Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபையில் ரணில், சம்பந்தன் முறுகல்; நடந்தது என்ன?

Featured Replies

சபையில் ரணில், சம்பந்தன் முறுகல்; நடந்தது என்ன?

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ் ,ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் வழங்கப்பட வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்த போதும்  எதிர்க்கட்சிக்கு இரண்டு பதவிகள் வழங்க முடியாது, பிரதி சபாநாயகர் ஆளும் தரப்பின் ஒருவராகவே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் கூறினார். 

sampanthan.jpg

இதன்போது  ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சபையில் கருத்து தெரிவித்த எஸ்.பி. திசாநாயக எம்.பி :- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவியிலேயே தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே நாமே மாற்று நபரை நியமிக்க வேண்டும். ஆகவே எமது தரப்பில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவின் பெயரை நாம் பரிந்துரைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். 

அதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

பிரதி சபாநாயகர் தெரிவில் இலங்கையின் பாராளுமன்ற  வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமான விடயத்தை இன்று எம்மால் செய்ய முடியும். பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி சபாநாயகராக இதற்கு முன்னர் கடமையாற்றிய வரலாறு இருந்ததில்லை. எனவே இம்முறை அவ்வாறான ஒரு தீர்மானம் எடுத்து வரலாற்றில் பதிய முடியும். ஆகவே சபையின் சகல உறுப்பினர்களும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவிற்கு வாக்களித்து அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கூறுகையில்,

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் சபையினை வழிநடத்தும் விதத்தில் சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியிலும், பிரதி சபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும், குழுக்களின் பிரதித் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நியமிக்கப்படுவது என்ற இணக்கப்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில் அவர்களின் ஒருவரை நியமிக்கின்றமையே முறையானது. அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஒருவரை நியமிக்கும் பட்சத்தில் நாம் அதற்கு பூரண ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்துக்களை கூறுகையில்,

தேசிய அரசாங்கமாக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நபர்கள் பிரதி சபாநாயகராக ஒருவரை தெரிவதும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சபாநாயகரை தெரிவு செய்வது என்ற இணக்கப்பாடு இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு பதவிகளும் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய பதவிகள். 

பிரதி சபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இருந்தாலும் கூட அவர்களும் ஆளும் கட்சியாக இருந்தனர். எனினும் இப்போது அவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்துகொண்டு  மீண்டும் பிரதி சபாநாயகர் பதவி தமக்கு வேண்டும் என கோருவது நியாயமற்ற காரணியாகும். பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி  தலைவர் ஆகிய இரண்டு பதவிகளை எதிர்க்கட்சியினருக்கு வழங்க முடியாது. ஆகவே அரசாங்க தரப்பில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். இதில் வேறு வழிமுறைகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி பிரதமரின் கருத்துக்கு பதில் கூறிய எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்,

பிரதமர் கூறும் கருத்துக்கள் ஏற்றுகொள்ளக்கூடியதாக இல்லை, சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகையில் பிரதி  சபாநாயகர் குறித்து தெரிவித்திருந்தார். பின்னர் அவர் மனங்களில் வேறு எண்ணங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு மாற்றம் பெற முடியாது. நியாயமாக பிரதி சபாநாயகர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். அதுவே தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாடு. அதுவே சரியானது என நாம் கருதுகின்றோம், எனவே பிரதி சபாநாயகர் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

இரண்டு பொறுப்புகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவது அடிப்படையற்ற  காரணியாகும். இணக்கப்பாடு என்னவாக இருந்தாலும் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நியமித்துள்ள நபர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் உள்ளனர். ஆகவே எக்காரணி கொண்டும் அவர்களுக்கு வழங்க முடியாது. மேலும் அரசாங்கத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களில் அனுபவம் மிக்க, நடைமுறைகள் தெரிந்த ஒருவரை நியமித்துள்ளனர். ஆகவே அவரை நியமிப்பதே எமக்குள்ள ஒரே தெரிவாகும். இதில் தர்க்கிக்க முடியாது என குறிப்பிட்டார். 

இதன் பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டபோது பிரதான எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களிப்பில் பங்கு கொள்ளாது வெளிநடப்பு செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/34498

அப்ப கடைசியாக அங்கஜனை வரவிடாமல் தடுத்ததில் கூட்டமைப்பிற்கு வெற்றியே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

அப்ப கடைசியாக அங்கஜனை வரவிடாமல் தடுத்ததில் கூட்டமைப்பிற்கு வெற்றியே.

 

 

முன்பு யாழ்ப்பாண நண்டுகளே இருந்தன, இப்போது அவையும் கூட்டமைப்பைக் கொண்டுள்ளன. :grin:

  • தொடங்கியவர்

சுதர்சினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சம்பந்தன் – வாக்களிக்காமல் வெளியேறியது கூட்டமைப்பு

 

sampanthan-300x200.jpgசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு ஆதரவு அளிக்குமாறு இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்ட போதும், கடைசியில் வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை.

நேற்று பிற்பகல் பிரதி சபாநாயகர் தெரிவு அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை தெரிவு செய்யுமாறும் , சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற பெருமையை பெறுவதற்கு அவருக்கு இடமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.

அதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதி குழுக்களின் தலைவர் பதவிகள் ஆளும்கட்சிக்கு உரியவை என்றும், அதனை எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒருவருக்கு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அரசதரப்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் முன்னிறுத்தப்பட்டிருந்தால் அவரை ஆதரிக்க முடியும் என்றும், ஆனால், அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க அவர்களின் யாரும் முன்வரவில்லை என்றும்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவியை ஆளும்கட்சியின் பக்கம் வைத்துக் கொள்வதற்கு ஐதேக போட்டியிடுவது தவிர்க்க முடியாதது என்று அவர் வாதிட்டார்.

இதனால் சம்பந்தனும், ரணிலும் வாக்குவாதம் செய்தனர். கடைசியில் போட்டி உறுதியானதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பு ஆரம்பித்ததும், இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேறினர்.

அவர்களை அடுத்து, ஜேவிபி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

http://www.puthinappalakai.net/2018/06/06/news/31254

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பகலவன் said:

அப்ப கடைசியாக அங்கஜனை வரவிடாமல் தடுத்ததில் கூட்டமைப்பிற்கு வெற்றியே.

அரசியலுக்கு அப்பால் பட்டு... அங்கஜன் எப்படி இருந்தாலும், 
தமிழன் என்ற முறையில்... அங்கஜனுக்கு, கூட்டமைப்பு  ஆதரவு வழங்கியிருக்கிலாம்.

சம்பந்தனில்.... அப்படியே கருணாநிதியின் குணங்கள் உள்ளது.
இப்படித்தான்... முன்பு ஒரு முறை, ராஜீவ் மரணத்தின் பின்... மூப்பனார் இந்தியப்  பிரதமராக வர சந்தர்ப்பம் இருந்த போது...
உள்ளடி வேலை பார்த்து தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.