Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்!

Featured Replies

முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்!

 
 

625.500.560.350.160.300.053.800.900.160.

தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களே இருக்கலாம். இப்போது ஆறு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதனால் முதலமைச்சர், அமைச்சர் வாரியத்தை கூட்டக் கூடாது எனத் “தடா” போட்டுள்ளார் ஆளுநர்.

வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் “போர் முடிந்து அடுத்த வருடம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது. குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை. இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாசாரத்தை இரண்டு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து காட்டுகிறேன். அது ஒரு பெரிய காரியமன்று” என யாழ்ப்பாணத்தில் நடந்த சனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யூலை 4 அன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது முழங்கினார்.

இதனைப் படித்துவிட்டு வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் “மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?” எனக் கேள்வி – பதில் வடிவில் ஒரு அறிக்கை விட்டார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிருவாகம் வினைத்திறனற்ற நிருவாகம் என வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவர் அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

இம் என்றால் ஊழல் குற்றச்சாட்டு, ஏன் என்றால் பதவி் பறிப்பு, நாளாந்தம் ஒரு அறிக்கை, வாரம் ஒரு தீர்மானம் என ஏடா கூடமாக நடந்து கொள்ளும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்களின் அறிக்கைக்கு ஒரு மறுப்பு அறிக்கை விடுத்தார். அதில் தவராசா எழுப்பிய கேள்விக்குப் பதில் இல்லை. மாறாக தவராசாவை கிண்டல் அடித்து “கூரை மேல் ஏறிக் குறைகூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார்” என்று பதில் அறிக்கை விட்டார்.

அந்த அறிக்கையில் தவராசா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வட மாகாண சபை சரிவர இயங்காததற்குக் காரணம் “உள்ளூராட்சி முன்னேற்றம் நகர அபிவிருத்தித் துறையால் கட்டுப்படுத்தப்படுகின்றது. காணிகள் மீதான எமது உரித்து மகாவலிச் சட்டத்தால் நலிவடைகின்றது. மாகாணப் பாடசாலைகளின் முன்னேற்றம் தேசியப் பாடசாலைகளை வைத்துக் கட்டுப்படுத்தப்படுகின்றது. எமது மருத்துவமனைகளின் முன்னேற்றம், தேசிய மருத்துவனைகளை வைத்து மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றது. சுகாதார அதிகாரியின் நிர்வாகம் கூட மாகாணத்துக்கு வழங்கப்படவில்லை. மாகாணப் பொது நிர்வாகம் கூட ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதிருந்த தவராசா வானம் ஏறி அவைத் தலைவர் ஆசியால் வைகுண்டத்திலேயே இப்பொழுது காலம் கழிக்கின்றார் என்பதை மறந்து விட்டார்” என இறுமாப்போடு பதிலிறுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சும்மா இருப்பாரா? “ஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்கிறார்” என தவராசா மீண்டும் பதிலடி கொடுத்தார். தவராசா தனது அறிக்கைகளில் பலவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

vigneswaran-thavarasa.jpg

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில்,

(1) இந்த நீதிமன்றம் இடைக்கால நிவாரணத்தினை வழங்கியதன் அடிப்படையில், அரசமைப்பில் அமைச்சர்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு நியமன அதிகாரி (ஆளுநர்) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

In view of the findings of this Court and the interim relief granted, it is for the appointing authority to consider the constitutional restriction on the number of Ministers and take suitable action.

(2) இவ்விடைக்காலக் கட்டளை மனுதாரரை (டெனிஸ்வரன்) சட்டப்படி பதவியிலிருந்து நீக்குவதனை எவ்விதத்திலும் தடுக்காது. ஆதலினால் அவை சீர் செய்ய முடியாத விடயங்களாக பிரதி வாதிகளிற்கு (முதலமைச்சர், ஆளுநர் அடங்கலாகத் தற்போதைய அமைச்சர்கள்) அமையாது.

On the other hand, the interim relief will not prevent the Petitioner from being duly removed from his post according to law. Hence there will be no irreparable mischief or injury to the Respondents.

(3) 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற்படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கூட்டுறவுத்துறை, கல்வி (வடக்கில் இயங்கும் 1098 பாடசாலை களில் 22 தேசிய பாடசாலைகள் தவிர), சுகாதாரம் (யாழ் போதனா வைத்தியசாலை தவிர 110 வைத்தியசாலைகள்), விவசாயம்……….. இவ்வாறாக 35 விடயங்கள் மாகாணத்துக்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

(4) இவ்விடயப் பரப்புகளை முற்றாக மாகாண சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு உபகுழுவின் ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை மாகாண சபையினால் 14 நியதிச் சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்வது போல மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை முலமைச்சர் நடைமுறைப்படுத்தினால் இப்போதுள்ள சிக்கல் தீர்ந்து விடும். அதாவது அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர், ஆளுநர் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆளுநர் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியும்.

ஆனால் முதலமைச்சர் தனக்கு ஒரு அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை என்கிறார். ஆனால் இதே முதலமைச்சர்தான் கடந்த ஆண்டு கடிதம் எழுதி டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது ஆனால் அந்த அதிகாரத்தை ஆலோசனை வடிவில் ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

ஒரு அமைச்சரை நியமிக்கும் போதும் அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் போதும் முதலமைச்சரது ஆலோசனையின் அடிப்படையிலேயே ஆளுநர் செயற்பட வேண்டும். தனித்து முதலமைச்சரோ அல்லது தனித்து ஆளுநரோ செயற்பட முடியாது. இரண்டு பேரும் சேர்ந்து செயற்பட வேண்டும்.

வட மாகாண சபையின் அமைச்சர் வாரியம் ஆளுநரால் முடக்கப் பட்டுள்ளதையிட்டு முதலமைச்சர் கவலைப்படவில்லை. சக்கட்டைத் தொழிலாளி தனது கருவிகளை குறைகூறுவது போல முதலமைச்சர் மற்றவர்களை விமர்சிப்பதில் காலத்தைக் கழிக்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தான் விட்ட பிழையை (டெனீஸ்வரனை கடித மூலம் பதவி நீக்கம் செய்தது) ஒத்துக் கொள்ள அவரது ஆணவம் தன்முனைப்பு, அகங்காரம், தற்பெருமை, திமிர் (ego) விட மாட்டேன் என்கிறது.

அதனால் “நான் பிடித்த முயுலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார். அவருக்கு இருக்கிற நோயே அதுதான்.

http://www.newsuthanthiran.com/2018/08/06/முதலமைச்சர்-விக்னேஸ்வரன/

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் ஓனரு, ரிஎன்ஏ எம்பி.... 

பின்ன பண்ணிப்பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

உதயனுக்கு ஒரு உதைகுடுத்தா தான் சரிவரும். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இந்த கூட்டம் அந்தாளுக்கு மேல் சேறு அடித்தாலும் சனத்துக்கு விளங்கும் எது லூசு கூட்டம் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் சரியோ, பிழையோ, நாளைக்கு சிங்களவன் கையை விரிச்சால், ஸ்கொட்லாந்து போல, ‘வை, ரெபரண்டம்’ எண்டு நிக்கக்கூடிய ஆள் எண்டு தானே சிங்களவர்கள் பயப்படுகினம்.

இதால தானே , கிழக்கில பெரும்பான்மை வசதிகள் இருந்தும், முதல்வர் பதவி தமிழர் வசம் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

விக்கியர் சரியோ, பிழையோ, நாளைக்கு சிங்களவன் கையை விரிச்சால், ஸ்கொட்லாந்து போல, ‘வை, ரெபரண்டம்’ எண்டு நிக்கக்கூடிய ஆள் எண்டு தானே சிங்களவர்கள் பயப்படுகினம்.

இதால தானே , கிழக்கில பெரும்பான்மை வசதிகள் இருந்தும், முதல்வர் பதவி தமிழர் வசம் இல்லை.

அதுக்கு சிங்களவன் புத்திசாலித்தனம் தான் நேரில் எதிர்க்காமல் எலும்பு நக்கிகளை கொண்டு அந்தாளுக்கு கல் எறியிறான் . 

  • கருத்துக்கள உறவுகள்

கஜன் கோஸ்ட்டி குறித்த அபிப்பிராயம் பெரிதாக இருக்கவில்லை முன்னர். ஆயினும் இவரது இந்த பேட்டி அபத்தமில்லாதது... இவரும்... விக்கியரும் பெடரல் என்ற நிலைப்பாட்டில் இருப்பது சிங்களவர்களுக்கு உறுத்துது.

http://www.dailymirror.lk/article/-Govt-cannot-deny-Federalism-to-Tamil-people-Gajan-Ponnambalam-153178.html

விக்கியர் பேட்டி

http://www.dailymirror.lk/article/Unless-Federal-set-up-established-the-majority-community-will-gobble-us-up--153085.html

இன்று சீனத்து கம்யூனிஸ்ட் கட்சி மகிந்தவின் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னனி கட்சியுடன் உறவுகள் மேன்படவேண்டும்... உறுதியாக வேண்டும் என்று வேற சொல்லிப் போட்டினம்...

டெல்லி வாலாக்கள், அரோகரா எண்டு இருக்க வேண்டியது தான்

http://www.dailymirror.lk/article/Communist-Party-of-China-seeks-to-strengthen-relations-with-SLPP-153579.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.