Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்

Featured Replies

  • கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்
 

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்

 நடன ஆசிரியர் காயம்

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன

ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது.
இருவரும் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

http://newuthayan.com/story/89260.html

பொம்பிளையலில் வீரம் காட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்

%255BUNSET%255D


 
-பாறுக் ஷிஹான்-
 
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கிருந்த நடனஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கி தப்பி சென்றுள்ளனர்.
 
இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (30) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
 
 மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் திடிரென அத்துமீறி நுழைந்த குழு ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன் அவரை வாளபல்  வெட்டியுள்ளது. அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும்  வாளால் வெட்டிக்காயப்படுத்திய பின் அங்கிருந்து    தப்பிச் சென்றுள்ளது.
 
இதன் பின்னர் காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது
 
 மேலும் குறித்த வாள்வெட்டில் ஈடுபட்ட  இருவர் தப்பி   மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த  சிசிரிவி கமராவில் பதிவாகிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் புங்குடுதீவு பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் 37 வயதினை உடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 

நடன ஆசிரியர் மீதான வாள் வெட்டு தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.v

 
%255BUNSET%255D
-பாறுக் ஷிஹான்-
 
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் அவரது தாய்  மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
 
இன்றைய தினம்(30) கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் மீது மேற்கொள்ளப்பட்ட வெட்டு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார் தாக்குதலாளிகளின் இலக்கு தவறியுள்ளதாகவும் அவர்கள் தாக்க வந்த இலக்கு நடன ஆசிரியரின் தங்கை எனவும் குறிப்பிட்டனர்.
 
சம்பவம் நடைபெற்ற போது நடன ஆசிரியரின் தங்கை வீட்டில் இருந்துள்ளார்.எனினும் தாக்குதல் நடைபெற ஆரம்பமான போது தன்னை சுதாகரித்துக்கொண்டு அறை ஒன்றில் ஒளிந்து கொண்டதாக விசாரணையின் போது குறிப்பிட்டள்ளார்.
 
இந்த தாக்குதலுக்கு  சுவிஸ் நாட்டில் உள்ள தனது கணவரின் முதலாவது வயது கூடிய  மனைவி தான் காரணம் எனவும் சில தினங்களுக்கு முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமண முறிவு பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு  அவர் அச்சுறுத்தினார்.
இதனால் நான்  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து போது  எனது கணவரின் வேண்டுகோளின் படி சமாதானமாக சென்றதாகவும் மீண்டும் திடிரென இவ்வாறு சுவிஸ் நாட்டு பெண் தன்னை தாக்குவதற்கு கூலிக்கு நார்களை அமர்த்தி தன்னை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கூறினார்.
 
குறித்த இச்சம்பவத்திற்கு அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட 32 வயதுடைய  இளைஞர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.இவர் சுவிஸ் நாட்டில் உள்ள வயது கூடிய பெண்(அன்ரீ) ஒருவரை சூழ்நிலை காரணமாக திருமணம் முடித்துள்ள அதே  வேளை இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது கொக்குவிலில் உள்ள நடன ஆசிரியரின் தங்கை மீது ஆசை கொண்டு சுவிஸ் நாட்டில் உள்ள தனது மனைவிற்கு தெரியாமல் மறு மணம் ஒன்றை   செய்துள்ளார்.
 
இந்த விடயம் தற்போது முதலாவது மனைவிற்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சினை எழுந்து தற்போது வெட்டுச்சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.
 
இச்சம்பவத்தில் காயமடைந்த நாகராசா லீலா(வயது50) தாய்இநடன ஆசிரியையான 34 வயதுடைய நாகராசா யாளினி ஆகியொர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 
 

Edited by colomban
error correction

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:
  • கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்
 

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்

 நடன ஆசிரியர் காயம்

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன

ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது.
இருவரும் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

http://newuthayan.com/story/89260.html

யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்புது எண்டு நான் சொன்னால் விசயம் தெரியாமல் கதைக்கிறான் எண்டுவினம். :cool:

  • தொடங்கியவர்
  •  
  • ஆசி­ரியையின் கூந்­தலை அறுத்­துக் கொடுமை கொக்­கு­வி­லில் சம்­ப­வத்தின் பின்னனி!!
 
 

ஆசி­ரியையின் கூந்­தலை அறுத்­துக் கொடுமை கொக்­கு­வி­லில் சம்­ப­வத்தின் பின்னனி!!

யாழ்ப்­பா­ணம் – கொக்­கு­வில் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றுக் குள் புகுந்த இரு­வர் அங்­கி­ருந்த நடன ஆசி­ரி­யை­யும் அவ­ரது தாயா­ரை­யும் கத்­தி­யால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­விட்­டுத் தப்­பிச் சென்­ற­னர். படு­கா­ய­ம­டைந்த ஆசி­ரி­யை­யும், தாயும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டனர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 2.45 மணி­ய­ள­வில் கொக்­கு­வில் மூன்­றாம்­கட்­டை­யில் (தாவ­டிக்கு அண்­மை­யில்) நடந்­துள்­ளது.
மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வர் வீட்­டுக்­குள் நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

ஆசி­ரி­யை­யின் கூத்­தலை வெட்­டிக் அவ­ரைக் கொடூ­ர­மா­கக் கொடு­மைப்­ப­டுத்­தி­னர். அவ­ரைக் கத்­தி­யால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். தாக்­கி­ய­வர்­க­ளைத் தடுக்­கச் சென்ற ஆசி­ரி­யை­யின் தாயை­யும் அவர்­கள் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். தாக்­கு­தலை நடத்­தி­விட்டு இரு­வ­ரும் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

கடும் காயங்­க­ளுக்கு உள்­ளான ஆசி­ரி­யை­யும், தாயை­யும் அய­ல­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

தாக்­கு­த­லா­ளி­க­ளின் இலக்கு ஆசி­ரியை இல்லை என்­றும், அவ­ரது தங்­கையே என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஆசி­ரி­யை­யின் தங்கை சம்­ப­வத்­தின்­போது வீட்­டில் இருந்­துள்­ள­னர். அவர் சுதா­ரித்­துக்­கொண்டு ஒளிந்து கொண்­ட­தால் தப்­பிக்­கொண்­டுள்­ளார்.

வெளி­நாட்­டில் உள்ள ஒரு­வ­ருக்­கும் இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வத்­தில் தொடர்­பி­ருக்­க­லாம் என்று பொலி­ஸார் சந்­தே­கிக்­கிக்­கின்­ற­னர்.

சுவிஸ் நாட்­டி­லி­லுள்ள தனது கண­வ­ரின் முதல் மனை­வியே தாக்­கு­த­லுக்­குக் கார­ணம் என்று ஆசி­ரி­யை­யின் தங்கை விசா­ர­ணை­யின்­போது தெரி­வித்­துள்­ளார். சில தினங்­க­ளுக்கு முன்­னர் அவர் தன்­னைத் தொடர்­பு­கொண்டு திரு­மண முறி­வுப் பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்­திட வேண்­டும் என்று அச்­சு­றுத்­தி­னார் என்­றும் அது தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அவரே கூலிக்கு ஆள்­களை வைத்­துக் கொல்ல முயற்­சித்­தி­ருக்­க­லாம் என்­றும் ஆசி­ரி­யை­யின் தங்கை விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ளார்.

தாக்­கு­த­லா­ளி­கள் அந்­தப் பகு­தி­யில் உள்ள பாது­காப்­புக் கமரா ஒன்­றில் பதி­வா­கி­யுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று கொக்­கு­வில் பகு­தி­யில் உள்ள கடை­யொன்­றில் கத்தி வாங்­கிக் கொண்டு ஆசி­ரி­யை­யின் வீட்­டுக்­குச் சென்று தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர் என்­ப­தும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­கள் பயன்­ப­டுத்­திய மோட்­டார் சைக்­கிள் வவு­னிய மாவட்­டத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்த பொலி­ஸார் சந்­தே­க­ந­பர்­கள் இன்று கைது செய்­யப்­ப­ட­லாம் என்­றும் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/89324.html

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2018 at 7:46 AM, குமாரசாமி said:

யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்புது எண்டு நான் சொன்னால் விசயம் தெரியாமல் கதைக்கிறான் எண்டுவினம். :cool:

வழமைக்கு திரும்பினபடியால் தான் வாள் வெட்டு நடக்குது tw_tounge:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.