் ஆகியன தனித்தனிப் பத்திகளில் அமைந்து தெளிவைத் தந்தன. பதிப்பு நூல்களுக்கு இவருடைய பதிப்புகள் முன்மாதிரியாக விளங்கின.

அச்சு ஊடகம் தோன்றியபின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வசதி பல்வேறு நூலாக்கங்களுக்கு வழிவகுத்தது. 1850களில் ஏற்பட்ட பல்கலைக் கழகக் கல்வி (சென்னைப் பல்கலைக்கழகம் தோன்றிய ஆண்டு 1857) மொழிக் கல்வியிலும் புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் மட்டுமின்றி சங்க நூல்களுள் ஒன்றான கலித் தொகையையும் 1887 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

சங்க இலக்கியங்களுள் முதன்முதலாகத் திருமுருகாற்றுப்படையை (1851) வெளியிட்டவர் ஆறுமுகநாவலர். சங்க நூல்களுள் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துப் பெரும் புகழ் கொண்ட உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு முழுவதையும் 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொடர்ந்து புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். மறைமலையடிகளார் (முல்லைப்பாட்டு 1903, பட்டினப்பாலை 1906) வா. மகாதேவமுதலியார் (பொருநராற்றுப்படை 1907), சௌரிப் பெருமாள் அரங்கனார் (குறுந்தொகை 1915), பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற்றிணை 1915), ரா. இராகவையங்கார் (அகநானூறு 1918) ஆகியோர் சங்க நூல் பதிப்புகளின் முன்னோடிகளாவர்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் ''சங்க இலக்கியம் - பாட்டும் தொகையும்'' என்னும் சமாஜப்பதிப்பு (1940) சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். தொகை நூல்களைப் பழைய உரையுடனோ அல்லது புதிய எளிய உரையுடனோ தொகை வாரிகயாகக் கற்றநிலையிலிருநுத் மாறிப் புலவர் வாரியாகக் கற்கும் நெறியை இப்பதிப்பு புதுநெறியாகக் காட்டியது. சங்கப் பாடல்களை உரையின்றி உணர்ந்து கொள்வதற்கு ஏற்பச் சந்தி பிரித்துப் பதிப்பிக்கும் முறையினையும் பேராசிரியர் அறிமுகம் செய்தார். மரபுப்பாங்கான முறைவைப்பிலிருந்து மாற்றி முற்றும் புலவர் வரிசையில் சங்கப் பாடல்களைப் பதிப்பித்தார். இவ்வகைப் பதிப்பு பல்வேறு ஆய்வுகளுக்கு வழிவகுத்தன.

சுவடிகளில் உள்ள பாடல்களைப் பதிப்பிக்கும் போது தொடக்ககாலத்தில் சந்தி பிரிக்காமலும், குறியீடுகளை அமைக்காமலும் பதிப்பித்தனர். இன்று காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி எனப் பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்துகின்றோம். 1875 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்ற ''நிட்டானுபூதி'' என்னும் நூலில் இக்குறியீடுகளை அமைத்து அக்குறியீட்டுகளுக்கான விளக்கங்களையும் தர முயற்சி செய்துள்ளனர்.

( , ) இம்முளை கூட்டுச்சொல் முதலியவற்றின் பின்னும்

( - ) இச்சிறுகீற்று சொற்களின் பிரிவுக்குப் பின்னும்

( _ ) இப்பெருங்கீற்று பதசாரத்திற்குப் பின்னும்

( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்குப் பின்னும்

[ ] இவ்விருதலைப் பகரம் தாத்பரியத்திற்கும்

* - இத்தாரகை அடியிற் காட்டப் பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.

பதிப்பாசிரியரின் இக்குறிப்புகள் காலச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் கண்ட பதிப்பு முயற்சியைக் காட்டும்.

பதிப்பாசிரியர்கள் பல்வகைத் திறனும் பெற்றிருந்தமையை பழம்பதிப்புகள் நமக்கு நன்கு காட்டுகின்றன. பழமையும் புதுமையும் இணைந்த பார்வையினால் புதிய நூல்கள் எளிமையாக ப் படிப்போரைச் சென்றடைந்தன.

தமிழ் நூல்கள் பதிப்பு வரலாறு பரந்து பட்டது. ஏறத்தாழ இருநுறு ஆண்டுகளின் கல்வி வரலாற்றைக் காட்டுவது. பழைய சுவடிகளில் உள்ள புலமைச் செல்வத்தை மீட்டுருவாக்கம் செய்த அவர்களின் பணி என்றும் நினைந்து போற்றற்குரியதாகும். பழம் பதிப்புகள், புதிய சிந்தனைகளுக்குக் களங்களாக விளங்குகின்றன. சமூகக் கல்விப் பண்பாட்டு இயக்கப் பின்னணிகளில் பழம் பதிப்புகளைக் காணும்போது அவற்றின் தோற்றத்திற்கான காரணம் சிந்தனை வளர்ச்சியில் மாற்றம் ஆகியவற்றைக் காண முடியும். காலந்தோறும் பல்வேறு நிறுவனங்கள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. இன்றைய அறிவியல் வசதிச் சூழலில் பதிப்புப் பணியை மேலும் தரமுள்ளதாக்கலாம்.

முன்னையோர் அரும்பாடுபட்டுப் பெரிதும் ஈடுபாட்டோடும் புலமையோடும் பதிப்பித்த பழந்தமிழ்ப் பதிப்புகளை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது இன்றையத் தலைமுறையின் கடமையாகும். பழந்தமிழரின் வரலாறு, பண்பாடு குறித்தும், மொழியின் தொன்மை குறித்தும் ஆராயும் இன்றைய செம்மொழிச் சூழலில் பழந்தமிழ்ப் பதிப்புகளின் பயன்பாடும் பெரிது அன்றோ!

நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007

  • 5 months later...

ஆழமான வரலாற்று ஆய்வுக் கட்டுரை.

இன்னும் பல பழைய நூல்கள் நமக்கு கிடைக்க வேண்டும். உ.வே.சா., வையாபுரியார் போலெ பலரும் உழைத்தால் கிடைக்கலாம்.

திருக்குறள்க்கு யுனிகோடில் ஒரு முறையான உரை இணையத்தில் இல்லை.

இக்குறைகள் நீங்க பலரும் உழைக்க வேண்டும்.

தேவப்பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

ஓலைச்சுவடியென்ன பழைய காணி உறுதிகளும் பார்த்தாலே தலைசுத்தும்.

டெக்டரின் கையெழுத்தை கம்பவுன்டர் படிக்கிறமாதிரி இதுகளைப் படிக்க பழைய அப்புக்காத்துமார்தான் வேனும். :blink::lol:

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் போதாமையும்

???

தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்: ஈழமும் தமிழும்

பழந்தமிழ்க் கல்வி, பழந்தமிழ் நூல் பதிப்புகள் போன்றவற்றில் இலங்கையைச் சேர்ந்த அறிஞர்களின் பங்களிப்பு என்பது பெரிய அளவில் இருந்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தமிழகத்தைச் சார்ந்த கல்வியாளர்களால் அறியப்பட்ட ஈழம்சார் அறிஞர்கள் மிகச் சிலரே. ஆறுமுக நாவலரும் தாமோதரம் பிள்ளையும் பழந்தமிழ் நூற்பதிப்புகளைப் பற்றிப் பேசும்போது நினைவில் கொள்ளப்படுகின்றனர். நவீன கால அறிஞர்களாகக் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் நாவல் படைப்பாக்கங்கள் தொடர்பாகக் கே.டானியல், புஸ்பராஜா, ஷோபாசக்தி போன்றவர்களைத் தவிர மற்றவர்களைப் பெரிதும் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் நாம் கவனத்தில் எடுத்தே தீர வேண்டிய பலர், தமிழ் இலக்கிய வரலாற்றில் செயல்பட்டுள்ளனர். அத்தகையோரைப் பற்றிய தகவல் குறிப்புகளாகவும் அவர்கள் பதிப்பித்த தமிழ் நூல்களைப் பற்றிய அறிமுகமாகவும் பழந்தமிழ் நூல்களுக்கு அவர்கள் எழுதிய விளக்கங்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் இக் கட்டுரை அமையும்.

19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த, தமிழகம், ஈழம் சார்ந்த கல்வியாளர்கள் பழந்தமிழ் நூல்களையும் தமிழ்ப் புலவர்களையும் ஒரு புராணமயப்பட்ட பார்வையில்தான் பேசியும் எழுதியும் வந்தனர். அதே நேரத்தில் நவீன கால உலகமென்பது இத்தகைய கருத் தோட்டங்களை உண்மைகள் என்று ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டியது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் தமிழ் வரலாற்றையும் தமிழ்ப் புலவர் வரலாற்றையும் மாற்றியமைக்க வேண்டும். அதாவது இந்தச் செய்திகளை நவீன வரலாற்றுப் பார்வையினூடாக ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர வேண்டும். அந்த ஒழுங்கமைப்பு என்பது குறிப்பிட்ட நூலை அல்லது குறிப்பிட்ட ஆசிரியரை ஒரு நிர்ணயமான காலகட்டத்தினுள் வைத்து வரையறைப்படுத்த வேண்டும். இத்தகைய செயலை அன்றைய நிலையில் தமிழ் மட்டும் பயின்ற புலவர்களால் செய்ய இயலவில்லை.

தமிழும் ஆங்கிலமும் மற்ற மொழிகளும் அறிந்த மனிதர்களால் மட்டுமே இத்தகைய பணியைச் செய்ய இயலும் என்ற நிலை இருந்தது. இந்தப் பணியை முதலில் தொடங்கியவர் சைமன் காசிச் செட்டி1 என்னும் இலங்கையைச் சேர்ந்த அறிஞர் ஆவார். 1859இல் வெளியிடப்பட்ட அந்நூலின் பெயர் 'தமிழ் புளூராக்' என்பதாகும். இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆயினும் அந்நூலிலுள்ள எடுத்துக்காட்டுப் பாடல்கள் தமிழிலேயே உள்ளன.2 197 தமிழ்ப் புலவர்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் இந்நூலைக் கால்டுவெல் தமது ஒப்பியலிலக்கண நூலின் பிந்திய பதிப்பில் உசாத் துணை நூற்பட்டியலில் சேர்த்தார்.3 இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்த்த அ. சதாசிவம் பிள்ளை (ஒ.த.அழ்ய்ர்ப்க்)) என்ற ஈழத்து அறிஞர் தமிழ் புளூராக் நூலிலுள்ள 169 புலவர்களின் வரலாறுடன் கூடுதலாக 214 புலவர்களின் வரலாறுகளை இணைத்து 'பாவலர் சரித்திர தீபகம்?(பட்ங் எஹப்ஹஷ்ஹ் ர்ச் பஹம்ண்ப் டர்ங்ற்ள்)) என்னும் புதிய நூலையே உருவாக்கி விட்டார். இந்நூல் 1886இல் வெளியிடப்பட்டது. பாவலர் சரித்திர தீபகம் தமிழ் நெடுங்கணக்கின்படி புலவர்களை வரிசைப்படுத்திக் கூறுகிறது. 'பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்' என்ற நூலை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் இவ்விரு நூல்களையும் பயன்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா. அவர்களுக்குச் சங்க நூற்சுவடிகள் பலவற்றைக் கொடுத்துதவிய கனகசபைப் பிள்ளை குறிப்பிடத்தகுந்த ஈழத்துத் தமிழறிஞர். இவர் எழுதிய 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்' (1904) என்ற ஆங்கில நூல். இந்த நூல் மெட்ராஸ் ரெவியூ பத்திரிகையில் (1896) தொடராக வெளிவந்ததுன தமிழ் இலக்கியத்தின் தன்மைகளையும் தமிழ்க் கலாச்சாரத்தின் வரலாற்றையும் முறையாகப் பகுத்து எழுதப்பட்டது. இந்த நூல்தான் இந்தியாவைச் சேர்ந்த மற்ற அறிஞர்களுக்குத் தமிழகத்தின் பழமையையும் தமிழ் நூல்களின் பெருமையையும் சுட்டிக்காட்டிய முதல் நூலாகும். 'சங்க காலம் பொற்காலம்'4 என்ற கருத்தை முதன்முதலில் கட்டமைத்ததும் இந்த நூல்தான். இதிலுள்ள கட்டுரைகள் இதழ்களில் வெளியிடப்பட்டபோது, சங்க நூல்களில் பல அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கனகசபைப் பிள்ளை தம்மிடமிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்துதான் பழந்தமிழ்ப் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தம் நூலில் இணைத்துக்கொண்டார் என்பது கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

1912இல் ஈழத்தைச் சேர்ந்த விசுவநாதப் பிள்ளை திருமந்திரத்தைத் தன்னுடைய குறிப்புரையுடன் பதிப்பித்து வெளியிடுகிறார். அந்த நூலுக்கு வேதாரண்யத்தைச் சேர்ந்த ரமண சாஸ்திரி என்பவர் ஒரு நீண்ட ஆராய்ச்சி முன்னுரை எழுதியுள்ளார். இன்றைய நிலையிலும் திருமந்திரம் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு ஒரு துணையாகவும் விவாதம் செய்பவர்களுக்கு ஓர் எதிரியாகவும் அந்த முன்னுரை நிலைகொண்டுள்ளது. 1920 வாக்கில் மட்டுநகர் எஸ். பூபாலன் பிள்ளை என்பவர் எழுதிய தமிழ் வரலாறு 24 பக்க முன்னுரையுடன் கூடிய 332 பக்க நூலாக வெளிவந்துள்ளது.

பிரிட்டிஷ் மியூசியத்தின் தமிழ் நூல் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நூலைத் தமிழறிஞர்கள் எவரும் பார்த்ததாகத் தெரியவில்லை. முதன்முதலாக தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய தஞ்சை சீனிவாசப் பிள்ளையின் நூலுக்கு ஓராண்டு முன்னதாகவே இந்நூல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றுக்கு ஈழத் தமிழறிஞர் ஒருவர் உரை எழுதியுள்ளார். தி. சதாசிவ ஐயர் என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட அந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. உ.வே. சாமிநாதையர் வெளியீடாக வந்துள்ள ஐந்குறுநூற்றில் பழைய உரை இல்லாத பாடல்களுக்கும் இவர் உரை வரைந்துள்ளார். ஓளவை துரைசாமிப் பிள்ளை அவர்களின் ஐங்குறுநூறு விளக்கவுரைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த இந்த நூலிலுள்ள உரைப் போக்குக் குறித்து முனைவர் சிவலிங்கராஜா குறிப்பிடுவது வருமாறு:

1. துறை சுட்டி விளக்குதல்

2. பொருள் கூறுதல்

3. சொற்பொருள் விளக்கம் கூறுதல்

4. அகப்பொருள் விளக்கம் உரைத்தல்

5. மேற்கோள் காட்டுதல்

6. இலக்கணக் குறிப்புத் தருதல்

7. பாடபேதம் சுட்டுதல்

இந்த நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1999இல் வெளியிட்டுள்ளது.

பொன்னம்பலம் பிள்ளை என்பவர் வில்லி பாரதத்திற்கு எழுதியுள்ள உரை விளக்கம், திருவிளங்கம் என்பவர் சிவஞான சித்தியார் சுபக்கப் பகுதிக்கு எழுதியுள்ள பேருரை, நவநீத கிருஷ்ண பாரதியாரின் திருவாசக ஆராய்ச்சிப் பேருரை, பெரும்புலவர் சி. கணேசையர் தொல்காப்பிய உரைகளுக்கு வரைந்துள்ள விளக்கங்களும் ஆராய்ச்சி முன்னுரைகளும் ஈழத்துத் தமிழ்ப் புலவர்களில் முதன்மையானவராகச் சொல்லப்படுபவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான 'அரச கேசரி' என்பவர் மொழிபெயர்த்த காளிதாசனின் இரகு வம்சத்திற்குக் கணேசையர் எழுதியுள்ள விளக்கவுரையும் பண்டித சு. அருளம்பலவனாரின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சிப் பேருரையும், திருவாசக விரிவுரையும், நா. சிவபாதசுந்தரனாரின் புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சியில் புத்துரையும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஈழத்துத் தமிழறிஞர்களின் தமிழ்ப் பணியாகும்.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சூரியனார் கோவில் ஆதீனத்தில் இருந்த இலக்கணத் தம்பிரான் என்ற (அவரது உண்மைப் பெயர் தெரியவில்லை) சைவத் துறவி மட்டும் இல்லாவிட்டால், தமிழில் உள்ள ஒரே பேருரை என்று சொல்லப்படும் பாஷ்ய நூலாகிய சிவஞானபோத மாபாடியம் என்னும் சிவஞான முனிவரின் நூல் அச்சில் வராமலே மறைந்துபோயிருக்கும்.

தமிழகத்தின் பழங்காலம் பற்றிய செய்திகளைப் புராணத் தன்மையிலிருந்து வரலாற்றுத் தன்மைக்கு மாற்றியமைத்ததில் ஈழத் தமிழறிஞர்களுக்குப் பெரும் பங்கு இருப்பது போலப் பழந்தமிழர் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கான மூலம் என்பதை நிறுவுவதில் பெரும் பங்காற்றிய ஆபிரகாம் பண்டிதரைப் போல, அவரை அடியொற்றித் தன் ஆய்வுகளை வளப்படுத்தியவர் ஈழத்தைச் சேர்ந்த அறிஞர் சுவாமி விபுலானந்தர். அவருடைய யாழ் நூல் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையின் உள்ளே, யாழ் ஆசிரியன் அமைதி கூறும் 25 அடிகளுக்கு இயைந்ததொரு விரிவுரையாகக் கருதத்தக்கது. அத்துடன் 'நரம்பின் மறை' எனத் தொல்காப்பியரும், 'இசையொடு சிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்ட யாழ் நூல்பொருள் இருந்த இடம் தெரியாது மறைந்துவிட்ட இந்நாளிலே, தன்னுடைய நுண்ணறிவாலும் இசைப் புலமையாலும் அதனை மீள் கட்டமைப்புச் செய்து தமிழர்களுக்கு அளித்த பெருமையுடையதாகக் கருதத்தக்கதாகும்.6 'திராவிட சொற்பிறப்பு' பற்றிய ஆராய்ச்சியில் முன்னின்று பணிபுரிந்த கிறித்தவப் பாதிரியார் ஞானப்பிரகாசரும்7 இலங்கையைச் சேர்ந்தவர்தான். இவர் யாழ்ப்பாண வரலாறு பற்றிய நூலொன்றும் எழுதியுள்ளார்.

பழந்தமிழ்ப் பதிப்புகளில் கவனம் செலுத்தும் தமிழக ஆய்வாளர்கள் ஈழத்துப் பதிப்புகள் குறித்துக் கவனம் கொள்வதில்லை. ஆனால் தமிழ்நூல் பதிப்பு வரலாறு ஈழத்துப் பதிப்புகள் இன்றி நிறைவு பெற்ற தாகாது. சில நூல்களுக்குத் தமிழகப் பதிப்புகளைவிட ஈழப் பதிப்புகளே சிறந்தவையாக விளங்குகின்றன. அத்தகைய சிறப்புடைய ஈழப் பதிப்புகளில் ஒன்று தஞ்சைவாணன் கோவை ஆகும்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்ற தமிழ்நூல் வரிசையில் சிற்றிலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகிற ஒரு தொகுப்பும் உண்டு. இதனைப் பிரபந்த இலக்கியம் என்றும் கூறுவார்கள். பழைய காலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங் கலக்காரிகை, அகப்பொருள் விளக்கம் போன்ற இலக்கண நூல்களுடன் மூவருலா, குற்றாலக் குறவஞ்சி, திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை போன்ற நூல்களையும் கற்பிப்பது வழக்கம். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வித்துவான், புலவர், தமிழ் பி.ஏ. போன்ற பட்டய, பட்ட வகுப்புகள் நவீனமாகத் தொடங்கப்பட்ட பின்பும் மேற்குறிப்பிட்ட நூல்களின் பயிற்சியும் தொடர்ந்தது. இதனால் பாடத்திட்டத்திற்காகப் பழந்தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிடும் வணிக நிறுவனங்களும் தோன்றின. இத்தகைய நிறுவனங்கள் வெளியிட்ட நூல்களில் பல, பிழைகள் மலிந்து இருந்தன. அந்த வகையில் சிக்கிக்கொண்ட நூல்களில் ஒன்று பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை. இந்த நூல் 400 பாடல்களையுடையது. இந்தப் பாடல்களுக்குக் குன்றத்தூர் அஷ்டாவதானி சொக்கப்ப நாவலர் என்பவர் இயற்றிய உரையும் உண்டு. நூலைப் போலவே இந்த உரையும் புகழ்பெற்றது. ஆகையால் ஏட்டுச் சுவடிகளில் இந்த நூலும் உரையும் இணைத்தே எழுதப்பட்டிருக்கும்.

இது முதன்முதலாக 1893இல் திருமயிலை வித்துவான் சண்முகம்பிள்ளை அவர்களாலும் தெய்வசிகாமணி முதலியார் அவர்களாலும் ஒழுங்கு செய்யப்பட்டு, ப.மு. செல்வராச முதலியார் அவர்களால் சென்னை அமெரிக்கன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட இந்நூல் கிடைப்பது அரிதாகிவிட்டதனால் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரால் 1936இல் மீண்டும் அச்சிடப்பட்டது. அதன் பதிப்பாசிரியராகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டம் பெற்ற ந. சுப்பையா பிள்ளை என்ற யாழ்ப்பாணத்து அறிஞர் பணி செய்துள்ளார்.

முன்னர் அச்சிடப்பட்ட புத்தகத்தில் ஏராளமான பிழைகள் நிறைந்திருந்ததனால் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகையில் 1907 வாக்கில் வெளியிடப்பட்ட இந்நூலில் திருத்தப்பட்ட பாடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துத் தம் நுண்ணறிவால் அதனிடையே உள்ள பிழைகளைத் திருத்தியும் குறைகளை நிறைவாக்கியும் பல வகை ஆராய்ச்சிக் குறிப்புகளும் அடிக்குறிப்புப் பாட பேதங்களும் சேர்த்தமைத்து இப்பதிப்பைச் செம்மையாக்கினார். அவர் செம்மை செய்த விதத்தைப் பற்றி,

எமக்குக் கிடைத்த ஏட்டுப் பிரதிகளால் இப்பதிப்பு அடைந்த திருத்தங்கள் பலப்பல. அவற்றுள் சில வருமாறு: ப.மு. செல்வராச முதலியார் பதிப்பில் 4ஆம் பக்கம், 1-2 வரியில், 'களவினொழுக்கமுங் காலமுந்- திங்களிரண்டி னகமென மொழிப' என விளங்கா மேற்கோட் செய்யுளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது முன்னும் பின்னுமுள்ள வசனங்களோடு யாதொரு தொடர்புமின்றி நிற்கக் காணலாம்.

அஃது ஏட்டில், 'களவினொழுகுங் காலமும் 'திங்களிரண்டினகமென மொழிப' என்னுஞ் சூத்திரவுரையிற் கண்டுகொள்க.' (இப்பதிப்பு பக்கம்-6; வரி 4-6 எனக் கண்டு திருத்தப்பெற்றது.)

இங்ஙனமே, 82ஆம் செய்யுளின் விசேடவுரை இறுதிப் பாகத்திலும் 118ஆம் கிளவிக் கருத்துரை இறுதியிலும், 128ஆம் செய்யுளின் விசேடவுரையிலும் முற்பதிப்புப் பாடமும், ஏட்டிற் கண்டு திருத்திய இப்பதிப்பிற் பாடமுங் கண்டுகொள்க. இன்னும் பல இடங்களில் இப்பதிப்பில் ஏற்பட்ட இவைபோன்ற திருத்தங்கள் முற்பதிப்புடன் இப்பதிப்பை ஒப்பிட்டு நோக்கிற் புலப்படும். இன்னும் மூலத்துடன் உரை பொருந்தாமலும், பொழிப்புரையொடு விசேடவுரை ஒவ்வாமலும் ஐயுறவுக்கு இடமாய் சில பகுதிகள் கீழ்க்குறிப்பிற் குறிப்பிட்டும், விரிவஞ்சிச் சில பகுதிகள் குறிப்பிடாதும் (வேறு ஏடு அகப்படின் ஆராய

http://tamil.sify.com/kalachuvadu/jan06/fu...php?id=14122829

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.