Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர மேயராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார்

Featured Replies

யாழ். மாநகர சபையில் இன்று பலப்பரீட்சை

 

jaffnaபரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது.

கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.

அதிகபட்சமாக 16 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர முதல்வர் பதவிக்கு முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிந்துள்ளது. பிரதி முதல்வர் பதவிக்கு ஈசனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, 13 ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது தரப்பில் மணிவண்ணனை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், இரகசிய வாக்கெடுப்பை நடத்தினால், தாம் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளது.

எனினும், இரகசிய வாக்கெடுப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

இந்தநிலையில், மாநகரசபையில் 10 ஆசனங்களைக் கொண்ட ஈபிடிபி எடுக்கப் போகும் முடிவு முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.

அதேவேளை, யாழ். மாநகரசபையில், ஐதேகவுக்கு 3 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1 உறுப்பினரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்ற சாவகச்சேரி நகரபைக்கான முதல்வர் தெரிவும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

அதேவேளை, ஈபிடிபி 3 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், தமிழர் சமூக ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும், ஐதேக 1 ஆசனத்தையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/03/26/news/30020

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
 

யாழ்.மாநகர மேயர் யார்?

 

யாழ்.மாநகரை மேயரைத் தெரிவு செய்வதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் யாழ்.மாநாகர சபையில் இன்று கூடியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆர்னோல்ட், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக  வி. மணிவண்ணன், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/78642.html

  • தொடங்கியவர்
யாழ். மாநகர சபை மேயருக்கு இரகசிய வாக்கெடுப்பு
 
 

- எஸ். ஜெகநாதன், எஸ். நிதர்ஷன்

image_0d14d734fa.jpg

யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துவத இல்லை பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என்று வாக்கெடுப்பு நடத்தியபோது 25 பேர் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் 19 பேர் பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-மாநகர-சபை-மேயருக்கு-இரகசிய-வாக்கெடுப்பு/71-213295

யாழ் மாநகர சபை மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு

 

 

யாழ் மாநகர சபை மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு 

யாழ் மாநகர சபைக்கான புதிய மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது புதிய மேயரை தெரிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் மேயர் வேட்பாளராக மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபை மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  இம்மனுவேல் ஆனோலட், தமித் தேசிய மக்கள் முன்னணி சார்பில்  வி மணிவண்ணன் மற்றும் ஈ.பி.டி.பி. சார்பில்  ரெமிடியஸ் ஆகியோர் மேயர் வேட்பாளராக போட்டியிட்டனர்.

இதனையடுத்து புதிய மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் அறிவித்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

யாழ் மாநகர சபை மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு

இந்நிலையில் 25 ற்கும் அதிகமான உறுப்பினர்கள் மேயர் தெரிவிற்காக வாக்கெடுப்பை இரகசிய வாக்கெடுப்பாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

45 உறுப்பினர்களில் ஒருவர் சமுகமளிக்காத காரணத்தினால் 44 உறுப்பினர்கள் இந்த இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.

யாழ் மாநகர சபை மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு

 

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/select-the-new-Mayor-for--Jaffna-Municipal-Council

  • வாக்கெடுப்பு நிறைவு!!
 
 

வாக்கெடுப்பு நிறைவு!!

 

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. கணக்கிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பா மணிவண்ணன், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

வாக்கெடுப்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

http://newuthayan.com/story/78677.html

  • தொடங்கியவர்
 
 

மீண்டும் வாக்கெடுப்பு

 

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஏனைய தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட மணிவண்ணன் 13 வாக்குகளையும், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதனால் சட்ட ஒழுங்குளின் பிரகாரம் ஒரே வாக்குகளைப் பெற்ற இருவரில் ஒருவரை நீக்கி, கூடுதல் வாக்குகளைப் பெற்ற நபருடன் இணைத்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/78686.html

  • தொடங்கியவர்
  • ஆர்னோல்ட், ரெமிடியஸ் இடையே போட்டி!!
 

ஆர்னோல்ட், ரெமிடியஸ் இடையே போட்டி!!

 

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் முதல் வாக்கெடுப்பில் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஏனைய தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட மணிவண்ணன் 13 வாக்குகளையும், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் 13 வாக்குகளையும் பெற்றனர்.

அதனால் சட்ட ஒழுங்குளின் பிரகாரம் ஒரே வாக்குகளைப் பெற்ற இருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதில் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஆர்னோல்ட், குலுக்கல் முறையில் தெரிவான ரெமிடியஸ் ஆகியோருக்கிடையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/78691.html

  • தொடங்கியவர்
 
 
 

யாழ். மாநகர மேயராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார்

 

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இன்றைய கூட்டத்தில் ஏகமனதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார்.

மேயரைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும் , தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும் பெற்றனர்.

சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் ஒரே வாக்குகளைப் பெற்ற இருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதில் மணிவண்ணன் நீக்கப்பட்டார்.

கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஆர்னோல்ட், குலுக்கல் முறையில் தெரிவான ரெமிடியஸ் ஆகியோருக்கிடையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தத்தத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் ரெமிடியஸ் வாக்கெடுப்பில் இருந்து தானாக விலகியதால், ஆர்னோல்ட் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

http://newuthayan.com/story/78704.html

  • தொடங்கியவர்

யாழ். மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு – போட்டியில் இருந்து விலகினார் ரெமீடியஸ்

 

arnoldயாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாக  இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து,  யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார்.

முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை முன்மொழிந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,வி. மணிவண்ணனின் பெயரை முன்மொழிந்தது. ஈபிடிபி முடியப்பு ரெமீடியசின் பெயரை முன்மொழிந்தது.

இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு,  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார்.

ஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக- சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவுளச்சீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது.

இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/03/26/news/30042

  • தொடங்கியவர்
 
 
 

ஆர்னோல்ட்டை வரவேற்ற விக்கிப்பீடியா!!

 

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனை விக்கிப்பீடியா முழுமையாக சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளது. அதில் அவரது முழுமையான விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

28954471_2083342811681065_12289658050319

https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_ஆர்னோல்ட்

http://newuthayan.com/story/78854.html

  • தொடங்கியவர்

யாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் ( வாக்கெடுப்பு குறித்த முழுவிபரம் )

Anaold-_1754.jpg?resize=800%2C600

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யபட்டு உள்ளார்.  யாழ்.மாநகர சபையின் சபை அமர்வுகள் இன்றையதினம் திங்கட்கிழமை காலை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

 
உறுப்பினர் ஒருவர் கலந்து கொள்ளவில்லை. 
 
அதன் போது சபை அமர்வில் தெரிவு செய்யபட்ட 45 உறுப்பினர்களில் 44 உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொண்டனர். உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சுதர்சிங் விஜயகாந்த் அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
 
முதல்வர் தெரிவு. 
 
யாழ்.மாநகர சபை முதவர் தெரிவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. தமிழரசு கட்சி சார்பில் இமானுவேல் ஆர்னோல்டும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முடியப்பு ரெமிடீயஸ்சும் முதல்வராக  பிரேரிக்கப்பட்டனர்.  அதனை அடுத்து ஆணையாளர் வாக்கெடுப்பின் மூலம் முதல்வர் தெரிவு செய்யப்படுவார் என அறிவித்தார். அதனை அடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தவதா ? பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா ? என உறுப்பினர்கள் இடையில் சர்ச்சை எழுந்தது.
 
வாக்கெடுப்பு. 
 
அதனை அடுத்து முதல்வர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பா ? பகிரங்க வாக்கெடுப்பா? என வாக்கெடுப்பு நடாத்தப்படும் என ஆணையாளர் அறிவித்து அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.  அதன் போது 44 உறுப்பினர்களில்  இரகசிய வாக்கெடுப்பு என 25  உறுப்பினர்களும் , பகிரங்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என 19 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
 
முதல்வருக்கான வாக்கெடுப்பு. 
 
அதனை அடுத்து முதல்வராக பிரேரிக்கப்பட்ட இமானுவேல் ஆர்னோல்ட் , விஸ்வலிங்கம் மணிவண்ணன் , மற்றும் முடியப்பு ரெமிடியஸ் ஆகியோருக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.  வாக்கெடுப்பில் இமானுவேல் ஆர்னோல்ட் 18 வாக்குகளையும் , விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் முடியப்பு ரெமிடியஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளை பெற்றனர்.  வாக்கெடுப்பில் எவரும் அறுதி பெரும்பான்மை எடுக்காததால் இருவருக்கு இடையில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் என ஆணையாளர் அறிவித்தார்.
Anaold-_1722.jpg?resize=800%2C600
 
 திருவுள சீட்டெடுப்பு
 
விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் முடியப்பு ரெமிடியஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளை பெற்றமையால் அவர்களில் ஒருவரை திருவுள சீட்டெடுப்பு மூலம் நீக்கப்படுவார்கள் என அறிவித்தார்.  அதனை அடுத்து திருவுள சீட்டெடுப்பு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சீட்டினை எடுக்க யாராவது ஒரு உறுப்பினரை முன் வருமாறும் , சீட்டெடுப்பில் எவரது பெயர் சீட்டில் உள்ளதோ அவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என ஆணையாளர் அறிவித்தார்.
 
மணிவண்ணன் நீக்கம். 
 
அதையடுத்து சீட்டினை எடுக்க போட்டியாளர்களில் ஒருவரான முடியப்பு ரெமிடியஸ் முன் வந்தார். அவர் சீட்டினை எடுப்பதற்கு ஆட்சேபனை இருக்கின்றதா என ஆணையாளர் உறுப்பினர்களிடம் கேட்டார் எவரும் ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து சீட்டினை ரெமிடியஸ் எடுத்தார். அதில் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதனால் மணிவண்ணன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் .
 
அதனை தொடர்ந்து மீண்டும் யார் முதல்வர் என ஆர்னோல்ட் மற்றும் ரெமிடியஸ் இடையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
 
இடைவேளை. 
 
அதன் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அடுத்த வாக்கெடுப்பு தொடர்பில் நாம் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்தாலோசிக்க வேண்டும் எனவே இடைவேளை வேண்டும் என ஆணையாளரிடம் கோரினார்கள்.
 
இடைவேளைக்கு கணக்கெடுப்பு. 
 
அதற்கு தமிழரசு கட்சியினர் இடைவேளை வேண்டாம் என்றனர். அதனால் இடைவேளை வேண்டுமா ? வேண்டாமா ? என உறுப்பினர்களிடம் கேட்டு பெரும்பான்மை முடிவினை அடுத்தே தீர்மானிக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்தார்.
 
அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இடைவேளை வேண்டும் என கோரியதை அடுத்து அவர்களுக்கு 10 நிமிட இடைவேளை வழங்க ஆணையாளர் சம்மதித்ததுடன் உறுப்பினர்களை சபா மண்டபத்திற்கு வெளியில் செல்ல வேண்டாம் என கோரினார்.
 
ரெமிடியஸ் போட்டியில் இருந்து வாபஸ். 
 
பின்னர் 10 நிமிட இடைவேளை முடிவடைந்த பின்னர் ஆணையாளர் மீண்டும் சபையை கூட்டி வாக்கெடுப்புக்கு தயாரான போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முடியப்பு ரெமிடியஸ் தான் முதல்வர் போட்டியில் போட்டியிட வில்லை என ஆணையாளருக்கு அறிவித்து போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார்.
 
ஆர்னோல்ட் தெரிவு. 
Anaold-_1896.jpg?resize=800%2C600
அதனால் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ்.மாநகர சபை முதல்வராக தெரிவானார். அதை அடுத்து முதல்வருக்கு உரிய ஆடை அணிந்தது முதல்வர் கதிரையில் ஆர்னோல்ட் அமர்ந்து முதல்வராக பொறுப்பெடுத்தார்.
 
அதனை அடுத்து ஆர்னோல்ட் தலைமையில் சபை ஆரம்பமானது. அடுத்து துணை முதல்வர் தெரிவு அறிவிக்கப்பட்டது. தமிழரசு கட்சி சார்பில் துணை முதல்வராக துரைராசா ஈசன் பிரேரிக்கப்பட்டார்.
 
துணை முதல்வர் ஈசன். 
 
மற்றைய கட்சிகள் எவரையும் பிரேரிக்காதமையால் துரைராசா ஈசன் போட்டியின்றி துணை முதல்வராக தெரிவானார்.
 
சபை ஒத்திவைப்பு. 
 
அதனை அடுத்து சபை அமர்வினை யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட் ஒத்திவைத்தார். அடுத்த சபை அமர்வுகள் தொடர்பிலான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Anaold-_1701.jpg?resize=717%2C538Anaold-_1715.jpg?resize=717%2C538  Anaold-_1740.jpg?resize=800%2C600Anaold-_1754-1.jpg?resize=800%2C600Anaold-_1774.jpg?resize=800%2C600  Anaold-_1897.jpg?resize=800%2C600Anaold-1728.jpg?resize=800%2C600Anaold_1846.jpg?resize=800%2C600
 
2ஆம் இணைப்பு – யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவானார்..
Mar 26, 2018 @ 05:34

Arnold.jpg?resize=800%2C444

யாழ். மாநகர சபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட  இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

முதல் வாக்கெடுப்பில் முன்னிலைப் பெற்ற ஆர்னோல்டுக்கும், ஈ.பி.டி.பி.-யின் ரெமிடியர்ஸிற்கும் இடையே இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், மேயர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ரெமிடியர்ஸ் அறிவித்த நிலையில்,  மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற பிரதி மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.  அதில் துரைராசா ஈசன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில்  யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு நிறைவுபெற்றதுடன், அடுத்த அமர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்  என  மேயராக தெரிவுசெய்யப்பட்ட ஆர்னோல்ட்  குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/72334/

  • தொடங்கியவர்

யாருக்கு வாக்களிப்பது என தொலைபேசியில் ஆலோசனை கேட்டார்களா ?

Municipal5.jpg?resize=615%2C461

 

யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தினுள் பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர். யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்காக இன்றைய தினம் திங்கட்கிழமை கூடி இருந்தது.

அதன் போது யாழ்.மாநகர சபை முதவர் தெரிவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. தமிழரசு கட்சி சார்பில் இமானுவேல் ஆர்னோல்டும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முடியப்பு ரெமிடீயஸ்சும் முதல்வராக பிரேரிக்கப்பட்டனர்.

அதை அடுத்து வாக்கெடுப்பு மூலம் முதல்வர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் தெரிவித்தார். அதனை அடுத்து வாக்கெடுப்புகள் நடாத்தபட்டன. அதன் போது பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர்.

வாக்கெடுப்பின் போது தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி ஊடாக தமது கட்சி தலைமைகளிடம் ஆலோசனை கேட்டார்களா ? எனும் சந்தேகம் வெளியானது.

Municipal2.jpg?resize=615%2C461Municipal3.jpg?resize=615%2C461Municipal4.jpg?resize=615%2C461  Municipal6.jpg?resize=615%2C461Municipal7.jpg?resize=615%2C461Municipal8.jpg?resize=615%2C461Municipal9.jpg?resize=615%2C461

http://globaltamilnews.net/2018/72431/

யாழ்.மாநகர சபை சபா மண்டபம் சி.சி.ரி.வி. கண்காணிப்புக்குள்…

IMG_1713.jpg?resize=615%2C461

 

யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தினுள் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன யாழ்.மாநகர சபை அமர்வுகள் இன்றைய தினம் நடைபெற்றன. அதன் போது புதிதாக திருத்தி அமைக்கப்பட்டு உள்ள சபா மண்டபத்தினுள் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதேவேளை இன்றைய தினம் யாழ்.மாகர சபை முதல்வர் தெரிவிக்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_1692.jpg?resize=615%2C461

http://globaltamilnews.net/2018/72427/

  • தொடங்கியவர்

கட்டித்தழுவி பாராட்டு….

யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்க்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டித்தழுவி தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி முதல்வராக பொறுபேற்று , சபை அமர்வை முடித்துக்கொண்டு திரும்பும் போது சபா மண்டபத்தினுள் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் , மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்டித்தழுவி கைலாகு கொடுத்து தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

IMG_1858.jpg?resize=615%2C461IMG_1863.jpg?resize=615%2C461

http://globaltamilnews.net/2018/72442/

  • தொடங்கியவர்

அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம்….

 

 

யாழ்.மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும் , அபிவிருத்தியை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு முடிவற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்த இடம் மக்கள் அளித்த ஜனநாயக உரிமையை கட்சி பேதமின்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகர அபிவிருத்திக்காக ஒற்றுமையுடன் தான் செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் அதானால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.

எங்கள் மாநகரத்தை பசுமையான மாநகரமாக மாற்ற வேண்டும். அதில் உறுப்பினர்கள் இடையில் மற்று கருத்து இல்லை அனைவரின் இலக்கும் ஒன்று இங்குள்ள வரலாற்று சின்னங்கள் . சமய அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு உரிய முறையில் மதிப்பளித்து மத தலைவர்கள் அந்த மத சம்பிரதாயங்கள் என அனைத்தையும் மதித்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் பழமை வாய்ந்த நகரம் இங்கு பல தொன்மையான சின்னங்கள் உள்ளன. நல்லூர் ஆலயம் நல்லூர் இராசதானி என வரலாற்று பின்னணி உள்ள வரலாற்று பொக்கிசங்களை பேணி பாதுகாத்து மதிப்பளிக்க வேண்டும். எனவே மக்களின் நலனுக்காக மாநகரத்தின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம். என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/72450/

  • கருத்துக்கள உறவுகள்

திரு.சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றி.

வாழ்த்துக்கள்.

அடுத்து வடக்கு முதல்வர் கதிரைக்கும் ஆசைப்படாமல் உள்ள கதிரையை கவனமாக பார்க்கவும்.

சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் அரசியல் சூதாட்டம் ஆரம்பம்!

  • தொடங்கியவர்
 
 

நல்லை ஆதினத்திடம் ஆசிர் வாதம் பெற்றார் ஆர்னோல்ட்!!

 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள இம்மானுவேல் ஆர்னோல்ட், நல்லை ஆதினக் குருமுதல்வர் தேசிக பராமாச்சாரிய சுவாகிகளைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

http://newuthayan.com/story/78931.html

  • தொடங்கியவர்
 
 
 

மீளப் போட்­டி­யிடக் கோரிய மணிக்கு அனு­மதி மறுப்பு!!

 

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் போட்­டி­யில் வாக்­கெ­டுப்­பில் தோற்­க­டிக்­கப்­
பட்ட மணி­வண்­ணன் மீண்­டும் ஆனோல்ட் உடன் போட்­டி­யிட அனு­ம­திக்க வேண்­டும் என்று விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் புதிய மேயரை தெரிவு செய்­வ­தற்­காக வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் நேற்று சபை­யின் மண்­ட­பத்­தில் கூடி­யது.

புதிய மேய­ரா­கத் தெரிவு செய்­வ­தற்­கான இர­க­சிய வாக்­கெ­டுப்­பில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பாக போட்­டி­யிட்ட இ.ஆர்­னோல்ட் 18 வாக்­கு­க­ளை­யும், தமிழ் தேசிய மக்­கள் முன்­னனி சார்­பாக போட்­டி­யிட்ட மணி­வண்­ணன் 13 வாக்­கு­க­ளை­யும், ஈ.பி.டி.பி சார்­பாக ரெமி­டி­யஸ் 13 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர்.

சட்ட ஒழுங்­கு­ளின் பிர­கா­ரம் ஒரே வாக்­கு­க­ளைப் பெற்ற இரு­வ­ரில் ஒரு­வரை நீக்கி கூடு­தல் வாக்­கு­க­ளைப் பெற்ற நப­ரு­டன் இணைத்து மீண்­டும் வாக்­கெ­டுப்பு நடத்­தத்­தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. சம வாக்கு பெற்ற ரெமி­டி­யஸ் மற்­றும் மணி­வண்­ணன் ஆகி­யோ­ரது பெயர்­கள் எழு­தப்­பட்டு சீட்டு குலுக்­கப்­பட்­டது. அதில் மணி­வண்­ணன் தோற்­க­டிக்­கப்­பட்­டார்.

ஆனோல்ட்­டுக்­கும், ரெமி­டி­ய­ஸூக்­கும் இடையே போட்டி நடத்­தத் தீர்­மா­னிக்­கப்­பட்டு சபை­யில் அறி­விக்­கப்­பட்­டது. ரெமி­டி­யஸ் மேயர் பத­விக்­கான போட்­டி­யில் இருந்து வில­கு­கின்­றேன் என்று திடீர் என அறி­வித்­தார்.

அப்­போது முன்­னணி வேட்­பா­ளர் மணி­வண்­ணன் தமக்­கும் ஆணோல்ட்­டுக்­கும் இடை­யில் போட்­டியை நடத்த வேண்­டும் என்று கோரி­னார். நீங்­கள் ஏற்­க­னவே தோற்­க­டிக்­கப்­பட்­ட­வர்.

இவர்­க­ளுக்கு இடை­யில் இடம்­பெற்ற போட்­டி­யில் ரெமி­டி­யஸ் வில­கி­யமை அவ­ரது உரிமை. மீண்­டும் போட்டி நடத்த வேண்­டிய தேவை இல்லை என வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் மணி­வண்­ண­னின் கோரிக்­கையை நிரா­க­ரித்­தார்.

 

 
 

அதிர்ஷ்டம் இல்­லாத மணி­வண்­ணன்!!

 

யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் மேயர் தேர்­வில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ளர் அதிர்ஷ்டம் இல்­லா­த­தால் குலுக்­கல் முறை­யில் ஈபி­டிபி வேட்­பா­ளர் மு.றெமீ­டி­ய­சி­டம் தோற்­றார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் புதிய மேயர் தெரிவு வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் நேற்று சபை­யின் மண்­ட­பத்­தில் நடந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பாக இ.ஆர்­னோல்ட், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னனி சார்­பாக வி.மணி­வண்­ணன், ஈ.பி.டி.பி. சார்­பாக மு.ரெமி­டி­யஸ் ஆகி­யோர் முன்­மொ­ழி­யப்­பட்டு மேயர் பத­விக்­கான போட்­டி­யில் கள­மி­றங்­கி­னர்.

புதிய மேய­ரா­கத் தெரிவு செய்­வ­தற்­கான இர­க­சிய வாக்­கெ­டுப்­பில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பாக போட்­டி­யிட்ட இ.ஆர்­னோல்ட் 18 வாக்­கு­க­ளைப் பெற்­றார். தமிழ் தேசிய மக்­கள் முன்­னனி சார்­பாக போட்­டி­யிட்ட மணி­வண்­ணன் 13 வாக்­கு­க­ளை­யும், ஈ.பி.டி.பி. சார்­பாக ரெமி­டி­யஸ் 13 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர்.

இத­னால் சட்ட ஒழுங்­கு­க­ளின் பிர­கா­ரம் ஒரே வாக்­கு­க­ளைப் பெற்ற இரு­வ­ரில் ஒரு­வ­ரைத் தெரிவு செய்ய குலுக்­கல் நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
சம வாக்­கு­க­ளைப் பெற்ற ரெமி­டி­யஸ் மற்­றும் மணி­வண்­ண­ன­து­ பெ­யர்­கள் எழு­தப்­பட்டு சீட்டு குலுக்­கப்­பட்­டது.

சபை­யில் பகி­ரங்­க­மாக வேட்­பா­ளர்­கள் முன்­னி­லை­யில் குலுக்­கல் இடம்­பெற்­றது. இதில் மணி­வண்­ணன் அல்­லது ரெமி­டி­யசை சீட்­டினை எடுக்­கு­மாறு ஆணை­யா­ளர் கேட்­டார்.

ரெமி­டி­யஸ் சீட்­டினை எடுத்து ஆணை­யா­ள­ரி­டம் ஒப்­ப­டைத்­தார்.அவர் எடுத்த சீட்­டில் மணி­வண்­ணன் பெயர் இருந்­த­தால் அவர் மேயர் பத­விக்­கான போட்­டி­யில் இருந்து விலக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

குலுக்­கல் ஆரம்­பிக்­கும்­ போது யாரு­டைய பெயர் எடுக்­கப்­ப­டு­கின்­றதோ அவர் போட்­டி­யில் இருந்து நீக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­ப­டும் என ஆணை­யா­ளர் தெரி­வித்­தி­ருந்­தார்.

 

 
 
 

யார் அந்­தக் கறுப்­பாடு?

 

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் தெரி­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்
பாக போட்­டி­யிட்ட ஆனோல்ட் 18 வாக்­கு­களை பெற்று வெற்றி பெற்­றார்.
வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னர் இர­க­சிய வாக்­கெ­டுப்பா?அல்­லது பகி­ரங்க வாக்­கெ­டுப்பா? எனக் உறுப்­பி­னர்­க­ளி­டம் கேட்­கப்­பட்­டது. பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக்கு 19 பேர் கோரிக்கை விடுத்­த­னர்.

ஆனால் பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக்கு கூட்­டாக வலி­யு­றுத்­தி­ய­வர்­க­ளில் ஒரு­வர் மட்­டும் மேயர் தெரி­வுக்­காக இடம்­பெற்ற வாக்­க­ளிப்­பில் மாறி வாக்­க­ளித்­துள்­ளார். அவ்­வாறு வாக்­க­ளித்த கறுப்­பாடு யார் என சபைக்கு வெளியே கூடிய பிர­மு­கர்­கள் பேசிக் கொண்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் ஆகி­யோர் பகி­ரங்க வாக்­கெ­டுப்பை வலி­யு­றுத்­தி­னர். தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈபி­டிபி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன இர­க­சிய வாக்­கெ­டுப்பை வலி­யு­றுத்­தின.

 

http://newuthayan.com

 
 
 

உத்­த­ரவை மீறிய முன்­னாள் மேயர்!!

 

யாழ். மாந­கர சபை மேய­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான போட்­டி­யில் இரண்­டாம்
கட்ட வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக கட்­சி­கள் தமது தலை­மை­யு­டன் பேசு­வ­தற்கு நேரம் வழங்­கப்­பட்­டது. அந்த நேரத்­திற்­குள் உறுப்­பி­னர்­கள் யாரும் சபா மண்­ட­பத்­திற்கு வெளியே செல்­லக்­கூ­டாது என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆனால் அதை­யும் மீறி முன்­னாள் மேயர் யோகேஸ்­வரி பற்­கு­ண­ராசா சபா மண்­ட­பத்­தை ­விட்டு வெளி­யே­றி ­விட்­டுப் பின்­னர் திரும்பி வந்­தார். எனி­னும் அவர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் புதிய மேயரை தெரிவு செய்­வ­தற்­காக வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் நேற்று சபா மண்­ட­பத்­தில் கூடி­யது.ஆரம்­பத்­தி­லேயே மேயர் தெரி­வுக்­கான இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­புச் சார்­பா­கப் போட்­டி­யிட்ட இ.ஆர்­னோல்ட் 18 வாக்­கு­க­ளைப் பெற்று முன்­னி­லை­யில் இருந்­த­து­டன் தமிழ் தேசிய மக்­கள் முன்­னனி சார்­பாக போட்­டி­யிட்ட மணி­வண்­ணன் 13 வாக்­கு­க­ளை­யும்இ ஈ.பி.டி.பி சார்­பாக ரெமி­டி­யஸ் 13 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர்.

இத­னால் சட்ட ஒழுங்­கு­ளின் பிர­கா­ரம் ஒரே வாக்­கு­க­ளைப் பெற்ற இரு­வ­ரில் ஒரு­வ­ரைக் குலுக்­கல் முறை­யில் நீக்கி, கூடு­தல் வாக்­கு­க­ளைப் பெற்ற நப­ருக்­கும் மற்­றை­ய­வ­ருக்­கும் இடை­யில் மீண்­டும் வாக்­கெ­டுப்பு நடத்­தத்­தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.அதன்­படி சீட்டு குலுக்­க­லில் மணி­வண்­ணன் தோல்வி அடைந்­தார்.

இத­னால் ரெமி­டி­யஸ் மற்­றும் ஆனோல்ட் போட்­டி­யில் கள­மி­றங்க வேண்­டிய சூநிலை ஏற்­பட்­டது.உடனே ஈபி­டி­பி­யைச் சேர்ந்த வேட்­பா­ளர்­கள் தாம் கட்­சித் தலை­மை­யு­டன் கலந்­து­ரை­யாட வேண்­டி­யுள்­ள­தால் ஒரு மணி­நே­ரம் இடை­வெளி தரு­மாறு கோரி­னர்.

அவர்­க­ளின் கோரிக்­கையை ஆரம்­பத்­தில் நிரா­க­ரித்த உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் பின்­னர் கூட்­ட­மைப்பு தவிர்ந்த ஏனை­ய­வர்­கள் அனை­வ­ரும் நேரம் கேட்­ட­மை­யி­னால் பத்து நிமி­டங்­கள் மட்­டும் தரப்­ப­டும் என்று அறி­வித்­தார்.அத்­து­டன் சபை­யில் இருக்­கின்ற உறுப்­பி­னர்­கள் எவ­ரும் அவையை விட்டு வெளியே செல்ல முடி­யாது அதற்கு அனு­ம­தி­யும் இல்லை என நிபந்­தனை விதித்­தார்.

சபை­யில் இடை நேரம் அறி­விக்­கப்­பட்டு உறுப்­பின்­பர்­கள் கட்சி ரீதி­யாக தமக்­குள் கலந்­து­ரை­யா­டி­னர்.இதன்­போது நாசுக்­காக முன்­னாள் மேயர் யோகேஸ்­வரி கைய­டக்க தொலை­பே­சி­யு­டன் சபை­யி­லி­ருந்து வெளி­யேறி சிறிது நேரத்­தில் பூனையை போல சத்­த­மில்­லாது உள்ளே வந்து அமர்ந்­தார்.அதன் பின்­னர் சபை கூடி­ய­தும் ரெமி­டி­யஸ் போட்­டி­யில் இருந்து வில­கு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/79002.html

 

 

 

 
 

பரப­ரப்பை ஏற்­ப­டுத்­திய யாழ். மேயர் தெரிவு!!

 

உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை விட பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான மேயர் தெரிவு நேற்­று­டன் ஒரு­வாறு முடி­வுக்கு வந்­தது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கு­ரிய மேயர், பிரதி மேய­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான அமர்வு நேற்று இடம்­பெற்­றது. காலை 9 மணிக்கு ஆரம்­ப­மா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் நேர காலத்­து­டன் சபை வளா­கத்­துக்­குள் பிர­வே­சித்­த­னர். எல்­லாக் கட்­சி­க­ளி­லும் ஆண்­கள், வேட்டி சட்­டை­யு­ட­னும், பெண்­கள் சேலை­யு­ட­னும் காணப்­பட்­ட­னர். ஆனால் விதி­வி­லக்­காக ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர் ரெமி­டி­யஸ் மாத்­தி­ரம் கோட், சூட்­டு­டன் வந்­தார். நீதி­மன்­றுக்­குச் செல்­லும் நினைப்­பில் அவர் அப்­படி வந்­தி­ருக்­க­லாம் என்று மாந­கர சபை­யின் அலு­வ­லர்­கள் பேசிக் கொண்­ட­னர்.

சபை அமர்வு நடை­பெ­றும் வளா­கத்­தைச் சுற்றி, மாந­கர சபை ஊழி­யர்­கள் வேடிக்கை பார்த்­துக் கொண்டு நின்­ற­னர். சபை அமர்வு நடை­பெ­றும் மண்­டப வாச­லில் உறுப்­பி­னர்­கள் பதிவு செய்­யப்­பட்ட பின்­னரே உள்ளே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இனந்­தெ­ரி­யா­தோர் நுழை­யா­மல் தடுப்­ப­தற்­கான ஏற்­பாடு போலும் என்று உறுப்­பி­னர்­கள் பேசிக் கொண்­ட­னர்.

ஆசன ஒழுங்கு குழப்­பம்

மண்­ட­பம் புதி­தாகக் காட்­சி­ய­ளித்­தது. புதிய கதிரை, புதிய மேசை, என்று எல்­லாமே புதி­தா­கப் பளிச்­சென்று இருந்­தது. மேசை­யில், உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த பெயர் வரி­சை­க­ளைப் பார்த்து உறுப்­பி­னர்­கள் குழம்­பி­னர். கட்சி ஒழுங்­கில் உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஆச­னங்­கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே அவர்­க­ளின் குழப்­பத் துக்குக் கார­ணம்.

ஆச­னங்­க­ளின் ஒழுங்கு, உள்­ளூ­ராட்சி உப விதி­க­ளுக்கு அமை­யவே போடப்­பட்­டி­ருந்­தன. முன்­னைய காலங்­க­ளில் மேய­ராக இருந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை, பிரதி மேயர்­க­ளுக்கு அடுத்த முன்­னு­ரிமை, முன்பு உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கு, அவர்­கள் இருந்த காலத்­தின் அடிப்­ப­டை­யில் அடுத்த முன்­னு­ரிமை என்று வழங்­கப்­பட்டு, புதி­தா­கத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு அதன் பின்­னர் ஆச­னங்­கள் போடப்­பட்­டி­ருந்­தன.

ஒரு­வர் ‘மிஸ்­ஸிங்’

45 உறுப்­பி­னர்­க­ளில் 44 உறுப்­பி­னர்­கள் வந்­த­னர். ஒரு­வர் மாத்­தி­ரம் வர­வில்லை. தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யிட்ட விஜ­ய­காந்தே ‘மிஸ்­ஸிங்’. அவர் ‘கம்பி எண்­ணிக்’ கொண்­டி­ருப்­ப­தால் வர­வில்லை என்று சக உறுப்­பி­னர்­கள் பேசிக் கொண்­ட­னர்.

இந்த அமர்­வைப் பார்­வை­யி­டு­வ­தற்கு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராசா, எம்.ஏசு­மந்­தி­ரன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்­கம், ஜெய­சே­க­ரம், பரஞ்­சோதி ஆகி­யோ­ரும், ஈ.பி.டி.பி. சார்­பில் டக்­ளஸ் தேவா­னந்­தா­வின் சகோ­த­ரர் தயா­னந்­தா­வும் வந்­தி­ருந்­த­னர். முன்­னணி சார்­பில் அந்­தக் கட்­சி­யின் ‘பெரிய தலை­கள்’ வர­வில்லை. விருந்­தி­னர்­க­ளுக்­குத் தனியாக அறை ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு அரு­கில் ஊட­கங்­க­ளுக்குத் தனி­யான அறை ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது.

பொது­வாகக் குறித்த நேரத்­துக்கு எதை­யும் ஆரம்­பித்து எம்­ம­வர்­க­ளுக்­குப் பழக்­கம் இல்லை. நேற்­றைய அமர்வு அச்­சொட்­டாக 9 மணிக்கு தொடங்­கி­யது. வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் ம.பற்­றிக் டிறஞ்­சன் முன்னே வர, மாந­கர சபை ஆணை­யா­ளர் ஜெய­சீ­லன், பிரதி ஆணை­யா­ளர் உள்­ளிட்­டோர் பின்­னால் அணி­வ­குத்து வந்­த­னர். அவர்­கள் சபை மண்­ட­பத்­துக்­குள் பிர­வே­சித்­த­தும், உறுப்­பி­னர்­கள் எழுந்து மரி­யாதை செலுத்­தி­னர்.

பற்­றிக், சபை­யின் பிர­தான ஆச­னத்­தில் அமர்ந்­தார். ஜெய­சீ­லன் ஆணை­யா­ள­ருக்­கு­ரிய தனது ஆச­னத்­தில் அமர்ந்­தார். வழ­மை­யான வர­வேற்­பு­டன் அமர்வு தொடங்­கி­யது.

காத்­தி­ருக்க முடி­யாது

வராத ஒரே ஒரு உறுப்­பி­ன­ருக்­காக சபை அமர்வை ஒரு மணி நேரம் ஒத்­தி­வைக்க வேண்­டும் என்று ரெமி­டி­யஸ் சபை­யில் கோரி­னார். சபைக்கு வராத விஜ­ய­காந் அவ­ரது கட்­சி­யைச் சேர்ந்­த­வரே. ஆனால் ஆணை­யா­ளரோ வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக அதை மறுத்து விட்­டார். சபையை நடத்­து­வ­தற்கு 23 உறுப்­பி­னர்­கள் இருந்­தால் போது­மா­னது. கோரம் உள்­ளது. மேலும், அமர்வு 9 மணிக்கு ஆரம்­ப­மா­கும் என்று முன்­னரே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால், காத்­தி­ருக்க முடி­யாது என்று கறா­ரா­கக் கூறி அடுத்த விட­யத்­துக்­குள் நகர்ந்­தார்.

பிர­தான கட்­டத்­துக்­குள் அமர்வு சென்­றது. மேய­ருக்­கான பெயரை முன்­மொ­ழி­யு­மாறு கோரப்­பட்­டது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் ஆர்னோல்ட்­டின் பெயரை சொல­மன் சிறில் முன்­மொ­ழிந்­தார். தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி சார்­பில் மணி­வண்­ண­னின் பெயரை, வர­த­ரா­ஜன் பார்தி ­பன் முன்­மொ­ழிந்­தார். ஈ.பி.டி.பி.யின் சார்­பில் முன்­னாள் மேயர் திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ராசா, ரெமி­டி­ய­ஸின் பெயரை முன்­மொ­ழிந்­தார்.

வாக்­கெ­டுப்பை எப்­படி நடத்­து­வது ?

மும்­மு­னைப் போட்­டிக்­கான களம் திறக்­கப்பட்­டது. ஆணை­யா­ளர் பற்­றிக், வாக்­கெ­டுப்பை எப்­படி நடத்­து­வது என்­பது தொடர்­பில் கேட்­டார். பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக்­கான குர­லும், இர­க­சிய வாக்­கெ­டுப்­புக்­கான குர­லும் ஒலித்­தது. அத­னால் எப்­படி வாக்­கெ­டுப்பு நடத்­து­வது என்­பது தொடர்­பில் வாக்­கெ­டுப்பு நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அந்த வாக்­கெ­டுப்பு பகி­ரங்க வாக்­கெ­டுப்­பாக நடந்­தது. உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ர­தும் பெயர் அழைக்­கப்­பட்­டது. அவர்­கள் பகி­ரங்க வாக்­கெ­டுப்பா, இர­க­சிய வாக்­கெ­டுப்பா என்­ப­தற்கு வாக்­க­ளித்­த­னர். சபா­மண்­ட­பத்­தில் ஆணை­யா­ள­ருக்கு பக்­கத்­தில் உள்ள ‘போர்ட்­டில்’ பதிவு செய்­யப்­பட்­டது.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈ.பி.டி.பி., சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இணைந்து இர­க­சிய வாக்­கெ­டுப்­புக் கோரி­னர். 25 வாக்கு இவர்­க­ளுக்கு கிடைக்­கப் பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசி­யக் கட்சி இணைந்து பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக் கோரி­னர். இவர்­க­ளுக்கு 19 வாக்கு கிடைக்­கப் பெற்­றது. கூட்­ட­மைப்பு மண்­கவ்வ, இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்த முடிவு செய்­யப்­பட்­டது.

வாக்­குப்­பெட்டி, வாக்­குப் பதிவு செய்­வ­தற்­கான இடம், வாக்­குச் சீட்டு என்­பன 5 நிமி­டத்­துக்­குள் தயா­ரா­கின. வேக­மாக அதி­கா­ரி­கள் செயற்­பட்­ட­னர்.

வாக்­குப் பதிவு

ஆணை­யா­ள­ருக்கு அரு­கில் வாக்­கைப் பதிவு செய்­வ­தற்­கான இடம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ருக்கு முன்­னால் வாக்­குப் பெட்டி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் பெயர் கூறி அழைக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் எழுந்து சென்று தமது வாக்­கு­க­ளைப் பதிவு செய்து விட்டு, வாக்­குப் பெட்­டிக்­குள் சீட்­டைப் போட்­ட­னர்.

சபை மண்­ட­பத்­துக்­குள் மூலைக்கு மூலை ‘சிசி­ரிவி’ கம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­தன. இவர்­கள் இரக­சி­ய­மாக வாக்­குப் போடு­வதை அந்த சிசி­ரிவி கம­ராக்­கள் கண்­கா­ணிக்­காதோ என்று ஊடக நண்­பன் ஒரு­வன் கேட்­டான். அவன் கேட்­டுக் கொண்­டி­ருக்­கை­யி­லேயே, தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாந­கர சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட புது­மு­க­மான தர்­சா­னந்த், தனது வாக்­கைப் பதிவு செய்­து­விட்டு சபை­யி­லி­ருந்த எல்­லோ­ருக்­கும் காட்டி வாக்­குப் பெட்­டிக்­குள் போட்­டார்.

இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டால், தமிழ் அர­சுக் கட்சி உறுப்­பி­னர்­கள் தாம் யாருக்கு வாக்­க­ளிக்­கின்­றோம் என்­பதை சக உறுப்­பி­னர்­க­ளுக்கு காண்­பித்­து­விட்டே போட­வேண்­டும் என்று கட்சி அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது. அவர் மாத்­தி­ரம் அத­னைச் செவ்­வனே செய்­தார். (ரொம்ப கட்சி விசு­வா­சம்­போல). ஈ.பி.டி.பியி­னர் தர்­சா­னந்­தின் செயற்­பாட்­டுக்கு எதி­ரா­கக் கொஞ்­சம் குரலை உசத்தி எழுப்­பி­னர். ஆனா­லும் எது­வும் எடு­ப­ட­வில்லை.

தடக்­கிய சிறில்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ருக்கு கூட்­ட­மைப்பு சார்­பில் பிரே­ரிக்­கப்­ப­டு­வார் என்று அர­சல்­பு­ர­ச­லாக கதை­ய­டி­பட்ட சிறில், வாக்­க­ளிக்­கச் செல்­லும்­போது சபா­மண்­ட­பத்­தில் தடக்கி விழப்­பார்த்­தார். இந்­தச் சம்­ப­வம் எல்­லோ­ரது புரு­வங்­க­ளை­யும் கொஞ்­சம் உயர்த்­தி­யது.

ஒரு­வாறு வாக்­கெ­டுப்பு முடிந்­தது. போட்­டி­யிட்ட மூன்று வேட்­பா­ளர்­கள் அல்­லது அவர்­கள் சார்­பில் ஒவ்­வொ­ரு­வரை வாக்கு எண்­ணும் இடத்­துக்கு வரு­மாறு ஆணை­யா­ளர் பற்­றிக் அழைத்­தார். ஆணை­யா­ள­ருக்கு முன்­னால் உள்ள மேசை­யில் வைத்து வாக்கு எண்­ணப்­பட்­டது. போட்­டி­யிட்ட மூவ­ரி­ன­தும் பெயர்­கள் மூன்று காட்­போட் பெட்­டி­க­ளில் ஒட்­டப்­பட்­டன.

தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் ஆர்னோல்ட்­டும், முன்­னணி சார்­பில் பார்த்­தி­ப­னும், ஈ.பி.டி.பி. சார்­பில் திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ரா­ஜா­வும் வாக்கு எண்­ணு­வதைக் கண்­கா­ணிக்க நின்­ற­னர். வாக்­குப்­பெட்டி உடைக்­கப்­பட்­டது. ஆணை­யா­ளர் ஒவ்­வொரு வாக்­காக காட்­டிக் காட்டி உரிய பெட்­டி­க­ளில் போட்­டார். உறுப்­பி­னர்­க­ளின் இத­யத் துடிப்­பின் வேகம் எகி­றிச் சென்­றது.

அதிஷ்­ட­மில்லா மணி

இறு­தி­யில் ஆனோல்ட் 18 வாக்­கு­க­ளை­யும், ரெமி­டி­ய­ஸூம், மணி­வண்­ண­னும் தலா 13 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். தமிழ் அர­சுக் கட்­சிக்­கா­ரர்­கள், மேசை­க­ளில் தட்­டி­யும், கைதட்­டி­யும் ஆர­வா­ரம் செய்­த­னர்.

இரண்டு பேர் சம­னாக வாக்­குப் பெற்­றால் திரு­வு­ளச் சீட்­டின் மூலம் (குலுக்­கல்) தெரிவு செய்­வது என்­ப­து­தான் சட்­டம் என்று ஆணை­யா­ளர் பற்­றிக் அறி­வித்­தார். யாரு­டைய பெயர் எடு­ப­டு­கின்­றதோ அவர் மேயர் போட்­டி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வார் என்­றும் அறி­வு­றுத்­தல் வழங்­கி­னார்.

ரெமி­டி­ய­ஸின் பெய­ரும், ஆர்னோல்ட்­டின் பெய­ரும் துண்­டில் எழு­தப்­பட்­டது. குலுக்கி எடுக்க முற்­ப­டும்­போது, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உறுப்­பி­னர், வாக்­குப் பெட்­டியை போட்டு நன்­றா­கக் குலுக்கி எடுங்கோ என்­றார். ஆணை­யா­ள­ரும், அவ்­வாறே செய்­தார்.

போட்­டி­யிட்ட இரண்டு பேரில் ஒரு­வர் எடுக்­க­லாம். இல்­லா­வி­டின், மாந­கர சபை உறுப்­பி­னர் ஒரு­வர் சீட்டு எடுக்­க­லாம் என்று ஆணை­யா­ளர் அறி­வித்­தார். சபை­யில் கொஞ்ச செக்­கன்­கள் அமைதி நில­வி­யது. முன்­னணி, ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர்­க­ளின் இத­யத்­து­டிப்பு ஆர்­மு­டு­கிச் சென்­றது. ரெமி­டி­யஸ் தானே எடுப்­ப­தா­கத் தெரி­வித்து எழுந்­தார். சீட்டை எடுத்து ஆணை­யா­ளர் கையில் கொடுத்­தார். அதில் மணி­வண்­ண­னின் பெயர் இருந்­தது.

களம் அறியா உறுப்­பி­னர்

ஆணை­யா­ளர் அந்­தப் பெயரை அறி­வித்­த­தும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி உறுப்­பி­னர் ஒரு­வர், மேசை­யில் தட்டி, கைதட்டி ஆர­வா­ரித்­தார். மணி­வண்­ண­னின் பெயர் அறி­வித்­த­தும் அவர் வெளி­யேற்­றப்­பட்­டார் என்­பதை மறந்து வெற்றி பெற்று விட்­டார் என்று நினைத்து கர­கோ­சம் எழுப்­பி­யி­ருக்­கி­றார். சில செக்­கன்­க­ளி­லேயே நிலமை என்ன என்­பதை உணர்ந்து அவர் பம்­மி­விட்­டார்.

இப்­போது உற­வி­னர்­க­ளாக இருந்த ஆர்னோல்ட்­டுக்­கும், ரெமி­டி­ய­ஸுக்­கும் போட்டி. ஆணை­யா­ளர் பற்­றிக் அதனை அறி­வித்­தார். ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர்­கள், தாம் எடுத்­தோம் கவிழ்த்­தோம் என்று செயற்­பட முடி­யாது. கட்­சி­யு­டன் பேச வேண்­டும். ஒரு மணித்­தி­யா­லம் தர­வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­த­னர். ஆணை­யா­ளர் பற்­றிக், அவைக்­குள் வந்த பின்­னர் கட்­சி­யு­டன் பேசு­வ­தற்கு அனு­மதி வழங்­க­மு­டி­யாது என்று திட­மாக மறுத்­து­விட்­டார்.

ஆனால் உறுப்­பி­னர்­கள் மீண்­டும் மீண்­டும், குழந்­தைப் பிள்­ளை­கள் போல அடம்­பி­டித்­துக் கேட்­ட­னர். சபை­யில் பெரும்­பான்­மை­யி­னர் என்ன முடிவு எடுக்­கின்­ற­னரோ அதன்­படி செயற்­ப­டத் தயார் என்று ஆணை­யா­ளர் அறி­வித்­தார். அதற்­கும் வாக்­கெ­டுப்பு நடந்­தது. உறுப்­பி­னர்­க­ளின் ஆச­னங்­க­ளில் அமர்ந்­த­வாறே கைகளை உயர்த்தி வாக்­க­ளித்­த­னர். கட்­சி­யு­டன் பேசு­வ­தற்கு அனு­ம­திக்­க­வேண்­டும் என்­பதே பெரும்­பான்மை உறுப்­பி­னர்­க­ளின் நிலைப்­பா­டாக இருந்­தது.

‘பாத்­ரூம்’ சென்ற உறுப்­பி­னர்­கள்

நாங்­கள் வாக்­குச் சீட்டு தயா­ரிக்க 10 நிமி­டம்­ தேவை. அந்த 10 நிமி­ட ­நே­ரத்­துக்­குள் கதை­யுங்­கள். சபை மண்­ட­பத்தை விட்டு வெளி­யேற முடி­யாது என்ற நிபந்­த­னை­யு­டன் ஆணை­யா­ளர் அனு­மதி வழங்­கி­னார்.
திக்குத் திக்­காக இருந்த ஒவ்­வொரு கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றா­கி­னர். கூடிக் கூடிக் கதைத்­த­னர்.

எல்­லோ­ரது அலை­பே­சி­க­ளும் துரி­த­மாக வேலை செய்­தன. சபை மண்­ட­பத்­துக்­குள் இருந்து அலை­பே­சி­யில் பேசி­னர். சபை மண்­ட­பத்தை விட்டு வெளி­யில் போக முடி­யாது என்று ஆணை­யா­ளர் கட்­ட­ளை­யிட்­டா­லும், சிறு­பிள்­ளை­கள் ‘பாத்­ரூம்’ போகின்­றேன் என்று சொல்லி வெளி­யில் ‘எஸ்­கேப்’ ஆகு­வ­தைப்­போன்று மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் சில­ரும் வெளி­யில் சென்­ற­னர்.

பத்து நிமி­டத்­தில் சபை அமர்வு தொடங்­கி­யது. வாக்­குச் சீட்டு, வாக்­குப்­பெட்டி எல்­லாம் தயார். திடீ­ரென்று எழும்­பிய ரெமி­டி­யஸ் தான் போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தார். இந்­தத் திடீர் அறி­விப்­பால், சபைக்­குள் மெல்­லிய சல­னம் எழுந்­தது.

ஆர்னோல்ட்டை விடாத மணி

ரெமி­டி­ய­ஸு­டன் முட்டி மோதி தோற்­றுப்­போன மணி­வண்­ணன், அவர் வில­கு­வ­தாக இருந்­தால் முன்­னரே வில­கி­யி­ருக்­க­ வேண்­டும். இப்­போது அவர் வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ள­தால், எனக்­கும் ஆர்னோல்ட்­டுக்­கும் இடை­யில் போட்டி நடத்­துங்­கள் என்று கேட்­டார்.

அப்­ப­டிச் செய்ய முடி­யாது. சட்­ட­ரீ­தி­யாக நீங்­கள் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளீர்­கள் என்று ஆணை­யா­ளர் சட்­டத்­த­ரணி மணிக்கு சட்­டத்தை எடுத்­துச் சொன்­னார். இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் மற்­றொரு சட்­ட­த்த­ர­ணி­யான ரெமி­டி­யஸ், ஆர்னோல்ட்­டுக்­கும் அவ­ருக்­கும் நீங்­கள் போட்டி வைக்­க­லாம்­தானே என்று மணிக்கு பக்­கப்­பாட்டுப்பாடி­னார். ஆணை­யா­ளர் அதை எல்­லாம் நிரா­க­ரித்­து­விட்­டார்.

மேய­ராக ஆர்னோல்ட் அறி­விக்­கப்­பட்­ட­தும், கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள் மீண்­டும் மேசை­யில் பல­மா­கத் தட்டி ஆர­வா­ரம் செய்­த­னர். ஆர்னோல்ட் எல்­லாப் பக்­க­மும் கைகூப்பி வணக்­கம் வைத்­தார். அவ­ருக்கு முன் ஆச­னத்­தி­லி­ருந்து ரெமி­டி­யஸ் எழுந்து கைகொ­டுத்­தார்.

போட்­டி­யின்றி பிரதி மேயர் தெரிவு

ஆர்னோல்ட், ஆணை­யா­ளரால் வெளி­யில் அழைத்­துச் செல்­லப்­பட்­டார். மேயர் ஆடை­யு­டன், சபைக்கு திரும்பி வந்­தார். ஆணை­யார் இது­வரை இருந்து நடத்­திய ஆச­னம் அகற்­றப்­பட்டு மரத்­தால் செய்­யப்­பட்ட மேயர் கதிரை திரையை விலக்கி முன்­னுக்கு கொண்டு வரப்­பட்­டது. ஆனோல்ட் அமர்ந்­தார். சபை அமர்வு ஆரம்­ப­மா­கி­யது.

பிரதி மேயர் தெரிவு ஆரம்­ப­மா­னது. பெயர்­களை முன்­மொ­ழி­யு­மாறு கோர, தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் பிரதி மேய­ரின் பெயர் அறி­விக்­கப்­பட்­டது. வேறு எவ­ரும் பிரே­ரிக்­கப்­ப­டா­ தால் கூட்­ட­மைப்­பின் சார்­பில் பிரதி மேய­ராக முன்­மொ­ழி­யப்­பட்ட ஈசன் போட்­டி­யின்றி தெரி­வா­னார்.

இதன் பின்­னர் அடுத்த சபை அமர்வு சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக அறி­விக்­கப்­ப­டும் என்று மேயர் ஆனோல்ட் அறி­வித்­தார். சபை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. எல்­லோ­ரும் வெளி­யே­றி­னர்.

 

http://newuthayan.com/story/79005.html

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:

யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்க்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டித்தழுவி தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி முதல்வராக பொறுபேற்று , சபை அமர்வை முடித்துக்கொண்டு திரும்பும் போது சபா மண்டபத்தினுள் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் , மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்டித்தழுவி கைலாகு கொடுத்து தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சுத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கூட்டமைப்பிற்கும் ஈபிடிபிக்கும் இடையே உள்ளூராட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எல்லா சபைகளிலும் ஈபிடிபி கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

ஏற்கனவே கூட்டமைப்பிற்கும் ஈபிடிபிக்கும் இடையே உள்ளூராட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எல்லா சபைகளிலும் ஈபிடிபி கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும்.

ஈ பி டி பி யின் தயவில் டமில் அரசு கட்சி ஆர்னோல்ட்  யாழ் மேயர் என்று ஒரு வால்பிடி பேப்பர்காரனுக்கும் செய்தி போட விருப்பமில்லையாக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நவீனன் said:

யாருக்கு வாக்களிப்பது என தொலைபேசியில் ஆலோசனை கேட்டார்களா ?

யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தினுள் பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர். யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்காக இன்றைய தினம் திங்கட்கிழமை கூடி இருந்தது.

அதன் போது யாழ்.மாநகர சபை முதவர் தெரிவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. தமிழரசு கட்சி சார்பில் இமானுவேல் ஆர்னோல்டும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முடியப்பு ரெமிடீயஸ்சும் முதல்வராக பிரேரிக்கப்பட்டனர்.

அதை அடுத்து வாக்கெடுப்பு மூலம் முதல்வர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் தெரிவித்தார். அதனை அடுத்து வாக்கெடுப்புகள் நடாத்தபட்டன. அதன் போது பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர்.

வாக்கெடுப்பின் போது தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி ஊடாக தமது கட்சி தலைமைகளிடம் ஆலோசனை கேட்டார்களா ? எனும் சந்தேகம் வெளியானது.

  Municipal9.jpg?resize=615%2C461

இதிலை இருக்கிறவர் ஒரே நேரத்திலை பெரியவீடு சின்னவீடு இரண்டிட்டையும் ஆலோசனை கேக்கிறார் போலை..:grin:

Edited by குமாரசாமி
QvU6nl

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.