Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாளில் நிகழ்ந்தவை

Featured Replies

இந்த தலைப்பில் இன்றைய நாளில் முன்னர் நடந்த நிகழ்வை பதியவும் , கொடுக்கும் போது ட்பதியும் த்கதியயும் கொடுக்க மறவாதீர்கள்

மார்ச் 25

25 மார்ச் 1896 க்ரீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கிய நாள்

25 மார்ச் 1971 இந்திய க்ரிக்கெட் வீரர் ஆஷிஷ் கபூர் பிறந்த நாள்

25 மார்ச் 1970 முதல்முறையாக கான்கார்டு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த நாள்

25 மார்ச் 1925 (J L Baird) ஜெ எல் பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை லண்டனில் அறிமுகம் செய்த நாள்.

25 மார்ச் 1807 இங்கிலாந்தில் முதல் முதலாக் பயணிகள் ரயில் ஓடிய நாள்.

25 மார்ச் 1992 இங்கிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற நாள்

1655 மார்ச் 25- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன், டைட்டான், கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.

1957மார்ச் 25 - ஐரோப்பிய பொருளாதார சமூகம் (The European Economic Community) உருவாக்கப்பட்டது.

1914மார்ச் 25 - Norman Borlaug, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் பிறந்தார்

  • Replies 107
  • Views 19.7k
  • Created
  • Last Reply

நன்றி

Edited by Jamuna

  • தொடங்கியவர்

தயவு செய்து இந்த தலைப்பில் அரட்டையடிப்பதை தவிர்க்கவும்

  • தொடங்கியவர்

மார்ச் 26

26 மார்ச் 2007, முதன் முதலாக தமிழரின் விமானப்படையின் வெற்றிகரமான் தாக்குதல்

26 மார்ச்1953 - ஜோனாஸ் சால்க் போலியோ மருந்து கண்டு பிடித்து அறிமுகப்படுத்திய தினம்

26 மார்ச் 1979 - காம்ப் டேவிடில், எகிப்தும் இஸ்ரேலும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்ட தினம்

26 மார்ச் வங்காள தேசத்தின் சுதந்திர தினம்

26 மார்ச் 1931 கொல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்ட தினம்

26 மார்ச் 1923 BBC தினசரி தட்ப வெப்ப நிலை பற்றிய forecast ஆரம்பித்த தினம்

26 மார்ச் 1871 இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்

26 மார்ச் 1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்தியது

26 மார்ச் 2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்

26 மார்ச் 2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்

Edited by வானவில்

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமானதினை விட்டுட்டீங்களே வானவில்.

26 மார்ச் 2007, முதன் முதலாக தமிழரின் விமானப்படையின் தாக்குதல்

  • தொடங்கியவர்

கந்தப்பு முதல் தாக்குதலென்று சொல்ல முடியாது கடந்த்த ஆண்டில் பலாலியில் தாக்குதல் நடை பெற்றது என்று சொல்லப் பட்டது ஆனாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு முதல் தாக்குதலென்று சொல்ல முடியாது கடந்த்த ஆண்டில் பலாலியில் தாக்குதல் நடை பெற்றது என்று சொல்லப் பட்டது ஆனாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை

அப்படியானால் தமிழீழத்துக்கு வெளியே நடந்த முதல் தாக்குதல் என்று இன்றைய தாக்குதலை சொல்லலாமா

  • தொடங்கியவர்

நிச்சயமாக சொல்லலாம் உமது ஆசைப்படியே அதையும் இணைத்து விட்டேன்

  • தொடங்கியவர்

27 மார்ச்

27 மார்ச் 1845 எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜன் பிறந்த நாள்

27 மார்ச் 1914: முதல் முதலாக மனித உடம்பில் மற்றவரின் ரத்தம் செலுத்தப்பட்ட நாள்

27 மார்ச் 1790 ஷீ லேஸ் (shoe lace) கண்டுபிடிக்கப்பட்ட நாள்

27 மார்ச் 1968 முதல் விண்வெளி வீரர் யூரி காகரின் மறைந்த நாள்

27 மார்ச் 1855 கெரசின் கண்டு பிடிக்கப்பட்ட நாள்

27 மார்ச்1958 - நிக்கிட்ட குருஷேவ் சோவியத் அதிபரானார்.

27 மார்ச்1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

27 மார்ச் 1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.

27 மார்ச்1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.

  • தொடங்கியவர்

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 88ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன

845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.

1979 அமெரிக்காவில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

1988 : ஹலப்ஜா நகரின் குர்திஷ் இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

  • தொடங்கியவர்

மார்ச் 29 ஆண்டின் 88ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன

1973 - அமெரிக்கத் துருப்புக்கள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.

2003 - அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்தது.

2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடைசெய்த முதல்நாடானது.

2005 - யாஹூ! 360 சேவை ஆரம்பிக்கப்பட்டது

1790 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி பிறந்தார்

1866 முதன் முதலாக உய்ர்காப்பு ஊர்தி சேவை( ambulance ) ஆரமிக்கப் பட்டது

1910இல் பிரான்சில் தலாவது கடல் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொன்டது

1945 2ம் உலக யுத்ததில் ஜேர்மனியினால் கடைசித்தாக்குதால்(buzz bomb) லன்டனில் ஆரம்பிக்கப் பட்டது

1955இல் நியூசிலாந்து கிரிக்கட் அணி இங்கிலாதிற்கெதிராக 26ஓட்டங்களிற்க்கு சகல விக்கடையும் இழந்த்தௌ ஏடன் பார்க் மைதானத்தில்

1970இல் துருக்கியில் ஏற்பட்ட 7.3ரிச்டர் பூமியதிர்ச்சியில் 254 கிராமங்கள் அழிந்தது

தாய்வான் நாள்

இளைஞர் நாள்

  • தொடங்கியவர்

மார்ச் 30 ஆண்டின் 89ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

யாழ் களம் ஆரம்பிக்கப் பட்ட நாள்,

யாழிற்க்கு வாழ்த்துக்கள்

30 மார்ச் 1842, ஜ்யார்ஜியாவில் முதல் முதலாக மயக்க மருந்து (anesthesia) கொடுத்து அறுவை சிகிச்சை நடந்த நாள்

30 மார்ச் 1919 மகாத்மா காந்தி ரௌலட் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த நாள்

30 மார்ச்1853 வின்சென்ட் வான் காக் என்கிற புகழ் பெற்ற ஹாலந்து ஓவியர் பிறந்த தினம்

30 மார்ச்1867 - அலாஸ்கா என்கிற மாகாணத்தை அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிய நாள்.

(அலாஸ்கா US இன் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க மாகாணம். இது உலகின் பெரிய 18 நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளை விடவும் பெரிய மாகாணம்.)

30 மார்ச்1948 மகாத்மா காந்தி மறைந்த நாள் (தியாகிகள் தினமாக இந்தியர் அனுசரிக்கும் தினம்

30 மார்ச் 1988 தமிழ்நாடு ரயில்வே அணியைத் தோற்கடித்து ரஞ்சிக் கோப்பையை வென்ற தினம்.

30 மார்ச் 1923, முதல் முதலாக ஒரு பயணிகள் கப்பல் உலகைச் சுற்றி வந்து (130 நாளில்) நியு யார்க் சேர்ந்த நாள்

30 மார்ச் 1858, முதல் முதலாக பென்சிலுடன் ரப்பரையும் சேர்த்து அறிமுகப்படுத்திய நாள்

1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.

1981 - அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி (John Hinckley, Jr.) என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.

சிவாஜி நாயகி ஷ்ரேயாவின் பிறந்த தினம்

  • தொடங்கியவர்

மார்ச் 31 ஆண்டின் 90ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.

1990 - இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது

31 மார்ச் 1889 - 985 அடி (300 மீட்டர்) உயர Eiffel Tower மக்கள் பார்வைக்காக/மேலே ஏறுவதற்காக திறக்கப்பட்ட நாள்

31 மார்ச்1959 தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்த நாள்

31 மார்ச்1979 மால்டா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற நாள்

31 மார்ச்1966 நிலவைச் சுற்றி வருவதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் லூனா 10 செலுத்தப்பட்ட நாள்

1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1931 - நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நீலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

1596 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை பிறந்த தினம்

1727 - ஐசாக் நியூட்டன் இறந்த தினம்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 1 ஆண்டின் 91ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.

1 ஏப்ரல் 1867 சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியான தினம்

1 ஏப்ரல் 1937 ஏடன் (Aden) பிரிட்டிஷ் காலனியான தினம்

1 ஏப்ரல் 1960 முதல் தட்ப வெப்ப நிலை அளக்கும்/கணிக்கும் satellite செலுத்தப்பட்ட நாள்

1 ஏப்ரல் 1953 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தில் மேற்கிந்தியத்தீவுகளின் வால்காட், வொர்ரெல் மற்றும் வீக்ஸ் (Three Ws) மூவரும் நூறு ரன்கள் எடுத்த நாள்

1 ஏப்ரல் 1889 முதல் பாத்திரம் கழுவும் இயந்திரம் (dishwashing machine) விற்பனைக்கு வந்த நாள். .

1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அமுலுக்கு வந்தது.

1973 - புலிகளைக் காப்பதற்கான செயற்றிட்டம் (Project Tiger) இந்தியாவின் Corbett National Park இல் தொடங்கப்பட்டது.

1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.

1979 - ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

2004 - ஜிமெய்ல் தொடங்கப்பட்டது

  • தொடங்கியவர்

ஏப்ரல் 2 ஆண்டின் 92ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.

உலக சிறுவர் நூல் நாள்

1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.

1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் ஈஈ இறந்த தினம்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 3 ஆண்டின் 93ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள்

33 - இயேசு, (பி. கி.பி. 1 ) இறந்தார்

1917 - விளாடிமிர் லெனின் அஞ்ஞாதவாசத்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.

1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.

1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1934 - டேம் ஜேன் குட்டால் சிம்ப்பன்சியைப் பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண் பிறந்த தினம்

1973 - பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் பிறந்த தினம்

1680 - சிவாஜி, மராட்டியப் பேரரசர் (கிபி. 1630) இறந்தார்

1932 - Wஇல்கெல்ம் ஓச்ட்நல்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய வேதியியலாளர் (கிபி. 1853) இறந்தார்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 4 ஆண்டின் 94ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.

1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 370,000 பேர் வரை பலியாயினர்.

1960 - செனகல் விடுதலை அடைந்தது.

1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் கொலைசெய்யப்பட்டார்.

1968 - அப்பல்லோ திட்டம் 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்

1976 - சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அதிபர் இறந்த தினம்

1929 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர் இறந்த தினம்

1968 - மார்டின் லூதர் கிங், கறுப்பினத் தலைவார் இறந்த தினம்

1979 - சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் அதிபர் இறந்த தினம்

1990 - கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர் இறந்த தினம்

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்

தாய்வான், ஹொங்கொங் - சிறுவர் தினம்

செனகல் - விடுதலை நாள்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 5 ஆண்டின் 95ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

1942 - ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாண்டன.

1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.

1957 - இந்தியாவில், பொதுவுடமைவாதிகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (Jigme Dorfi) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1896 -இல் எதன்ஸில் முதலாவது நவீன ஒலிம்பிக் தொடங்கப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உண்மையிலேயே பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.மீண்டுமொருமுறை என் நன்றிகள்.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • தொடங்கியவர்

ஏப்ரல் 6 ஆண்டின் 96ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.

GOOD FRIDAY வாழ்த்துக்கள்

கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1965 - ஏளி பேட் (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1994 - ருவாண்டா அதிபர் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இனப்படுகொலைகள் ஆரம்பமானது

ரபேல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் பிறந்த மற்றும் இறந்த தினம். பிறப்பு 1483, இறப்பு 1520

1896ம் ஆண்டில் எதென்ஸில் இடம் பெற்ற முதலாவது நவீன ஒலிம்பிக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கொன்னொலியால் முதலாவது தங்கப் பதக்கம் பெறப்பட்டது

1906ம் ஆண்டு முதல் தடவையாக காட்டுன் பதிப்புரிமை பெறப்பட்டது

1909ம் ஆண்டில் அமரிக்கர்களான றொஉஅர்ட் பேரி மற்றும் மத்தியூ கென்சன் ஆகியோரால் வடதுருவம் கண்டுபிடிக்கப் பட்டது.

1925ம் ஆண்டில் முதல் தடவியாக விமானத்தில் படம் கான்பிக்கப் பட்டது(British Air)

1992ல் மைக்கிரோசொப்ட் வின்டோஸ் 3.1ஐ அறிவித்தது, இது வின்டோஸ்3.0 வின் திருத்திய பதிப்பு

யாழில்

N.SENTHIL அவ்ர்களின் 29வது பிறந்த நாள்

செந்திலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.உண்மையிலேயே பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.மீண்டுமொருமுறை என் நன்றிகள்.தொடருங்கள்.

வானவில்லுக்கு என் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் குசா மற்றும் கறுப்பி, எனக்கு தெரிந்தவற்றி நான் பதியிறேன் என்னால் உங்களிற்க்கு தெரிந்து ஏதும் தவற விட்டிருப்பின் பதியுங்கள், எல்லோருமே பதிந்தால் நன்றாகவிருக்கும் என்று நினைக்கின்றேன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 7 ஆண்டின் 97ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

உலக சுகாதார நாள்

1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிவித்தது.

1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1940 - அமரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரிம் முத்திரை முதன் முதலாக வெளியிடப்பட்டது

1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

1964 - ஐபிஎம் (IBM) தனது System/360 ஐ அறிவித்தது.

1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

1983 - Story Musgrave, Don Peterson இருவரும் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1994 - ருவாண்டாவில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது

1996 சனத் ஜெயசூரியா பாகிஸ்தானுக்கெதிராக வேகமான அரை சதத்தை 17 பந்துகளில் பெற்று உலகசாதனை படைத்தார்

2006 - வ. விக்னேஸ்வரன்னின் இறப்பு, தமிழீழ மாமனிதர் விருது பெற்றவர்.

  • தொடங்கியவர்

ஏப்ரல் 8 ஆண்டின் 98ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 267 நாட்கள் உள்ளன.

கிறிஸ்தவர்கள் இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்குமுகமாக உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்

1767 - தாய்லாந்தின் அயுத்தயா வல்லரசு (Ayutthaya kingdom) பர்மியரிடம் வீழ்ந்தது.

1899 - மார்த்தா பிளேஸ் (Martha Place) மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண் ஆனார்.

1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன

8 ஏப்ரல்1938 - ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான் பிற்ந்த நாள்

8 ஏப்ரல்1963 - இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக் ஸ்டுவர்ட் பிறந்த நாள்

8 ஏப்ரல் 1953 முதல் 3-D சினிமாப் படம் வெளியான நாள்

8 ஏப்ரல் 1973 தலை சிறந்த ஓவியர் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso) மறைந்த நாள்

Edited by வானவில்

ஆஹா சூப்பர் தரவுகள். இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் "குட்மோர்னிங் சிறீலங்கா" என்ற நிகழ்ச்சியில் "இதே நாளில்" என்ற பகுதியில் இப்படியான தரவுகள் சொல்லுறவர்கள். அவர்கள் விளங்காத மாதிரி டக்கென வாசித்துடுவார்கள். கேட்க கடினமாக இருக்கும். ஆனால் இங்கு எப்போதும் வாசிக்கத்தக்கவாறு மிக விளக்கமாக பதிந்திருக்கிறீங்க, நன்றிகள் வானவில்.

Edited by வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.