Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள்

தற்கொலை செய்வோம்..!" - நவநீதிகிருஷ்ணன் ஆவேசம் gros-lol.gif

navaneethakrishnan3456-600-1522234589.jp

டெல்லி: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டல் விடுத்தார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

'உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை' என்று கர்நாடகம் தனது வாதத்தை முன்வைக்கிறது. எனினும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் நவநீதிகிருஷ்ணன் எம்பி காவிரி விவகாரத்தை எழுப்பினார்.

அப்போது அவர் "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டத்தால் என்ன பயன்? தமிழகத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்களாகிய நாங்கள் ராஜினாமா செய்வதற்கு பதில் தற்கொலைதான் செய்து கொள்வோம்..!" என்று ஆவேசமாக கூறினார்.

ஒன் இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்கள் தற்கொலை செய்தாவது தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.