Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம்

Featured Replies

விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம்
 
 

image_b129c3ef27.jpg

வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை - இந்திய பிரதானிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், தமிழ்மிரருக்குக் கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்றே, நேற்று இடம்பெற்றிருந்தது.  

இச்சந்திப்புத் தொடர்பில் தொடர்ந்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பலாலி விமானநிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அதற்கிணங்க, இந்தியாவினுடைய நிபுணர் குழுவொன்று, உடனடியாக பலாலி விமானநிலையம் தொடர்பில் ஆராய்வதற்கு வரவுள்ளதென்றும் கூறியதோடு, அந்த நிபுணர்குழுவுடன் இலங்கைச் சிவில் விமானசேவை தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்து பணியாற்றுவரென்று கூறினார்.  

பலாலி விமான நிலையத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிலேயே, முழுமையான விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவித்த அவர், விஸ்தரிப்புப் பணிகளுக்கு முன்பாக, இவ்வருட இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது சர்வதேச விமானத்தை, பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், சர்வதேச விமானத்தின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்புச் சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கான பணிகள் யாவும் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளனவெனவும் குறிப்பிட்டார்.  

இந்திய விமானச் சேவையை, உடனடியாக ஆரம்பிப்பதே திட்டமென்றும், இது, இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகுமென்றும் கூறிய சுமந்திரன் எம்.பி, விமானப் போக்குவரத்து நடைபெறும்போதே, பலாலி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறுமென்றும், இந்த விமான நிலைய விஸ்தரிப்பினூடாக, பலருக்கான தொழில்வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.  

“பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதன் அவசியம் பற்றி, இந்திய அரசாங்கம் அடிக்கடி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக, இதற்கான நகர்வுகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து, முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளனவெனத் தெரியவருகிறது” என, அவர் மேலும் கூறினார்.  

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/விஸ்தீரணம்-பெறும்-பலாலி-விமான-நிலையம்/150-219385

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம்
....

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதன் அவசியம் பற்றி, இந்திய அரசாங்கம் அடிக்கடி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக, இதற்கான நகர்வுகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து, முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளனவெனத் தெரியவருகிறது” என, அவர் மேலும் கூறினார்.  

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/விஸ்தீரணம்-பெறும்-பலாலி-விமான-நிலையம்/150-219385

பக்கத்து நாட்டு விமான நிலைய விஸ்தரிப்பு பற்றி பொந்தியாவிற்கு ஏன் இந்தக் கவலை?

சென்னையிலுள்ள விமான நிலைய கண்ணாடி சிதறல்களுக்கு இன்னமு முடிவில்லை, இதில் பக்கத்து நாட்டு விவகாரத்தில் கரிசனை! விளங்கிடும்!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

பக்கத்து நாட்டு விமான நிலைய விஸ்தரிப்பு பற்றி பொந்தியாவிற்கு ஏன் இந்தக் கவலை?

சென்னையிலுள்ள விமான நிலைய கண்ணாடி சிதறல்களுக்கு இன்னமு முடிவில்லை, இதில் பக்கத்து நாட்டு விவகாரத்தில் கரிசனை! விளங்கிடும்!!

கடைசியில் மலசல கூட விஸ்தரிப்பை செய்து கொடுப்பார்கள்tw_tounge:

  • தொடங்கியவர்

பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து- இந்தியாவுக்கு உடனே வானூர்திச் சேவை!!

 

gg-3.jpg

 
 

பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து இந்­தி ­யா­வுக்கு உட­ன­டி­யாக வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. வானூர்தி நிலை­யம் தற் போ­துள்ள நிலை­யி­லி­ருந்தே இந்­தச் சேவை தொடங்­கப்­ப­ட­வுள்­ளது. வானூர்­திச் சேவை­கள் ஆரம் பிக்­கப்­பட்ட பின்­னர், பிராந்­திய வானூர்தி நிலை­ ய­மாக பலா­லியை தர­மு­யர்த்­தும் கட்­டு­மா­னப் பணி­ கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும். இந்­தப் பணி­க­ளுக்­காக மேல­திக காணி­கள் எவை­யும் சுவீ­க­ரிக்­கப்­ப­டாது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந் திய அரசு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இடை­யி­ லான முத்­த­ரப்­புச் சந்­திப்­பில் மேற்­படி முடிவு நேற்று எட்­டப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­ப­தற்­காக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத் துக்கு வருகை தந்­தி­ருந்­தார். இந்­திய நிதி உத ­வி­யில் ஆரம்­பிக்­கப்­ப­டும் நோயா­ளர் காவு­
வண்­டிச் சேவையை தொடக்கி வைப்­ப­தற்­காக இலங்­கைக் கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங்­கும் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­தார்.

 

இரண்டு தரப்­பி­ன ­ரை­யும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் நேற்­றுச் சந்­தித்­த­னர். ‘ஜெட்­விங்’ விடு­தி­யில் நேற்று மதிய உண­வு­டன் இந்­தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.

பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக தரம் உயர்த்­து­வ­தற்கு முதல்­கட்­ட­மாக, தற்­போது இருக்­கின்ற நிலை­யி ­லேயே இந்­தி­யா­வுக்கு வானூர்தி சேவை­கள் ஆரம்­பிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தச் சேவை­யைத் தொடங்­கு­வ­தற்கு உட­ன­டி­யாக என்ன தேவை­கள் உள்­ள­னவோ அவை பூர்த்தி செய்­யப்­ப­டும்.

‘பன்­னாட்டு வானூர்­தி­கள் தரை­யி­றங்­கு­வ­தற்­கும், இங்­கி­ருந்து புறப்­பட்­டுச் செல்­வ­தற்­கும் ஏது­வாக சமிஞ்­சைக் குறி­யீ­டு­கள் (நவிக்­கே­சன்) அமைக்­கப்­ப­ட­வேண்­டும். குடி­வ­ரவு மற்­றும் குடி­ய­கல்வு, ஆயத் திணைக்­க­ளம் என்­ப­ன­வற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தக்கு இப்­போ­துள்ள கட்­டி­டங்­கள் போதுமா என்­பதை ஆரா­ய­வேண்­டும். இல்­லா­வி­டின் தற்­கா­லிக ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­ட­வேண்­டும்’ என்று சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னர் சந்­திப்­பில் கூறி­யுள்­ள­னர். அவற்றை உட­ன­டி­யாச் செயற்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வி­லி­ருந்து தொழில்­நுட்­பக் குழு­வி­னர் உட­ன­டி­யாக வருகை தந்து, பலாலி வானூர்தி நிலை­யத்­தைப் பார்­வை­யிட்டு இந்­தி­யா­வுக்­கான வானூர்­திச் சேவைக்­கான ஏனைய அடிப்­ப­டைத் தேவை­களை மதிப்­பி­டு­வார்­கள். வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­பட்ட பின்­னர் பிராந்­திய வானூர்தி நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்தி ஏனைய நாடு­க­ளுக்­கான வானூர்­திச் சேவை­க­ளும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.
தற்­போ­துள்ள வானூர்தி ஓடு­த­ளத்­துக்கு மேற்­குப்­பு­ற­மாக 500 ஏக்­கர் காணி­யில் புதிய பிராந்­திய வானூர்தி நிலை­யத்­துக்­கான கட்­டி­டங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த அபி­வி­ருத்தி முன்­னேற்ற மீளாய்வு மாதாந்­தம் கொழும்­பில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

தமிழ்;த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் வலி.வடக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன் ஆகி­யோர் பங்­கேற்­றி­ருந்­த­னர். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இரா­ஜாங்க அமைச்­சர் ஹர்ச டி சில்வா ஆகி­யோ­ரும், இந்­தி­யத் தரப்­பில், இலங்­கைக்­கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங், இரண்­டாம் நிலைத் தூது­வர், யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தூத­ர­கத்­தின் கொன்­சி­யூ­லர் ஜென­ரல் பால­சந்­தி­ரன், தூத­ரக அதி­கா­ரி­க­ளும், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன், யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வத் தள­பதி தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி, வான்­ப­டைத் தள­பதி, சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்­துச் சபை பணிப்­பா­ளர் நிமல் சிறி ஆகி­யோ­ரும் இந்­தச் சந்­திப்­பில் கலந்து கொண்­டி­ருந்­த­னர்.

http://newuthayan.com/story/09/பலாலி-வானூர்தி-நிலையத்திலிருந்து-இந்தியாவுக்கு-உடனே-வானூர்திச்-சேவை.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வளமான மண் உள்ள பலாலியில் இருந்து, வறண்ட தீவுப்பகுதிக்கு இந்த விமான நிலையத்தை நகர்த்தலாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.