Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் - கபே அமைப்பு

Featured Replies

சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் - கபே அமைப்பு

(நா.தினுஷா)

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டிய கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி  தென்னகோன் தற்போதைய அரசியல் பிரமுகர்கள் தேவையானபோது அரசாங்கமாகவும் தேவைகள் முடிவடைந்தவுடன் அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாகவும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். 

sampanthan.jpg

நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கூட்டு எதிர்கட்சியினரின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 

தேசிய அரசாங்கம் ஆட்சியை நிலைநிறுத்தி தற்போது 4 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த காலத்திலிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. 

இந்த விமர்சனங்களை தாண்டி நல்லாட்சி அரசாங்கத்தின்  தற்போது ஆட்சி சிதைவடைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் எதிர்க்கட்சி பதவியினை வகித்ததில்லை. தனக்கு தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடனும் தேவைகள் நிறைவேறியதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் செயற்ப்பட்டு வருகின்றார். இது எதிர்க்கட்சி தலைமை பதவிக்கு பொருத்தமான பண்பல்ல.

இந்த அரசாங்கத்தின் ஆட்சித்தலைமைத்துவத்தின் பிரதான கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சியாக கணப்படுவதோடு பெரும்பான்மை விருப்பை வென்ற கட்சியாகவும் காணப்படுகின்றது. இதேவேளை ஸ்ரீ லங்கா சதந்திர கட்சிக்கும் ஆட்சி பொறுப்புகள் சமமாக வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் ஆதரவு அளித்திருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததன் பின்னர் அமைச்சு பொறுப்புக்களை துறப்பதாக அறிவித்தனர். அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்துக்கு எதிராக  சூழ்ச்சிகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறானவொரு நிலை ஊருவாவதற்கு அரசியல் முக்கியஸ்தர்களின் இரட்டை வேடங்களே காரணமாகும். இதேவேளை தனது பிழைகளை கருத்தில் கொள்ளாமல் நாட்டின் தலைவர் ஜனாதிபதியை குற்றம்சாட்டும் நிலைகளும் உருவாகியுள்ளன. அரசியல்வாதிகள் இரு பக்கமும் செயற்பட நினைக்கும் போது பொறுப்புள்ள அரசங்கத்தினை உருவாக்குவது சிரமமாவதோடு  அரசாங்கத்தின் உறுதித்தன்மையும் சிதைவடையும். 

இரா. சம்பந்தன் தனது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றாரே தவிர வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்காகவோ அரசாங்கத்திடம் கைகோர்க்க வில்லை எனறார். 

http://www.virakesari.lk/article/32459

On 4/12/2018 at 1:09 PM, நவீனன் said:

கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி  தென்னகோன்

ஜனநாயக வேடம் பூண்டுள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் இன்னொரு அமைப்பே இந்த கபே அமைப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த விமர்சனங்களை தாண்டி நல்லாட்சி அரசாங்கத்தின்  தற்போது ஆட்சி சிதைவடைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் எதிர்க்கட்சி பதவியினை வகித்ததில்லை. தனக்கு தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடனும் தேவைகள் நிறைவேறியதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் செயற்ப்பட்டு வருகின்றார். இது எதிர்க்கட்சி தலைமை பதவிக்கு பொருத்தமான பண்பல்ல.

சிறுபான்மையினரின் கட்சி எதிர்கட்சியாக இப்படித்தான் செயற்பட முடியும். சிறுபான்மையினரின் கட்சி எதிர்க்கட்சியாக வந்த பொறாமையில் இவர்கள் பேசுகிறார்கள்.

Quote

இரா. சம்பந்தன் தனது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றாரே தவிர வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்காகவோ அரசாங்கத்திடம் கைகோர்க்க வில்லை எனறார். 

அரசாங்கத்தை வற்புறுத்தாமல் தமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கலாம் என சம்பந்தர் நினைத்து செயற்படுகிறார். அது குள்ள சிங்கள அரசுகளிடம் நடைபெறாது என்பதும் அவருக்கு தெரியாதது அல்ல. தனிப்பட்ட தேவைகளை (சலுககைகளை) பெறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஏன்  சிங்கள, முஸ்லிம், மலையக கட்சிகளும் பெறுவதை (சலுகைகளை) இவர்கள் சொல்லவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2018 at 5:39 PM, நவீனன் said:

இரா. சம்பந்தன் தனது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றாரே தவிர வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்காகவோ அரசாங்கத்திடம் கைகோர்க்க வில்லை எனறார். 

 ஐயா மகா கெட்டிக்காறன் பாருங்கோ. அறுபது வருடமாய் தமிழனின் எல்லா உரிமைகளையும் சிங்களவனுக்கு வாரிக் குடுத்து தனக்கு வாக்குப்போட்ட மக்களை  நடுத்தெருவில் விட்டிட்டு இன்னும் அந்த மக்களுக்கு தலைவராய் இருக்கிறார்  பாருங்கோ. இவர் தான் சிங்கள நாட்டிற்கு தேவையான சரியான தலீவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.