Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்…

Featured Replies

இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான  பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்…

 திருவாய் மலர்தருளினார் மறவன்புலவு சச்சிதானந்தம் – குளோபல் தமிழ்ச் செய்தியார்…

 

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தினை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஐயாயிரம் , ஆறாயிரம் ஆண்டுகளாக நாம் காத்து வரும் மரபு எருதாக இருந்தாலும் சரி , பசுக்களாக இருந்தாலும் சரி அவற்றை நாம் பேணுவதும் பாதுகாப்பதும் எம் முன்னோர்கள் செய்து வருகின்றார்கள்

தற்போது ஏன் மாட்டு இறைச்சி கடை கொல்கலன்கள் இங்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் அவைகள் இங்கு இருக்கவில்லை. 2007ஆம் ஆண்டுகளின் பின்னரே அவை இங்கே வந்தன.

இதை யார் கொண்டு வந்தார்கள் ? இங்கு முன்னோர்கள் இருந்தவர்களா ? இல்லை நேற்று இங்கு வந்தவர்கள். அவர்கள் தாம் இங்கு வர முதல் எங்கு இருந்தார்களோ அங்கு எந்த மிருகத்தை மதிக்கின்றார்களோ அந்த மிருகங்களை அவர்கள் ஒரு போதும் கொல்ல மாட்டார்கள். சவூதியில் இந்துக்கள் வாழுகின்றார்கள். அவர்கள் அங்கே பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா ?

ஒல்லாந்தர்கள் மாட்டிறைச்சி கேட்ட போது கொடுக்க மாட்டேன் என ஞானப்பிரகாசர் இங்கிருந்து சிதம்பரத்திற்கு போனவர். ஆறுமுக நாவலர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என வலியுறுத்தியவர்.

இது இந்து பூமி அல்லது பௌத்த பூமி வேறு எவருக்கும் இந்த பூமி சொந்தமானது அல்ல இதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். இங்கே வந்தால் எங்கள் பூமியின் மரபுகளை பேணி நடவுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் நாடுகளுக்கே திரும்பி விடுங்கள்.

எங்கள் மரபுகளை மதிக்க முடியவில்லை எனில் உங்கள் நாடுகளுக்கு சென்று விடுங்கள். இந்த மண் பசுக்களை பாதுகாத்த பெருமை மிக்க மண். இந்த மண்ணிலே பசுக்களின் இரத்தத்தை சிந்த விட முடியாது.

எத்தனை பசுக்களை , நாம்பன் மாடுகளை கொன்று குவித்துள்ளீர்கள். கடந்த வாரம் 300 மாடுகள் வெட்டப்பட்டன. சாவகச்சேரியில் யார் மாடு சாப்பிடுகின்றார்கள். 12 இஸ்லாமிய குடும்பங்கள் 100க்கு சற்று அதிகமான கிறிஸ்தவ குடும்பங்கள் 70 ஆயிரம் மக்கள் சைவ மக்கள் அவர்களில் எத்தனை பேர் மாடு சாப்பிடுகின்றார்கள்.

எனவே எங்கள் நாட்டில் மாடுகளை வெட்டுவதனை அனுமதிக்க முடியாது. விரும்பின் உங்கள் நாடுகளுக்கு சென்று அங்கே மாடுகளை வெட்டுங்கள். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/80922/

Edited by நவீனன்

17 hours ago, நவீனன் said:

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்ற உண்மையை மறைத்து கதைப்பது ஏனோ?

பூர்வீக தமிழர்களில் பெரும்பான்மையினர் இன்று கிறிஸ்தவர்களாகவும் இந்துக்களாகவும் உள்ளனர், மிகச்சிலர் மத நம்பிக்கைகளற்று உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிவசேனாக்கு, தக்க பதிலடி

 
Sunday, May 27, 2018  Jaffna Muslim  9
 

 


இலங்கை சிவசேனாக்கு தக்க பதிலடி

 

இலங்கை சிவசேனாக்கு, தக்க பதிலடி

 
 

 

 

 

{
  "ns": "bl",
  "el": "embedded",
  "cpn": "gsm-3RWsdppYu2az",
  "docid": "picasacid",
  "ver": 2,
  "cmt": "744.099",
  "fmt": "18",
  "fs": "0",
  "rt": "177.429",
  "euri": "https://www.blogger.com/video.g?token=AD6v5dyxaPudhduzXu4s6fjTsy4cJCv9Iye2hSVqi3q2hcKYb6E87cPHAZPty36bZiNOCFGK9tPm3GoG2bEiVXHNbG",
  "lact": 3,
  "cl": "",
  "mos": 0,
  "state": "8",
  "volume": 100,
  "c": "WEB_EMBEDDED_PLAYER",
  "cver": "20180524",
  "cplayer": "UNIPLAYER",
  "cbr": "Chrome",
  "cbrver": "66.0.3359.181",
  "cos": "Windows",
  "cosver": "6.1",
  "hl": "en_US",
  "cr": "QA",
  "len": "960.099",
  "fexp": "23708904,23708906,23708910,23710476,23712544,23721699,23721752,23721898,23722182,23723589,23723618,23725292,23726562,23729629,23733751,23734290,23736483,23736657,23738491,23739764,23740493,23741103,23741227,23741719,23742058,23742884,23742970,23743466,23743486,23743492,3300100,3300131,3300161,3313321,3313337,3314088,3314210,9405979,9422596,9439828,9449243,9466767,9471657,9475691,9485000,9486208",
  "size": "266:320",
  "inview": "1",
  "vct": "744.099",
  "vd": "960.099",
  "vpl": "577.357-744.099,",
  "vbu": "0.000-11.942,575.520-822.571,",
  "vpa": "0",
  "vsk": "0",
  "ven": "0",
  "vpr": "1",
  "vrs": "4",
  "vns": "1",
  "vec": "null",
  "vvol": "1",
  "totalVideoFrames": 4369,
  "droppedVideoFrames": 2,
  "relative_loudness": "NaN",
  "optimal_format": "360p",
  "user_qual": "auto",
  "debug_videoId": "picasacid",
  "0sz": false,
  "op": "",
  "yof": false,
  "dis": "",
  "gpu": "ANGLE_(Intel(R)_HD_Graphics_3000_Direct3D11_vs_4_1_ps_4_1)",
  "cgr": true,
  "debug_playbackQuality": "medium",
  "debug_date": "Sun May 27 2018 21:51:11 GMT+0300 (Arab Standard Time)"
}

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் உங்கள் செய்தி விளங்கவில்லை

மனிதர்களையே கொன்று குவித்து அவர்களின் இரத்தத்தின் மீது
வெற்றி விழாக் கொண்டாடும் வெறியர்கள் வாழும்  நாட்டில் இவர் பசுவதையைப் பற்றிக் கதைப்பது வேடிக்கை.

  • தொடங்கியவர்

இலங்கையில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் - சிவசேனை

இலங்கையில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் - சிவசேனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர் அதில் பங்கேற்றிருந்தனர்.

அங்கு உரையாற்றிய போது சச்சிதானந்தம் வெளியிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூகங்களின் மத்தியில் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.

இலங்கையை ஒரு பௌத்த - இந்து நாடு என்று வர்ணித்த சச்சிதானந்தம், "இது வேறு சமூகத்தவர்களுக்கான நாடு அல்ல, இங்குள்ள பாரம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தமது பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளுக்கு போகலாம்" என்று கூறினார்.

சவுதி அரேபியாவில் பாதிப்பேர் இஸ்லாம் அல்லாதவர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்லாத்துக்கு பொருந்தாத பன்றி இறைச்சியை யாரும் உண்ண முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இங்கு மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமது ஊரில் மாட்டிறைச்சி கடைகள் எப்போதும் இருந்ததில்லை என்றும் சமீபத்தில்தான் அவை, வெளியில் இருந்து வந்தவர்களால் புகுத்தப்பட்டதாகவும் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

தேவையில்லாத சர்ச்சை

இது தேவையில்லாத ஒரு சர்ச்சை என்று இதனைக் கண்டிக்கின்ற பெண்ணியவாதியும், ஆய்வாளருமான சித்ரலேகா மௌனகுரு, தான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில், எவ்வளவோ காலத்துக்கு முன்னரே அங்கு மாடு உண்ணும் பழக்கம் இந்துக்களின் மத்தியிலும் வந்துவிட்டது என்கிறார்.

அது மாத்திரமல்லாமல், இந்த விசயத்தில் இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

அண்மையில் இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வன்முறை நடந்து முடிந்திருக்கும் சூழலில், இப்படியான இன வீரோதப் பேச்சுக்கள் மீண்டும் அப்படியான நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றுவிடலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.

காலமாற்றம் கவனிக்கப்பட வேண்டும்

இலங்கையை பொறுத்தவரை, இஸ்லாமியர் மாத்திரமல்லாமல், கிறிஸ்தவ தமிழர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுவது உண்டு. அவ்வளவு ஏன் பல பத்து ஆண்டுகளாக சைவ சமயத்தவர்களில் ஒரு பகுதியினரும் அதனைச் சாப்பிடுவது உண்டு. வீடுகளில் மாட்டிறைச்சியை சமைப்பதை தவிர்த்தாலும், வெளியில், அதுவும் குறிப்பாக "கொத்துரொட்டி" என்ற உணவில் மாட்டிறைச்சியை சேர்த்து சாப்பிடும் வழக்கம் இந்து இளைஞர்கள் மத்தியில் உண்டு.

இலங்கையில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் - சிவசேனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆகவே காலமாற்றத்தை, உணவு பழக்க மாற்றத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்ற கிளிநொச்சியை சேர்ந்த பத்திரிகையாளரான சிவராசா கருணாகரன், இது காலம் கடந்த பேச்சு என்று கூறுகிறார்.

அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு தொடர் உணவுக் கடைகள் இலங்கையில் உள் நுழைந்துள்ள நிலையில், அவற்றை எதிர்க்காமல், பொதுமக்களின் பழக்கமாகிவிட்ட உணவுப் பழக்கத்தை இலக்கு வைப்பது மோசமானது என்றும் அவர் கூறுகிறார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக வளர்க்கப்படும் மாடுகள் இப்போது இயந்திரங்களின் வருகையால் பெரும்பாலும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவது ஒரு கால மாற்றமே என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் இந்துக்களாக, தமிழர்களாக இருந்தாலும் இங்குள்ள சிறுபான்மை தமிழர்கள் (தலித்துகள்) மாட்டிறைச்சி சாப்பிடுவது உண்டு. அது அவர்களுக்கு வசதியான, மலிவான உணவும் கூட. அவர்களின் உணவு உரிமையில் கைவைக்கும் ஒரு கூற்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.

சிவசேனையின் தொடர்ச்சி

இலங்கையை ஒரு இந்து பௌத்த நாடாக சச்சிதானந்தம் வர்ணித்ததும் ஏனைய சிறுபான்மை இனங்களை இலக்கு வைக்கும் ஒரு நடவடிக்கை என்றும், இது இந்திய சிவசேனையின் நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்றும் கூறுகிறார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியரான ஆர். பாரதி. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இந்தப் பிரச்சினையை வேண்டுமென்றே சச்சிதானந்தம் தூக்கிப் பிடிப்பதாக அவர் கண்டிக்கிறார். மாட்டிறைச்சி உண்ணுதல் என்பது இலங்கை இந்துக்கள் மத்தியில் பரவி எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அவர் கூறுகின்றார்.

பொதுமக்களின் உணவுப் பழக்க சுதந்திரம் ஒரு பக்கமும், பாரம்பரிய பண்பாடு ஒரு புறமும் முரண்படும் சூழ்நிலையில் மாற்றங்கள் படிப்படியாக, யதார்த்தமாக வரவேண்டுமே ஒழிய அவற்றை திணிக்க முயல்வது ஒரு அதிகார துஸ்பிரயோக போக்கையே காண்பிக்கும் என்று கூறுகிறார் இஸ்லாமிய கற்கைகளுக்கான விரிவுரையாளரான ஏ. பி. எம். இத்ரீஸ்.

பசுவதை, மாட்டிறைச்சி உணவுத் தடை, மாட்டிறைச்சிக் கடைக்கான தடை போன்ற பிரச்சினைகள் இந்தியாவுக்கு பழைய விவகாரங்களாக இருந்தாலும், இலங்கைக்கு இது கொஞ்சம் புதிய பிரச்சினைகள்தான். வடபகுதி தமிழர்கள் தமது மதம், பண்பாடு போன்ற விசயங்களை கொஞ்சம் கண்டிப்பாக பின்பற்றுபவர்கள்தான். ஆனால், மாட்டிறைச்சி என்பது ஓரளவு அவர்கள் மத்தியிலும் பழக்கப்பட்ட உணவாக வந்துவிட்ட நிலையில், சச்சிதானந்தத்தின் இந்தக் கருத்துக்கள் அவர்களின் மாட்டிறைச்சியை உண்ணும் பழக்கத்தை குறைத்துவிடுமா என்பது தெரியவில்லை. ஆனால், இங்கு எல்லோர் மனதிலும் உள்ள ஒரே கவலை, இது இன்னும் ஒரு வன்முறையை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்பதுதான்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44299124

  • தொடங்கியவர்

எமது போராட்டம், எமது தேசியவாதம் மதச் சார்பற்றது: 

மதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போம் –   தமிழ் சிவில் சமூக அமையம்: 

rejection.jpg?resize=800%2C438

 

அண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பெரும் கரிசனை கொள்கின்றது.

மேற்படி சிவசேனையின் தலைவர் இந்தப் பூமி ஒன்றில் இந்து அல்லது பௌத்த பூமி என்றும் இந்து மற்றும் பௌத்தர்களின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இங்கு இருக்க முடியாது வெளியேறி விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்தை நாம் முற்றாக மறுப்பதோடு எமது வன்மையான கண்டனங்களையும்  பதிவு செய்கின்றோம். அத்தகைய கருத்துக்களை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் கருத்துக்கள் போன்றோ ஏன் இந்து / சைவ மதத்தவரது கருத்து என்றோ பாவனை செய்து சிவசேனை அமைப்பினர் பேச விளைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்தகைய கருத்துக்கள் பரவலாக, தமிழ் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கலந்து விடக் கூடாது என்ற விருப்பில் இவ்வறிக்கையை வெளியிடுகிறோம்.

பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் அனைவருக்கும் பொதுவானவை. குறிப்பிட்ட மதம் ஒன்று பொது வெளியில் எதனை செய்யலாம் எதனை செய்யக் கூடாது எனத் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக அப்பொது வெளியில் குறிப்பிட்ட மதம் பெரும்பான்மை மதமாக இருக்கும் பட்சத்தில் அப்பெரும்பான்மை மதத்தின் வழக்காறுகளையும் நம்பிக்கைகளையும் அப்பொது வெளிகள் மூலமாக எல்லோர் மீதும் திணிக்க முயற்சிப்பது வன்முறையாகும். அதன் காரணமாகவே பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் மதச் சார்பற்றவையாக இருக்க வேண்டும். பன்மைத்துவ சமூகங்களில் பொது வெளிகளின் மதச் சார்பின்மை மிகவும் முக்கியமானது.

மதச் சார்பின்மையை வலியுறுத்துவது மதங்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு சமனாகாது. மதம் தனிப்பட்ட நம்பிக்கையின் பாற்பட்டது. அவ் நம்பிக்கையை உடையோர் அந்நம்பிக்கையை சார்ந்தோரோடு சேர்ந்து அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து அந்நம்பிக்கையின் பாற்பட்ட வழக்காறுகளை பின்பற்றலாம். ஆனால் அதனை தம் மதத்தவர் மீதோ தம் மதத்தை சேர்ந்த  பெண்கள் மீதோ பிற மதத்தவர் மீதோ அல்லது மத நம்பிக்கையற்றவர்கள் மீதோ திணிப்பது அறமாகாது.

இந்த அறத்தை தமிழர்களின் சுயநிர்ணயத்திற்காக விடுதலைப் போராட்டம் மிகவும் ஆழமாக தன்னுள் உள்வாங்கியிருந்தது. தமிழ் தேசியவாதம் ஓர் மதத் தேசியவாதம் அல்ல. சிங்கள பௌத்த தேசியவாதம் ஓர் பேரினவாத மதம் சார் தேசியவாதம். இலங்கை பௌத்த நாடாக வரையறுக்கப்படுவதை நாம் மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டு எமது தாயகத்தை மதம் கொண்டு சாயமிடுவதையும் அம் மதத்தை சாராதோருக்கு இடமில்லை என்று கூறுவதையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இந்த மதவாத ஊடுருவல் அண்டை நாட்டின் ஆளும் கட்சியின் அரசியலினால் ஆதரிக்கப்படுவதை நாம் வெளிப்படையாகக் காணுகின்றோம். இந்திய மேலாதிக்க சிந்தனை தமிழர்களை கூறு போடவும் எமது போராட்டத்தின் அறத்தை சிதைக்கவும் முயற்சிக்கின்றது. இது எமக்கு புதிதல்ல. தமிழ் சமூகம் இந்துத்துவாவை வரித்தால் எமக்கு இந்திய அரசின் துணையோடு விடுதலை கிடைக்கும் என எம்மில் சிலர் முட்டாள்தனமாக கனவு காணுகின்றனர். அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. அப்படியான விடுதலை எமக்குத் தேவையும் இல்லை. விளிம்பு நிலையில் எம்மத்தியில் உள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஊடகங்களிலோ தமது அமைப்புக்களிலோ இடம் கொடுக்க வேண்டாம் என நாம் சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

இறுதியாக, இந்த அறிக்கை சைவ / இந்து மக்களுக்கு எதிரானது என இந்துத்துவா சக்திகள் திரிபுபடுத்தக்கூடும். அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் பொது வெளியில் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத போது நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இவ்வறிக்கைக்கு மறுப்பு விதண்டாவாதம் செய்யக் கூடும். எந்த மதத்தை, யார் மீதும், பொது வெளியின் மீதும் எவர் திணிக்க முனைந்தாலும் தமிழ் சிவில் சமூக அமையம் அதனை எதிர்க்கும். அது பௌத்தமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி சைவமாக / இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமாக இருந்தாலும் சரி. எமக்கு தமிழ் அரசியல் சமூகத்தின் அறவியல் ஒழுக்கம் எல்லாவற்றிலும் முக்கியமானது. அதனாலேயே இவ் நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.

பொ. ந. சிங்கம்
பொதுச் செயலாளர்

குமாரவடிவேல் குருபரன்
பேச்சாளர்.

http://globaltamilnews.net/2018/81423/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.