Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் கொடூ­ரம் -சம்­பந்­தன் கொதிப்­பு­டன் பதில்

Featured Replies

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் கொடூ­ரம் -சம்­பந்­தன் கொதிப்­பு­டன் பதில்

sammanthan.jpg

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத காலத் தி­லும் எமது இனம் திட்­ட­மிட்டு பாதிக்­கச் செய்­யப்­ப­டு­கின்­றது. இதற்கு நாம் தான் முடிவு கட்­ட­வேண் டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் காட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் 60வய­துப் பெண் ஒரு­வர் கொள்­ளை­யர்­க­ளால் மிகக் கொடூ­ர­மாக வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது வீட்­டி­லி­ருந்து நகை­க­ளும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் இத்­த­கைய வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கல்வி கலா­சார பண்­பா­டு­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் ஒரு காலத்­தில் பெயர்­போ­யி­ருந்­தது. ஆனால் இன்று தலை­கீ­ழாக நிலமை மாறிப்­போய் விட்­டது. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளின் அட்­ட­கா­சம் ஒரு­பு­றம். போதைப் பொருள் பாவ­னை­யின் உச்­சம் மறு­பு­றம். கொள்­ளை­யர்­க­ளின் அட்­டூ­ழி­யங்­கள் இன்­னொ­ரு­பு­றம். காமு­கர்­க­ளின் கொலை­வெ­றித்­த­னங்­கள் மற்­றொ­ரு­பு­றம் என்று வார்த்­தை­க­ளால் சொல்ல முடி­யாத அள­வுக்கு யாழ்ப்­பா­ணத்­தின் நிலமை வந்­துள்­ளது. இது திட்­ட­மிட்டு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது யாவ­ரும் அறிந்த உண்மை.

ஒரு வாரத்­துக்­குள் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் மாத்­தி­ரம் இடம்­பெற்­றுள்­ளது. ஒரு பள்­ளிச் சிறுமி பாட­சா­லைச் சீரு­டை­யு­டன் கொடூ­ர­மா­கக் கொலை செய்­யப்­பட்டு கிணற்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றாள். ஒரு பெண் வெட்­டிக் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்.

இன்­னொரு குடும்­பப் பெண் கொள்­ளை­யர்­க­ளி­னால் மிரு­கத்­த­ன­மான வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு சீர­ழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்.

இந்­தக் கொடூ­ர­மான கலா­சா­ரம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டும். சட்­டம் ஒழுங்கு குடா­நாட்­டில் நிலை­நாட்­டப்­பட வேண்­டும். மிரு­கத்­த­ன­மான இந்­தச் செயல்­க­ளுக்கு முடி­வு­கட்ட கட்சி பேத­மின்றி அனை­வ­ரும் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/09/யாழ்ப்­பா­ணத்­தில்-தொட­ரும்-கொடூ­ரம்-சம்­பந்­தன்-கொதிப்­பு­டன்-பதில்.html

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் அடக்க எதுக்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்?

உலகின் மிகபெரிய விடுதலைபோராட்ட அமைப்பை அழித்தவர்கள் என்று ,

நாளுக்கு மூண்டு தடவை தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசு...

சாதாரண வாள்வெட்டு கோஷ்டியை ஏன் அடக்க முடியவில்லை என்று தில்லாக...உரத்த குரலில் 

பாராளுமன்றத்தின் நீங்க ஏன் கேட்ககூடாது ஐயா?

நீங்க கேட்கமாட்டீங்க, ஏனென்றால் உங்களை எதிர்கட்சி தலைவராக்கினதே அவர்கள்தானே....

எமக்கு வாள்வெட்டைவிட பதவிதான் முக்கியம் என்பதை வெளிப்படையாக சொல்ல என்ன வெட்கம் ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

உலகின் மிகபெரிய விடுதலைபோராட்ட அமைப்பை அழித்தவர்கள் என்று ,

நாளுக்கு மூண்டு தடவை தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசு...

சாதாரண வாள்வெட்டு கோஷ்டியை ஏன் அடக்க முடியவில்லை என்று தில்லாக...உரத்த குரலில் 

பாராளுமன்றத்தின் நீங்க ஏன் கேட்ககூடாது ஐயா?

பாராளுமன்றத்தில் கேட்டால் வாள்வெட்டு நிற்குமா? நீங்களும் அவரை போலவே பயனற்ற வழியில் தானே சிந்திக்கிறீர்கள்?

ஏதாவது ஒரு ஆயுத கட்டுப்பாட்டில் வாழத்தான் ஈழத் தமிழ் மக்கள் பழக்கப் பட்டு இருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடு இல்லாவிட்டால் இவ்வாறான வன்முறைகள் இந்த சமூகத்தில் தாராளமாக புழங்கும் அளவுக்கு வன்முறையும் சமூக அழிவும் புரையோடிப் போன சமூகம் ஈழத்தமிழ் சமூகம். முன்னர் விடுதலைப் புலிகள் காலத்திலும் பின்னர் இராணுவ ஆட்சி காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் குறைவு. இதற்கு காரணம் இரண்டு ஆட்சிகளிலும் மக்கள் ஆயுத கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டு இருந்தார்கள். இன்று நல்லாட்சியில் ஆயுத கட்டுப்பாடு தளர்ந்தவுடன் வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன. ஆகவே மீண்டும் ஆயுத கட்டுப்பாட்டின் கீழ் மக்களை கொண்டுவர வேண்டும்.

விடுதலை புலிகள் மீண்டும் வரும் சாத்தியம் இல்லை. ஆனால் இராணுவ ஆட்சி சாத்தியமானது. விசுவமடு போராளிகளின் அன்புக்குரிய கேணல் ரத்னப்ரிய மற்றும் யாழ் மக்களின் அன்புக்கு உரிய அரச அதிபராக இருந்த ஆஸ்டின் பெர்னாண்டோ (இன்று ஜனாதிபதி ஆலோசகர்) ஆகியோரின் கட்டுப்பாட்டில் இராணுவம் மற்றும் முன்னாள் போராளிகள் அடங்கிய சிவில் படை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் வட பகுதியை கொண்டு வந்து, வேலை செய்யாத அனைவருக்கும்  ஆயுத முனையில்  கட்டாய வேலை வழங்கினால் வாள்வெட்டு உட்பட அனைத்து வன்முறையும் அடங்கும். மாகாண சபை, கூட்டமைப்பு அரசியல் ஆகியவை ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்  முற்றிலும் பாதகமானவை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

பாராளுமன்றத்தில் கேட்டால் வாள்வெட்டு நிற்குமா? நீங்களும் அவரை போலவே பயனற்ற வழியில் தானே சிந்திக்கிறீர்கள்?

தனிமனிதனின் சமூகவிரோத செயல்களை ஒரு அரசினால் கட்டுபடுத்தமுடியாது, அதனால்தான் பாலியல்வன்முறை,தனிப்பட்ட விரோத செயல்கள்பற்றி சம்பந்தன்  பேச்சுபற்றிய  இந்த செய்தியில் எதுவும் குறிப்பிடவில்லை நான்...

ஆனால் ஒரு குழுவாக இயங்கும் நபர்களை ஒரு அரசு நினைத்தால் இரும்பு கரம்கொண்டு அடக்கமுடியும்...

வலிகாமத்திலும், வடமராட்சியிலும் சிங்கள காவல்துறைமீது வாள்வெட்டு, தாக்குதல்கள் செய்த அந்த குழுக்களை ,நபர்களை ஒடுக்க அந்த பிரதேசம் முழுவதும் விஷேட அதிரடிபடையை குவித்து, பலரை கைது செய்து, இன்னும் பலபேரை வீடுவீடாகபோய் தேடி... பலரை  விட்டுவைக்கமாட்டோம் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவோம் என்று அறைகூவல்விடுத்து...

அதன்பின்னர் சிங்கள காவல்துறைமீது யாரும் தாக்குதல் செய்யமுடியாதபடி ஒரு நிலமையை உருவாக்கின சிங்கள அரசு இயந்திரம்,

தமிழர்கள்மீதுமட்டும் அதே வாள்வெட்டுகுழுக்கள்,வன்முறையாளர்கள்  தமது செயற்பாடை தொடர்வதை,ஏன் அதேபாணியை பின்பற்றி கட்டுபடுத்தவில்லை என்பதுபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

அதையே சம்பந்தனும் பாராளுமன்றத்தில் கேட்டிருக்கலாம் என்பதே என் கருத்தின் உள் பொதிவு...

விசுவமடுவில் ராணுவ அதிகாரி வேலை வழங்கி பராமரித்தது  இனமானத்துக்காக போராடி எம்மாலயே கைவிடப்பட்ட போராளிகளை...

அவர்களை,தின்றுவிட்டு திமிர் எடுத்து அடுத்தவனை கூரிய ஆயுதங்களால் தாக்கும் இவர்களுடன் தொடர்புபடுத்தி கருத்து சொல்ல உங்களால் முடிகிறது, ஆனால் பலரால் இது முடியாது என்றே நினைக்கிறேன்...

அப்புறம்,  உலகில் ஜனநாயகநாடுகள் என்று தம்மைதாமே சொல்லிக்கொள்ளும் இலங்கை உட்பட்ட எந்தநாடுகளில் ஆயுதமுனையில் தொழில்வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று நீங்கள் அறிய தந்தால் மகிழ்ச்சி...

வேலை வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததினால்தான் இலங்கை ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் அதிகம், அந்த ஆயுதபடைகளின் பாதுகாப்பில் எவருக்கு வேலை கொடுக்க சொல்கிறீர்கள்?

கிளிநொச்சியையா? கிளிநொச்சி எமது போராளிகளுக்காக கேணல் ரத்னபிரிய உருவாக்கியது, எமது வளங்களை வைத்து எப்படி நாம் வாழலாம் என்று காண்பித்தது, எமது அரசியல் தலைமகளும், வெத்துவேட்டு பேச்சாளர்களும் செய்யமுடியாததை எமக்காய் போராடியவர்களுக்கு அவர் செய்தாரே என்பதில் ,எதிரி,இனம் என்பதையெல்லாம் தாண்டி எப்போதும் அவர்மீது மரியாதை எனக்கு இருக்கும்,

ஏன் தெரியுமா, கிளிநொச்சிபகுதியில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தைக்கூட தனது காணி என்று சொந்தம் கொண்டாடி தடுக்க முனைந்தது ஒரு தமிழன்,,,சிங்களவன் அல்ல,,,

வேலைவாய்ப்பும் வசதியும் கிடைத்தால் வாள்வெட்டு நின்றுபோகுமா ? 

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் இருந்தாலும்  ஞாபகபடுத்துகிறேன், வடபகுதியில் வேலைவாய்ப்பு இன்றி வாழும் பலரைவிட பலமடங்கு வசதியிலும் சொகுசிலும் வாழ்பவர்கள் இந்த வாள்வெட்டு குழுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Jude said:

பாராளுமன்றத்தில் கேட்டால் வாள்வெட்டு நிற்குமா? நீங்களும் அவரை போலவே பயனற்ற வழியில் தானே சிந்திக்கிறீர்கள்?

ஏதாவது ஒரு ஆயுத கட்டுப்பாட்டில் வாழத்தான் ஈழத் தமிழ் மக்கள் பழக்கப் பட்டு இருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடு இல்லாவிட்டால் இவ்வாறான வன்முறைகள் இந்த சமூகத்தில் தாராளமாக புழங்கும் அளவுக்கு வன்முறையும் சமூக அழிவும் புரையோடிப் போன சமூகம் ஈழத்தமிழ் சமூகம். முன்னர் விடுதலைப் புலிகள் காலத்திலும் பின்னர் இராணுவ ஆட்சி காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் குறைவு. இதற்கு காரணம் இரண்டு ஆட்சிகளிலும் மக்கள் ஆயுத கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டு இருந்தார்கள். இன்று நல்லாட்சியில் ஆயுத கட்டுப்பாடு தளர்ந்தவுடன் வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன. ஆகவே மீண்டும் ஆயுத கட்டுப்பாட்டின் கீழ் மக்களை கொண்டுவர வேண்டும்.

விடுதலை புலிகள் மீண்டும் வரும் சாத்தியம் இல்லை. ஆனால் இராணுவ ஆட்சி சாத்தியமானது. விசுவமடு போராளிகளின் அன்புக்குரிய கேணல் ரத்னப்ரிய மற்றும் யாழ் மக்களின் அன்புக்கு உரிய அரச அதிபராக இருந்த ஆஸ்டின் பெர்னாண்டோ (இன்று ஜனாதிபதி ஆலோசகர்) ஆகியோரின் கட்டுப்பாட்டில் இராணுவம் மற்றும் முன்னாள் போராளிகள் அடங்கிய சிவில் படை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் வட பகுதியை கொண்டு வந்து, வேலை செய்யாத அனைவருக்கும்  ஆயுத முனையில்  கட்டாய வேலை வழங்கினால் வாள்வெட்டு உட்பட அனைத்து வன்முறையும் அடங்கும். மாகாண சபை, கூட்டமைப்பு அரசியல் ஆகியவை ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்  முற்றிலும் பாதகமானவை.

ஓ அப்படியா? இப்போ வடக்கில் இருக்கும் இராணுவம் தமிழ் மக்களுடன் ஐக்கியமாகி விட்டார்கள் என்கிறீர்கள்?? 

இப்படி நகைச்சுவையான கருத்துக்களை  தொடர்ந்து எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

ஆனால் ஒரு குழுவாக இயங்கும் நபர்களை ஒரு அரசு நினைத்தால் இரும்பு கரம்கொண்டு அடக்கமுடியும்...

அப்படி அரசு செய்வதற்கு இராணுவ ஆட்சியை அரசு அமைக்க வேண்டும். "இரும்பு கரம்கொண்டு" என்று நீங்களாகவே எழுதி இருக்கிறீர்கள். அதை தான் நானும் எழுதி இருக்கிறேன். நீங்களும் நானும் கேட்பது ஒன்றே தான்.

வேலைவாய்ப்பும் வசதியும் கிடைத்தால் வாள்வெட்டு நின்றுபோகுமா ? 

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் இருந்தாலும்  ஞாபகபடுத்துகிறேன், வடபகுதியில் வேலைவாய்ப்பு இன்றி வாழும் பலரைவிட பலமடங்கு வசதியிலும் சொகுசிலும் வாழ்பவர்கள் இந்த வாள்வெட்டு குழுக்கள்!

வறுமையில் வாழ்பவர்கள் வாழ்வாதாரத்துக்காக  வாள்வெட்டுக்களில் ஈடுபடுவதாக நான் கருதவில்லை. வாள்வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் வெளிநாட்டு காசில் தின்று, வேலை செய்ய வேண்டிய தேவை இல்லாமல் இருப்பவர்கள். அவர்களுக்கு தாராளமாக நேரம் இருக்கிறது, உடற்பலம் இருக்கிறது, பணம் இருக்கிறது. நீங்கள் சொல்வதே நான் சொல்வதும். அவர்களின் நேரத்தை அவர்களிடம் இருந்து பறித்து, அதை பயனுள்ள வகையில் பயன் படுத்த வேண்டும். முதுகு முறிய கடூழிய சிறையில் கொடுப்பது போன்ற வேலை கொடுத்து (ஊதியம் இங்கு முக்கியமல்ல), நாள் முடிவில் களைப்பில் உறங்குவது ஒன்றே சாத்தியமானது என்ற நிலையில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். "ஆயுத முனையில்  கட்டாய வேலை ' என்று நான் எழுதியதை இங்கு கவனத்தில் கொல்ல வேண்டும். களைத்து போன உடம்பு வாள்வெட்டுக்களில் ஈடுபடாது. இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்  வாள்வெட்டுக்களில் ஈடுபட்டால் இராணுவ நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த படுவார்கள்.

2 hours ago, nunavilan said:

ஓ அப்படியா? இப்போ வடக்கில் இருக்கும் இராணுவம் தமிழ் மக்களுடன் ஐக்கியமாகி விட்டார்கள் என்கிறீர்கள்?? 

இப்படி நகைச்சுவையான கருத்துக்களை  தொடர்ந்து எழுதவும்.

நான் எழுதாததை நீங்களாக கற்பனை செய்து கொண்டு நகைச்சுவை அனுபவிக்கிறீர்கள். கற்பனை உலகு மகிழ்ச்சியானது. அனுபவியுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நான் எழுதாததை நீங்களாக கற்பனை செய்து கொண்டு நகைச்சுவை அனுபவிக்கிறீர்கள். கற்பனை உலகு மகிழ்ச்சியானது. அனுபவியுங்கள் .

நீங்கள் எழுதியது மிக நகைச்சுவையானது. உங்களுக்கே புரியவில்லை.

:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.